” சிவன் சொத்து…. ” – நாஞ்சில் நாடன் சொல்வது …

கொள்ளையடித்தவர்களும், கொலைகாரர்களும் – சமுதாயத்தில் உல்லாசமாக வலம் வரலாம்…பட்டம் பதவிகளை தடையின்றி அனுபவிக்கலாம்.

ஆண்டுகள் பல ஆகலாம்… எரிச்சலூட்டும் தாமதங்கள் நிகழலாம்… ஆனாலும்….

என்றாவது ஒரு நாள் அவர்களின் குற்றங்களுக்கு தண்டனை கிடைத்தே தீரும்…. இந்த நம்பிக்கை இருப்பதால் தான் – ஆத்திகர்களோ, நாத்திகர்களோ – அமைதியாக பொறுமை காக்கிறார்கள்….!

அண்மையில் திரு.நாஞ்சில் நாடன் அவர்கள் தெரிவித்த கருத்து, நமது மனதில் இருப்பதை அப்படியே பிரதிபலிப்பதாக இருந்தது…. நாஞ்சில் நாடன் அவர்களின் எழுத்திலேயே, அவர் கூறும் பின்னணியுடன் அதைப் படிப்பது இன்னமும்
பொருத்தமாக இருக்கும் என்பதால் – கீழே –

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to ” சிவன் சொத்து…. ” – நாஞ்சில் நாடன் சொல்வது …

 1. nagendra bharathi சொல்கிறார்:

  அருமை

 2. Srini சொல்கிறார்:

  very good sir. my father used to tell… “30 aandugal vazhndarum illai… 30 aandugal theindarum illai”…..

 3. Geetha Sambasivam சொல்கிறார்:

  மிகச் சரியாகச் சொல்லி இருக்கிறார். உண்மை. சிவன் சொத்து குலநாசம் தான்!

 4. R KARTHIK சொல்கிறார்:

  அய்யன் வள்ளுவர் குறளில் (http://www.ytamizh.com/thirukural/chapter-18/),

  குறள் 180:
  இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
  வேண்டாமை என்னுஞ் செருக்கு.

  வி‌ளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.

 5. புதியவன் சொல்கிறார்:

  நாஞ்சில் நாடன் நல்லா எழுதியிருக்கிறார். சிவன் சொத்து குல நாசம்தான். அடுத்தவரை ஏய்த்து அபகரிக்கும் சொத்து குலத்துக்கு வளம் சேர்க்காது. நாம வெளில இருந்து பார்த்துவிட்டு அவனுக்கென்னப்பா என்று நினைத்துக்கொள்வோம். (15 வருடங்களாக, எல்லாவற்றிர்க்கும் அடுத்தவரை எதிர்பாக்கும்-Bathroom போவதற்குக்கூட, நிலையில் இருக்கும் அரசியல்வாதிகளையும்தான் நாம் பார்க்கிறோமே.. குலத்தில் உள்ளவர்கள், குடியால் அழிவதையும், 4 மாதங்களுக்கு ஒருமுறை ரத்த மாற்று செய்துகொள்வதையும், நல்லா இருக்கும் மனைவியை மன’நிலை சரியில்லாதவர் என்று சொல்லிக்கொள்வதையும் வேறு எப்படி அழைப்பது?)

  தமிழன் அன்றே பொட்டில் அடித்தார்ப்போல் சொல்லிச் சென்றான். ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’

 6. mani சொல்கிறார்:

  பாவத்தின் சம்பளம் மரணம். தமிழகத்தயே விலைக்கு வாங்க துடிக்கும்
  கும்பல் ஒவ்வொன்றாக ஜெயிலுக்கு செல்வதும் துர் மரணங்கள் நிகழ்வதும்
  நாஞ்சில் நாடனின் சிவன் சொத்து குலநாசம் என்பதை உறுதி செய்கிறது.

 7. ssk சொல்கிறார்:

  கோவில்களில் கொள்ளை அடிப்போர் காலம் காலமாக செய்து கொண்டு சிறப்பாக உள்ளனர்.அரசர் கட்டிய கோவில்களை தமது என்று தீர்ப்பு வாங்கி, தமிழும் கூடாது என்று சொல்லி சிறப்பாக உள்ளனர். அரசு சொத்தை உச்ச நீதி மன்றம் திருப்பி கொடுக்க சொல்லி தீர்ப்புகள் உள்ளன. ஆனால் செய்தவர்கள் பெரும் புகழுடன் சிறப்பாக வாழ்ந்து சென்று உள்ளனர். அநீதிகளை இனம்/சாதி என்ற காரணங்களுக்காக பலரும் கண் மூடி செல்கின்றனர். மொத்த சமுதாயமும் அடி படும் போது அநீதிகளை ஆதரித்தவரும் துன்பபடுவர். ஆனால் அதற்குள் அநீதிகளை ஆதரித்தவர் சென்று விடுவார். அவர் தம் வாரிசுகள் துன்பபடலாம். அதற்கு 30ஆண்டுகளுக்கு மேல் ஆகும். இப்படி காலம் தாழ்ந்த தீர்ப்பினால் பயனில்லை. தீர்ப்புகள் விரைந்து கிடைத்தாலே சமுகம் நன்றாக இருக்க முடியும்.

  • தமிழன் சொல்கிறார்:

   நீங்கள் சிதம்பரம் கோவிலைப் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அங்கு நிகழும் சில நிகழ்வுகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவையாக இல்லை. சமயத்தைப் பற்றிக் கேள்வி எழுப்பும்போது மனதுக்குச் சங்கடமாக இருந்தாலும், கோவில் வரவில் பங்கு கிடைப்பதற்காக சிறு வயதிலியே திருமணம் செய்துவைத்தல், வியாபார நோக்கு போன்றவை சரியாகத் தெரியவில்லை. ஆனாலும், ஒவ்வொரு கோவிலுக்கும் அதற்கென ஒரு ஆகமமும் நியமமும் உண்டு. அதனால், அந்தக் கோவிலில் வழக்கத்தில் இல்லாத புதிய செயல்களை, (தமிழில் தேவாரம் பாடுவது போன்று) கோவிலை நடத்துபவர்கள் அனுமதிக்கவில்லையென்றால் அதில் குறை சொல்ல ஏதுமில்லை.

   அரசர் கட்டிய கோவில் -அதற்கான பணமும் பொதுமக்களிடமிருந்துதான் வந்தது. அவர்கள் முன்னெடுத்திருக்கலாம். பலர் தங்கள் காணிக்கைகளைக் கொடுத்து நிறைய சொத்தை கோவிலுக்குச் சேர்த்திருக்கலாம். ஆனாலும் கோவில் என்பது ஊரின் சொத்து.

   பொதுச் சொத்தைக் களவாடி, அதனை மாநகராட்சி மூலமாக அநீதியாக அனுமதித்துக்கொண்டு, அறிவாலய வளாகம் கட்டி தங்கள் சொந்த நலனுக்காக, சொந்தக் குடும்பச் சொத்தாக ஆக்கியவர்களும், பொதுமக்கள் சொத்தைக் களவாடியதால் இந்த வ்ளையத்தில்தான் வருவார்கள்.

 8. சிவம் சொல்கிறார்:

  தமிழன்,

  // பொதுச் சொத்தைக் களவாடி, அதனை மாநகராட்சி மூலமாக அநீதியாக அனுமதித்துக்கொண்டு, அறிவாலய வளாகம் கட்டி தங்கள் சொந்த நலனுக்காக, சொந்தக் குடும்பச் சொத்தாக ஆக்கியவர்களும், பொதுமக்கள் சொத்தைக் களவாடியதால் இந்த வ்ளையத்தில்தான் வருவார்கள்.//

  Excellent – Good quote at right place.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.