கோப்பையில் உள்ள காப்பியை குடிக்க மனம் வருமா….?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல். Bookmark the permalink.

3 Responses to கோப்பையில் உள்ள காப்பியை குடிக்க மனம் வருமா….?

 1. selvarajan சொல்கிறார்:

  அய்யா… ! சிறுகதைகளை தகுந்த நேரங்களில் வெளியிடுவதாகவும் — இளைஞர்களுக்கு சிறுகதைகளை படிக்கும் ஆவலை தூண்டப் போவதாகவும் தெரிவித்து இருந்தீர்கள் — வளர்க தங்களின் பணி… !

  இன்று — ” சிறுகதை மன்னன் ” என்று போற்றப்படுபவரான ” புதுமைப்பித்தன் ” அவர்களின் – பிறந்த நாள் … 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியவர் … , 50-க்கும் அதிகமான பிற மொழி படைப்புகளை ” தமிழில் ” மொழி மாற்றம் செய்து வெளியிட்டவர் …. அவரை நினைவு கூர்வோம் …. கோப்பையில் உள்ள காப்பியை பருக மனம் யோசிக்கும் …. புதுமைப்பித்தனை நினைக்க ” மனம் விரும்பும் ” …. !

  இவர் எங்கள் கடலூரில் – திருப்பாதிரிபுலியூரில் பிறந்தவர் (ஏப்ரல் 25, 1906 – ஜூன் 30, 1948) குறுகிய காலமே வாழ்ந்திருந்தாலும் இலக்கியத்தின் முன்னோடி என்று கூறுவதில் தவறு இல்லைதானே … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   புதுமைப்பித்தன் உங்கள் ஊரில் பிறந்திருக்கலாம்….
   ஆனால் அவர் நம் அனைவருக்கும் சொந்தமானவர்…!

   அவர் மீது எனக்கு ஒரே ஒரு குறை தான் உண்டு…
   உடல் நலத்தில் அக்கரை கொள்ளாமல் –
   குறுகிய காலத்திலேயே மறைந்து விட்டது குறித்தது தான்…!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. புதியவன் சொல்கிறார்:

  இது சில வருடங்களுக்கு முன் சைனாவில் (தாய்வான்) கண்டுபிடித்து விற்பனை செய்ய ஆரம்பித்தார்கள் (காதலர்கள் வரும்போது, அவர்களது போட்டோவை எடுத்து காபியின் மீது பிரிண்ட் செய்வது). உடனே அமெரிக்காவில், தாங்கள்தான் முதலில் கண்டுபிடித்ததாக இருக்கவேண்டும் என்று அதற்கு பேடன்ட் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.

  எதையேனும் செய்து விற்பனையைப் பெருக்கு, வாடிக்கையாளர்களைக் கவரு என்பதுதான் இப்போதைய தாரக மந்திரம். வெறும் காபி, சர்வ சாதாரணமாக 200 ரூபாய்களுக்கு இத்தகைய காபி ஷாப்புகளில் விற்பனைசெய்யப்படுகிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.