சில சந்தேகங்கள்….. சில அபத்தங்கள்…!!!

இந்தியாவின் எழுதப்பட்ட அரசியல் சாசனம் ( written Constitution of
India )-( உலகில் பல நாடுகளுக்கு, எழுதப்பட்ட அரசியல் சட்டமே
கிடையாது ….. நம்மை 200 வருடங்களுக்கு மேல் ஆண்ட பிரிட்டனில் கூட
எழுதப்பட்ட அரசியல் சாசனம் கிடையாது….!) துவக்கத்திலேயே ஒரு
அற்புதமான லட்சியக்குறிக்கோளை அறிவித்துக் கொண்டு துவங்குகிறது.

——————

“ WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved
to constitute India into a SOVEREIGN, SOCIALIST, SECULAR,

DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens:
JUSTICE, social, economic and political;

LIBERTY of thought , expression, belief, faith and
worship;

EQUALITY of status and of opportunity; and to promote
among them all

FRATERNITY assuring the dignity of the individual and the
unity and integrity of the Nation;

IN OUR CONSTITUENT ASSEMBLY this twenty-sixth day of
November, 1949, do HEREBY ADOPT, ENACT AND GIVE TO
OURSELVES THIS CONSTITUTION.”

————

கொஞ்சம் யோசித்தால் –
எத்தனை விஷயங்களில் இது
நடைமுறையில் அனுசரிக்கப்படுகிறது….?

பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் – சட்டம் ஒரே விதத்திலா
வேலை செய்கிறது….?

கோடிக்கணக்கில் செலவழித்து புகழ்பெற்ற அல்லது “செல்வாக்கு” மிக்க
வக்கீல்களை நியமித்துக் கொண்டு, எத்தனை கொலைகாரர்களும்,
கொள்ளைக்காரர்களும், அரசியல்வாதிகளும் – சுதந்திரமாக வெளியே
சுற்றித் திரிகிறார்கள்…?

சட்டமும், நீதிமன்றங்களும் – அனைவருக்கும் ஒரே விதத்தில்
நியாயம் கிடைக்கச் செய்கின்றனவா….?

இதை உதாரணங்களுடன் பின்னர் விவாதிக்கலாம்….
முதலில், சில கேள்விகள் – நண்பர்களின் சிந்தனைக்கு…..

1) இந்தியாவின் முதல் பத்து பெரிய பணக்காரர்கள் யார்….?
அவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள்…?
அவர்களின் கடந்த 5 வருட – வருட ரீதியாக,
மொத்த வருமானம் என்ன….?
அவர்கள் செலுத்திய வருமான வரி எவ்வளவு…?

2) வழக்கின் மதிப்பீட்டுத்தொகையில் -10 % -க்கு மேல்
வழக்கறிஞர்கள் பெற்றுக் கொள்ளக்கூடாது என்பது
வழக்கறிஞர்களுக்கான சட்டவிதிகளில் ஒன்று.
இது நடைமுறையில் கடைபிடிக்கப்படுகிறதா….?

இந்தியாவின் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள், ஒரு நாளைக்கு
வாங்கும் தொகை எவ்வளவு என்று செய்தித்தாள்களில்
வருகின்றனவே… இதை எல்லாம் வருமான வரி இலாகாவோ,
சட்ட அமைச்சகமோ கவனிப்பதில்லையா…?

ஒரு ஜட்ஜுக்கு எவ்வளவு சம்பளம் என்பது வெளிப்படை…
எல்லாருக்கும் தெரியும்…
ஆனால், ஒரு வக்கீலுக்கு, ஒரு வழக்குக்கு எத்தனை சம்பளம் என்று
அறிவிப்பதில் என்ன சிக்கல்…? ஏன் ரகசியம்…?

3) இந்தியாவின் அதிக வருமானம் பெறும் 10 நடிகர்களின்
பெயர், கடந்த 5 ஆண்டுகளுக்கான, ஆண்டு -வருமானம்,
செலுத்திய வருமான வரி விவரங்களை
வெளியிட முடியுமா…?

முடியாது….. மேற்படி விவரங்களை நீங்கள் எந்த முறையில்
கேட்டாலும் வெளியிட மாட்டார்கள்…

ஏன்…?
வருமான வரி பற்றிய விவரங்கள், ஒரு மனிதரின் தனிப்பட்ட
விஷயம் என்றும், அதனை பொதுவில் தெரியப்படுத்த முடியாது
என்றும் மத்திய அரசு ஒரு வழக்கில் தெரிவிக்கிறது….

எத்தனை வருமான வரி செலுத்தினார்கள் என்பதை வெளியிடுவதில்
என்ன சிக்கல்…? இதில் அந்த நபர் எந்த விதத்தில் பாதிக்கப்படுவார்…?

ஒருத்தருக்கு எத்தனை பெண்டாட்டிகள்…?
அவர்கள் சட்டபூர்வமாக திருமணம் செய்துகொண்டார்களா அல்லது
“சும்மா” “சேர்ந்து” வாழ்கிறார்களா ..?
என்றெல்லாம் கேட்டால் –
பர்சனல் விவகாரம், சொல்ல முடியாது என்று சொல்லலாம்…
அது ஒருவிதத்தில் நியாயமாகக்கூட தெரியலாம்…!

ஆனால், பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள ஒரு நபர்
ஆண்டுக்கு எவ்வளவு சம்பாதிக்கிறார்…?
அதை எந்தெந்த விதங்களில் சம்பாதிக்கிறார்…?
எத்தனை வரி கட்டுகிறார் என்பது போன்ற
வருமான வரி பற்றிய விவரங்களை ரகசியமாக பாதுகாக்க வேண்டிய
அவசியம் என்ன…?

அரசியல் சாசனத்தின் குறிக்கோள்களுடன் இணைத்துப் பார்த்தால் –
இந்த அணுகுமுறை சரியா….? அபத்தமாகத் தெரியவில்லை….?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to சில சந்தேகங்கள்….. சில அபத்தங்கள்…!!!

 1. DeathBirthRaceR சொல்கிறார்:

  எழுதபட்ட அற்புத விதி Con… INDIA எத்தனை இந்திய வாசிகளுக்கு தெரியும் மதம் இல்லா நிலையில் இந்தியனாக அன்றே தேசபக்தி எப்படிபட்டதென்பதற்கு ….. !!!!!
  வாழுமோ கோஷம்போடாத ஜனநாயகம்…..!
  உணர்த்துமா இளைய முதிய வளர்ச்சி இந்தியா…..
  காலம் அற்புதமானது வித்தகரே விமர்சிக்கும் பாங்குணர்ந்த தேசபக்தர் எழுதியது சிந்திக்க செயலாற்றவே…..

  • இளங்கோ சொல்கிறார்:

   அய்யா, நீங்கள் எழுதுவது சரியாக புரிய மாட்டேனென்கிறது.
   சொல்ல வருவதை இன்னும் கொஞ்சம் தெளிவாக
   என்னைப்போன்ற எளியவர்களுக்கும் புரியும்படியாக சொல்லுங்களேன்.

   • இளங்கோ சொல்கிறார்:

    DeathBirthRaceR – அவர்களுக்கு தான் மேலேயுள்ள மறுமொழி.
    அய்யா – நீங்கள்வைத்துக்கொண்டுள்ள பெயரே கொடூரமாக இருக்கிறதே
    மாற்றிக் கொள்ளக்கூடாதா ?

    • DeathBirthRaceR சொல்கிறார்:

     My 1st love Death My La(u)st love Birth RaceR
     என்னை சுற்றிய சந்தேக சங்கடங்களின் விளக்கயியலா அருஞ்சொற்பொருள் தாண்ட துடிக்கும் உயிர் என் அறிமுகம் …..

     யார் யார்க்கோ நல்லது செய்வேன் என கட்சி ஆட்சி சீட்டெடுக்கும் கூட்டம் இந்தியனாக Con….. india வாசித்திருக்குமா …..!

     இந்திய பிரஜை பிறந்த அனைவரும் (Con…… INDIA) நானே இப்போது வித்தகர் வழியே அறிந்தயரடைந்தேன் என் தேச கட்டமைப்பு எப்படிபட்டதென்பதை …..
     கோஷம் கட்சிக்குதவலாம் மாற்றம் மனமறிவித்து தோற்ற துணிய மக்கள் புரிதல் கட்சிக்கு சுயநல மறத்தல் இராணுவ சத்தியம் வேண்டிட வேண்டும் என்றேன்…..

     இளைய முதிய தேசமே முதிர்ச்சி இந்தியா என பரிவு தெரிவு சுத்த சத்திய சாத்வீகம் வேண்டுமென்றேன்…..
     காலம் காவிரிமைந்தன் வித்தக வளர்ச்சிக்கு தேசபக்திக்கு வித்திட வேண்டும் என ஆராதிக்கிறேன் மதம் கடந்து இறைவன் படைத்த உலகினில் இதயம் இந்திய தேச ஞானம் மொத்தம் என்கிறேன் சத்ரிய சாளுக்கிய சாணக்கிய தராதரம் அனைத்தும் நம் தேசம் உணர்த்துதல் காவிரிமைந்தனார் விளக்கலாம் என்பது என் வாசிப்புக்கு தூண்டென்பதால்…..

     சுயநலமில்லா பொதுத்தவமிருப்பவர் மோடி வசம் ஐவர் சேர அறியலாம் தேச வளர்சுமை கடந்த பரிபூரைண சுகந்த மாற்றத்தை…..

 2. சிவம் சொல்கிறார்:

  எனக்கு கூட இதுபற்றி நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன.

  பிரபல தமிழ் நாயகன் ஒருவர் பல சமயங்களில் பேச ஆரம்பிக்கும்போதே,
  இப்படித்தான் துவங்குவார் “ஒழுங்காக வருமான வரி கட்டுபவன்
  என்கிற கர்வத்தோடு, உரிமையோடு, நான் சொல்கிறேன்…” என்று.

  அப்படி கர்வம் கொள்பவர்கள், தங்களுக்கு ஆண்டுக்கு எவ்வளவு
  வருமானம் வருகீறது என்பதையோ,
  எவ்வளவு வருமான வரி கட்டுகிறோம் என்பதையோ
  சொல்ல மறுப்பது ஏன் ? அதில் மட்டும் ஏன் ரகசியம் ?
  ஒரு க்ளார்க்குக்கோ, ஆசிரியருக்கோ, டிரைவருக்கோ மற்ற வகை
  தொழிலாளர்களுக்கோ எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்பதை
  நம்மால் புரிந்து கொள்ள முடிகின்ற வேளையில் இவர்களின்
  சம்பளத்தை எந்தவகையிலும் கற்பனை செய்ய முடியவில்லை.
  மறைக்கிறார்கள் என்றாலே, வெளிப்படைத்தன்மை இல்லையென்றாலே –
  அதில் திருட்டுத்தனம் ஏதோ இருக்கிறதுஎன்று தானே அர்த்தம் ?

  இன்னொரு விஷயம், தேர்தல்களில் போட்டியிடும்போது
  வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் பிரமாணபத்திரத்தில், அவர்களது
  அசையும், அசையா சொத்து, கடன் விவரங்கள் எல்லாம் தெரிவிக்கப்படுகின்றன.
  இத்துடன் கூடவே, முந்தைய ஆண்டு அவரது வருமானம் எவ்வளவு,
  அவர் கட்டிய வருமான வரி எவ்வளவு என்பதையும் சேர்க்க வைத்தாலென்ன ?
  குறைந்த பட்சம் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களாவது என்ன சம்பாதிக்கிறார்கள்,
  எவ்வளவு வருமான வரி கட்டுகீறார்கள் என்பதை அந்தந்த தொகுதி
  வாக்காளர்கள் தெரிந்து கொள்ள இது உதவுமல்லவா ?

  • DeathBirthRaceR சொல்கிறார்:

   தாங்களும் பதிவேற்றமும் தேடுவது புள்ளிவிவர (கிம்பல அரச வர்க்கம் தாண்டிய) உண்மை பட்டியல் மக்கள் தொகை பண ஏழை வர்க்க மூலதனம் புள்ளிவிவரம் அறிவிக்க அரசியலாக்கா நிலை எப்போது வருமோ…..!

   தனி வரவு செலவு மொத்தமாக திருட்டு திரு வுரு ஆனவர்களை அளக்கலாம்…..!

   எல்லா விடைக்கும் நேர்பட பேசும் சுயநலம் அறுத்த உள்ளம் தேடுவது அறியபடாதது வரை இதயம் இந்தியா என உலகே அறிவது ஆன்மீக வழி தொடரும் முடிவிலாதது மனமாற்றமே…..

   இன்றில்லா….. என்றாவது மாறுமா துதிப்போம் மதம் மனிதம் கடந்து உயிராய் உயர்வான நிர்குணவாதியாய் நினைத்து நிந்தித்து…..

   • புதியவன் சொல்கிறார்:

    இது என்ன மொழி? தமிழ் மாதிரியும் தெரிகிறது. தமிழ் இல்லாததுபோலும் தெரிகிறது. ஒருவேளை வாசிப்பவர்களுக்குப் புரியக்கூடாது என்பதுதான் எழுத்தின் நோக்கமோ?

    • DeathBirthRaceR சொல்கிறார்:

     புதியவன் அவர்களே ……உலகில் இதயம் நம் இந்திய தேசம் என்பதே ஆன்மீக மதம் கடந்த நிலை அரசியல் Con ….. INDIA என்பதாகட்டும் என எழுதினேன்…..

     அரசியல் அலுவலகம் அனைத்தும் CON…..INDIA அந்தந்த மொழி தனில் அலுவலக கட்சி இல்லங்களிலும் பொருத்தும் நாள் வரும் அதை இளைய இரத்த சுத்தி இந்தியா கண்டுணுரும் தேசமாற்றமேற்படுத்தும் நாளும் வரும் …..

     JAIHIND …..

     இந்தியா

     உலகிலேயே அடிமை பட்ட தேசம் ~ சுதந்திர மூலதனம் பல சுரண்டலுக்கு பின்னும் இன்றும் நிறைவாய் இயற்கையின் அதிசயம் மிகுந்த வளரும் தேசம் நம் இந்தியா…..

     • புதியவன் சொல்கிறார்:

      இப்போ புரியுது. நீங்கள் ஆங்கிலத்தில் எழுதி கூகிளை தமிழில் மொழிமாற்றம் செய்து PASTE பண்ணியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். கூகிள் சரியாக மொழிமாற்றம் செய்யாது. அதைப் புரிந்துகொள்வதும் கடினம்.

 3. இளங்கோ சொல்கிறார்:

  பொறுமையின் சிகரம் காவிரிமைந்தன் சார் நீடூழி வாழ்க !

 4. புதியவன் சொல்கிறார்:

  சட்டத்தை வடிவமைத்தவர்கள் மேதைகள், நியாய உணர்வு கொண்டவர்கள். ஆனால் செயல்படுத்துபவர்கள் பெரும்பாலும் நேர்மையானவர்கள் அல்லர். அதனால்தான் இன்றைய இழிநிலை.

  சமுதாயத்தில் எல்லாப்பிரிவிலும் தரம் மிகவும் தாழ்ந்துள்ளது. வக்கீல்கள் எப்படி என்பது செய்திகளைப்படிக்கும் அனைவரும் அறிந்ததுதான்.

  இந்தியாவின் பெரிய பிரச்சனை, பணமிருந்தால் என்னவேண்டுமானாலும் செய்யலாம். சட்டத்தை எல்லாவிதங்களிலும் வளைக்கலாம் என்பதுதான். பணமில்லையா? ஏழையா? உங்கள் உதவிக்கு சட்டமோ அதற்குத் துணையிருப்பவர்களோ வரமாட்டார்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.