கேழ்வரகில் நெய் வழியப்போகிறது …. சொல்வது திரு.பியூஷ் கோயல் ….!!!

இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் டெல்லியில் ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற்ற கருத்தரங்கு கூட்டத்தில்
மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்டு பேசியதாவது : –

— இந்தியா முழுவதும் வருகிற 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோல், டீசல் கார்களுக்குப் பதிலாக மின்சாரக் கார்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது…. !!!

— வாகனங்களுக்கான எரிபொருள் செலவைக் குறைக்கவும், எரிபொருள் இறக்குமதி செலவைக் குறைக்கும்வகையிலும் இந்தியாவில் மின்சாரத்தில் இயங்கும் கார்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

— வருகிற 2030ஆம் ஆண்டுக்குள் அனைத்துக் கார்களும் மின்சாரத்தில் இயங்கக்கூடியதாக இருக்கும். அதன்பின்னர் பெட்ரோல், டீசல் கார்களே விற்பனைக்கு வராது.

— மின்சாரக் கார்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு 2 முதல் 3 ஆண்டுகள் வரை மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும்.

— இதன்மூலம் நாட்டின் வாகனத் தொழில் முன்னேற்றமடையும். கனரக தொழிற்சாலைகள் அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் ஆகியவை மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்கான கொள்கைகளை தயாரிக்கும் வேலையில் ஈடுபடும்.
மின்சாரக் கார்கள் குறைந்த விலைக்கு விற்கப்படுவதன்மூலம் பொதுமக்கள் குறிப்பாக நடுத்தர மக்கள் தாமாகவே இந்தக் கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள்…

( நடப்பது – 2017 – இனி தான் நிதி ஆயோக் மற்றும் கனரக தொழிற்சாலைகள் அமைச்சகம் இதைப்பற்றி விவாதித்து, கொள்கை முடிவே எடுக்கப்போகிறது…

ஆனால், அதற்குள்ளாக, அடுத்த 13 ஆண்டுகளுக்குள் – இந்தியா முழுவதும், பெட்ரோல், டீசல் கார்களே இருக்காது….. பதிலாக – மின்சாரக் கார்கள் தான் இருக்கும் என்று … பாஜக அரசின் கரெண்ட் மந்திரியே கூறி விட்டார் …!!!
அப்புறம் என்ன…? கேழ்வரகில் நெய் வழியப்போகிறது என்று சொன்னாலும் – சொல்வது மத்திய மந்திரி ஆயிற்றே –
கேட்டுக் கொள்ள வேண்டியது தான்…. !!!)


Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to கேழ்வரகில் நெய் வழியப்போகிறது …. சொல்வது திரு.பியூஷ் கோயல் ….!!!

 1. Bagawan சொல்கிறார்:

  Dear Sir,
  If the above plan comes into effect then there may not be any more demand for petrol and diesel after 2030. Does the Petroleum Minister know these plan? Does Piyush Goel advise his counter part Minister of Petroleum Mr. Pradhan to withdraw new onshore hydrocarbon projects and especially in Tamil Nadu and Puduchery .which the people are against it and why they need to waste the investment.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப பகவான்,

   இது ஒன்று மட்டுமல்ல; பின்னணியில் இன்னும்
   நிறைய சங்கதிகள் இருக்கின்றன….

   ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும்
   பெட்ரோல், டீசல் வாகனங்களின் கதி என்ன ஆகும் ?

   ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக மாற்றம் – சாத்தியமா ?

   பெட்ரோல், டீசலிலிருந்து மின்சார வாகனமாக ஒட்டுமொத்தமாக
   மாறுவது அவ்வளவு சுலபமா…?
   அப்படியானால், உலகில் மற்ற நாடுகள்,
   முன்னேறிய நாடுகள் கூட –
   ஏன் இதைச் செய்யாமல் இருக்கின்றன…?

   புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை எந்தெந்த நிறுவனங்கள்
   தயாரிக்கப்போகின்றன ? அவற்றிற்கான லைசென்சுக்கு
   பாஜக அரசைத்தானே அணுக வேண்டும் ?

   எலெக்ட்ரிக் வாகனம் என்றால் எஞ்ஜின் மாற்றம்
   செய்யப்பட வேண்டும்… புதிய அதிக சக்திவாய்ந்தபேட்டரிகளை
   உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்கள் ( raw-material )
   இந்தியாவிலேயே கிடைக்குமா… அல்லது இறக்குமதி
   செய்ய வேண்டுமா…? எங்கிருந்து…?

   புதிய வாகனங்களை உற்பத்தி செய்யக்கூடிய தொழில்நுட்பங்களுடன்,
   நமது தொழிற்சாலைகள் தயாராக இருக்கின்றனவா ?

   இந்த தொழிற்சாலைகளில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்களிடமிருந்து,
   அதை சர்வீஸ், ரிப்பேர் செய்யக்கூடிய பட்டரைகள் வரை
   அனைவரையும் புதிய தொழில் நுட்பத்தில் பழக்க வேண்டும்.

   இந்த கொள்கை முடிவை ஏற்கெனவே மத்திய கேபினட்
   விவாதித்து விட்டதா…? எப்போது…?
   இவ்வளவு முக்கியமான கொள்கை முடிவு பற்றிய
   எந்த செய்திகளும் இதுவரை வரவே இல்லையே -ஏன் ?

   – இதனால் மிச்சப்படப்போகும் பெட்ரோலிய பொருட்களின்
   தோராய மதிப்பு என்ன… எவ்வளவு…?

   நியாயமாக – இந்த முடிவை அறிவிக்கும் அதிகாரம்
   இந்த மந்திரிக்கு இருக்கிறதா…?

   இந்த முடிவுகளால், பாதிக்கப்படப்போகிறவர்கள் யார் –
   பயனடையப்போகிறவர்கள் யார்…?
   ஆராய்ச்சிகள் எதாவது நடந்ததா…?

   – இப்படி நிறைய சந்தேகங்கள் எழுகின்றன…

   இன்னும் ஒரு அதிமுக்கிய கேள்வி இருக்கிறது….

   கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் “எத்தனால்” -ஐ பத்து சதவீத அளவிற்கு
   பெட்ரோலுடன் கலந்து வாகனங்களை இயக்க பயன்படுத்த வேண்டும்…
   அதனால் பெட்ரோலிய பொருட்களின் தேவை குறைவதுடன்,
   கரும்பு உற்பத்தியாளர்கள் பெரும் பயனை அடைவார்கள் என்று
   ஒரு கொள்கை முடிவு எடுக்கப்பட்டதே… அது எந்த கதியில் இருக்கிறது…?

   மந்திரிக்கென்ன … அவர் பாட்டிற்கு சொல்லிவிட்டு போய்விட்டார்…!

   ஆனால் – மத்திய கேபினட் அமைச்சர்களிலேயே அடுத்த நிதியமைச்சர்
   ஆகும் அளவிற்கு அதிபுத்திசாலி இவர் தானாமே… 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.