எது நடக்கிறதோ….. அது மட்டும் ….!!!

ஏழு நாட்கள் போலீஸ் காவலில்… அதன் பிறகு அநேகமாக ” திஹார்…”

கண்ணன் என்ன தான் கீதையில் சொன்னாலும் –
அவன் சொன்னதெல்லாம் எப்போதும் நடந்து விடுவதில்லை…..
எப்போதாவது தான் நடக்கிறது..!

டெல்லி போலீசால்
கைது செய்யப்பட்ட
தினகரன்

அதிமுக அலுவலகத்திலிருந்து
தூக்கி எரியப்படும்
திருமதி சசிகலா பேனர்

கண்ணன் என்ன சொன்னான்…?

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது…
ஹூஹூம் நடந்ததெதுவும் நல்லதாக நடக்கவில்லை…

எது நடக்கிறதோ – அது நன்றாகவே நடக்கிறது…
அதை மட்டும் ஓரளவு சரியென்று ஏற்றுக் கொள்ளலாம்.

எது நடக்க இருக்கிறதோ – அதுவும் நன்றாகவே நடக்கும்…
எதிர்காலம் – எப்படி நடக்கிறது என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

உன்னுடையதை எதை இழந்தாய் ?
எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு ?
எதை நீ எடுத்துக்கொண்டாயோ –
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது….

எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது..
மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகும்….

– இதை மட்டும் சத்தியமான வாரத்தைகளாக ஏற்றுக்கொள்ளலாம்.

இந்த வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை அதிமுகவினரின்
அனைத்து அணியினரும் மரியாதையாக புரிந்து
ஏற்றுக் கொள்ள வேண்டும்…

மக்கள் அளவிற்கு அதிகமாகவே பொறுமை காத்து விட்டார்கள்..
தமிழகமே தாகத்தில் தவிக்கிறது…
குடிக்க நீர் இன்றி மக்கள் தவிக்கும்போது –
தமிழக அரசு “வேறு தண்ணி” -க்காக அலைகிறது…
புதிது புதிதாக இடம் தேடுகிறது…

நிர்வாகம் நான்கு மாதங்களுக்கும் மேலாக ஸ்தம்பித்துப்போய்
நிற்கிறது. எது நிரந்தரம் என்று தெரியாமல், யாரும் எந்த வேலையையும்
செய்வதை நிறுத்தி விட்டார்கள்.

அதிமுகவில் இருக்கும் அத்தனை முன்னாள், இன்னாள் மந்திரிகளையும்
நிற்க வைத்துப் பார்த்தால், நூறு சதவீதம் யோக்கியர் என்று
சொல்லக்கூடிய அளவில் ஒன்றிரண்டு பேர் தேருவதே சிரமம்…

எனவே, இருப்பவர்களுள், ஓரளவு மக்களால் நம்பப்படுகிற
ஓபிஎஸ் அவர்களை தலைவராக ஏற்றுக்கொண்டு,
கிரிமினல் வழக்குகளுக்கு உள்ளான விஜயபாஸ்கர் மற்றும் இரண்டு
அமைச்சர்களையும் விலக்கி விட்டு, உடனடியாக அமைச்சரவை
சீரமைக்கப்பட்டு, கட்சி ஒருங்கிணைக்கப்பட்டு,
ஆட்சி நிர்வாகம் வேகமாக நிலை நிறுத்தப்பட ஆவன செய்யப்பட வேண்டும்.

மக்களின் உடனடி தேவைகள், பிரச்சினைகளுக்கு
முன்னுரிமை கொடுக்கப்பட்டு – அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

பேச்சு வார்த்தை, பதவிப் போராட்டம், குழு சேர்தல்
என்று இனியும் காலம் தாழ்த்துவார்களேயானால் –
மக்களின் நம்பிக்கையை இந்த அரசியல்வாதிகளும், அரசும்
அடியோடு இழப்பார்கள்….
விளைவு – மக்கள் தாங்களே பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள்..
இவர்கள் அத்தனை பேரும் தூக்கி வீசப்படுவார்கள்.

எனவே, உணர்ந்து செயல்படுதல் இவர்கள் அனைவருக்கும் நல்லது.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to எது நடக்கிறதோ….. அது மட்டும் ….!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  4 ஆண்டுகளில் சுருட்டுவது. இன்னும் அதிக ஆண்டுகள் கட்சியை வீரியத்தோடு நடத்துவது என்ற இரண்டு குழுக்களிடையே கருத்தொற்றுமை ஏற்படுவது சிறிது கடினம்.

  முதலில், மக்கள் சசிகலா, மன்னார்குடி கும்பலுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை முழுவதுமாக நம்பவேண்டும். இப்போதுள்ள சில வருடங்கள்தான் கடினமாக இருக்கும் (ஏனென்றால் அவர்களால் தெரிவு செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் இருப்பதால்). அதன்பிறகு இந்தக் களைகளை நிரந்தரமாக விலக்கிவைத்துவிடலாம்.

  முதலில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி, அந்தப் பொதுச் செயலாளரை கட்சியின் தலைவராக ஏற்றுக்கொண்டு, அவர் சொல்வதை எல்லோரும் ஏற்றுக்கொள்வது சிறந்தது. இல்லாவிட்டால், உங்கள் குரூப்பிற்கான பதவி, எங்க ஆளுக்கான பதவி என்று பதவிகள் பங்கிடப்படும், மக்கள் நம்பிக்கை வீணாகும். அதுவும்தவிர, தேவையில்லாமல் சாதிக்குழுக்களாகச் சிதறிவிடும்.

  அதுவும்தவிர, நிச்சயமாக பாஜகவைப் பக்கத்தில் சேர்க்கக்கூடாது. அது கட்சியின் ஒருபகுதி ஆதரவாளர்களை திமுகவை நோக்கிச் செல்லவைக்கும். பாம்புக்கு ஏன் வீணாகப் பால் வார்க்கவேண்டும்?

  பாஜக, அவர்களது சொந்த பலத்தில் மக்கள் ஆதரவைப் பெற்றுக் காண்பிக்கட்டும்.

 2. selvarajan சொல்கிறார்:

  // எனவே, உணர்ந்து செயல்படுதல் இவர்கள் அனைவருக்கும் நல்லது. // மக்கள் .? நியாயத்திற்காக போராடி — தங்களுக்கு கிடைக்க வேண்டியதை உரிமையோடு கேட்டு பெறாமல் – ” போகட்டும் – போகட்டும் ” என்று விட்டதினால் வந்த வினை …

  நூல் அறுந்த காற்றாடி போல காற்று அடிக்கும் திசையில் எல்லாம் சென்று எங்கோ ஓரிடத்தில் மாட்டி கிழிந்து தொங்கி ஊசலாடுவதைப் போன்றோ அல்லது வேறு ஒருவர் கையில் சிக்கி அவருக்கு உரிமையாகி — பயனற்று போய் விடுவதை போலவோ —

  ” போகட்டும் – போகட்டும் ” என்று எனோ தானோ என்று இருக்கின்ற மக்களும் திருந்தினால் — தட்டிக் கேட்டால் — கட்சி பாகுபாடு இல்லாமல் ” இத்தகைய அரசியல்வாதிகள் ” ஆட்டம் போடுவார்களா … ? இவனை விட்டால் அவன் என்கிற மனப்போக்கு மக்களுக்கு மாற — கீதா உபதேசங்கள் அவசியம் தேவைதானே … ?

 3. selvarajan சொல்கிறார்:

  // பிரதமரையும் விசாரிக்கலாம்.. லோக்பால் சட்டத்தை உடனே அமல்படுத்துக.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு
  Read more at: http://tamil.oneindia.com/news/india/no-justification-delaying-appointment-lokpal-says-supreme-court-281052.html … அமல் படுத்துவார்களா … ?
  நமது தளத்தில் இந்த ” லோகபால் சட்டம் ” பற்றியும் — என்ன நன்மைகள் இதனால் என்பது பற்றியும் முன்பு ஒரு இடுகை வெளிவந்தது :– // லோக்பால் வந்தால் நமக்கு என்ன கிடைத்து விடப்போகிறது ? எதற்காக இவ்வளவு அவதிப்படுகிறார்கள் ?
  Posted on ஓகஸ்ட் 24, 2011 by vimarisanam – kavirimainthan // மீண்டும் நினைவுக்கு …. !!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.