ராணுவத்தில் குஜராத்தியர் – அகிலேஷின் கேள்வியில் நிஜம் இருக்கிறது ….!!!

காஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் கொல்லப்படுவதைப் பற்றி பேசும்போது, உத்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், இன்று ஒரு விசித்திரமான கேள்வியை எழுப்பி இருக்கிறார் …

“UP, Madhya Pradesh, Dakshin Bharat har jagah se
shaheed huye hain, Gujarat ka koi jawan shaheed
hua ho toh batao” he said..

இந்த கேள்வி சங்கடமாக இருந்தாலும் கூட, முற்றிலும் நிஜமே …!!! நான் என் பணிக்காலத்தில் இந்திய ராணுவத்தின் பல பிரிவுகளுடன் பணி புரிந்திருக்கிறேன்…. கவனித்திருக்கிறேன்.

ராணுவத்தில் அதிக அளவில் தென்னிந்தியர்கள் (முக்கியமாக தமிழர்கள், மலையாளிகள்), பஞ்சாபியர்கள், கூர்க்காக்கள், மராட்டியர் – அதற்கடுத்தபடியாக இந்தி பேசும் மாநிலத்தவர் இருப்பதை பார்த்திருக்கிறேன்.

குஜராத்தியர் அபூர்வமாகவே தென்படுவர் …!!!

அதற்காக குஜராத்தியர்களை தேசபக்தி இல்லாதவர்கள் என்று சொல்லி விட முடியாது – ராணுவம் அவர்களது சாய்ஸ் இல்லை… பெரும்பாலும், குஜராத்தியர்களின் விருப்பம் வேறு திசைகளில் – வியாபாரம், தொழில், அரசியல் – ஆகியவற்றில் இருந்திருக்கிறது….

அகிலேஷ், அரசியல் ரீதியாக இந்த கருத்தைச் சொல்லி இருந்தாலும் கூட, நடைமுறையில் இது நிஜமே…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to ராணுவத்தில் குஜராத்தியர் – அகிலேஷின் கேள்வியில் நிஜம் இருக்கிறது ….!!!

 1. Tamilian சொல்கிறார்:

  If Gujarathis do not join armed forces, what could be done? They dont choose it as employment and most of them consider themselves as Baniyas.

 2. தமிழன் சொல்கிறார்:

  அகிலேஷ் யாதவின் கேள்வி கண்டிக்கத்தக்கது. இந்திய ராணுவத்தினரிடையே பிரிவினை உணர்வைத் தூண்டும் கருத்துக்காகவே அவருக்கு தேர்தலில் நிற்க தடை கோரலாம்.

  தமிழகத்திலிருந்தும் சில பிரிவினர்தான் ராணுவச் சேவையில் சேர்கின்றனர். பல சமூகங்கள் இதனை ஒரு சேவையாகவோ வாய்ப்பாகவோ (பெரும்பான்மை) கருதுவதில்லை. அப்படிச் செல்பவர்களிலும் சிலர்தான் உயிர் தியாகம் புரிய நேரிடுகிறது. அதை வைத்து ஏதேனும் குதர்க்கமான கருத்து சொல்வது சரியா?

  இன்னொன்று, ராணுவ வேலையை, சேவையாகக் கருதிச் செல்பவர்கள் குறைவு என்றே நான் நினைக்கிறேன் (அகில உலகிலும்). அதை வேலை வாய்ப்புக்கு ஒரு ஆதாரமாகவே எண்ணிச் சேருகின்றனர்.

  என்னுடைய கருத்து, எல்லோருக்கும் 2 வருடங்களாவது ராணுவப் பயிற்சி கொடுக்கவேண்டும் (தேச மக்கள் அனைவருக்கும்). அது ஓரளவு வாழ்க்கையில் நேரம் தவறாமை, சோம்பியிராமை போன்ற ஒழுங்குமுறையையும், நம் தேசம் என்ற உணர்வையும் கொண்டுவரும். அப்படி வரும்போது, பொதுச் சொத்துக்கள், தேசத்தைச் சார்ந்தது என்ற உணர்வும், தேசத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணமும், ராணுவச் சேவை செய்பவர்களை மதிக்கும் பக்குவமும் வரும்.

 3. ravikumar சொல்கிறார்:

  It is an individual’s interest , you can not question this. This is absurd

 4. R Subramanian சொல்கிறார்:
  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப ஆர்.சுப்ரமணியன்,

   நீங்கள் refer செய்திருக்கும் times of india செய்தியிலிருந்து ஒரு பகுதி –

   ——————–

   Captain Alap Desai, who retired in 2007, said he was aware about lower representation of Gujarat
   when it came to Army service.

   “But, what Akhilesh said was a very crude way to look at the issue.

   Lower representation of Gujarat has more to do with the cultural mindset of people here who have faced lesser wartime atrocities compared to Punjab, J&K or Rajasthan.”

   ———————

   குஜராத்தை சேர்ந்த ரிடையர்டு கேப்டன் ஆலாப் தேசாய் கூறியுள்ளதைத்தான் நீங்கள் மேலே பார்க்கிறீர்கள். “ராணுவத்தில் குஜராத்தியரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதை நான் அறிவேன். ஆனால் அதற்கு காரணம், அவர்கள் பஞ்சாபியரை போலவோ, காஷ்மீரை போலவோ, ராஜஸ்தானை போலவோ – போர் கொடுமைகளை சந்திக்காதது தான்…”

   என்று கூறுகிறார்…

   ——————–

   குஜராத்தியரின் mindset தான் காரணம் என்பதை அவரே ஏற்றுக்கொள்கிறார்.

   இங்கு இன்னொரு விஷயம் – போரின் கொடுமைகளை என்றுமே அனுபவித்தறியாத தென் கோடி மூலையிலுள்ள தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கில் ராணுவத்தில் சேர்ந்திருக்கிறார்கள். போரின் கொடுமைகளை அனுபவித்தவர்கள் தான் ராணுவத்தில் சேரும் மனநிலையில் இருப்பார்கள் என்பதும் சரி அல்ல….

   அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன….

   ————————————————-

   எல்லா நண்பர்களுக்கும் சேர்த்தே –

   நான் அகிலேஷ் சொன்னதை வரவேற்கவில்லை…

   // அதற்காக குஜராத்தியர்களை தேசபக்தி இல்லாதவர்கள் என்று சொல்லி விட முடியாது – ராணுவம் அவர்களது சாய்ஸ் இல்லை… பெரும்பாலும், குஜராத்தியர்களின் விருப்பம் வேறு திசைகளில் – வியாபாரம், தொழில், அரசியல் – ஆகியவற்றில் இருந்திருக்கிறது….”

   என்று இடுகையிலேயே சொல்லி இருக்கிறேன்.

   – அகிலேஷ் இவற்றை அறியாதவராக இருக்க முடியாது..
   இது உள் அர்த்தம் பொருந்திய, முற்றிலும் அரசியல் ரீதியான Statement.
   அகிலேஷ் இதை எதற்காக, யாரை நினைத்து சொன்னார் என்பதும் புரிந்து கொள்ளக்கூடியதே.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. R.Palanikumar (@RPK1960) சொல்கிறார்:

  I had heard about the Field Marshal Sam Manekshaw’s experience in Gujarat ,long back.
  ” Field Marshal Sam Bahadur Manekshaw once started addressing a public meeting at Ahmedabad in English. The crowd started chanting, “Speak in Gujarati. We will hear you only if you speak in Gujarati.” Field Marshal Sam Bahadur Manekshaw stopped. Swept the audience with a hard stare and replied, “Friends, I have fought many a battle in my long career. I have learned Punjabi from men of the Sikh Regiment; Marathi from the Maratha Regiment; Tamil from the men of the Madras Sappers; Bengali from the men of the Bengal Sappers, Hindi from the Bihar Regiment; and even Nepali from the Gurkha Regiment. Unfortunately there was no soldier from Gujarat from whom I could have learned Gujarati.” “

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.