50 % லஞ்சம் – கியா மோட்டார் விவகாரம்… அவசரத்தேவை ஒரு சிபிஐ விசாரணை …

அதி மோசமான ஒரு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு, தமிழக அரசின் மீது வெளிப்படையாக கூறப்பட்டிருக்கிறது….

தென் கொரியாவைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான கியா மோட்டார்ஸ், தமிழகத்தில் சுமார் 10,000 கோடி ரூபாய் முதலீட்டில், சென்னை அருகே ஆண்டிற்கு 3 லட்சம் கார் உற்பத்தி செய்யும் திறனுடைய ஒரு தொழிற்சாலையை
நிறுவ முன்வந்திருந்தது.

தமிழக அரசு அதற்காக 390 ஏக்கர் நிலமும் அனைத்து உதவிகளையும் அளிப்பதாக ஒப்புக்கொண்டு, இது பற்றிய அறிவிப்பு கூட தமிழக சட்டமன்றத்தில் 2016, நவம்பர் 8-ந்தேதி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆட்சியில் உள்ளவர்கள் 390 ஏக்கர் நிலத்தின் அதிகாரபூர்வ விலையில் 50 சதவீதம் கையூட்டாக தர வேண்டும் என்று நிபந்தனை விதித்ததாலும், லஞ்சம் கொடுக்க ஒப்புக்கொள்ளாத நிலையில், தங்களுக்கு மேற்கொண்டு எந்த ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை என்றும் – அதனால், அந்த தொழிற்சாலையில் ஆந்திராவின் ஸ்ரீ சிடிக்கு கொண்டு போவதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.

இந்த லஞ்ச ஊழல் புகார் அந்த நிறுவனத்தின் எக்சிக்யூடிவ் டைரக்டர் திரு.கண்ணன் ராமசாமி அவர்களால், அவரது முகநூல் பக்கத்தில் எழுத்து பூர்வமாக பதியப்பட்டு, ஆங்கில செய்தித்தாளான ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழிலும் வெளிவந்திருக்கிறது.

ஹி.டைம்ஸ் நாளிதழ் செய்தி, மற்றும் திரு.கண்ணன் ராமசாமி அவர்களின் முகநூல் பக்கத்து புகார் பதிவு ஆகியவற்றை கீழே தந்திருக்கிறேன்.

தமிழகத்தில் ஆட்சியில், அதிகாரத்தில் உள்ளவர்களே ( அமைச்சர்கள்…? ) ஈடுபட்டிருப்பதால், அதி மோசமான இந்த லஞ்ச ஊழலை மாநில காவல் துறை விசாரிப்பதில் எந்த பயனும் இல்லை.

திரு.கண்ணன் ராமசாமி அவர்களின் முகநூல் செய்தியையே அடிப்படையாகக் கொண்டு,
உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து இந்த நாளிதழ் செய்தியின் அடிப்படையில் உடனடியாக இந்த லஞ்ச ஊழல் புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டுமென்று உத்திரவு பிறப்பிக்கலாம்….

ஏதேனும் தொண்டு நிறுவனம் அல்லது அரசியல் கட்சிகள் ஒரு பொதுநல வழக்கின் மூலம் இதுகுறித்து நீதிமன்றத்தை அணுகுவதும் சிறந்த, விரைவான மாற்று வழியாக இருக்கும்.

எப்படி இருந்தாலும், மிக அவசரமாக, மிக அவசியமாக – விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய விஷயம் இது.

———————————————————


2542

Kannan Ramasamy
April 29 at 1:50pm ·

I am writing this post with pain in my heart and I am really scared where TN will go if this situation continues.
South Korea based Automobile Manufacturer Kia Motors, a subsidiary company of Hyundai wanted to start their
manufacturing plant in India to make compact Sedans and compact SUVs.

As part of their local consultants, our team made a detailed study and recommended Tamil Nadu as first choice, Gujarat as
the second choice and Sri City (AP) as third choice.

They approached TN Industries Secretary & SIPCOT and SIPCOT has enough lands to give at Oragadam Complex.
The TN politicians demanded 50% more than the official cost of the land as bribe.

Kia demanded Tax Holiday and Power Tariff Concessions and the connected infrastructure like Roads, water, drainage,
fast track approvals etc.

They wanted a very huge bribe for the same apart from the land. We had also arranged a huge array of more than 70 Ancillary
units (From S.Korea and India) who have to start their production for the supply to Kia to have their plants
nearby.

Unfortunately Kia Management has decided to move to AP (not to Sri City) – Anantapur District which is a dry and under
developed area.

AP CM CBN could convince them with lots of concessions to bring them to Anantapur District. He has also promised 200
ft highway roads to connect the plant to Bengaluru Mumbai / Bengaluru Hyderabad Highway.
Our team spent more than 2 years and extended very hard work to convince them to come to Tamil Nadu and local Hyundai
team also extended all the help locally for logistics etc.

If the TN Govt continues like this, then TN will be relegated to back bench very soon.

Though I was against President Rule concept earlier, now I am feeling that 6 months of President Rule in TN is the
bitter medicine that is required to treat the chronic illness called High Level Corruption.
TN has not only lost the 1.1. Billion USD from Kia but also the allied ancillary investments of more than the Kia
figure.

More than that, huge employment opportunity is lost for the TN Youth and auto professionals.

I hang my head in shame.
Let God help TN to spring back.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to 50 % லஞ்சம் – கியா மோட்டார் விவகாரம்… அவசரத்தேவை ஒரு சிபிஐ விசாரணை …

 1. சிவம் சொல்கிறார்:

  திரு.கண்ணன் ராமசாமி

  // I hang my head in shame.
  Let God help TN to spring back. //
  என்று சொல்வதோடு அவர் கடமை முடிந்து விடவில்லை. லஞ்சம் கேட்டவர் யார் என்பதை வெளிப்படையாகத் தெரிவித்து, விசாரணைக்கு உதவ வேண்டும்.

 2. புதியவன் சொல்கிறார்:

  மிகுந்த வருத்தத்தைத் தரும் செய்திதான். இதில் யாரைக் குறை சொல்வது? அமைச்சர், அதிகாரிகள் மற்றும் அரசு இயந்திரத்தையா அல்லது மக்களையா? இவர்களில் பெரும்பான்மையானவர்கள் CORRUPT ஆட்கள்.

  சந்திரபாபு நாயுடு அவர்கள் ஒற்றைச் சாளர முறை (பிஸினெஸ் தொடங்க), Infrastructure போன்றவற்றில் அக்கறை காட்டுகிறார். (ஊழல்வாதியாக இருந்தபோதும்)

  வெளி நாட்டில், ரோடுகளில் குவாலிட்டியைப் பாருங்கள். 6 இஞ்ச் ரோடுனா (Thickness) அதை அப்படியே follow செய்வார்கள். அவங்களுக்குத் தெரியும், ரோடு அவங்க தேசத்துக்காகப் போடுவது என்று. தமிழகத்தில் ஒரு ரோடு நல்லாப் போட்டிருக்காங்கன்னு காண்பிக்க முடியுமா? நம்ம ஊர்ல இருக்கற பொறியாளர்களுக்கு ரோடு கூட போடத்தெரியாதா? நம்ம கல்வி அவ்வளவு மட்டமா? 40% கமிஷன், தங்களுக்கு 30% லாபம், மீதி 30 சதவிகிதத்தில் Raw material, கூலி போன்றவை எப்படிச் செய்யமுடியும்? என்னைக்கேட்டால், ரோடு போடுவது போன்ற எல்லாப் பணிகளையும் L&T போன்ற பெரிய கம்பெனிகளிடம் கொடுத்துவிடவேண்டும். அந்த அந்த ஊர்ல இருக்கற லோக்கல் கான்டிராக்டர்களுக்கு ஒரு அரசு வேலையும் கொடுக்கக்கூடாது. ஏன்னா, அவங்கள்லாம் கொஞ்சம் கூட படித்தவர்களும் இல்லை, தேசத்தைப் பற்றிய அக்கறை உள்ளவர்களும் இல்லை.

 3. R. RAMANI SANKAR சொல்கிறார்:

  Giving the contract to large companies like L & T is not the way for good roads./ good infra structure. In turn these big companies give sub – contract to the local people and again the quality may not be so good. big companies will charge a premium for their name. Our politicians find so many ways to extract money from big companies.

 4. ssk சொல்கிறார்:

  இதெல்லாம் ஜெ இருந்த போதே உள்ள நடைமுறையாக இருக்கலாம். இப்போது தைரியம் வருகிறது. இப்போது அதிமுக அமைச்சர்களே 25000 கோடி பற்றி வெளிப்படையாக பேசுகிறார்கள். அவ்வாறு அவல ஆட்சி நடத்தியது என்ன சொல்வது. ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.