மோடிஜியின் பாஜக, அர்விந்த் கெஜ்ரிவாலை பழி தீர்க்குமா…?


ஓய்வுபெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவர்கள் இன்று தனது முகநூலில் டெல்லி அரசியலைப்பற்றிய ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்…. அதை கீழே தந்திருக்கிறேன்.

அதனைப்பற்றிய செய்திகளை படித்துக்கொண்டிருக்கும்போதே, நமது வலத்தள நண்பர் ஒருவர் (இன்றில்லா விட்டாலும்…) இதுபற்றி எழுத முடியுமா என்று கேட்டுள்ளார்.

நானே கூட கடந்த இரண்டு நாட்களாக இது குறித்து எழுத வேண்டுமென்று தான் நினைத்திருந்தேன். எனவே, கட்ஜு அவர்களின் செய்தியையொட்டியே நமது விவாதத்தையும் வைத்துக் கொள்ளலாமே…

முதலில் கட்ஜு அவர்களின் செய்தியும், அதன் தமிழாக்கமும் –

————————–

பாஜக இதைத்தான் செய்யப் போகிறது.. கட்ஜுவின் பரபர போஸ்ட்!

டெல்லி: ஆம் ஆத்மி கட்சியை சீர்குலைத்து அதில் குளிர் காய பாஜக மறைமுகமாக திட்டமிட்டுள்ளதாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார். ஆம் ஆத்மி கட்சிக்கு சமீப காலமாக பலமுனைகளில் நெருக்கடி வலுத்து வருகிறது. தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை என சகல துறைகளும் இதில் களம் இறங்கியுள்ளன. ஆனால் ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலங்காமல் உள்ளார்.

இந்த நிலையில் கட்ஜு தனது முகநூலில் ஒரு பதிவைப் போட்டுள்ளார். அதில் தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் பாஜக, ஆம் ஆத்மியை சிதைக்கவுள்ளதாக அவர் பரபரப்பாக கூறியுள்ளார். இதுதொடர்பாக கட்ஜு கூறியுள்ளதாவது:

ஆம் ஆத்மிக்கு தற்போது டெல்லி சட்டசபையில் மொத்தம் உள்ள 70 எம்.எல்.ஏக்களில், 67 பேர் உள்ளனர். அதாவது அவர்களால் 2018-ம் ஆண்டு நடக்கும் ராஜ்யசபா தேர்தலின்போது 3 எம்.பிக்களை தேர்வு செய்து அனுப்ப முடியும். ஆனால் பாஜக இதை அனுமதிக்குமா? பாஜக தடுக்கும். நிச்சயம் பாஜக அனுமதிக்காது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மோடி தலையில் சுத்தியலால் அடித்துக் கொண்டிருக்கிறார் கெஜ்ரிவால். இந்த நிலையில் அவரது கட்சி சார்பில் ராஜ்யசபாவுக்கு செல்வோரும் அதையேதானே செய்வார்கள். இதை பாஜக அனுமதிக்குமா.. நிச்சயம் அனுமதிக்காது. அப்படியானால் என்ன நடக்கும்?. இதுதான் நடக்கும் இதுதான் எனது கணிப்பாகும்.

மொத்தம் உள்ள 67 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களில், 27 பேருக்கு தேர்தல் ஆணையம் ஷோகாஸ் நோட்டீஸ் வழங்கியுள்ளது. இவர்கள் எம்.எல்.ஏ. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். விரைவில் இந்தத் தீர்ப்பு வெளியாகும்.

1980ம் ஆண்டு நடந்தது போன்ற சம்பவம் நடக்க வாய்ப்புள்ளது. அப்போது மத்தியில் ஜனதாக் கட்சி ஆட்சி இருந்தது. ஹரியானாவிலும் பஜன்லால் முதல்வராக இருந்தார். பஜன்லால் போல 80ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது இந்திரா
காந்தியின் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

இதனால் தனது ஆட்சி டிஸ்மிஸ் ஆகலாம் என பயந்தார் பஜன்லால். இதையடுத்து அப்படியே தனது கட்சியோடு மொத்தமாக காங்கிரஸுக்குத் தாவினார். தொடர்ந்து முதல்வராக நீடித்தார். பதவியைக் காப்பாற்றிக் கொண்டார்.

அதேபோல இப்போதும் நடக்கலாம். அதாவது பெரும்பாலான ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள், பாஜகவுக்குத் தாவி தங்களது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள முனையலாம். கெஜ்ரிவாலை இவர்கள் ஒதுக்கி விடலாம்.

மனீஷ் சிசோடியா போன்ற சிலர் பாஜகவுக்கு ஏற்புடையவர்களாக உள்ளனர். அவரைப் போல 3 பேர் உள்ளனர். அதில் யாரேனும் ஒருவரை பாஜக முதல்வராக்கலாம்.

சிசோடியாவும் யோகி ஆதித்யநாத் போல காவி உடை தரித்து ஹர ஹர மோடி என்று முழங்கியபடி பதவியில் தொடரலாம் என்று கட்ஜு கூறியுள்ளார்.

( http://tamil.oneindia.com/news/india/what-is-the-future-aap/articlecontent-pf237734-282239.html )

—————————————

ஜஸ்டிஸ் கட்ஜு அவர்கள் சொல்வது போல் தேர்தல் கமிஷன் உதவியுடனும் அர்விந்த் கெஜ்ரிவால் கவிழ்க்கப்படலாம். அது இல்லாமலே கூட நடக்கலாம்.

பாஜக, ஆம் ஆத்மியை பிளக்கும் வேலையை ஏற்கெனவே துவக்கி விட்டது. ஓரளவுக்கு கணிசமான எம்.எல்.ஏக்களை எதிரணிக்காக திரட்டியும் விட்டது. அரசைக்கவிழ்க்கும் அளவிற்கு எண்ணிக்கையை வலுப்படுத்திக் கொள்வதற்காக –
சரியான தருணத்திற்காக காத்திருக்கிறது… முனைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

எந்த நேரத்தில் வேண்டுமானாலும், ஆம் ஆத்மி சட்டமன்ற கட்சி கூட்டத்திலேயே கெஜ்ரிவாலுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு, மாற்றுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படலாம். ஒருவேளை அந்த எதிர்ப்புக்குழுவிற்கு மெஜாரிடி
கிடைக்கவில்லையென்றால், அவர்கள் ஒட்டுமொத்தமாக வெளியேறி, தற்போதைக்கு ஆம் ஆத்மி-2 வாக பாஜக ஆதரவுடன் செயல்படலாம். எதிர்காலத்தில் எந்த நேரம் வேண்டுமானாலும், அர்விந்த் கெஜ்ரிவால் கவிழ்க்கப்படக்கூடும்.

மோடிஜியின் தீவிர பிரச்சாரத்தையும் மீறி, டெல்லி சட்டமன்றத்தின் 60 சீட்டுகளில், 57 எம்.எல்.ஏ.க்களை, ஜெயிக்க வைத்த கெஜ்ரிவாலை, நிச்சயமாக மோடிஜியின் பாஜக பழிதீர்க்காமல் விடாது…!!!

மேலே கூறி இருப்பவை நடக்கக்கூடிய விஷயங்களைப்பற்றிய ஒரு அனுமானம்….

இது நியாயமா – அநியாயமா என்று கேட்டால் –

பாஜக செய்வது நேர்மையற்ற அரசியல்….

ஆனால், பாஜக ஆட்சியில் இல்லாத எல்லா மாநிலங்களிலும் கிட்டத்தட்ட பாஜக இதே போன்ற அரசியலைத்தான் மேற்கொள்கிறது என்பதால், இதில் நமக்கு அதிசயமோ, ஆச்சரியமோ எதுவும் ஏற்படவில்லை….!!!

—————————-

ஆனால், அரசியல் நியாய அநியாயங்களுக்கு அப்பாற்பட்டு, என் தனிப்பட்ட கருத்து என்னவென்றால் –

அர்விந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு இந்த தண்டனை அவசியம் தேவை. அவர் ஆரம்பம் முதலே, தனது வழிகாட்டியாக கூறிக்கொண்ட அண்ணா ஹஜாரே உட்பட அத்தனை பேரையும் ஏமாற்றியே மேலே வந்திருக்கிறார்.

கெஜ்ரிவால் ஒரு அதிபுத்திசாலி. ஆனால் தந்திரக்காரர்…நேர்மையற்றவர்… துவக்கத்தில் அண்ணா ஹஜாரே அவர்களுடன் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் சேர்ந்தது போதே,

தன்னை உயர்த்திக்கொள்ளவும், பிரபலப்படுத்திக் கொள்ளவும், இறுதியாக அரசியலில் நுழைந்து அதிகாரத்தை கைப்பற்றவும் திட்டமிட்டு, ஆனால், இத்தகைய ஆசைகள் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், ஊழலை எதிர்த்து தீவிரமாக போராடும் ஒரு போராளியாக மட்டும் தன்னை வெளியே காட்டிக்கொண்டிருக்கிறார்.

பாவம் அண்ணா ஹஜாரே…
வெள்ளையுள்ளம் படைத்த தனது கிராமத்து சீடர்களைக் கொண்டு சொந்த ஊரில் சாதனைகள் பலவற்றை நிகழ்த்திக் காட்டிய அவருக்கு –

டெல்லியில் ஊழலை எதிர்த்து – லோக்பாலை வலியுறுத்தி நடத்திய மாபெரும் போராட்டத்தில் சிஷ்யர்களாக துணை சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் வடிகட்டிய சுயநலவாதிகளே – ஏமாற்றுக்காரர்களே…
( கெஜ்ரிவால், கிரண் பேடி, மணீஷ் சிசோடியா, குமார் விஷ்வாஸ், ….)

கெஜ்ரிவால் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் India Against Corruption இணைந்து தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டபோதே, அவருக்குள்ளாக வேறு விதமான அரசியல் ஆசைகள் இருந்திருக்கின்றன.

படித்தவர்…
மிகவும் புத்திசாலி…
கெட்டிக்காரர் …
மக்களைக் நம்பவைக்கும் விதத்தில் பேசக்கூடியவர்…
திறமையாக வாதாடக்கூடியவர் –

இத்தனையும் இருந்தென்ன பயன் – ஒரு மோசடியாளர் – எவ்வளவு புத்திசாலியாகவும், சாமர்த்தியக்காரராகவும்
இருந்தாலும் – அதனால் சமூகத்திற்கும், மக்களுக்கும் என்ன பயன்…?

எனவே அர்விந்த் கெஜ்ரிவால் – பதவியிழக்க நேரிட்டால் – காரணம் எதுவாக இருந்தாலும் சரி – அந்த நிகழ்வு என்னைப் பொருத்த வரையில் எந்த வருத்தத்தையும் கொடுக்காது.

மாறாக, ஏமாற்றுக்காரர் ஒருவருக்கு தண்டனை கிடைத்தது என்ற திருப்தியையே கொடுக்கும்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே…?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to மோடிஜியின் பாஜக, அர்விந்த் கெஜ்ரிவாலை பழி தீர்க்குமா…?

 1. புதியவன் சொல்கிறார்:

  பாஜக செய்வது ‘நேர்மையற்ற அரசியல்தான். பாம்பு என் எதிரியைக் கடிக்கிறது என்பதால் ‘கிடக்கிறான் கழுதை’ என்று இருந்துவிடமுடியாது. கெஜ்ரிவால் குறுமதியாளரோ இல்லையோ, அவருக்கு மக்கள் வாக்களித்துள்ளார்கள். அதனை மதிக்கவேண்டும்.

  எனக்கென்னவோ, பாஜக, ஆம் ஆத்மி கட்சியில் குழப்பம் ஏற்படுத்தி ஆட்சியைக் கவிழ்த்தால், தீராத பழியும் வெறுப்பும் மக்களிடமிருந்து வந்துசேரும். இன்னும் சில வருடங்கள், பாஜக தொடர்ந்து வெற்றி பெறலாம். ஆனால் அது நீடிப்பது அவர்கள் காட்டும் அறத்தைப் பொறுத்து இருக்கிறது. பாஜக பழிதீர்க்கிறது என்ற பிம்பம் வந்தால், மோடி அவர்களின் இமேஜுக்கு அது மிகுந்த பாதகமாக முடியும்.

  கெஜ்ரிவாலுக்கு பொதுமக்களின் ஆதரவு கிடைத்ததன் முக்கியக் காரணம், கடைசி நேரத்தில் ஆம் ஆத்மியிடமிருந்தே ஆளைக் கடத்தி தங்கள் முதலமைச்சர் வேட்பாளர் என்று பாஜக பிரகடனம் செய்ததுதான். இந்த நேர்மையற்ற செயல்தான், ஏன் கெஜ்ரிவாலுக்கு வாய்ப்பு கொடுக்கக்கூடாது என்று மக்களைச் சிந்திக்கவைத்தது.

 2. புதியவன் சொல்கிறார்:

  சொல்ல விட்டுப்போன விஷயம் – கட்ஜு அவர்களின் ட்வீட்டுகள், விமரிசனங்கள். எனக்கு கட்ஜு அவர்கள், அவர் வகித்த பதவியின் மாண்பை மதிக்கவில்லை என்று தோன்றுகிறது. அமெரிக்காவில் பார்த்தோமென்றால், ஒரு முறை அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தால் அத்துடன் கிட்டத்தட்ட அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடுகிறது. இது மக்களின் தீர்ப்பை மதிக்கும் மாண்பு. அதேபோல், தலைமை நீதிபதி, ஜனாதிபதி போன்ற பதவியில் இருப்பவர்கள், அதைவிட்டு விலகும்போது தாங்கள் இருந்த பதவியின் மாண்பைக் காக்கவேண்டும். அதே அமெரிக்காவில், பழைய அதிபர்கள், நாட்டுக்கான முக்கிய பங்காற்ற, தற்போதுள்ள அதிபரால் அழைக்கப்படுவார்கள். அதிபர் பதவியிலிருந்து இறங்கியவுடன், அரசியல் சர்ச்சைகளை ஆரம்பித்தால், அது அவர் வகித்த பதவிக்கு அழகாயிருக்காது. அந்த மாண்பை அமெரிக்க அதிபர்கள் பேணுகிறார்கள்.

  இதே கட்ஜு.. மாண்பைப் பேணியிருப்பாரேயானால், தற்போதைய தலைமை நீதிபதி, கட்ஜூவைப் போன்றவர்களிடம், ‘அரசு கொலேஜிய முறை வேண்டாம்’ என்று சொல்கிறது, உங்கள் கருத்தென்ன என்பது போன்று ஓய்வுபெற்ற தலைமை நீதிபதிகளை, ‘அனுபவத்தை மதித்து அவர்களின் ஆலோசனையைக் கேட்கும் இடத்தில் இருத்தமுடியும்.

  தற்போது கட்ஜுவின் எந்தச் செயலும் (அவர் கருணானிதி, நீதி பரிபாலனத்தில் குறுக்கிடும் தன்மை கொண்டவர். ஜெ. எந்தக் காரணம் கொண்டும் நீதி பரிபாலனத்தில் தலையிட்டதில்லை என்பது போன்ற உண்மைகளை உரக்கச் சொன்னபோதும்) எனக்கு ஏற்புடையதாக இல்லை.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   //கட்ஜு அவர்களின் ட்வீட்டுகள், விமரிசனங்கள். எனக்கு கட்ஜு அவர்கள், அவர் வகித்த பதவியின் மாண்பை மதிக்கவில்லை என்று தோன்றுகிறது.//

   // தலைமை நீதிபதி, ஜனாதிபதி போன்ற பதவியில் இருப்பவர்கள், அதைவிட்டு விலகும்போது தாங்கள் இருந்த பதவியின் மாண்பைக் காக்கவேண்டும்.//

   நூற்றுக்கு நூறு நீங்கள் சொல்வதை ஏற்கிறேன்…

   கட்ஜு சுயவிளம்பரம் தேடும் ஆசாமி…
   அவர் சொன்னார் என்பதற்காக நான் இந்த கருத்தை ஏற்கவில்லை…
   அவரது கருத்தையொட்டி, இந்த இடுகையை எழுத நேர்ந்தது – அவ்வளவே…!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. Indrillavittalum சொல்கிறார்:

  KM Iya,
  Mikka nandri. Intha idugai oru vagaiyil naam vivathikka vendiyathu thaan endralum, ennudaya kannellam nam vazhvai ninaithu thaan. Ithey Modi BJP nam TNku enna kattam katta pogirargal. Intha karunchivappu nira thol porthiya kaavi thol, nammai eppadi aatippadaikka pogirathu endru thaan. Aaga, appadi paarthaal Delhi arasiyal soozhchi TNku edu padaathu. Ingu peraabathu kaathirukkarathu endru ninaikiren.
  Modijiye Amit shahji!!!!!!!

 4. Sundar Raman சொல்கிறார்:

  கெஜ்ரி ஒரு கபட நாடக வேஷ தாரி , பாவம் அண்ணா ஹசாரே. Kejri IIT அட்மிஷன் இல் இருந்து , வருமான வரி துறையில் ஒரே இடத்தில வேலை பார்த்தது , வேலையில் இருந்து கொண்டே தொண்டு நிறுவனம் தொடங்கி , வெளிநாட்டு பணம் வாங்கி , கணக்கில் காட்டாமல் இருந்தது, பின் அண்ணா , அதிலும் பண மோசடி ,தேர்தலில் சட்டையில் இங்க் , கன்னத்தில் அறை , பின் ஆட்சி அதிலும் , விளம்பரம் , ஒப்பந்தம் என மோசடி மேல் மோசடி …. ஆனாலும் இந்த NDTV மற்றும் indiatoday சலிக்காமல் சப்போர்ட் வேற … இவர்களை என்ன செய்தாலும் தகும்.

 5. hari சொல்கிறார்:

  Actually i have had a chat with my delhi friends, and all of them in sync, says that kejrival is providing a very decent ruling.He has reduced cost on water , electricity etc.he has controlled bribing in government offices.
  SO i he should continue in his power.It doesnt matter how he got into the power,but by over all he is providing good governance

  • Mahesh Thevesh சொல்கிறார்:

   It doesnt matter how he got into the power, இந்த மனப்பான்மை இந்தியர்களிடம் இருப்பதால்தான் ஊழல்வாதிகளும் பணக்காரர்களும் பதவிக்கு வருகிறார்கள்.நேர்மை இருக்கவேண்டும் என்பதை சத்தியவாக்காக கொள்ளாமை நீதி அற்ற அரசியலுக்கு அடித்தளம் ஆகிறது.

   • தமிழன் சொல்கிறார்:

    நம் மக்களிடமிருந்துதான் நமக்குத் தலைவர்கள் வரமுடியும். பெரும்பான்மை மக்களிடத்தில் அறம் குறைவாக இருக்கும்போது. வரும் தலைவனும் குறைந்த அறத்துடன்’தான் இருப்பான். உள்ளதில் நல்லவராக இருந்தாலே நமக்கு மிகப்பெரும் ரிலீஃப்.

 6. Sundar Raman சொல்கிறார்:

  I lived in Delhi long ago , DTC charges used to be 40 paise or 50 paise , even in Trichy charges were 75 paise onwards on those days . ( and conductor used to occupy a seat , we need stand around him to buy tickets ) , ration materials were of finest quality , milk used to be cheaper …all because this was a capital . How come they can give electricity and water cheap, in fact people should pay right prices for the utilities ( the bungalows in Greater kailash, defence colony , jor bagh …the huge bungalows pays the subsidized rate means – how can this be a fair idea ?) … So I discount those feedback … reduction in bribe , most of the offices are central govt offices , there is a chance that slight reduction in bribe. But Kejriwal as a person morally corrupt, financially corrupt…very bad influence on the society .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.