காண்டிராக்டர் சுப்ரமணியனின் தற்கொலைக்கு எத்தனை கோணங்கள் ….!!!


அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு மிகவும் நெருங்கிய காண்டிராக்டரான திரு.சுப்ரமணியன் அண்மையில் தற்கொலை செய்து கொண்டதும், அதற்கான காரணங்களாக மீடியாக்களில் பல செய்திகள் வெளிவருவதும் நண்பர்கள் அறிந்ததே …!

இன்று வெளியான ஜூனியர் விகடன் இதழில் இது குறித்து வெளிவந்துள்ள ஒரு கட்டுரையை நண்பர்களின் பார்வைக்கு கீழே பதிந்திருக்கிறேன்.

முதலில் கட்டுரையை படித்து விடுங்கள்…. பிறகு சில சந்தேகங்கள்…

1) யாருக்கு சொந்தமான மெடிகல் காலேஜை, இவரே கட்டிக் கொடுத்தாரோ, யாருடைய இலாகா மூலம் விடப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பல கட்டிட காண்டிராக்டுகளை பெற்று இவரே கட்டிக் கொடுத்தாரோ,
யாருக்கு தேர்தலுக்கு முன்னதாக தனது வங்கிக்கணக்கிலிருந்து இரண்டு கோடி ரூபாய் எடுத்து கொடுத்ததாக
சொல்லப்படுகிறதோ – அவருக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று ஒருவர் சொல்வதற்கும் “எங்க அப்பா குதிருக்குள்ள இல்லை” என்கிற பழமொழிக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பது போல் தோன்றவில்லை…?

2) 6-ந்தேதி நான்கு பக்க கடிதம் எழுதி, ஏழு விலாசங்களுக்கு நண்பர் ஒருவர் மூலம் போஸ்ட் செய்து விட்டு, நிதானமாக 8-ந்தேதி தற்கொலை செய்து கொண்டாராம். ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக தீர்மானித்து விட்டு, 48 மணி நேரம்
காத்திருப்பாரா…? அதை தபாலில் சேர்க்கச் சென்ற நண்பர், விலாசங்களை பார்த்திருக்க மாட்டாரா…? அவருக்கு சந்தேகம் எதுவும் எழுந்திருக்காதா..? நண்பரிடம் விசாரித்திருக்க மாட்டாரா?

3) கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தென்னரசு என்பவரும், முன்னாள் அமைச்சரும், இவருக்கு எதிரிகளா அல்லது இவரது நண்பராகிய அமைச்சருக்கு எதிரியா ..?

4) கடிதத்தின் வாசகங்களை பார்த்தால், யாரோ, மிகச்சரியாக, தங்களுக்கு வேண்டிய செய்திகளை எல்லாம் தவறாமல் இடம் பெறும்படி பார்த்துக்கொண்டதாக தோன்றவில்லை…?

5) அவரது மனைவி, 7 லட்ச ரூபாய் ரொக்கமும், ஐந்து வருட வருமான வரித்துறை ஆவணங்களையும் மட்டுமே ரெய்டின்போது எடுத்துச் சென்றிருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார் (ஜூ.வி. ரிப்போர்ட்டில்). இதில் பயப்பட வேண்டிய விஷயம் எதுவுமே இல்லையே… ஒரு சிவில் காண்டிராக்டரிடம் 7 லட்சம் ரூபாய் ரொக்கமாக இருப்பது சர்வ சாதாரனம். வருமான வரித்துறை ஆவணங்கள் – இவர் ஏற்கெனவே கொடுத்தவை தான் – எனவே இதில் அஞ்சத்தக்க விஷயமோ, தற்கொலை அளவிற்கு போகவோ எதுவும் இருப்பதாக தோன்றவில்லையே…

6) வருமான வரி இலாகா அதிகாரி ஒருவர் போடா, வாடா என்று ஏசியதற்காக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள, இவ்வளவு பெரிய காண்டிராக்டுகளை எடுத்து, நூற்றுக்கணக்கான ஊழியர்களிடம் வருடக்கணக்காக வேலை வாங்கியவர்-
தற்கொலை முடிவிற்கு போகும் அளவிற்கு பலவீனமான / பயந்த இதயம் கொண்டவராகவா இருப்பார்…?

ஒன்றும் தெரியாத சாதாரண ஆசாமிகளாகிய நமக்கே இவ்வளவு யோசனைகள் எல்லாம் தோன்றும்போது, இதனை விசாரிக்கும் பொறுப்பேற்று செயல்படும், அதிகாரிகள் இன்னும் எவ்வளவு விரிவாக யோசிப்பார்கள்…?

எத்தனை நாட்கள் உண்மையை பொய் மேகங்கள் மறைக்கக்கூடும்…?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to காண்டிராக்டர் சுப்ரமணியனின் தற்கொலைக்கு எத்தனை கோணங்கள் ….!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  விளக்கத்துக்கு அப்புறம் வருகிறேன். இப்போது உங்கள் கேள்வியான, எத்தனை நாட்கள் உண்மையை பொய் மேகங்கள் மறைக்கக்கூடும்? 7 வருடங்களுக்கும் மேலாக. அப்புறம் பொய்தான் உண்மை என்று எங்கும் ஒத்துக்கொள்ளப்படும். உதாரணம், சாதிக்பாட்சா தற்கொலை, ஆ.ராசா ஜெயிலில் இருந்தபோது, அதனை திமுகவுக்கு ஆதரவாக பொயசெய்தி போட்ட நக்கீரன், அதன் இணை ஆசிரியர் காமராஜ் (Responsible for this diverted news and 2g support), விளக்கமுடியாத சூழலில் காமராஜை நக்கீரனை விட்டு நீக்கியது… இப்போ அந்த வழக்கு என்ன நிலைல இருக்கு?

  • சைதைஅஜீஸ் சொல்கிறார்:

   அண்ணா நகர் ரமேஷ் சாவு?

   • புதியவன் சொல்கிறார்:

    @சைதை அஜீஸ். உங்கள் ஞாபகசக்தியைப் பாராட்டுகிறேன். இன்னும் முயன்றால், ஏகப்பட்ட கொலைகளையும் (தற்கொலையாக்கப்பட்ட), பல கற்பழிப்புகளையும் நினைவுகூற முடியும். கேட்டால், சட்டத்தின்படி அவர் மாட்டிக்கொண்டிருக்கிறாரா? ஆகவே இப்போதுள்ள அரசியல்வாதிகளில் அவர் காந்தியைவிட மேலானவர் என்ற விளக்கம் நம் காதுகளில் வந்து விழும்.

 2. இளங்கோ சொல்கிறார்:

  இது ஏன் தற்கொலை போல் தோற்றமளிக்கும் ஒரு நன்கு திட்டமிடப்பட்ட
  கொலையாக இருக்கக்கூடாது ? கொலைகாரர்களே எங்க அப்பன் குதிருக்குள்
  இல்லை என்று சொல்வது போல் தோன்றுகிறதே.

 3. தமிழன் சொல்கிறார்:

  இந்தக் கொலைக்குச் சம்பந்தமில்லாத ஒரு கதை (உங்களுக்குத் தெரிந்ததுதான்). படியுங்கள்.

  மாஃபியா என்பது, ஒரு தலைவனைக் கொண்டது. அவனுக்கு லீகல், ஸ்டிராடஜி ஆலோசகர் ஒருவர் இருப்பார். அவர்தான் கோல்மால் தனத்துக்கு வழி சொல்லிக்கொடுப்பார். தலைவனுக்கு இரண்டு மூன்று அடியாட்கள் தலைவர்கள் உண்டு. அவர்களுக்குத் தனித் தனி ஏரியா பிரித்துத் தரப்படும். இது தவிர, தலைவனுக்கு என்று தனியாக ஒரு பாதுகாவலர் மற்றும் அடியாள் (ஒருவர்) உண்டு. தலைவர், எந்த கொலை போன்ற செயல்களை இன்னொரு ஆள் இல்லாமல், நேரடியாக ஒருவரிடம் சொல்லுவார். அதற்கு வேறு ஆதாரம் இருக்காது. இந்த முழுமையான செயினில், யாரும் யாரையும் காட்டிக்கொடுக்கக்கூடாது. ஒருவர் பிறழாக காட்டிக்கொடுக்க நினைத்தாலும், தலைவர் வரை அது நீளாது. அதாவது தலைவர் எப்போதும் மாட்டிக்கொள்ளமாட்டார். அபூர்வமான சமயத்தில், சரியான ஆதாரங்கள் சிக்கும் என்று தெரிந்தால், chainல், ஒரு கண்ணியை, தானாகவே இறக்கச்சொல்லிவிடுவார்கள் (அவர்களது குடும்பத்தை மாஃபியா தலைவர் பார்த்துக்கொள்வார்). அப்படி இறக்கத் துணியாத பட்சத்தில், கொலைசெய்துவிடுவார்கள். இதற்குக் காரணம், எந்தக் காரணம் கொண்டும் தலைவர் மாட்டிக்கொள்ளக்கூடாது. இந்த செயினில் இருக்கும் எல்லோரும் நிறைய பணம் சம்பாதிப்பார்கள், வாழ்க்கை நல்லா சுகமா போகும், அதிகாரம் நிறைய உள்ளவர்கள். அதற்கேற்றவாறு கொலை, கொள்ளை, கலவரம் உண்டுபண்ணுவது போன்று பல வேலைகள் இருக்கும். இதிலும் குட்டித் தலைவர்கள், அவர்களது ஏரியாவில் எல்லாவிதமான சட்டத்துக்குப் புறம்பான தொழில்கள் செய்து சம்பாதித்துக்கொள்ளலாம். அதில் ஒரு பகுதி தலைவருக்குச் சென்றுவிடும். அவர், இவர்கள் மாட்டிக்கொள்ளாமலிருக்க தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி தப்பிக்கவைப்பார். வேறு வழியில்லாதபோது போலீசில் மாட்டிக்கொண்டு, அவர்கள் தலைவலியைக் குறைக்கும்விதமாக குட்டி அடியாட்கள் வைத்திருப்பார்கள். அவர்கள் குற்றம் செய்யாதிருந்தாலும், போலீசில், தாங்கள்தான் செய்ததாகச் சொல்லி, போலீசுக்கு கேசை முடித்துவைக்க உதவுவார்கள், சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி விரைவில் வெளியே வந்துவிடுவார்கள். அப்படி வரமுடியவில்லை என்றால், ‘அண்ணா பிறந்த நாள் என்று ஏதேனும் சாக்கில்’ பலரை அரசு விடுதலை செய்யும்போது அவர்களும் வெளியே வந்துவிடுவார்கள்.

  போடியில் போண்டா வித்துக்கொண்டிருந்தவனுக்கு எப்படி துபாயில் தொழில்கள் வந்தன என்று யாருக்கும் ஆராய்ச்சி செய்ய நேரமிருக்காது. 5 வருடத்தில், ‘எங்கள்ட வாங்க நாங்க பார்த்துக்கறோம்’ என்று கூவி அழைக்கும் நூற்றுக்கணக்கான மருத்துவமனைகளுக்கு இவர் எப்படி ஓனர் ஆனார் என்றும் யாரும் கண்டுபிடிக்கமுடியாது (தெரிந்தாலும் யாரும் யாரையும் காட்டிக்கொடுக்க மாட்டார்கள்). அப்படி என்ன தொழில் செய்து இந்த மாலுக்கு ஓனர் ஆனார், எப்படி இத்தனை படங்கள் எடுக்கும் அளவுக்கு பணம் வந்தது என்றெல்லாம் யாரும் கேள்விகேட்க மாட்டார்கள். நாமதான், ‘குருவி’ படமா. அது பயங்கர ப்ளாப் ஆச்சேன்னு நினைப்போம். கணக்கில் ‘குருவி’ 50 கோடி லாபம் சம்பாதித்தது என்று கருப்பை வெள்ளையாக்கியிருப்பார்கள். இது ‘தனி ஒருவரின் வருமானம் என்பது ரகசியமானது’ என்ற அடிப்படையில் கொள்ளையடிப்பவர்களது குணத்தை பொதுமக்கள் தெரிந்துகொள்ளமுடியாது. இந்த ஃப்ராடுக்கெல்லாம் ஆரம்பம் யார் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்.

 4. தமிழன் சொல்கிறார்:

  “எத்தனை நாட்கள் உண்மையை பொய் மேகங்கள் மறைக்கக்கூடும்…?” – காமை சார்..இதனைப் படிக்கும்போது வருத்தம் மேலிடுகிறது. இங்கு குற்றங்கள் கண்டுபிடிக்கப்படுவதே, அரசியல் காரணங்களுக்கும் அதை வைத்து காரியம் சாதித்துக்கொள்வதற்கும்தான். யாருக்கும் எந்தக் குற்றத்தைப் பற்றியும் அக்கறை கிடையாது. நீங்கள் எத்தனை எத்தனை செய்திகள் இதைப்போலப் படித்திருப்பீர்கள். ஒன்றிலாவது குற்றம் நிரூபிக்கப்படுவதற்கான முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறதா?

  1. அரசு இன்டெர்னெட் வசதியை அமைச்சர் என்ற முறையில் தன் சொந்தத் தொழிலுக்காக தன் தொலைக்காட்சி ஆபீஸ் வரை கேபிள் பதித்த வழக்கில், அரசுக்கு 500 கோடி இழப்பு. செய்திகள் வந்து 6 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. மற்றும் மாறன் சகோதரர்கள் செய்த மிதமிஞ்சிய ஊழல், அமைச்சராக இருந்து தன் அதிகாரத்தை உபயோகப்படுத்தி எதிரிகளை வீழ்த்தி தனக்காகவே நிறைய பணம் சம்பாதித்தது (ஏர்செல்…. வழக்குகள்)
  2. அலைக்கற்றை கொள்ளை – ஆதாரம் செயலிழக்கச் செய்யக்கூடாது என்று 1 வருடம் திகாரில் கொள்ளை பரப்புச் செயலாளரும், மகளும் இருந்துவிட்டு வந்தாகிவிட்டது. அது ஆகி 6 வருடங்களாகிவிட்டதா?
  3. ஆ.ராசா (சாதாரண வக்கீல்), ரியல் எஸ்டேட் தொழிலாம். பல்லாயிரம் கோடி சம்பாதிப்பு. இதில் சாதிக்பாட்சா, ராசா மனைவி, படிப்பறிவில்லாத சகோதரர், நக்கீரன் குரூப் (காமராஜ் உள்பட) எத்தனை ஆயிரம் கோடி சுருட்டினர்.
  4. காமன்வெல்த் விளையாட்டில் படு கேவலமாக பணம் சுருட்டினர். அதற்கு வழக்கு ஒன்று பதியப்பட்டது. மன்மோகன்சிங், அமைதியாக இருந்ததன்மூலம் இந்தக் கொள்ளைக்கு அனுமதி வழங்கினார்.
  5. தொலைக்காட்சிக்கு 200 கோடிக்குமேல் லஞ்சம் பெற்ற வழக்கு. (இந்தப் பணம் ஸ்டாலினிடம் நேரடியாக வழங்கப்பட்டதாம்). வோல்டாஸ் இடத்தைக் கபளீகரம் செய்தது.
  இன்னும் ஏகப்பட்டது. சமீபத்தில் ரெட்டி கொள்ளை… அமைச்சர்கள் கொள்ளை. எலக்ஷன் சமயத்தில் 500 கோடி லாரியில் பிடிபட்டது. (உடனே திமுக பரவாயில்லை என்று நினைக்கவேண்டாம். அவர்கள் பல்லாயிரம் கோடி சுருட்டியதில் சமர்த்தர்கள். வெறும் ஆசிரியராக இருந்த பொன்முடி, கிளார்க்காக இருந்த துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, எ.வ.வேலு… இன்னும் ஏகப்பட்ட பேர் பல்லாயிரம் கோடி சம்பாதித்தனர்/கொள்ளையின்மூலம்)

  நம்ம ஜென்மத்தில் இந்தக் குற்றங்கள் புரிந்தவர்கள் தண்டனை அனுபவிப்பது கடினம். எதையும் யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள்.

  • சிவம் சொல்கிறார்:

   மன்மோகன் சிங் – காங்கிரஸ்+திமுக கூட்டணி ஆட்சியில் நடைபெற்ற
   இந்த குற்ற செயல்களை, பதவிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும்
   எந்த விதத்திலும் இந்த வழக்குகளை துரிதப்படுத்தாமல், முடிவிற்கு
   கொண்டு போகாமல் தாமதப்படுத்தும் முயற்சிகளில் பாஜக அரசும்
   துணை போவது ஏன் ?

   • தமிழன் சொல்கிறார்:

    மோடி அவர்கள் நேரடியாகத் துப்புத்துலக்கும் காரியமல்ல. எல்லாத் துறைகளிலும் உள்ள கருப்பு ஆடுகளும், ஒவ்வொரு அரசியல்வாதியின் மற்ற தொடர்புகளும்தான் காரணம். (பாஜக அமைச்சர்கள் உள்பட)

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     தமிழன்,

     இது மோடிஜியின் இயலாமையைத் தான் காட்டுகிறது. கருப்பு ஆடுகளை களையத்தெரியாதவர் அல்லது
     களைய துணிச்சல் இல்லாதவர் – என்பதை நீங்களே ஒப்புக்கொள்வதாகத்தான் நான் கருதுகிறேன்.

     நண்பர் சிவம் சொல்வது சரியே.

     மூன்று வருடங்கள் என்பது குறுகிய காலமல்ல… செய்ய வேண்டுமென்ற மனம் இருந்திருந்தால்,
     விரும்பி இருந்தால் எவ்வளவோ சாதித்திருக்கலாம்…

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  தமிழன்,

  // “எத்தனை நாட்கள் உண்மையை பொய் மேகங்கள் மறைக்கக்கூடும்…?” – காமை சார்..இதனைப் படிக்கும்போது வருத்தம் மேலிடுகிறது.//

  – நான் தெரிந்தே தான் இந்த வார்த்தைகளை பயன்படுத்தினேன் என்பதை நீங்கள் உணர்வீர்கள் என்றே நம்புகிறேன்.

  இதைப்படிக்கும் சிலரையாவது, இந்த வார்த்தைகள் கொஞ்சம் யோசிக்கச் செய்யும் என்பது என் நம்பிக்கை…

  நீங்கள் கூறும் மாறன் சகோதரர்கள் வழக்கை பற்றிய வருத்தத்தை நான் ஆடிட்டர் திரு.குருமூர்த்தி அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்….

  சுமார் 400 கோடி ரூபாய் அளவிற்கு அரசை ஏமாற்றி மோசடி செய்ததாக துவங்கப்பட்ட வழக்கு, வெறும் ஒண்ணரை கோடி ரூபாய் – அதுவும் வெறுமனே பில் போடாமல் பயன்படுத்தியதாக – என்கிற அளவிற்கு இளக்கப்பட்டது
  எப்படி ? திருவாளர் ரவி சங்கர் பிரசாத் தானே இதற்கு பொறுப்பு…?

  பாஜக அமைச்சர்களையும் பணத்தால் விலைக்கு வாங்க முடிகிறது என்பது தானே இதன் அர்த்தம் ? திரு.குருமூர்த்தி அவர்கள் இதை எப்படி சகித்துக் கொள்கிறார்…?

  அவர் வணங்கும் காஞ்சி முனிவர் இத்தகைய சமரசங்களை ஏற்பதை அனுமதிப்பாரா என்று அவரது மனசாட்சி தான் சொல்ல வேண்டும்…

  மோடிஜி பதவியேற்கும் முன்னர் நாட்டிற்கு ஒரு உறுதிமொழி அளித்தார். தான் பதவியேற்ற ஒரு வருடத்திற்குள் பாராளுமன்றம் “சுத்தம்” செய்யப்படும் என்று… எம்.பி.க்கள் மீதுள்ள வழக்குகள் அனைத்தும் ஸ்பெஷல் கோர்ட்டுகள்
  அமைக்கப்பட்டு, ஒரு வருடத்திற்குள் விசாரித்து முடிக்கப்படும் என்று…. அந்த வாக்குறுதி மே மாத காற்றோடு போனது.

  காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்த ஊழல்கள், கிரிமினல் மோசடிகளை – மோடிஜி, பாஜக ஆட்சிக்கு வந்தால் உரிய முறையில் விரைவாக விசாரித்து முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று மக்கள் நம்பினார்கள்… மக்கள் பாஜகவிற்கு ஓட்டளித்ததற்கு
  அதுவும் ஒரு முக்கிய காரணம்.

  ஆனால், இவற்றை முடிவுக்கு கொண்டு வராமல், சம்பந்தப்பட்டவர்களை வெறுமனே டென்ஷனில் வைத்துக்கொண்டிருப்பது போதுமானது – அது தான் தங்களின் எதிர்காலத்திற்கு நல்லது என்று பாஜக அரசு கருதுகிறதா…?

  கேட்டால், சும்மா சால்ஜாப்புக்காக, நீதிமன்றங்கள் ஒத்துழைக்கவில்லை என்று விளக்கம் கூறினால் பத்தாது. சீரியசாக மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது.

  தங்களுக்கு தேவை என்று தோன்றும் விஷயங்களில், விரைவாக, குறுக்கு வழிகளை கடைபிடித்தாவது, காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள தெரியவில்லையா…? ஆதார் விவகாரத்தை உச்சநீதிமன்றமே குறுக்கிட்டாலும் கொண்டு செல்ல தெரியவில்லையா..? மிக முக்கியமான மசோதாக்களை, ராஜ்ய சபாவில் நிறைவேற்ற மெஜாரிடி இல்லையென்பதால்,
  குறுக்கு வழியில் “நிதி மசோதா” மேக்கப் போட்டு நிறைவேற்ற தெரியவில்லையா…?

  வர வர, யார் மீதும், எந்த அரசியல் கட்சியின் மீதும் நம்பிக்கை வருவதில்லை…. அத்தனையும், தங்களை வளர்த்துக் கொள்வதிலேயே குறியாக இருக்கின்றன –
  அதன் தலைவர்கள் தங்களை வளர்த்துக் கொள்வதைப்போல…!!!

  இவர்கள் யாரையும் நம்புவதில் எந்த பயனும் இல்லை. தப்பு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டுமானால், அது இறைவனாக, இயற்கையாக பார்த்து செய்தால் தான் உண்டு என்றும் தோன்றுகிறது.

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • தமிழன் சொல்கிறார்:

   என்னுடைய வருத்தம் நீங்கள் எழுதியதில் இல்லை (எத்தனை நாட்கள் உண்மையை…..). நம்ம நாட்டுல இப்படி இருக்கேன்னுதான் வருத்தம்.

   சட்டமும், அரசும், அதிகாரிகளும் இப்படி இருந்தால், ஜனநாயகத்தில் எப்படி எல்லோருக்கும் நம்பிக்கை வரும். நீதி, நியாயம், நேர்மை என்பதெல்லாம் அடுத்தவேளை சோற்றுக்கே அல்லலுறும் அப்பாவிகளுக்கும் தினமும் நாளைக் கடத்துவதற்கு கஷ்டப்படும் Lower மத்தியதர வர்க்கத்துக்கும்தானா? அரசியல்வாதிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் பணக்காரர்களுக்கும் இல்லையா?

   எவன் ஏமாந்தவனோ, அவன், கரண்ட் கம்பியைக் கடித்து இறந்துவிட்டான் என்று சொல்லி வழக்கை விரைந்து முடிக்கிறார்கள், தண்டவாளத்தில் தானே தலையைக்கொடுத்து இறந்தான் என்று சொல்லிவிடுகிறார்கள். இல்லைனா, தீவிரவாதி பட்டம் கொடுத்து அவன் வாழ்க்கையே இல்லாமல் செய்துவிடுகிறார்கள்.

   நம்புவோம்… நியாயம் விரைவில் கிடைக்கும் என்று.

 6. Sundar Raman சொல்கிறார்:

  நானும் இது வரை கோர்ட்டின் உதவி இல்லை , பத்திரிக்கைகள் பெரிது படுத்தவில்லை , ஜெட்லீ ஒரு காரணமோ …இப்படி பல காரணம் யோசித்தேன் .

  ஒரு வேளை இப்படி இருக்கலாமோ என்று தோன்றுகிறது … மக்கள் மிகவும் மறதி உள்ளவர்கள் , நல்லவைகளோ அல்லது கெட்டதோ , கொஞ்ச நாளைக்கு தான் , 2019இல் தேர்தல் சமயத்தில் என்ன செய்தாலும் மக்கள் மனதில் நிற்பதில் கடினம் தான் …. எனவே ஒரு 2018 இல்லாட்டி 2019 தொடக்கத்தில் , எல்லாரையும் போட்டு ஒரு தாக்கு தாக்கி , உள்ள போட்டு பரபரப்பை உண்டு பண்ண …. தாமதம் செய்கிறார்களோ ?

  மோதி என்ன சொன்னாலும் மூளையை கசக்கி , 2019 இல் சில காய்களை நகர்த்துவார் , அதை யாரும் யோசிக்க முடியாது … 2019 இல் அநேகமாக 100% எலக்ட்ரிசிட்டி ஒரு விஷயமாக இருக்க்கலாம் , நிறைய சாலைகள் தயாராய் இருக்கலாம் …இதன் கூட இந்த கைது நடவடிக்கை இருக்கலாம் . அந்த சமயத்தில், இதை மோப்பம் பிடித்து , இதில் சில பேர் மல்லையா மாதிரி லண்டனோ அல்லது துபையோ ஓடலாம் … அது இன்னும் கூட வசதி …இருக்கற நிலுவையில் உள்ள கேஸையும் அவர்கள் பேருக்கே மாற்றலாம்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.