மத்திய அரசின் பிடிவாதத்தின் பின்னணி….? ஹைட்ரோ கார்பன் எடுக்க வேறு இடம் / வழி இல்லையா…?

ஒரு இடைவெளிக்குப் பிறகு நெடுவாசலில் மத்திய அரசின்
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக உள்ளூர் மக்களின் போராட்டம்
மீண்டும் துவங்கி விட்டது….

தேவையே இல்லாமல், மத்திய அரசின் ஈகோ அல்லது பாஜக பிரமுகரின்
சுயலாபத்திட்டம் காரணமாக, நூற்றுக்கணக்கான ( இது ஆயிரக்கணக்காக
என்று பெருகக்கூடும்…) மக்களின், நேரம், உழைப்பு, அத்தனையையும் கெடுத்து,
மிகுந்த மன உளைச்சலைக் கொடுக்கும் இந்த திட்டம் எதற்காக தொடர வேண்டும்….?

தேசிய நீர்வழிகளை இணைப்பது குறித்து மிகுந்த அக்கரையுடன்
செயல்பட்டு வரும் ஓய்வுபெற்ற பொறியாளர் திரு.காமராஜ் அவர்கள் அண்மையில்
ஒரு கருத்தை சொல்லி இருந்தார்….

புதுக்கோட்டை, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் ஹைட்ரோ
எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல் படுத்துவதால்
நிலத்தடி நீர் பெரிதும் பாதிக்கும். விவசாய நிலங்கள் அழியும் என்பதால்
புதுக்கோட்டை நெடுவாசலில் எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நடத்தும் போராட்டம்
நியாயமானதே.

ஹைட்ரோ கார்பன் உபயோகத்தில் 4-வது பெரிய நாடாக இந்தியா உள்ளது.
நமது எரிசக்தி பயன்பாட்டில் ஹைட்ரோகார்பன் பெரும் பங்கு வகிக்கிறது.
அதே நேரம், நிலத்தில் இருப்பதைவிட சுமார் 2 மடங்கு ஹைட்ரோ கார்பன்
இந்தியக் கடலோரப் பகுதியில் உள்ளது. எனவே, விவசாய நிலங்களைத் தவிர்த்து
கடலோரப் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு
செயல்படுத்தினால் யாருக்கும் பாதிப்பு வராது.

இந்த மாதிரி கருத்துகளை எல்லாம் எத்தனை முறை யார் சொன்னாலும்,
மத்திய அரசு காதில் போட்டுக் கொள்ள மறுக்கிறது…
அதன் உண்மையான பின்னணி தான் என்ன….? கீழ்க்கண்ட கட்டுரை
ஒன்று ஓரளவு அந்த பின்னணியை தெளிவாக்குகிறது…..

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

One Response to மத்திய அரசின் பிடிவாதத்தின் பின்னணி….? ஹைட்ரோ கார்பன் எடுக்க வேறு இடம் / வழி இல்லையா…?

  1. VS Balajee சொல்கிறார்:

    Govt is rushing to business and for private enterprises…Even small business in trouble. Let alone farmers … Janatha Govt is only one encourage handmade /small business.. Now Modi is all out for corporates and MNC’s. Above oil well/hydro carbon allocation ,remind me even dmk or others getting coal licenses form all corrupt congress ..No difference.
    Govt should get down at ground and village level and do projects to improve life..Every one need equality ,freedom,right for good education (free at least till school level),clean water to drink, small place to sleep. They can work and earn their food…Let god save India…It only hope..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.