அரசியல்வாதிகள் அற்புதமான இந்த யோசனையை ஏன் கவனிக்க மாட்டேனென்கிறார்கள்…?

கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலையும்
அரசியல்வாதிகளை கண்டால், வெறுப்பு, எரிச்சல், ஆத்திரம்
எல்லாமே வருகிறது.

பல வருடங்களாக பேசிக்கொண்டே இருக்கிறார்கள் – நதிகளை
இணைப்பது பற்றி…. தேர்தல் அறிக்கையில் பாஜக சேர்த்துக்கொண்டதே
தவிர, ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகியும், இது விஷயமாக
துரும்பைக்கூட தூக்கிப் போடவில்லை… அவர்களின் கனவு பூராவும்
பிரதமரின் பாராளுமன்ற தொகுதியில் “கங்கையை சுத்தப்படுத்தும்”
திட்டத்திலேயே நின்று விட்டது. 20,000 கோடி ரூபாய் – இந்த ஒரு
திட்டத்திற்கு மட்டும்… ஒரு வேளை மறந்திருப்பீர்கள்… நீங்களும் நானும்
கொடுக்கும் ஒவ்வொரு சர்வீஸ் டேக்சுடன் இதற்கும் சேர்த்து கூடுதல்
வரி கட்டுகிறோம்.

நதிகள் இணைப்புத் திட்டம் வாஜ்பாய் அவர்களின் கனவாகவே நின்று
விட்டது…. அப்போதே துவங்கி இருந்தால், இப்போது எங்கோ போயிருக்கலாம்…!

இப்போது அவர்களுக்கு சுலபமான காரணங்கள் கிடைத்து விட்டன –
இயலாது என்று சொல்வதற்கு… நதி நீர் மாநில சப்ஜெக்ட் என்பதாலும்,
பல மாநிலங்கள் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்க மறுப்பதாலும்
இப்போதைக்கு ஒன்றும் செய்ய இயலாது என்று கையை விரிக்கிறார்கள்.

மனம் இருந்தால் மார்க்கமா இல்லை…?
இதற்கு ஒரு மாற்றுத்திட்டமாக, அனைத்து மாநிலங்களும்
ஏற்றுக்கொள்ளக்கூடியதாக ” நீர்வழிச்சாலை ” என்கிற அற்புதமான
ஒரு யோசனையை தமிழகத்தின் ஓய்வுபெற்ற நீர்மேலாண்மை பொறியாளர்
திரு.ஏ.சி.காமராஜ் அவர்களது குழு உருவாக்கி அதை நடைமுறைக்கு
கொண்டு வர வேண்டுமென்று பெரும் முயற்சி எடுத்துக்கொண்டு வருகிறது.

திரு.காமராஜ் அவர்கள் இதுகுறித்து மத்திய அமைச்சர்களுடனும்,
தமிழகம் உள்பட, பல மாநில அரசுகளுடன், பேசி இருக்கிறார்….
இதற்கு ஒத்துழைப்பு தர சில தென் மாநில அரசுகள் ஏற்கெனவே
ஒப்புக்கொண்டுள்ளன.
ஆனால், டெல்லியிலும் சரி, மாநிலத்திலும் சரி – கிணற்றில் போட்ட
கல்லாகவே இருக்கிறது இந்த யோசனை…

இன்று விவசாயிகளைப்பற்றி பெருத்த கவலை கொள்வதாக காட்டிக்கொண்டு –
போராட்டம் என்கிற பெயரில் திருமண மண்டகங்களில் கதை

பேசிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் இந்த “நீர்வழிச்சாலை திட்டம்”
பற்றி சிறிதாவது அக்கரை கொள்கிறார்களா….?
யாராவது, எந்த கூட்டத்திலாவது இது குறித்து பேசி இருக்கிறார்களா…?
எந்த வகையிலாவது முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறார்களா…?

நமது வலைத்தள நண்பர்கள் சில பேர் ஏற்கெனவே அறிந்திருப்பார்கள்.
இருந்தாலும், அனைவருக்காகவும், அந்த திட்டத்தை பற்றிய விவரங்களை
கீழே தருகிறேன்….திரு.ஏ.சி.காமராஜ் அவர்கள் பேசியது –

————-

நதிகள் இணைப்பு என்பது ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு
நீரை அனுப்பலாம்; ஆனால் திரும்பப் பெறமுடியாது. நவீன நீர்வழிச் சாலை
திட்டத்தில், தேவைப்படும்போது நீரை திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதி இருக்கிறது.

நவீன நீர்வழிச் சாலை திட்டம் என்பது ‘பவர் கிரிட்’ போன்றது.
தேவையில்லாதபோது நீரைத் தந்துவிட்டு, தேவையானபோது எடுத்துக்
கொள்ளலாம். இதனால் யாருடைய பங்கீட்டு உரிமையும் பறிபோகாது. மாறாக,
வீணாக கடலில் கலக்கும் தண்ணீரைக் கொண்டு வளம் கொழிக்க வைக்க லாம்.
மற்ற மாநிலங்கள் எத்தனை அணைகள் கட்டினாலும் அதைப் பற்றி கவலைப்படவும்
வேண்டாம்.

கோதாவரியில் இருந்து ஆண்டுதோறும் சராசரியாக 3 ஆயிரம் டிஎம்சி தண்ணீர்
வீணாக கடலுக்குப் போகிறது. கடந்த ஆண்டு மட்டும் 4 ஆயிரம் டிஎம்சி
வீணானதாக ஆந்திர மாநில தலைமைப் பொறியாளர் என்னிடம் கூறினார்.

கர்நாடகாவிடம் வெறும் 419 டிஎம்சி தண்ணீருக்கு நாம் முட்டி மோதுகிறோம்.
ஆனால், அவர்கள் ஆண்டுதோறும் சராசரியாக 2 ஆயிரம் டிஎம்சி தண்ணீரை
கடலில் விடுகிறார்கள்.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த போராட
வேண்டி இருக்கிறது. ஆனால், கேரளத்தில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 2.400
டிஎம்சி தண்ணீர் கடலுக்குப் போகிறது.

இந்த மூன்று மாநிலங்களும் தெலங்கானாவும் நவீன நீர்வழிச் சாலை திட்டத்தை
செயல்படுத்து வது குறித்து எங்களோடு ஆர்வத் துடன் பேசிவருகின்றன. ஆந்திர
முதல்வர் சந்திரபாபு நாயுடு, மற்ற மாநிலங்கள் ஒத்துவராமல் போனாலும் தனது
மாநிலத்துக் குள்ளேயே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவும் தயாராக இருக்
கிறார். தமிழக முதல்வர் ஜெய லலிதா, 2011 தேர்தல் வாக்குறுதி யிலேயே
இத்திட்டத்தைச் சேர்த்திருந்தார். கடந்த தேர்தல் பிரச்சாரத்தில் இதுகுறித்து பல
இடங்களில் பேசினார். ஆனாலும், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு
தரப்பில் இன்னமும் ஏனோ சுணக்கம் காட்டுகின்றனர்.

தமிழகத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.50 ஆயிரம் கோடி செலவாகும்.
ஆனால், மாநில அரசு ரூ.500 கோடி செலவழித்தால் போதும். மீதமுள்ள தொகையை
மத்திய அரசும் தனியார் நிறுவனங்களும் செலவழிக்க தயாராக இருக்கின்றன.

இத்திட்டம் செயல் பாட்டுக்கு வந்தால் நீர்வளம் செழிப்பதோடு நீர்வழிப்
போக்குவரத்து, நீர் மின்சாரம் உள்ளிட்ட வேறு பல வழிகளிலும் அரசுக்கு ஆண்டுக்கு
சராசரியாக சுமார் ரூ.6 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும்.

எனவே, இனியும் காலம் தாழ்த் தாமல் இத்திட்டத்தை செயல்படுத்தும்
நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என
முதல்வருக்கு கடிதம் எழுதி இருக்கிறோம். எதிர்காலத்தில் தமிழகத்தின் தண்ணீர்
பிரச்சினைகளுக்கு இத்திட்டம் ஒன்று தான் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்…

———————————

பின் குறிப்பு –

வெற்று அரசியல் காரணங்களுக்காக போராடுவதை விட்டு விட்டு,
விவசாயிகளின் பிரச்சினைகளை உண்மையாகவே தீர்க்கக்கூடிய
இந்த திட்டம் உடனடியாக செயலுக்கு வர செய்ய வேண்டியதை
தமிழக அரசு உடனடியாக துவக்க – அரசியல் கட்சிகளும்,
சமுதாய நல அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும் –
அனைத்து மீடியாக்களும் ஒன்றிணைந்து முனைப்பு காட்ட முன்வர வேண்டும்…

செய்வார்களா…?

இது குறித்து திரு.ஏ.சி.காமராஜ அவர்களின் பேட்டி ஒன்று –

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to அரசியல்வாதிகள் அற்புதமான இந்த யோசனையை ஏன் கவனிக்க மாட்டேனென்கிறார்கள்…?

 1. சைதைஅஜீஸ் சொல்கிறார்:

  ஐயா
  சில நாட்களாக காவிரி தமிழகத்தில்தான் உருவாகி, கர்நாடகத்திற்கு சென்று பிறகு மீண்டும் தமிழகம் வருகிறது என்றும்…
  எனவே நீலகிரியில் நாம் அணை கட்டிவிட்டால் கர்நாடகா நம்மிடம் காவிரி நீருக்காக கையேந்தும் காலம் வந்துவிடும் எனகின்ற மாதிரி தகவல் பறவிக்கொண்டிருகிறதே அதை பற்றி தங்களின் கருத்து என்ன?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   அஜீஸ்,

   நான் இது குறித்த செய்திகள் எதையும் பார்க்கவில்லையே…
   எந்த அடிப்படையில் இதைச் சொல்கிறார்கள் என்று
   சொல்லி இருக்கிறார்களா…? மேற்கொண்டு விவரங்கள் எதாவது
   இருந்தால் அனுப்புங்களேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. selvarajan சொல்கிறார்:

  // நதிநீர் இணைப்பு — செய்ய வேண்டியது என்ன … ? // என்பதைப்பற்றி முன்னாள் இந்திய ஜனாதிபதி திரு . அப்துல் கலாம் அவர்கள் கூறியதை அறிந்துகொள்ள : — http://saintvethathiri.blogspot.in/2010/06/blog-post_5043.html ….
  இதில் திரு ஏ .சி. காமராஜ் அவர்களின் ” நீர்வழிச்சாலை ” பற்றியும் — நீர் சோர்ஸ் பற்றியும் — தேவைப்படும் இடங்களுக்கு திருப்பிவிடும் முறை குறித்தும் — ரிமோட் சென்சிங் சாட்டிலைட் பற்றியும் விரிவாக விளக்கியதோடு — இரு பெருந்தலைவர்கள் ஜெயலலிதா – கலைஞர் போன்றவர்களிடம் திட்டம் பற்றி கூறியதையும் சுட்டிக்காட்டியுள்ளார் …. காலம் தான் கடந்ததே தவிர — செயல் … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   நான் இந்த இடுகையை எழுத முன்வந்ததே –
   இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு இந்த முயற்சியை
   தொடங்க வேண்டும்…

   அனைத்து தரப்பினரும் – சமூக அக்கரையுள்ள தொண்டு நிறுவனங்கள்,
   ஊடகங்கள், பொதுமக்கள் -இதில் அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்…

   அரசியல் கட்சிகளும்- இந்த விஷயத்தில் தங்கள் கவனத்தை
   செலுத்த வேண்டும் – என்று சொல்லத்தான்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. DeathBirthRaceR சொல்கிறார்:

  இன்று விவசாயி என்னும் மனிதம் உழைக்கும் உற்பத்தியாளர்களுக்காக கடைதிறவா அறப்போராட்டம் கண்டும் காணாது செயலாற்றும் ஆற்றாமை அரசியலாட்டம் தன்னலம் துறந்தால் பிறர்நலம் வாழ்த்தும் நிலை வருமா யார் யாரோ வருவதும் போவதும் கண்ணதாசன் பாடல் தான் நினைவில் நிற்கிறது காலத்தால் அழியாதது கவித்துவமா இல்லை அரசதந்திரங்களா மக்கள் உளமாற மாறும் மாற்றமே சங்கடங்கள் தீர்க்கும்…..!

 4. Thiruvengadam சொல்கிறார்:

  Linking of rivers was first mooted by VKRV Rao who was an engineer and a central minister but he lost his job because many of the Ganga basin states were not in favor.Further plenty of water from Brahmaputra is still goes to to the Bay of Bengal and with help from Bangladesh could be diverted and this will also reduce annual damages done by cyclones there.Recently Nitingadgari also suggested but did not follow through.It is time southern CMs should come together and establish southern water development boards or authority.Thiruvengadam

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப திருவேங்கடம்,

   இந்த விஷயத்தில் அக்கறையுடைய அனைவரும்
   ஒன்று திரண்டு அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்…
   ஒன்றுமில்லாத வெட்டி விஷயங்களை எல்லாம்
   மணிக்கணக்கில் விவாதிக்கும் – தொலைக்காட்சிகள்
   இது குறித்த கருத்துக்களை ஒன்று சேர்ப்பதில் ஈடுபடலாம்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.