சசி தரூர் – ஒரு வித்தியாசமான பார்வை….!!!


பொதுவாக எனக்கு சசி தரூர் (காங்கிரஸ் எம்.பி. முன்னாள் அமைச்சர் )
அவர்களை பிடிக்காது. அவரது மேட்டுக்குடி அணுகுமுறைகளும்,
அகம்பாவமான பேச்சும், அவர் மீதுள்ள கிரிமினல் குற்றச்சாட்டுகளும், வயதுக்கு
ஒவ்வாத நடவடிக்கைகளும் ….. கூட இதற்கு காரணம்…!

ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் லண்டனில் ஆற்றிய ஒரு உரையும்,
அண்மையில் அல்ஜஜீரா செய்தி தளத்தில் எழுதிய கட்டுரையும்
அவரைப்பற்றிய என் மதிப்பீட்டை கொஞ்சம் பாதிக்கவே செய்தது …

பிரிட்டிஷாரின் இருநூறு ஆண்டுக்கால காலனி ஆதிக்கம் காரணமாக
இந்தியர்கள் சந்திக்க நேர்ந்த தாங்கவொண்ணா கொடுமைகளை, பல
அரசியல்வாதிகளும், சரித்திர ஆசிரியர்களும் விவரமாக பதிவு செய்திருக்கிறார்கள்.

ஆனால், உலக அரங்கில் பிரிட்டிஷாருக்கு முந்தைய இந்தியா – இருந்த
இடத்தையும், காலனி ஆதிக்கம் காரணமாக இந்தியா பிரிட்டனிடம் பறிகொடுத்த
அளவிட முடியாத செல்வங்களை, சொத்துக்களைப்பற்றி
இதுவரை இந்திய அரசியல்வாதிகளோ, சரித்திர ஆசிரியர்களோ –
சரிவர பேசவில்லை என்றே தோன்றுகிறது….

அண்மையில் அல்ஜஜீரா செய்தித்தளத்திற்கு திரு.சசி தரூர் அனுப்பியுள்ள
ஒரு கட்டுரையின் சாராம்சத்தையும், அது குறித்த செய்திச்சுருக்கத்தையும்
கீழே தந்திருக்கிறேன்….

————————–


இந்தியாவை இங்கிலாந்துகாரர்கள் ஆண்டதன் மூலம்
இந்த நாட்டுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக இந்தியா
வீழ்ச்சியை தான் சந்தித்தது.

இங்கிலாந்துகாரர்கள் இந்தியாவை பிடிப்பதற்கு முன்பு 1700-ம்
ஆண்டுவாக்கில் இந்தியா உலகின் மிகப் பெரிய பணக்கார நாடாக இருந்தது.

உலக உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா
27 சதவீதத்தை பெற்று இருந்தது.

அவர்கள் 200 ஆண்டு காலம் இந்தியாவை ஆட்சி செய்து விட்டு
வெளியேறிய போது –
உலகின் மிகப் பெரிய ஏழை நாடாகவும்,
நோய்கள் நிறைந்த நாடாகவும், கல்வி அறிவு இல்லாதவர்கள் கொண்ட
நாடாகவும் இந்தியாவை மாற்றி இருந்தனர்.

கைத்தறி நெசவுத் தொழிலில் உலகிலேயே புகழ்பெற்ற உன்னத நிலையில்
இருந்த இந்தியாவை நசுக்கி, நாசமாக்கி – அந்த தொழிலில் ஈடுபட்டிருந்த
அத்தனை நெசவாளர்களையும் அழித்தனர்.

இன்றைக்கு பலரும் பிரிட்டிஷ் அரசு தான் நமக்கு பல முன்னேற்றங்களை
கொண்டு வந்தது. இந்தியா முழுவதும் ரெயில்வே போக்குவரத்தை
கொண்டு வந்தது என்றெல்லாம் பேசி வருகின்றனர். பிரிட்டிஷார் கொண்டு
வந்த ரெயில்வே சிஸ்டம், நம் மக்களைப்பார்த்து பரிதாபப்பட்டு அல்ல –

அவர்களின் ஆட்சி அதிகாரத்தை பரவலாக்கவும், நிர்வாக வசதிகளை
விரிவுபடுத்த வேண்டும் என்கிற எண்ணத்தோடு தான் அவை கொண்டு
வரப்பட்டன….

அதிலும் பிரிட்டிஷ் அதிகாரிகள் அடித்த கொள்ளை – கற்பனைக்கே
எட்டாதது. இந்தியாவில் ரெயில்வே பாதைகளைப் போடுவதற்காக
லண்டனில் துவக்கப்பட்ட கம்பெனியின் பிரிட்டிஷ் ஷேர் ஹோல்டர்கள்
இந்திய மக்களின் ரத்தத்தை உறிஞ்சி பணமாக்கினர். எந்தவித
தணிக்கைகளுக்கும் உட்படாத கணக்கு வழக்கு அவர்களின் பகல் கொள்ளைக்கு
மிகப்பெரிய பலமாக அமைந்தது.

1850-60 -களில் விலைவாசி மிகவும் உயர்ந்த அமெரிக்காவிலேயே ரெயில்
பாதை அமைக்க ஒரு மைல் தூரத்திற்கு ஆன செலவு சுமார் 2,500 டாலர்கள்.

அதே காலத்தில், விலைவாசி மிகவும் குறைந்த –
தொழிலாளர்களுக்கான கூலி மிக மிக குறைந்த இந்தியாவில் –
பிரிட்டிஷ் ரெயில்வே கம்பெனி செலவு செய்ததாக
காண்பித்த கணக்கு – ஒரு மைலுக்கு சுமார் 22,000 அமெரிக்க டாலர்கள்…!

அவர்கள் ஆட்சி செய்த போது கட்டுபாடற்ற கிரிமினல் குற்றங்களை
செய்தனர். இந்திய மக்களை தங்கள் இஷ்டத்துக்கு கொன்று குவித்தனர்.
மொத்தம் 3½ கோடி இந்தியர்களை கொன்றுள்ளனர். அவர்கள் செய்த

குற்றங்களையெல்லாம் இப்போது மறந்து விட்டார்கள்.
அதை மறைக்க பார்க்கிறார்கள்.

இந்த செயல்களுக்காக இங்கிலாந்து இந்தியாவிடம் அலுவல் ரீதியாக
மன்னிப்பு கேட்க வேண்டும்.

கொல்கத்தாவில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது ( 1906-15 ) கட்டப்பட்ட
விக்டோரியா நினைவு மண்டபம் உள்ளது. அங்கு இங்கிலாந்துகாரர்கள்
ஆட்சி செய்த போது செய்த கொடுமைகளையும்,
செய்த தவறுகளையும் ஆவணப்படுத்தி அவற்றை அங்கு வைக்கவேண்டும்.

ஆங்கிலேயர்கள் செய்த கொடூரங்கள் வெளியுலக மக்களுக்கு தெரியும் வகையில்
அந்த அருங்காட்சியகம் செயல்பட வேண்டும். இது சம்பந்தமாக நான்
பிரதமருக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பி இருக்கிறேன்.

————————-

சசி தரூர் கூறியுள்ளவற்றை நான் சிறிது மாற்று நோக்கில் அணுகுகிறேன்.
பிரிட்டிஷ்காரர்கள் அன்று செய்தவற்றுக்கு நாம் இன்று பதிலுக்கு
பழி வாங்க வேண்டும் – அவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்கிற
நோக்கில் இந்த விஷயத்தை அணுகாமல் –

பிரிட்டிஷாரிடம் அடிமைப்படும் முன்னர் –

நாம் எப்பேற்பட்ட நாடாக இருந்தோம்…
எவ்வளவு செல்வச்செழிப்போடு,
செயல்திறன்களோடு,
கல்வி அறிவோடு,
கலைத்திறமைகளோடு –
பண்பாட்டுச் சிறப்புகளோடு – இருந்தோம்

– என்பதை இன்றைய தலைமுறை இந்திய மக்கள் அனைவரும் உணரவும் –
இழந்த நம் பெருமையை, செல்வத்தை,
செல்வாக்கை மீண்டும் நாம் அடையும் விதத்தில்
தற்போதைய, எதிர்காலத்திய நமது செயல்பாடுகள் அமைய வேண்டும்
என்பதையும் வலியுறுத்தும் விதத்தில் நமது அணுகுமுறை இருக்க வேண்டும்….

முக்கியமாக – மீண்டும் இந்தியா எல்லா வளங்களையும் பெற்று,
உலகிற் சிறந்த நாடாக திகழ வேண்டும்…
நாம் ஏற்கெனவே இருந்த நிலை தான் இது…
எனவே முயற்சி செய்து உழைத்தால் நாம் மீண்டும் பழைய பெருமையை
நிலை நாட்ட முடியும் என்கிற எண்ணத்தை மக்கள் மனதில்
பதிய வைப்பதாக அந்த நோக்கமும், முயற்சிகளும் அமைய வேண்டும்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to சசி தரூர் – ஒரு வித்தியாசமான பார்வை….!!!

 1. குலாம் ரசூல் சொல்கிறார்:

  பிரிட்டிஷாருக்கு முன்பு பெரும்பாலான இந்திய பகுதிகளை யார் ஆட்சி செய்தா?

  முகலாயர்கள்.

  அவர்களுடைய சுமார் 800 ஆண்டுகால ஆட்சி எம் இந்தியாவை வளமைபடுத்தியே இருந்து இருக்கு.

  சங்க பரிவார் பரப்பும் துவேஷம் ????

 2. சிவம் சொல்கிறார்:

  அய்யா குலாம் ரசூல்,

  சந்து கிடைத்தால் சைக்கிள் ஓட்டுபவரோ நீங்கள் ?

  இடுகையில் சொல்லப்பட்டிருப்பது பிரிட்டிஷார் கொள்ளை அடித்த கணக்கு.

  முகலாயர் அடித்த கொள்ளைக்கு தனி கணக்கு இருக்கும்.
  கோரி முகமது, கஜினி முகமது அடித்ததெல்லாம் கொள்ளை இல்லையா ?

  நீங்கள் சங் பரிவாரை வம்புக்கு இழுக்க,
  அவர்கள் அந்த கணக்கையும் தர வேண்டும் என்கிறீர்களா ?

  ஏன் இங்கு வேண்டாத வம்புகளை கிளறுகிறீர்கள் ?

 3. குலாம் ரசூல் சொல்கிறார்:

  உங்களுக்கு அதாவது ஆர் ஸ் ஸ் சங்கபரிவார்களுக்கு கஜினி, கோரி தவிர்த்து வேறு மன்னர்கள் சுமார் 800-1000 ஆண்டுகள் ஆண்ட‌ ஆட்சி காலங்களில் கிடைக்கவில்லையா?

  கஜினி குறித்து பிரிட்டிஷார் கையாண்ட பிரித்தாலும் சூழ்ச்சியாக உருவாக்கிய கட்டுக்கதைகள் தானே உங்கள் துவேஷ பரப்புறையின் அடிப்படை. கஜினி படையெடுக்கவில்லை என்று சொல்லவரவில்லை. அதைவைத்து நீங்கள்/ஆர்எஸ்எஸ் பரப்பும் பொய்யை மறுக்கிறேன்.

  ரொமிலா தாப்பர் என்கிற வரலாற்று ஆசிரியர் எழுதிய நூல்,
  SOMANATHA The Many Voices of a History, ROMILA THAPAR, PENGUIN BOOKS. Penguin First Edition 2008.

  ரொமிலா தாப்பர் தனது நூலை நடுநிலை நின்று ஆய்ந்து எழுதி இருக்கிறார். இந்த ஆய்வை முன்னெடுக்க தான் எடுத்துக்கொள்ளும் சாட்சியங்களையும், சொல்லி அப்படியே, அந்தச் சான்றுகளில் உள்ளவற்றையும், அச்சான்றுகளின் நம்பகத்தன்மையையும், விளக்கிக் கொண்டே சென்று உச்சநிலையாக, மேற்கண்ட சான்றுகளிலிருந்து எவ்வாறு மதச்சார்பற்றத் தன்மை உடைக்கப்பட்டது என்பதையும், மத வெறுப்புணர்வு வளர்க்கப்பட்டதையும் கூறுகிறார்.

  வாங்கி படித்துப்பாருங்கள்.

  முகலாய மன்னர்கள் தவறுகளே செய்யவில்லையா? செய்திருக்கிறார்கள். ஆனால் ஆர்எஸ்எஸ் பரப்பும் அவதூறுகள் போலல்ல.

  மாராக இந்த மண்ணுக்கு நல்லது நிறையவே செய்திருக்கிறார்கள். அதையும் பேசுவோம். ஆனால் உங்கள் கதை செல்லுபடியாகாதே. பொய் தானே உங்கள் மூலதனம்.

  திரு காமை அவர்களின் இந்த இடுகைக்கு வருவோம்.

  ///பிரிட்டிஷாரிடம் அடிமைப்படும் முன்னர் –

  நாம் எப்பேற்பட்ட நாடாக இருந்தோம்…
  எவ்வளவு செல்வச்செழிப்போடு,
  செயல்திறன்களோடு,
  கல்வி அறிவோடு,
  கலைத்திறமைகளோடு –
  பண்பாட்டுச் சிறப்புகளோடு – இருந்தோம் ///

  இதற்கு தான் என் மேலுள்ள முதல் பின்னூட்டம்.

  இவ்வளவு சிறப்புகளுக்கும் அவர்கள் மட்டுமே காரணம் என்று சொல்லவரவில்லை. அவர்களும் தான் என்கிறேன்.உங்கள மாதிரி ஆட்கள் வருவீர்கள் என்று தெரியும். உங்களுக்கு பொறுக்காது என்றும் தெறியும். உண்மையை பேசுவோம் என்றால் மேலே பேசுவோம்.

  திரு காமை அவர்களின் உள்ளக்கிடக்கை இது,

  /// முக்கியமாக – மீண்டும் இந்தியா எல்லா வளங்களையும் பெற்று,
  உலகிற் சிறந்த நாடாக திகழ வேண்டும்…
  நாம் ஏற்கெனவே இருந்த நிலை தான் இது…
  எனவே முயற்சி செய்து உழைத்தால் நாம் மீண்டும் பழைய பெருமையை
  நிலை நாட்ட முடியும் என்கிற எண்ணத்தை மக்கள் மனதில்
  பதிய வைப்பதாக அந்த நோக்கமும், முயற்சிகளும் அமைய வேண்டும்…!!! ///

  இது எல்லோருக்குமானதாக இருக்க கடவுள் அருள் பாளிப்பானாக. ஆனால் இந்த 3 வருட காலங்களில் நாட்டு நடப்புகள் எவ்வளவு ஆபத்தை நோக்கி போய்கொண்டிடிருக்கு.

  ஆடுங்கள். வரலாற்றின் ஏடுகளை நோக்குங்காள் இதைவிட எவ்வளவோ கொடும் ஆட்டங்களை பார்க்கிறோம். ஆடுங்கள்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப குலாம் ரசூல்,

   மத சம்பந்தமான எந்தவித சர்ச்சைகளையும் இந்த வலைத்தளத்தில்
   நான் அனுமதிப்பதோ, ஊக்குவிப்பதோ கிடையாது.

   நான் இந்த இடுகையில் சொல்ல வந்தது பிரிட்டிஷாரின் காலனி ஆதிக்கத்தால்
   இந்தியா எந்த அளவிற்கு கேடுற்றது என்பதையும்,

   இதிலிருந்து நாம் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும்
   மீண்டு வரவேண்டும் என்பதை வலியுறுத்தியும் தான்…

   நீங்கள் அநாவசியமாக இதில் மத கண்ணோட்டத்தை நுழைத்து,
   தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி விட்டீர்கள்.

   இந்தியா கொள்ளையடிக்கப்பட்டது உண்மை.
   அது ஆங்கிலேயர் காலத்திலும் நடந்தது… அதற்கு முந்திய மொகலாயர்
   காலத்திலும் நடந்தது…
   ஒரே ஒரு வித்தியாசம், மொகலாயர் ஆட்சியில் சில நல்ல அரசர்களும்
   இருந்தார்கள்.

   எது எப்படி இருந்தாலும், நான் எழுதுவது மத அடிப்படையிலான
   விஷயங்களை அல்ல… இந்தியா அந்நியரால் சுரண்டப்பட்டது குறித்து தான்…

   மத சம்பந்தமான சர்ச்சைகளை இந்த வலைத்தளத்தில் எழுப்புவதை
   தயவு செய்து தவிர்த்து விடுங்கள் என்று நண்பர்கள் அனைவரையுமே
   கேட்டுக்கொள்கிறேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. புதியவன் சொல்கிறார்:

  இந்தியா என்பது இங்குள்ள மக்களுக்கு, இங்குள்ள கலாச்சாரத்துக்குச் சொந்தமானது. சசிதரூர் சொல்லியதில் உண்மை இருக்கிறது. அவரது பேச்சை அப்போது படித்தபோது, இவ்வளவு திறமையாளனா இப்படி இருப்பது (அவர் காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் நடந்துகொண்டது) என்று தோன்றியது. அவரது மனைவி கொலையிலும் சசிதரூரின்மேல் குற்ற நிழல் இருக்கிறது.

  குலாம் ரசூல் சொல்வது ரசிக்கும்படி இல்லை. முகலாயர் ஆட்சிக்காலம் கொடூரமானது. அவ்வப்போது அக்பர் போன்ற ஓரளவு நியாயமானவர்கள் ஆட்சி செய்திருந்தாலும், பெரும்பாலான முகலாயமன்னர்கள் கொடூரர்களே. அவர்களால் கலை, கலாச்சாரம் பழுதுபட்டதுதான். பெரும் செல்வங்கள் இந்தியாவிலிருந்து எடுத்துச்செல்லப்பட்டது முகலாயர்கள் ஆட்சியிலும்தான் (கடைசி 300 வருடங்களைத் தவிர). தமிழகம் களப்பிரர் ஆட்சிக்காலம் போல், முஸ்லீம் படையெடுப்பின்போது சின்னாபின்னமாகியது. நாயக்கர் ஆட்சிக்காலத்திலும், கர்னாடகாவில் ஹரிஹரர் புக்கர் காலத்திலும்தான் நமது கலை கலாச்சாரங்கள் மீண்டும் மலர ஆரம்பித்தன. முழுப்பூசணிக்காயை, கால் பிடி அரிசியில் மறைக்கப்பார்க்க இயலுமா?

  ஆர்.எஸ்.எஸ்ஸைப் பற்றி அறியாதவர்களும் அறிந்துகொள்வது இத்தகைய விஷக் கருத்துக்களினால்தான். முதலில் தங்களை சுத்தமாக்கிக்கொண்டபின்பு, யாரும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவா இயக்கங்களைப்பற்றிப் பேச முயலட்டும்.

  இஸ்லாமியர்களுக்கு மோடி என்பவர்மீது, இந்துத்துவாவைக் கட்டமைப்பதால் வெறுப்பு. 3 வருடங்களில் நாட்டு நடப்பு ரொம்ப ஆபத்தாகப் போய்விட்டதாம். இதைவிட நகைச்சுவை எங்கும் கிடையாது. பெரும்பாலான மக்களுக்கு பாஜக செய்வது சரியாகத்தான் தோன்றுகிறது. அவர்கள் மீதும் குற்றம் இருக்கலாம் (ஏனென்றால் எல்லா மக்களும் யோக்கியமானவர்கள் இல்லை என்பதால்). குலாம் ரசூல் மாதிரி மக்கள் இருக்கும்வரை, மோடிதான், இந்துத்துவாதான் இன்னும் வளரும் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை. அந்த அலை நிச்சயம் தமிழகத்தில் வரும்.

 5. குலாம் ரசூல் சொல்கிறார்:

  திரு காமை ஐயா அவர்களுக்கு,

  நீங்கள் சொல்வது சரிதான் ஐயா. நான் நீண்ட நாட்கள் தங்கள் தளத்தின் வாசகன்.

  நான் முழுக்க முகலாயர் ஆட்சி காலங்களை ஆதரிக்கவில்லை. அதை என் பின்னூட்டத்திலேயே தெரிவித்திருக்கிறேன் ஐயா.

  ஆனால், நான் சொல்ல வந்தது அவர்களின் மீது கட்டவிழ்த்துள்ள பொய்களையும் கட்டுக்கதைகளையும் சுட்டிக் காட்டத்தான். அதைக் கொண்டு, இந்த நாட்டுக்கும் இந்த மண்ணுக்கும் எண்ணற்ற பல தியாகங்களை உடலாலும் பொருளாலும் செய்த ஒரு சமுதாயத்தையே குற்றப்படுத்தி ஒடுக்க பல சதி வேலைகளை செய்து வரும் ஆர் எஸ் எஸ் பற்றிதான்.

  ஆர் எஸ் எஸை நான் குற்றப்படுத்துவது ஹிந்து மதத்தை குற்றப்படுத்துவதாகாது என்று தாங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன் ஐயா.

  திரு புதியவன் அவர்களுக்கு,

  நான் தங்களைப் பற்றி கணித்திருந்தது சரிதானென்று மெய்படுத்திவிட்டீர்கள்.

  ஆர் எஸ் எஸ் அலை தமிழகத்தில் வரட்டுமே. ஆனால் உங்கள் உண்மையான கொள்கைகளை மட்டும் பிரச்சாரம் செய்து அந்த அலையை ஏற்படுத்தமுடியுமா? எந்தவிதமான மத துவேச கருத்துக்களையும் பொய்களையும் கட்டுக் கதைகளையும் கட்டவிழ்த்துவிடாமல் உங்களால் அதை செய்து காட்டமுடியுமா?

  தமிழ்கத்தில் மட்டுமல்ல இந்தியாவில் எந்த மாநிலத்திலும் உங்களால் அதை செய்யமுடியாது. உண்மையான உங்கள் சொரூபத்தை மட்டும் நீங்கள் ஆர்எஸ்எஸ்/பிஜெபி வெளிப்படுத்தி வாருங்களேன். எவ்வளவு குறுகிய காலத்தில் மக்களால் துடைத்தெறியெப் படுவீர்கள் என்பதை பார்ப்போம்.

  • புதியவன் சொல்கிறார்:

   கா.மை. சார் குறிப்பிட்டுள்ளதால் விவாதத்தைத் தொடர இஷ்டமில்லை. ஒன்று மட்டும் உறுதி. ஆர்.எஸ்.எஸ். அல்லது பாஜக போன்றவை, இந்தியர்களால், இந்திய எண்ணங்களை வைத்து, இந்தியாவுக்காக, எந்த நாட்டு எண்ணங்களையும்/கட்டளைகளையும் ஏற்று அடிமை மாதிரி நடக்காமல், இந்திய பாரம்பர்யத்தின்வழி செயல்படுவது.

   ஒருத்தருடைய கருத்தை வைத்து, அவர் இந்த இயக்கத்தினைச் சார்ந்தவர் என்று ASSUME செய்வதே, உங்கள் எண்ணங்களின் சிறுமையைக் காண்பிக்கிறது..

 6. குலாம் ரசூல் சொல்கிறார்:

  புதியவன்,

  ///உங்கள் எண்ணங்களின் சிறுமையைக் காண்பிக்கிறது..///

  இது தான் உம்ம பாரம்பர்யம். ம்……

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.