கமலுக்கு மோடிஜி தலைமையில் பிரம்மாண்ட விழா … இவ்வளவு செய்த மத்திய அரசு இதைச்செய்யாதா என்ன…?


சென்னைக்கு வந்த மத்திய அமைச்சர் திரு.வெங்கைய நாயுடுவை
சில திரையுலக பிரமுகர்கள் சந்தித்திருக்கிறார்கள்….

இது குறித்து tamilscreen.com -செய்தியிலிருந்து ஒரு பகுதி –

—————–

மத்திய அரசுக்கு, யாரும் போராட்டம் நடத்தாமலே…
யாரும் கோரிக்கை வைக்காமலே திடீரென சினிமாக்காரர்கள் மீது அக்கறை
வந்திருக்கிறது.

மரியாதைக்குக் கூட யாரும் அழைக்காமலே திடுதிப்பென்று சென்னைக்கு
புறப்பட்டு வந்திருக்கிறார் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு.

இங்கே எதற்காக வந்தீர்கள்? என்று கேட்டதற்கு, “தமிழ்த்திரையுலகப்
பிரச்சனைகளை தீர்த்து வைக்க வந்ததாக“ ஏர்போர்ட்டில் முழங்கிவிட்டு
சினிமாக்காரர்களை சந்தித்திருக்கிறார் வெங்கய்ய நாயுடு.

சினிமாக்காரர்களை சந்திக்க வெங்கய்ய நாயுடு விருப்பம் தெரிவித்ததை அடுத்து ( ??? )
தென்னிந்திய திரைப்படத் துறையினர் சந்திக்கும் சவால்கள் குறித்த ஆலோசனை
கூட்டம் என்ற பெயரில் அவசரக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

—————

இது tamil.samayam.com செய்தியின் ஒரு பகுதி –

சென்னை கிண்டியில் உள்ள லீ மெரிடியன் நட்சித்திர ஹோட்டலில் தென்னிந்திய
திரைப்பட வர்த்தக மையத்துடன் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சந்திப்பு
கூட்டம் நடைபெற்றது. இதில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் நடிகர்
கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

——————

லீ மெரிடியன் சென்னையின் 5 நட்சத்திர ஓட்டல்…
சந்திப்பு, பார்ட்டிக்கு நிறைய செலவாகி இருக்கும்…
மத்திய அரசின் செலவாக நிச்சயம் இருக்காது…
செலவு நடிகர் சங்கத்துடையதா அல்லது
தயாரிப்பாளர் சங்கத்துடையதா – தெரியவில்லை…!!!
யாருடையதாக இருந்தால், நமக்கென்ன…!!!

தமிழகத்திற்கு என்று எவ்வளவோ செய்து விட்டது மத்திய அரசு…
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாதா என்ன …?
அதுவும் சினிமாக்காரர்களின் கோரிக்கைகள்…!!!

இவை சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

????????????????????????????????????

வெளியாகி இருக்கும் புகைப்படத்தில்
நமக்குத் தெரிந்த பிரபலங்கள் – கமல் ஹாசன், விஷால், கார்த்தி….

சந்திப்பு முடிந்து வெளியே வந்த விஷால் செய்தியாளர்களிடம் கூறியது –

—————-

அமைச்சரிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தோம் –

” திரைப்படங்கள் சட்டவிரோதமாக வெளியாவது தமிழ்நாட்டிற்கு மட்டும்
உரிய பிரச்னை அல்ல. அது அனைத்து மாநிலங்களுக்குமானது…
திருட்டு டிவிடி என்பது மாநில அளவில் மட்டுமல்ல மத்திய அரசு அளவிலும்
நடவடிக்கை எடுத்து ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று…

ஜி.எஸ்.டி. பொறுத்தவரை 1000 கோடி ரூபாய் செலவில் வெளியாகும் ஹாலிவுட்
படத்திற்கும் ஒரு கோடி ரூபாய் செலவில் வெளியாகும் தமிழ் திரைப்படத்திற்கும்
ஒரே மாதிரி வரி விதிப்புகள் விதித்தால் கண்டிப்பாக பாதிப்புகள் ஏற்படும். தமிழ்
சினிமாவிற்கு குறைந்த வரி விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளோம்…

செவாலியே விருது பெற்ற கமலை பாராட்டும் வகையில் இந்திய அளவில்
பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த நிகழ்ச்சி பிரதமர்
மோடியின் தலைமையில் நடக்க வேண்டும் என்று அமைச்சரிடம் கோரியுள்ளோம்.

– உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக வெங்கைய நாயுடு கூறினார் ‘ என்று
தெரிவித்துள்ளார்.

—————-

இப்போதெல்லாம் கமல் அவர்கள் அடிக்கடி மத்திய மந்திரிகளை
சந்திக்கிறார்….

அமைச்சர் பொன்.ரா. அவர்களை சென்னையிலும், டெல்லியிலும்
விடாமல் பின் தொடர்ந்து, அடிக்கடி மரியாதை நிமித்தமாக
சந்தித்து பேசினார்….

அதன் விளைவோ என்னவோ தெரியவில்லை –
கடந்த மாதம் பிரிட்டனுக்கு சென்ற இந்திய கலைத்தூதுக்குழுவில்
இடம் பெற்று – பிரிட்டிஷ் ராணியை சந்திக்கும் வாய்ப்பு பெற்றது……

இப்போது கமலுக்கு மத்திய அரசு விழா எடுக்க வேண்டும்
என்று விஷால் கோரிக்கை மனு கொடுக்கும்போது
கமலும் கூடவே இருப்பது – நாகரிகமாகவா இருக்கிறது…?

என்ன ஆயிற்று உலக நாயகனுக்கு….?
எங்கே போனது சுயமரியாதை …?
எதற்கான முஸ்தீபுகள் இவையெல்லாம் …?

—————-

பின் சேர்க்கை –

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, திரு.வெங்கய்ய நாயுடு,
கமல் ஹாசன் அழைப்பின் பேரிலேயே தான் சென்னை வந்ததாக
கூறி இருக்கிறார்…..

பரவாயில்லையே…. கமல் மத்திய அமைச்சர்களுடன்
நல்ல தொடர்பில் இருக்கிறாரே….

தமிழகத்தின் பல பிரச்சினைகளைப்பற்றி கமல் அடிக்கடி
கருத்து வெளியிடுகிறார்… அவற்றை தீர்க்கவும் கமலின்
இந்த நெருங்கிய தொடர்புகள் உதவும் என்று நம்பலாமா….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to கமலுக்கு மோடிஜி தலைமையில் பிரம்மாண்ட விழா … இவ்வளவு செய்த மத்திய அரசு இதைச்செய்யாதா என்ன…?

 1. விவசாயிகளைப்பற்றி நினைக்காத அரசு திரைப்படக்கூத்தாடிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு காரணம் தமிழ்நாட்டில்தான் ரசிகன் என்ற அறியாமைகள் கூடுதல் என்ன செய்வது ஐயா ?

 2. புதியவன் சொல்கிறார்:

  பாஜகவுக்கு தமிழகத்தில் தன் ஆதரவுத்தளத்தைப் பெருக்கியாக வேண்டிய நிர்ப்பந்தம். அதற்கு எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று யோசித்துக்கொண்டிருக்கிறது. காலம் போன காலத்துல கமலஹாசனும் ஆட்சியாளர்களைப் பிடித்துத் தொங்குகிறார். அவர்களும் இதனால் தங்களுக்கு ஆதாயம் கிட்டுமா என்று பார்க்கின்றனர்.

  என்னைக்கேட்டால், காலாவதியானவர்களைப் பிடித்துத் தொங்குவதைவிட, அஜீத் போன்ற நல்ல பிம்பம் உள்ளவர்களை அரசியலுக்குள் வரவைத்தால் கொஞ்சம் பிரயோசனமாக இருக்கும். கமலஹாசன் ஆதரிக்கிறார் என்றால், அவர் வீட்டில் உள்ல வாக்குகள்கூட முழுமையாக அந்தக் கட்சிக்குப் போய்ச்சேராது. சிலரை திரைப்படங்களில் பார்க்கத்தான் பிடிக்கும். அவர்களைத் தலைவர்களாகவோ வழிகாட்டிகளாகவோ ஏற்றுக்கொள்ள மனம் விரும்பாது. கமலஹாசன் அத்தகையவர்களில் ஒருவர்.

  1000கோடி படத்திற்கும் 1கோடியில் எடுக்கும் படத்திற்கும் ஒரே வரியா? – சோழியன் குடுமி சும்மா ஆடுமா? ‘திருட்டு டிவிடி’-இவைகளைப் பற்றிப்பேசுபவர்கள் எத்தனைபேர் ஆங்கில திருட்டு டிவிடி படங்களைப் பார்த்து அதேபோல் சீன் வைப்பவர்கள்?

  விவசாயிகளைக் கவனிக்க வழியைக்காணோம். இப்போது திரைத்துறையினர் பிரச்சனைக்கு என்ன அவசரம்?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கமலை பாஜகவில் சேர்ப்பதால், சாதகத்தை விட பாதகமே அதிகம்
   என்பது பாஜக தலைமைக்கும் தெரிந்திருக்கும். எனவே கமலை
   பாஜக வில் சேர்க்க அது முயற்சிக்காது…. ஆனால், அவரை
   வைத்துக் கொண்டு எதாவது விளம்பரம் தேட முயற்சி நடக்கலாம்….

   கமல் மத்திய பாஜக அரசிடம் எதையோ எதிர்பார்க்கிறார்…
   அதற்காக அவர் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டு இருப்பதும் தெரிகிறது.
   கத்திரிக்காய் காய்த்தால், கடைக்கு வந்து தானே ஆக வேண்டும் –
   அப்போது புரியும் இவற்றின் பின்னணி என்னவென்று…!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.