அரசியலுக்குள் வந்து விட்டார் திரு.ரஜினிகாந்த் – (…. முழு வீடியோ ) தனிக்கட்சியா, பாஜகவா…?


இன்னமும் நேரடியாகச் சொல்லா விட்டாலும், ரஜினியின் பேச்சு, அவர் முடிவெடுத்து விட்டதை தெளிவாகவே விளக்குகிறது…. “தலைவர் 164 ” (“ஹாஜி மஸ்தான்”) அவரது கடைசி படமாக இருக்கலாம்….

எந்த நேரம் வேண்டுமானாலும், தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வரலாம் என்கிற சூழ்நிலையில் –
ஷூட்டிங் வசதிகள் நீக்குப்போக்குடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே கூட, அவர் இதை சொந்தப்படமாக வைத்துக் கொண்டிருக்கக்கூடும்…!

இன்று காலை ரசிகர்கள் கூட்டத்தில் ரஜினி அவர்கள் பேசியதன் வீடியோ கீழே –

” எம்.எல்.ஏ., எம்.பி., மந்திரி – ஆக ஆசைப்படுவதில் எந்த தவறும் இல்லை… ஆனால் சம்பாதிப்பதற்காக அரசியலில் நுழைவதை நான் ஏற்க மாட்டேன்…”

” சம்பாதிக்க நினைப்பவர்களை கிட்டவே நெருங்க விடமாட்டேன். அத்தகையர்கள் ஏமாற்றத்தை தவிர்க்க இப்பவே ஒதுங்கி விடுங்கள்..”

“எந்த பொறுப்பை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன்… அதற்கு உண்மையாக இருப்பேன்., சத்தியமாக இருப்பேன் ”

-வருவாரா, மாட்டாரா என்கிற சந்தேகங்கள் எல்லாம் போய் – அவர் நேரடி அரசியலுக்கு வர தீர்மானித்து விட்டார் என்பதை இவையெல்லாம் காட்டுகின்றன…

– அடுத்ததாக எழும் ஒரு கேள்வி, அந்த மிக முக்கியமான கேள்வி தான் –

அவரது அரசியல் நுழைவு எந்த அளவிற்கு தமிழக மக்களால் வரவேற்கப்படும் என்பதை தீர்மானிப்பதாக இருக்கும்.

அவர் தனியே கட்சி துவங்கப்போகிறாரா…?

அல்லது

பாஜக வுடன் தனது ரசிகர் மன்றத்தை இணைக்கப்போகிறாரா…?

அவரது இருக்கைக்கு பின்னால் வைக்கப்பட்டிருக்கும் புதிய பேனர் – இரண்டு யூகங்களுக்கும் இடம் கொடுக்கிறது. (பாஜக சின்னத்திலிருந்து சற்றே வேறுபடும்) தாமரையும், அதனூடே “பாபா… முத்திரையும்” …!!!

இந்த வலைத்தள நண்பர்கள் இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்…?
இரண்டில் எது தமிழகத்திற்கு நல்லது….?

நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் – உங்கள் கருத்துகளை எழுதுங்களேன் பின்னூட்டத்தில்…

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to அரசியலுக்குள் வந்து விட்டார் திரு.ரஜினிகாந்த் – (…. முழு வீடியோ ) தனிக்கட்சியா, பாஜகவா…?

 1. Surya சொல்கிறார்:

  With this news, his future movie releases will be under trouble unless he joins BJP. Considering this, he will backout from getting into politics very soon.

  I dont think he can run a party without support from BJP.

  Someone who plays safe by not raising his voice for any issues, dont think he is a good fit for Politics.

 2. புதியவன் சொல்கிறார்:

  காமை சார். கேட்டுவிட்டீர்கள். எழுதிவிடுகிறேன். ஆனா நேரடியா விஷயத்துக்கு உடனே வரமாட்டேன்.

  1. ஜெ. அவர்கள் எதேச்சதிகாரமும் மக்கள் விரும்பாத ஆட்சியையும் நடத்தியபோது, அதை வெளிப்படையாக எதிர்த்தவர் ரஜினி அவர்கள். மக்கள், ஜெ. மோசம் என்றால் (91-96), திமுகவுக்கு, அதுவும் கருணானிதிக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்று சரியாகப் புரிந்துகொண்டு, ரஜினி, மூப்பனார் என்ற படைகளுடன் இறங்கியவர் கருணானிதி. அன்றைக்கு ரஜினி, தனிக்கட்சி ஆரம்பித்து, ஒரு ஆர்கனைசேஷன் என்ற அளவில் மூப்பனாருடன் களம் கண்டிருந்தால், ரஜினிதான் நம் முதலமைச்சர் ஆகியிருப்பார். இதில் யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

  மக்களுக்கு, அதிமுக (அல்லது அதுபோன்ற தமிழர் நலம் காக்கும், தமிழர்களின் வாழ்வுக்குக் குந்தகம் விளைவிக்காத, அராஜகம் செய்யாத கட்சி) தான், முதல் சாய்ஸ். எப்போதுமே திமுக மக்களின் சாய்ஸ் இல்லை. (வாக்கு சொல்லும் நிலவரம், பல கட்சிகளின் வாக்குகளைச் சேர்த்து அதிமுகவை திமுக வென்றிருக்கிறது என்பதைத்தான். திமுக ஆதரவாளர்களுக்கு எவ்வளவு கசந்தாலும் இதுதான் நிஜம்.

  2. ரஜினியின் செல்வாக்கு தங்களுடைய (வன்னியர்) வாக்கு வங்கியை மிகவும் பாதிக்கிறது என்பதை அறிந்த ராமதாஸ், தேவையில்லாமல் ரஜினியின் படத்துக்குத் தொல்லை கொடுத்தார். துரதிருஷ்டவசமாக பாமக திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தது. ஆனாலும் பாராளுமன்றத் தேர்தலில் ரஜினி பாமகவுக்கு எதிராக வாய்ஸ் கொடுத்தார். அது ஓரளவுதான் வேலைசெய்தது (காரணம் வன்னிய இனம் என்ற சாதி ஆதரவும், அந்த பெல்டில் திமுக வாக்குகளும் சேர்ந்து, வாக்கு வித்தியாசம் மிகவும் குறைந்தாலும் (அந்த 7 பாராளுமன்றத் தொகுதிகளில் மட்டும்) பாமகவை வெற்றிபெற வைத்தது (அப்போது பாமக, வன்னியர்களின் சாய்ஸாக இருந்தது, அதுவும் தவிர, பெரும்பான்மை திமுக ஆதரவு மனநிலை கொண்ட வன்னியர்களும் சேரவும், பாமக வெற்றிபெற்றது). இந்தத் தேர்தலில்தான், ரஜினி நினைத்த அளவு மக்கள் ஆதரவு இல்லை. இதற்குக் காரணம் பாமக ஆட்சியில் இல்லை. இரண்டாவது, தன் கோபத்தைத் திமுக மேலும் காட்டியிருந்தால், (கூட்டணி என்பதால்) இன்னும் அந்தக் கூட்டணிக்குச் சிக்கலாயிருக்கும்.

  3. ரஜினி, ஒவ்வொரு படம் வெளியாவதற்கு சில மாதங்கள் முன்பு, தான் அரசியலுக்கு வருவதாக படம் காண்பிப்பது வழக்கம். அதனால் மக்களின் நம்பிக்கை குறைந்துவிட்டது என்று நான் நம்புகிறேன். ரஜினியின் அரசியல் கருத்துக்களுக்கு உள்ள முக்கியத்துவமும் குறைந்துவிட்டது. மக்களுக்கு சரியான சாய்ஸாக ஜெ. தன்னை முழுவதுமாக மாற்றிக்கொண்டுவிட்டார் (2001க்குப் பிறகு)

  4. அதனால்தான், 2011ல், ரஜினி, ரெட்டை இலை சிக்னல் (வாக்குப்பதிவுக்குப் பின்) கொடுத்தபோதும் அது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏற்கனவே மக்கள் ஜெ.வை வெற்றிபெறச் செய்ய முடிவெடுத்துவிட்டார்கள். ரஜினி இப்படி ஓரளவு ஜெ.ஆதரவு எடுத்ததனால் நிறைய மக்களுக்கு ஜெ. மேல் இன்னும் நல்லெண்ணம் ஏற்பட்டிருக்கலாம்.

  5. ரஜினி, தீவிரமாகக் களம் இறங்கவேண்டிய காலங்கள் கடந்துவிட்டன. தற்போது ரஜினியின் உடல் நிலை (கடந்த பல வருடங்களாகவே) அவ்வளவு சரியில்லை. தீவிரமாக உழைப்பதற்குரிய உடல் நிலை அவருக்கு இருக்கும் என்று தோன்றவில்லை.

  6. தன்னுடைய சாஃப்ட் அணுகுமுறையால் (படம், தொழில் பாதிக்கும், வயதும் ஆகிவிட்டது என்ற காரணங்களால்), அன்புமணி சொன்னதைக்கூட (படங்களில் சிகரெட் பிடிக்கக்கூடாது) கேட்கும் நிலைமைக்கு அவர் வந்து பல வருடங்களாகின்றன. அதாவது சிங்கம் என்ற நிலையிலிருந்து வயதான, தலைவன் பதவியில் இல்லாத சிங்கம் நிலைமைக்கு அவர் எப்போவோ வந்துவிட்டார்.

  7. ரஜினிக்கு இப்போ வெறும் அலங்காரப் பதவிதான் சரிப்பட்டுவரும். ஒரு வேளை அவர் இன்னும் ஓரிரு வருடங்களுக்கு நிறைய கூட்டங்களில் பேச முடியும் என்று அவரது உடல் நிலை இருந்து, தைரியமாக பாஜக வை ஆதரித்துப் பேசினால், பாஜக வின் வாக்கு வங்கி அதிகரிக்கும் (தமிழகத்தில்). அவரது ரத்த சம்பந்தங்களுக்கு அரசியல் பாதுகாப்பு இருக்கும். அதைவிட்டு, தொலைக்காட்சி ஊடகங்களின் செய்தித் தொடர்பாளர் போல, ஓரிரு முறை வாய்ஸ் கொடுத்தால் (அதாவது ஒரு பதவியை பாஜகவிடமிருந்து பெற்றுக்கொண்டு), அதற்கு கடுகத்தனை மதிப்பும் இருக்காது.

  8. இதற்குப் பதிலாக, கொஞ்சம் செயல்படும் வயதைக் கொண்டிருக்கும் அஜித்தை பாஜக வளைத்து, ரஜினி, அவரின் வயதால் வாய்ஸ் மட்டும், ஒன்று இரண்டு அறிமுகக்கூட்டம் போன்றவற்றில் கலந்துகொள்ளுதல் போன்று செய்தால், பாஜகவின் வாக்குவங்கி தமிழகத்தில் மிகவும் அதிகரிக்கும். என்னுடைய பெர்சனல் சாய்ஸ் அஜித் நான், ஜெ. அவர்கள், அஜித்தைத் தனக்குப் பின்னான அதிமுகவிற்கு அழைத்துவருவார் என்று நான் நினைத்தேன் (விரும்பினேன்). அஜித் தன்னுடைய வெளிப்படையான கருத்துகள் மூலம் மக்களின் நன் மதிப்பைப் பெற்றிருக்கிறார் என்று நம்புகிறேன் (ஞாபகம் இருக்கா? கருணானிதி முதல்வராக இருந்து ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை தனக்குப் பாராட்டுக்கூட்டம் நடத்திக்கொண்டபோது, தன்னை கட்டாயமாக விழாவில் கலந்துகொள்ளச் சொல்கிறார்கள் என்று அவர் முன்னாலேயே மேடையில் தைரியமாகச் சொன்னவர் அஜீத். ஆனால் கருணானிதியின் கெடுமதியை, அதாவது அடுத்துக்கெடுப்பது, பழிவாங்குவது போன்றவை, தெரிந்த ரஜினி, மறு நாள், அஜீத்துடன் கோபாலபுரம் சென்று சமாதானப்படுத்தினார்.. நல்லெண்ணத்தில்தான், அதாவது அஜீத் பாதிப்படையக்கூடாதே என்று)

  குறிப்பு: நான் சினிமா ரசிகன் என்றெல்லாம் நினைக்கவேண்டாம். தமிழக அரசியலை ஊன்றிக் கவனிப்பதால் சொல்லுகிறேன். தமிழர்களுக்கு இப்போது ஒரு நல்ல ஃபிகர் (அரசியல் தலைவன், நல்லவன் என்று ஏற்றுக்கொள்ளும் ஒருவர்) தேவை. பொதுமக்கள் ஸ்டாலின் மேல் நம்பிக்கை கொண்டிருப்பார்கள் என்று எனக்கு நம்பிக்கையில்லை (உடனே 1% வித்தியாசம் என்றெல்லாம் வராதீர்கள். ஒவ்வொரு கட்சிக்கும் இருக்கும் ஆதரவைக் கூட்டி அதனால் வெற்றி பெறுவதெல்லாம், திமுகவின்மேல் உள்ள நம்பிக்கை என்று சொல்ல இயலுமா?)

  மற்றபடி சொந்தக் கட்சியை ஆரம்பிக்கும் வயதை ரஜினி அவர்கள் கடந்து 10 வருடங்களுக்கு மேலாகிறது.

  • Tamilian சொல்கிறார்:

   உங்கள் கூற்று உண்மையாக இருந்தாலும் , மக்கள் ஒரு மாற்றத்தை வேண்டுகிறார்கள் .ரஜினி வாய்ஸ் கொடுத்தால் அதற்கு கணிசமான ஆதரவு இப்போதும் இருக்கும் என்று நினைக்க தோன்றுகிறது. 1996ல முதல்வராகவும் வந்து இருக்க முடியும். திருமா 2011 தேர்தலுக்கு பின ஒரு பேட்டியில் , ரஜனி வாய்ஸ் அளித்ததால (சிக்னல்) ஒரு MLA தொகுதியில் 15000 ஓட்டுக்கள் அதிமுக பக்கம் சென்றிருக்கும் ஆகவே தனது கூட்டணி வாய்ப்பை பெரிய அளவில் இழந்தது என்றார்.

 3. சிவம் சொல்கிறார்:

  ரஜினி தனிப்பட்ட முறையில் மிக நல்ல மனிதர்… தன் தவறான பழக்கங்களைக்கூட ( மது, சிகரெட் ) வெளிப்படையாக ஒப்புக்கொண்டவர். SPமுத்துராமன் சொன்னது போல், காமிராவிற்கு முன்னால் மட்டுமே நடிப்பவர். எந்தவித பதவி ஆசையும் அவரை ஈர்க்க முடியாது.
  பாஜக எந்த அளவிற்கு பதவி கொடுத்தாலும், அதனால் அவர் அரசியலில்
  இறங்குவார் என்று சொல்ல முடியாது.
  இவ்வளவு நாட்களாக அவர் அரசியலுக்கு வராததற்கான பல காரணங்களில்
  முக்கியமானது ஜெயலலிதா, கலைஞர் ஆகியோரை எதிர்த்து அவர் தமிழகத்தில் அரசியலில் ஈடுபட விரும்பாதது தான்… அந்த தர்மசங்கடமான சூழ்நிலையை
  அவர் தவிர்க்கவே விரும்பினார்.
  துக்ளக் சோ, கடந்த 15-20 வருடங்களாக ரஜினியை அரசியலுக்கு
  வரும்படி வற்புறுத்தியும் – அவர் வராததற்கு இன்னொரு காரணம், தான் எவ்வளவு
  தான் நேர்மையாக நடந்து கொண்டாலும், தன்னைச்சுற்றி இருப்பவர்கள்
  ஊழலில் ஈடுபடுவதை தன்னால் தடுப்பது இயலாத விஷயம் என்றும் நினைத்தார்.
  அநாவசியமாக தன் பெயரைக் கெடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை
  என்றும் நினைத்தார்.

  ஆனால், தற்போது தமிழகத்தில் நிஜமாகவே ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது.
  அதிமுக வில் முழு யோக்கியர்கள் என்று சொல்லிக்கொள்ள யாருமே
  தென்படவில்லை. இருப்பவர்களுள் ஓபிஎஸ் கொஞ்சம் நம்பிக்கை தருகிறார்.
  ஆனால், அவரால் ஒரு பொது தேர்தலை சந்தித்து, கட்சியை ஆட்சிக்கு கொண்டு வர
  இயலாது. பாஜகவுடன் கூட்டு சேர்ந்தாலும் கூட இயலாத காரியம்.

  தமிழகத்திற்காக தான் எதாவது செய்தாக வேண்டிய சூழ்நில இப்போது
  உருவாகி இருக்கிறது என்கிற உணர்வு ரஜினிக்கு ஏற்பட்டிருக்கிறது.
  பாஜகவில் சேர்ந்தால் – பத்தோடு பதினொன்றாகி விடுவார். மைனாரிடி மக்களின்
  நம்பிக்கையை, ஓட்டுகளை பெறுவது கடினம். எனவே, தனிப்பட்ட கட்சியை
  துவக்கி, தேர்தலை சந்திப்பது ரஜினிக்கும் நல்லது; தமிழக மக்களுக்கும் நல்லது.
  வேண்டுமானால் ஓபிஎஸ் அணியை ரஜினி சேர்த்துக் கொள்ளலாம்.

 4. DeathBirthRaceR சொல்கிறார்:

  ஒரு ஆணையும் ஈன்றெடுக்க கடத்தி வைக்க அளந்தீந்தவன் இறைவன் என்பதை தன் வாழ்வின் அளவுகோலில் நடு நிசி தவத்திறமால் அன்று ஒரு ஆன்மீக தீவிர காலத்தில் உணர்ந்த கலைஞன் தான் இன்று(மா) என்றுமேவா என கலைஞன் முன் பின் அறிந்த தீவிர உள்ளத்துணிவு இன்றும் உள்ளவராயின் வந்தால் வணங்கும் நேரம் ஆன்மா என போக செய்யும் செயலே தீவிர சுதந்திர இளைய இந்தியத்திருநாட்டின் தூய பணி அவருக்கு வணக்கம் தெரிவிக்கும் ~ மொழி வித்தகர் பன்முகர் பல கலைஞர்கள் கடந்த அரசியல் தேவையா என சீரிய தூய சிந்தனை உள்ளகத்தால் இருப்பாராயின் கலை கடந்த அரசியல் சாசனம் புரிய முயற்ச்சிப்பார்…..
  உலக நாடுகளின் முன்னேற்ற பாதையை புத்தக அறிவால் தீட்டி தன் தேசமென என்றோ சிந்தித்த மூர்க்கத்துக்கு முன்கோபித்துவத்துக்கும் மேம்பட்ட தேசசிந்தனையாளர் கலைஞன் அளவீடற்ற சிந்தைனை கலைத்த தனிதிரு தேச சுத்த மனிதர் ரஜினி…..

  வாழ்த்த அளக்க உங்களுக்கு (கா.கை அவருக்கு) துணையிருக்கும் வரும் கால தலைமுறைக்கு எடுத்துகாட்டாகட்டும்…..

  மோடிக்கும் ரஜினிக்கும் சிறிதே ~ ஏனெனில் இருவரும் ஆன்மீக வழி தேடி சுழலும் தன்னிலைக்கும் புதிரே மக்கள் பணி சிந்திக்கும் தூய தலைவர்களே ஒருவர் ~ கலைஞர் ~ பன்முகர் ~ தேசநலன் சேர்ந்தவர் அனைத்திந்தியரும்…..

  • இளங்கோ சொல்கிறார்:

   அய்யா DeathBirthRaceR

   இது என்ன தமிழ் என்றே புரியவில்லை. உங்களுக்கு மட்டும் புரிந்தால் போதும் என்று நினைத்து விட்டீர்களா ? என் போன்ற கல்லாத கசடர்களுக்கும் புரிய வேண்டாமா ? கொஞ்சம் புரிகிறமாதிரி எழுதுங்களேன் தயவு பண்ணி.

 5. Sanmath AK சொல்கிறார்:

  KM Sir,

  What I understand or foresee is, present TN govt. will be toppled. After a small time period of Gvnr’s rule, election may be conducted, which may cause DMK rising to power. Like what is happening to Kejriwal(he and party is being raped), BJP will work hard to make DMK appear inefficient/corrupt. Brahminian media or Brahminism influenced media will help this(like maintaining silence now towards BJP’s deeds). So BJP will try to show to people that ADMK is not there, DMK is not fit enough. Here comes the place where we have to discuss about Rajini. Either BJP might support him from behind to fill the vacant space or they both may join hands saying “to eliminate corruption”. He may dilute the party to BJP later.

  What I mentioned above might work for Rajini as a politician and also gain some political mileage. As a person, I do not have any positive hopes on Rajini as a political leader.

  Thanks.

 6. Sundar Raman சொல்கிறார்:

  மோடி எதிர்ப்பு பரவாயில்லை , அதற்காக மோடியின் எதிரி நமக்கு நண்பனா ? ( In delhi kejriwal and his party is raped ) .

  தமிழ்நாட்டில் திடீர் தேர்தல் வந்து , அதில் DMK வர நிறைய வாய்ப்பிருக்கு , ஆனால் அவர்கள் வந்தாலும் , DMK விட்டு சென்ற ஊழல் தடயங்கள் நிறைய , 2019க்கு முன், பொது தேர்தலுக்கு முன் , மாறன், கனி மொழி , பாலு , இப்படி நிறைய பேரை உள்ளே தள்ளி , கட்சியை ஒரு வழி பண்ணி , 2019இல் மறுபடியும் தேர்தலை எதிர் கொள்வார்கள் என நினைக்கிறேன் .அதற்கான முன்னோட்டமே இந்த அ தி மு க அமைச்சர்கள் கைது , ரைடு என தோன்றுகிறது . அந்த ( 2019) சமயத்தில் ஜக்கி , ஸ்ரீ ஸ்ரீ , அமிர்தானந்தமயி போன்றோர் கை கொடுக்கலாம் ,அவர்கள் கூட ரஜனி வர வாய்ப்புண்டு , dmk வழக்கம் போல் கடவுள் எதிர்ப்பு அல்லது இந்து எதிர்ப்பு என்ற குழியில் விழ வாய்ப்புண்டு …வீரமணி, அவர்களை தள்ளி தானும் அக்குழியில் விழலாம் . இந்தியை கையில் எடுத்தாச்சு , அடுத்தது ப்ராமண எதிர்ப்பு தான் . பாவம் சுடாலின் .

  • தமிழன் சொல்கிறார்:

   ஸ்டாலின் அவர்கள் ‘பிராமண எதிர்ப்பை’க் கையில் எடுக்கமாட்டார். பாஜகவின் பெரும்பாலான தமிழக தலைவர்கள் பிராமணர்கள் அல்லர். அவர்களது, அதாவது பாஜக் வாக்குவங்கி நாடார்கள் மற்றும் இந்து எண்ணம் கொண்டவர்கள். ஸ்டாலின், கருணானிதியைப் போல, சிறுபான்மையினர் என்று அதிகமாகப் பேசமாட்டார் என்றே நினைக்கிறேன். அப்படிப் பேசினால், இந்து வாக்குகள் நிச்சயமாக பாஜக பக்கம் வரும்.

   அதிமுகவை பாஜக dominate செய்வது ரசிக்கும்படி இல்லை. அவர்கள் அந்தக் கட்சிக்கு எந்தக் கெடுதலைச் செய்தாலும், என் மனதில் ஜெ.க்கு துரோகம் செய்தவர்கள் என்றே தோன்றுகிறது.

  • Sanmath AK சொல்கிறார்:

   Dear Mr.Raman,

   //தமிழ்நாட்டில் திடீர் தேர்தல் வந்து , அதில் DMK வர நிறைய வாய்ப்பிருக்கு , ஆனால் அவர்கள் வந்தாலும் , DMK விட்டு சென்ற ஊழல் தடயங்கள் நிறைய , 2019க்கு முன், பொது தேர்தலுக்கு முன் , மாறன், கனி மொழி , பாலு , இப்படி நிறைய பேரை உள்ளே தள்ளி , கட்சியை ஒரு வழி பண்ணி , 2019இல் மறுபடியும் தேர்தலை எதிர் கொள்வார்கள் என நினைக்கிறேன் //… I think I meant the same. But having two assembly elections between 2017 and 2019 may not be a possibility. Or else they may allow present ADMK govt to continue this rule to bring in an assembly election along with Lok Sabha election in 2019.

   Dont you think that Kejriwal is not being allowed to work ? Pointing to that does not mean a favourism towards Kejriwal nor his party.

   //dmk வழக்கம் போல் கடவுள் எதிர்ப்பு அல்லது இந்து எதிர்ப்பு என்ற குழியில் விழ வாய்ப்புண்டு …வீரமணி, அவர்களை தள்ளி தானும் அக்குழியில் விழலாம் . இந்தியை கையில் எடுத்தாச்சு , அடுத்தது ப்ராமண எதிர்ப்பு தான் . பாவம் சுடாலின்//….. Hope he will not do that for two reasons – 1. Lessons learnt from the past 2.Feared enough.

   Thanks.

 7. Sundar Raman சொல்கிறார்:

  நீங்கள் சொல்வது சரி … நாம் இருவரும் ஒன்றைத்தான் சொல்கிறோம் . கெஜ்ரிவாலின் கூட இருந்தவர்களே தான் இப்போது வெளியே … யோகேந்திர யாதவ் , பூஷன் இதில் ப ஜ காவின் பங்கு ஏதும் இல்லை …இப்போது நடப்பதில் ஏதேனும் இருக்கலாம் . அது ஒரு ஊழல் கும்பல் , ஊடகங்களின் ஏற்பாடு , போர்ட் பௌண்டேஷன் போன்ற சிலரின் கைங்கர்யம் …என்று விரிகிறது .நிச்சயமாக எதோ இடிக்கறது .

 8. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நாம் பகலில் தொடங்கியதை இன்று மாலை/இரவு, அனைத்து தொலைகாட்சிகளும், (ஆங்கிலம் உட்பட) விவாதித்துக் கொண்டிருக்கின்றன. எனவே, இந்த செய்தி, ஏதோ ஒரு காரணத்திற்காக அகில இந்திய அளவில் ஒரு பரபரப்பை உண்டு பண்ணி இருப்பது தெரிகிறது.

  அந்த ஏதோ ஒரு காரணம் – ரஜினி பாஜகவில் சேருவாரா இல்லையா என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் தான் என்று நினைக்கிறேன்.

  எனக்கு தோன்றுவது –

  – ரஜினி பாஜகவில் சேரும் வாய்ப்பு குறைவு என்று நினைக்கிறேன். இதை ஆமோதிப்பது போல் இருக்கிறது – தமிழக பாஜக விலிருந்து வரும் response….!

  ரஜினி பாஜகவில் சேருவதாக இருந்தால், பாஜக தரப்பிலிருந்து வரவேற்பு மிக பலமாக இருந்திருக்கும்… ஆனால், இன்று திருமதி தமிழிசை மட்டுமே re-act செய்திருக்கிறார்… அதுவும் அசடு வழிய…!!!

  – ரஜினி தனிக்கட்சி துவங்கி அரசியலில் இறங்குகிறார் என்றால் –

  தமிழக அரசியலில் இப்போது இருக்கும் அத்தனை “தலை”களையும் நாம் அனுபவித்து பார்த்து விட்டோம். ஊழலில் யாரும் ஒருவருக்கொருவர் சளைத்தவராகத் தெரியவில்லை… யாரும் நம்பிக்கை ஏற்படுத்தவும் இல்லை.

  ரஜினி பணம் சம்பாதிப்பதற்காகவோ, புகழுக்கோ / பதவிக்கோ ஆசைப்பட்டு அரசியலில் இறங்குவார் என்று எனக்கு தோன்றவில்லை.

  எனவே, ஊழலில் ஈடுபட மாட்டார் என்கிற ஒரு காரணத்திற்காகவே ரஜினியை வரவேற்கலாம் என்று தோன்றுகிறது.
  (எவ்வளவோ பேரிடம் நம்பிக்கை வைத்து “அனுபவித்து” விட்டோம்… இவரையும் try பண்ணுவதில்
  பெரிய risk எதுவும் இல்லை என்றும் தோன்றுகிறது….!!! )

  நண்பர் தமிழன், அவரது உடல்நிலையை பற்றி குறிப்பிட்டிருந்தார். அந்த சந்தேகம் எனக்கும் உண்டு… ஆனால், இது குறித்து ரஜினிக்கே நம்பிக்கை இருந்தாலொழிய அவர் முன்வர மாட்டார் என்றும் தோன்றுகிறது.

  பொருளாதார நிபுணர்கள், அரசியல் சார்பில்லாத சமூக ஈடுபாட்டாளர்கள், கல்வி நிபுணர்கள், சமுதாயத்தின் நம்பிக்கையை பெற்ற அரசியல் கலவாத சில பெரிய மனிதர்கள் ஆகியோர் கொண்ட ஒரு குழுவை
  அமைத்து, அவர்களின் ஆலோசனையுடன் / உதவியுடன் – ஆட்சி நடத்த முற்பட்டால், ரஜினியால் நல்ல முறையில் நிர்வாகம் செய்ய முடியும் என்று நம்புகிறேன்.

  ஆனால் – தமிழகத்தின் அரசியல் சூழல் எப்படி மாறுகிறது என்று
  பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்….!

  விசேஷ குறிப்பு –

  ஒன்றை விசேஷமாக குறிப்பிடத்தோன்றுகிறது.
  பேரறிஞ்சர் சுப்பிரமணிய சுவாமி எதிர்க்கிறார் என்பதாலேயே, ரஜினி அவசியம்
  அரசியலுக்கு வரவேண்டும் என்றும் சொல்லத் தோன்றுகிறது… 🙂 🙂 🙂

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 9. Balavish சொல்கிறார்:

  As a Tamilian in USA, I think Tamil Nadu needs popular LEADER to uplift the image, progress and Prosperity. I think Rajinikanth can fill the vacuum. I am not a great fan of BJP but the state is deteriorating in a logarithmic scale everyday.
  What are the alternatives available? I say give him a shot and he can’t be worse than the present government.
  TN is going to face the middle class disaster due to IT developments soon..
  Lack of Rains has killed the agriculture.
  We have to choose between the devil and Deepsea.

 10. இன்றில்லாவிட்டாலும் சொல்கிறார்:

  எனக்கு என்னவோ ரஜினியை அவ்வளவு சுலபத்தில் அரசியலில் நுழைவார் என்று தோணவில்லை. ஏனென்றால் அவருக்கு இந்த ஸ்டேட் அட்மினிஸ்டரேஷன் செய்ய திறமை கண்டிப்பாக மிக மிக குறைவாக தான் இருக்கும். அதை நோக்கி அவர் ஒரு செய்முறை செய்ய ஆயத்தமானதாக எங்கும் புரளியோ கேள்விப்பதோ இல்லை. அப்படி இருக்கையில் பிஜேபியோ அல்லது வேறு கட்சியுடனோ சேராமல் அவரால் எந்த பொறுப்பையும் வகிக்க முடியாது அல்லது பொறுப்பையும் ஏற்க முடியாது. நேற்று அவர் சொன்ன அதே கருத்து தான். முரட்டு தைரியம் கிடையாது. ஆக அவர் கட்சி தொடங்கினால் கூட கட்சிக்கு தலைமை தாங்கலாம் ஆனால் நாட்டை தனிக்கட்சியாக ஆள ஆளுமை கண்டிப்பாக இருக்காது என்றே தோணுகிறது.
  பி.கு.: கண்டிப்பாக ஊழலற்ற மனிதராக வெற்றி பெறும் நல்ல தலைவர் என்ற பெயர் எடுக்க எல்லா தகுதியும் அவருக்கு உண்டு.

 11. R.Palanikumar (@RPK1960) சொல்கிறார்:

  சாம,பேத,தான,தண்டம்…ரஜினி மகள் காலை அகட்டி ஆடிய நடனத்தை ஐ. நா. சபையில் அனைவரும் கண்டு களிக்க முடிந்தது…சரத் குமார் வீட்டில் ரெய்டு நடந்தது…முடிந்த அளவு சினிமாவில் சம்பாதிப்பது, முடியாத நிலை வரும்போது அரசியலில் சம்பாதிக்க ஆரம்பிப்பது என்று இருந்த ரஜினியின் திட்டம்…பா.ஜ.கா.வுக்கு இப்போது வாக்கு சேகரிக்க (கறிவேப்பிலை போல்)தேவைப்படும் ஒரு பிரபல முகம் , இவை எல்லாம் பார்க்கும் போது பா.ஜ.க. திட்டப் படி ரஜினி ஒரு தனிக் கட்சி தொடங்குவார்,கட்சிக்கான செலவை பா.ஜ.க. வே பார்த்துக் கொள்ளும்..தேர்தலுக்கு பின் ரஜினி ஒதுங்கி கொள்வார், அல்லது ஒதுக்கப் படுவார் என்றே என்னால் யூகிக்க முடிகிறது..

  • புதியவன் சொல்கிறார்:

   ரஜினி என்ன ஒன்றும் தெரியாதவரா? அவர், ‘தவறிழைக்கக் கூடாது, கெட்ட பெயரை வாங்கக்கூடாது’ என்பதற்காகத்தான் ஆரம்பத்திலிருந்து தயங்குகிறார். பாஜக மேல் அவருக்கு நல்லெண்ணம் இருக்கலாம். அதற்காக, அவர்களின் பினாமியாகச் செயல்படுவார் என்ற எண்ணமே சரியானதாக இல்லை. ரஜினியைப் பற்றி ஒன்றும் படிக்காதவர் கருத்துபோல் உள்ளது.

   சரத்குமார் வீட்டில் ரெய்டு – இதன் காரணம் பச்சைப் பிள்ளைக்குக் கூடத் தெரிந்திருக்கும். தினகரனிடம் காசு வாங்கிக்கொண்டு ஆதரவளித்தார். நாஞ்சில் சம்பத் போல.

   திமுகவின் கருவேப்பிலை கருணானிதியா? விடுதலைச் சிறுத்தைகளின் கருவேப்பிலை திருமாவளவன், பாமகவின் கருவேப்பிலை ராமதாஸ் என்று அடித்துவிடுகிறீர்கள்.

 12. இளங்கோ சொல்கிறார்:

  R.Palanikumar (@RPK1960),

  உங்கள் யூகம் நாசமாக போகக்கடவது.

  • Tamilian சொல்கிறார்:

   ரஜனி வந்தால் , அது அவரின் சுய முடிவாக , சுய பலத்தில்தான இருக்கும். நல்ல ஆலோசகர்கள் , அதிகாரிகள் துணையுடன் பொதுநல நோக்கு கொண்ட ரஜனியால நல்லாடசியை ஏன் வழங்க முடியாது?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.