தமிழ் சினிமாவில் புரட்சி செய்த அமெரிக்க டைரக்டர்…. !!!

சகுந்தலை படப்பிடிப்பு தளத்தில் எல்லிஸ் டங்கனுடன், எம்.எஸ். சுப்புலக்ஷ்மி மற்றும் திரு.சதாசிவம்

சகுந்தலை படத்திலிருந்து எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி தோன்றும் ஒரு காட்சி –

மீரா படத்திற்கான ஒத்திகை திருமதி எம்.எஸ். மற்றும் எல்லிஸ் டங்கன்

காற்றினிலே வரும் கீதம் – மீரா – எம்.எஸ்.

வாராய் நீ வாராய் – திருச்சி லோகநாதன் – மந்திரிகுமாரி –

 

தமிழ் சினிமாவில் புரட்சி செய்த அமெரிக்க டைரக்டர்…. !!!

இன்றைய இளைஞர்களுக்கு தெரிந்திருக்காது. முந்திய தலைமுறையினரில் சிலர் கேள்விப்பட்டிருக்கலாம்.

தமிழகத்தில் துவக்க காலங்களில் 1935 முதல் 1950 வரை சுமார்
15 ஆண்டுகள் சினிமா டைரக்டராக பணிபுரிந்த ஒரு அமெரிக்கர். அமெரிக்காவில்  பிறந்து, பாரிசில் பணிபுரிந்து வந்தவர் எப்படி தமிழ்நாட்டிற்கு வந்து, தமிழ் திரைப்பட
தயாரிப்பில் முக்கிய பணி ஆற்றினார் என்பது ஒரு சுவையான வரலாறு….

அவர் இயக்கிய சில புகழ்பெற்ற படங்கள் –

கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் நடித்த நந்தனார் தொடங்கி,
எம்ஜிஆர் அவர்களின் முதல் படமான சதி லீலாவதி,
எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த அம்பிகாபதி,
எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் சகுந்தலை, மீரா, மாடர்ன் தியேட்டர்சின்,  எம்ஜிஆர் நடித்த மந்திரிகுமாரி …..

அந்த காலத்திய சினிமா உலகம் பற்றியும், எல்லிஸ் ஆர். டங்கன் பற்றியும்  விவரமாகக்கூறும், – திரு.பால கணேசன் எழுதிய ஒரு
சுவாரஸ்யமான கட்டுரையை – படித்தேன்.

நானாகவும் சில விவரங்களை சேகரித்தேன்….

அவற்றை எல்லாம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். கீழே –

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to தமிழ் சினிமாவில் புரட்சி செய்த அமெரிக்க டைரக்டர்…. !!!

 1. தமிழன் சொல்கிறார்:

  இவரைப் பற்றி இன்னும் செய்திகளைப் படித்திருக்கிறேன். சட்டென்று நினைவுக்கு வரவில்லை. இவர், கே.சுப்ரமணியம் போன்றோர் குறிப்பிடத்தகுந்த டைரக்டர்கள். இதேபோல், வசனத்தில் இளங்கோவன், கருணானிதி போன்றோரும், பிற்காலத்தில் ஆரூர்தாசும், திரையிசையில் ஜி.ராமனாதன், கே.வி.மகாதேவன், சி ஆர் சுப்பராமன் போன்றோரும் குறிப்பிடத்தகுந்தவர்கள்.,

 2. சிவம் சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  அந்தக்காலத்தில் சிறப்பாக பணியாற்றி,
  இப்போதைய தலைமுறைக்கு அறிமுகம் இல்லாதவர்களைப்பற்றி
  நீங்கள் எழுதுவது சிறப்பாக இருக்கிறது. தமிழன் சொன்னது போல்
  இன்னும் பலரைப்பற்றியும் அவசியம் எழுத கேட்டுக் கொள்கிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.