” போன ஜன்மத்தில் நிச்சயம் அவர் ஒரு ராஜகுமாரராக பிறந்திருக்க வேண்டும் ” – பேட்டியில் திருமதி பானுமதி ….


மிகவும் கண்டிப்பானவர்…பழகுவதற்கு மிகவும் கடினமானவர். நீண்ட காலமாக திரையுலகில் இருந்தபோதும் கூட நெருப்பாக உணரப்பட்டவர். எம்.ஜி.ஆர். அவர்களை மிஸ்டர் எம்.ஜி.ஆர் என்றும் சிவாஜியை மிஸ்டர் கணேசன் என்றும் கூப்பிட்டுக் கொண்டிருந்தவர் –

அந்தகாலத்தில் அஷ்டாவதானி என்று புகழ்பெற்றவர்… நடிப்பு, பாடல், இசையமைப்பு, கதை, திரைக்கதை, படத்தயாரிப்பு, இயக்கம், ஸ்டுடியோ நிர்வாகம், எழுத்தாளர் என்று பல துறைகளில் ஒரே சமயத்தில் சிறப்பாக பணி புரிந்தவர்…

செய்தியாளர்களிடையே எல்லாம் பேசுகிற வழக்கம் அவருக்கு கிடையாது…. கொஞ்சம் ரிசர்வ்டு டைப். எனக்குத்தெரிந்து தனிப்பட்ட முறையில் அவர் கொடுத்துள்ள ஒரே பேட்டி இது தான் என்று நினைக்கிறேன்…..
முதலில் பேட்டியை பார்த்தவுடன் நானே அசந்து விட்டேன் – இவரா இவ்வளவு வெளிப்படையாக பேசுகிறார் என்று…!

எம்.ஜி.ஆர். அவர்களைப்பற்றி பானுமதி அவர்கள் அளித்துள்ள பிரத்தியேக பேட்டி ஒன்று வெகு சமீபத்தில் யூ ட்யூபில் பதிவிடப்பட்டிருப்பதை எதேச்சையாக பார்க்க நேர்ந்தது. எம்.ஜி.ஆர். அவர்களின் குணாதிசயங்களை பாராட்டிப் பேசும்போது, ” போன ஜென்மத்தில் அவர் நிச்சயம் ராஜகுமாரராகப் பிறந்திருக்க வேண்டும் … அதற்கான குணங்கள் அவரிடம் இருந்தன ” என்று சொல்கிறார்.

இந்த பேட்டி எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை….
ஆனால் ஒரு வாரத்திற்கு முன்பாக ஏப்ரல் 27-ந்தேதி 2017 அன்று தான் யூ ட்யூபில் பதியப்பட்டிருக்கிறது. நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியதால் கீழே பதிவிட்டிருக்கிறேன்.

—————————————————————————————————-

இது தனி –

எனக்கு மிகவும் பிடித்த பெண்களில் திருமதி பானுமதியும் ஒருவர். எத்தகைய சூழ்நிலையிலும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காத ஒரு பெண்மணி.. நடித்துக் கொண்டிருக்கும்போது கூட அவரது தோற்றத்தில் ஒருவித கர்வமும், அலட்சியமும் தெரிவதை உணர முடியும்.

எனக்கு சிவாஜி, எம்.ஜி.ஆர். இருவரையுமே பிடிக்கும்…

சிவாஜியுடன், பானுமதி நடித்த கல்கி அவர்களின் கதையான “கள்வனின் காதலி”
எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று.

அதிலிருந்து எனக்குப் பிடித்த பாடலொன்று….(பாரதி பாடல்…)

மனதில் உறுதி வேண்டும் –

அது போலவே எம்.ஜி.ஆருடன் பானுமதி நடித்த மலைக்கள்ளனும் –

அதிலிருந்து எனக்குப் பிடித்த பாடலொன்று….(நாமக்கல் கவிஞர் பாடல்.. )

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே –

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to ” போன ஜன்மத்தில் நிச்சயம் அவர் ஒரு ராஜகுமாரராக பிறந்திருக்க வேண்டும் ” – பேட்டியில் திருமதி பானுமதி ….

 1. தமிழன் சொல்கிறார்:

  பானுமதி அவர்கள் வித்யா கர்வம் கொண்டவர்கள். ஆளுமை உள்ளவர்கள். எம்ஜியார், சிவாஜி இருவரும், மூத்தோர்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள் ஆயினும், எம்ஜியார் ஒரு படி மேலேதான். அவர் எல்லா மூத்தவர்களுக்கும் உரிய மரியாதை கொடுக்கும் பண்பாளர். முதலமைச்சராக இருந்தபோதும், எம்.கே. ராதா (என்று ஞாபகம்) அவர்களின் காலில் விழுந்து மரியாதை காண்பித்தவர். எம்ஜியார் தான் இன்னும் மேலே வரவேண்டும் என்று ரொம்ப ஆசைப்படாமலேயே, காலம் அவரை மேலே தூக்கிவிட்டது. சிவாஜி, இவர்களெல்லாம் (எஸ்.எஸ்.ஆர், எம்ஜியார் போன்றவர்கள்) மேலே வரும்போது, நடிப்புத் திறமை உள்ள நாம் ஏன் மேலே வரமுடியாது என்று முனைந்து முயற்சித்து அதில் தோல்வி அடைந்தவர். மக்கள் சிவாஜியின் நடிப்பை விரும்பினார்கள். எம்ஜியாரின் எளிமையை, அன்பை நேசித்தார்கள். (கருணானிதியின் பேச்சை விரும்புவார்கள். ஆனால் அவரை நேசித்ததில்லை மக்கள்). தன்னைத் துப்பாக்கியால் சுட்ட எம்.ஆர்.ராதாவையும், கடைசி வரை, ராதாண்ணேன் என்றே சொன்னவர் எம்ஜியார்.

  இன்னொரு சம்பந்தமில்லாத செய்தி: எம்.ஆர்.ராதா அவர்கள், தன்னைவிட திராவிடக் கொள்கைகளையும், தான் நேசித்த கொள்கைகளையும் மக்களிடையே பரவச் செய்தவர் என்று பெரியார் எப்போதும் சொல்லியிருக்கிறார். எம்.ஆர்.ராதா அவர்கள் சிறையில் இருந்தபோது (சுட்டதன் காரணமாக), அவருக்கு ஒரு உதவியையும் கருணானிதி செய்ததில்லை. அவர் விடுதலை பெற்று வெளியில் வந்தபோதும் அவர் பக்கமே கருணானிதி திரும்பிப்பார்க்கவில்லை.

  சம்பந்தமில்லாத செய்தி: சிவாஜி 1 1/2 கோடிக்குமேல் தான் துவங்கிய கட்சிக்காகச் செலவழித்து சொத்துக்களை இழந்தார். அவருடைய நெருங்கிய நண்பர்கள் அவரிடம், வேண்டாம் இந்த வீண்வேலை என்று பலமுறை அறிவுறுத்தினர். கவிஞர் வாலி (அல்லது சிவகுமாரா?) அவர்களும் சிவாஜியிடம், அண்ணே உங்கள் நடிப்பைப் பார்க்கத்தான் கூட்டம் தியேட்டரில் அள்ளும்.. ஆனால் உங்களை அரசியல்வாதியாகப் பார்க்க மக்களுக்கு விருப்பம் இல்லைண்ணே என்று சொல்லியிருக்கிறார். வள்ளலாரைப் போல, ‘கடை விரித்தேன் கொள்வாரில்லை’ என்று கடையை மூடிடவேண்டியதுதான் என்று சொல்லி சிவாஜி அவர்கள், தன் கட்சியைக் கலைத்தார். ஆனால், அதற்காக அவர் இழந்தது அதிகம். நான், அவருடைய அரசியல் பேச்சை பாளையங்கோட்டையில் கேட்டிருக்கிறேன். அவருடைய திரை ஆளுமை, அரசியல் மேடையில் வெளிப்படவில்லை. அவர் மட்டும் வீர கர்ஜனை செய்து, அரசன் போல் ஆளுமையை வெளிப்படுத்தியிருந்தால் (பல படங்களில் பேசியதுபோல்) ஒருவேளை மக்கள் ரசித்து அவருக்கு வாக்களித்திருக்கலாம். ஆனால் அவர் பேசியது, சாதாரண ஒருவர் பேசுவதுபோல் இருந்தது. கொஞ்சம்கூட நான் ஈர்க்கப்படவில்லை. எம்.ஜியார் போல் (எம்ஜியாருக்கு துப்பாக்கி குண்டு), அவரும் ‘கல்லெறி’ வாங்கிய, காயக் கட்டுள்ள போட்டோவை தேர்தலில் உபயோகித்துத் தோல்வியடைந்தார். ஆனால், எம்ஜியார் மேடையில் இருந்தாலே, மக்களை அவர் பக்கம் அது ஈர்த்தது. எம்ஜியாரும் 1 1/2 மணி நேரம் பேசுவார். ஆனால் மக்கள் அவர் என்ன பேசுகிறார் என்று எப்போதும் கேட்டதில்லை. அவர்களுக்கு, ‘எம்ஜியார் வந்துட்டார். அவரைப் பார்த்துட்டேன். அவர் நமக்கு நல்லது செய்வார்’ என்ற ஒன்றே மனதில் இருந்தது. எம்ஜியாருக்கு இருந்தவர்கள், அவரை வெறித்தனமாகத் தலைவராகவும், தங்களைக் காக்கவந்த ரட்சகனாகவும் ஏற்றுக்கொண்டவர்கள். அவருடைய பெயரைச் சொல்லி நல்ல காரியங்களில் ஈடுபட்டவர்கள், ஆனால் அதனை எம்ஜியாரிடத்தில் சொல்லவேண்டும் என்று எண்ணாதவர்கள். சிவாஜியிடம் இருந்தவர்கள் அவரது நடிப்பை ரசித்தவர்கள், ஆனால் சிவாஜியின் ஆளுமையைப் பற்றி ஒரு கருத்தும் இல்லாதவர்கள்.

  பானுமதி அவர்கள் மிகுந்த ஆளுமையும் திறமையும் பெற்றவர்கள். அவர் டைரக்ஷன், இசை, பாடல், நடிப்பு, வசனம் என்று பல திறமைகளைப் பெற்றவர். சாதாரண ஒருவரைத் தேர்ந்தெடுத்து மணந்துகொண்டவர். வீடு தனி, வேலை தனி என்று பிரித்துக்கொண்டு, எந்த கிசுகிசுக்களிலும் சிக்காமல், தனக்கென்ற பெருமையான பெயரை நிலைநாட்டிக் கொண்டவர்.. காணொளியைப் பார்த்து ரசித்தேன்.

  • இளங்கோ சொல்கிறார்:

   எம்ஜிஆர் பானுமதி அவர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த
   படங்கள் அத்தனையுமே ஹிட் கேடகரி. அதனால் துவக்க காலங்களில்
   எம்ஜி ஆர் செண்டிமென்டலாக தன் படங்களில் பானுமதி இருப்பதை விரும்பினார் என்று சொல்வார்கள்.
   மதுரை வீரன் காட்சிகள் இன்றும் கூட மனதில் அப்படியே நிற்கின்றன.
   சோழமன்னரிடம் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட
   நிலையில் பானுமதி மிக அழகாக வசனம் பேசுவார்.
   “காதலித்தோம், கட்டுண்டோம், காத்திருந்தோம், காலம் வந்தது – என்று..
   அந்த காலங்களில் கதைக்கும், வசனத்திற்கும், நடிப்பிற்கும்,
   பாடல்களுக்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, சிலையை
   செதுக்குவது போல், ஃபிலிமை அடி அடியாக படமாக்கினார்கள்.
   அதனால் தான் இன்னமும் அவை நினைவில் நிலைத்து நிற்கின்றன.

 2. தமிழன் சொல்கிறார்:

  1985ல், மதுரை ஆதீனம் அவர்கள் மதுரையில் நடந்த (அல்லது காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்திருக்கலாம்) பொதுக்கூட்டத்தில் (அப்போது நாடி ஜோசியம் என்பது ரொம்பவும் புதிதாகவும் மக்களின் கருத்தைக் கவரும் ஜோசியமாகவும் மக்களிடையே நம்பிக்கையைத் தோற்றுவிக்க ஆரம்பித்த சமயம்) , தான் நாடி ஜோசியத்தை வைத்துச் சொல்வதாகச் சொல்லி, கருணானிதி முற்பிறவியில் கரிகால் பெருவளத்தானாகப் பிறந்தவர் என்றும், எம்.ஜி.ஆர், ஒரு அரசனின் நம்பிக்கைக்குரிய படைத்தளபதியாக இருந்தவர் என்றும் சொன்னார். (உளருவதையும் ஜால்ரா போடுவதையும் அப்போவே ஆரம்பித்துவிட்டார் என்று நீங்கள் நினைக்கலாம். அவர் எப்போதுமே திராவிடக் கட்சிகளை, அதிலும் குறிப்பாக கருணானிதி, திமுக இவற்றை ஆதரித்துவந்தவர்).

 3. சிவம் சொல்கிறார்:

  கே.எம். சார்,

  உங்களுடைய பல பதிவுகள் அருமையான ரசனைகளை வெளிப்படுத்துவதாக
  உள்ளன. சில சமயங்களின் நீங்களே சொல்வது போல், சில விஷயங்களை
  பார்க்கும்போது அல்லது படிக்கும்போது, நமக்கு நமது சொந்த வாழ்க்கையில் நேர்ந்த ஒரு பழைய அனுபவத்தை அது தானாகவே நினைவிற்கு கொண்டு வந்து விடுகிறது.

  தமிழன் சொல்வது போல் எனக்கு கூட, என் வாழ்க்கையில், இந்த
  படங்களை பார்த்தபோது, பாடல்களை முதல் தடவையாக கேட்டபோது,
  நான் இருந்த இடம், நிலை எல்லாம் ஞாபகம் வருகிறது. ஒவ்வொரு படமும்,
  பாடலும் ஒரு நிகழ்வுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.
  நீங்கள் எதை எழுதினாலும் ரசிக்க முடிகிறது. நிறைய எழுதுங்கள். நன்றி.

 4. Indrillavittalum சொல்கிறார்:

  http://tamil.oneindia.com/news/india/what-is-the-future-aap-282239.html
  KM Iya. Kandippaga intha seithiyai padithirupeergal ena ninaikiren. Ithai patri ungal ennam?
  Etharkaga naan ketkiren enral, ithai vaithu nam TNku enna kattam kattuvargal ena oru imagination ungalidam?

  • D. Chandramouli சொல்கிறார்:

   Bhanumathy was an ‘ashtavadhani’. With an ever-pleasant face and a nonchalant attitude, she had a great innings in Tamil films of 50s and 60s. Her son Bharani, a slightly bulky boy wearing socks and shoes, was my school-mate in Hindu High School, Triplicane when I was studying IV Form there. Bhanumathy had a film studio by name Bharani Studios. I used to like her songs, not her acting though. I heard that she penned a lot of small stories for children in her later years. Even in social movies, Bhanumathy’s was a queen-like presence. With both Sivaji and MGR, she acted in innumerable classical movies. All those films had a great run.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    வருக சந்திரமவுலி,

    உங்கள் பள்ளித்தோழர் மருத்துவம் படித்து, பின்னர் சென்னையில்
    வடபழனியில் ஒரு மருத்துவமனையையும் நடத்தி வருகிறார்…

    40-50 ஆண்டுகளுக்குப் பின்னர் பழசை எல்லாம் யோசித்தால்,
    ஆச்சரியமான அனுபவமாக இருக்கிறது – அல்லவா ?

    நீங்கள் பரவாயில்லை… புகழ்பெற்றவர்களை – பள்ளித்தோழர்களாக
    பெற்றிருந்திருக்கிறீர்கள்.

    என்னுடன் படித்த உயிர் நண்பர்கள் எல்லாம் இப்போது எங்கே
    எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று ஒரு ஐடியாவும் இல்லை…!!!

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • D. Chandramouli சொல்கிறார்:

     A small correction, KM. Bharani wasn’t my friend. I meant he studied in the same school. I think he was junior to me. Anyway, it is nice to know he is into medical profession.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி நண்பரே.(இன்றில்லா விட்டாலும்…)

   தனியே பதிவு போட்டிருக்கிறேன்.
   படித்து விட்டு, உங்கள் கருத்தையும் தெரிவியுங்கள்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.