இரண்டு சிபிஐ ரெய்டு’களும் – ஒரு குற்றச்சாட்டும்…!!!


நேற்றைய தினம் ரெய்டுகள் தினம்…

மத்திய நிதியமைச்சர் திரு.அருண் ஜெட்லி இதை ” day of reckoning ” என்று வர்ணித்திருக்கிறார். ( Oxford meaning – the time when past mistakes or misdeeds must be punished or paid for… )

ஒருவர் முன்னாள் பீஹார் முதல்வர்/முன்னாள் மத்திய ரெயில்வே அமைச்சர் – சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு லஞ்சம் அல்லது தகாத வழியில் பணம்/சொத்து பண்ணி இருப்பதாகப் புகார்….

இன்னொருவர் முன்னாள் நிதியமைச்சரின் மகன் – தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி, தவறான வழியில் பணம் பண்ணி இருப்பதாக புகார் …

நம்மை போன்ற வெளிநபர்களுக்கு இது குறித்து ஏற்கெனவே தெரிந்தது என்ன…?

முதலாவது நபர் – ஊரறிந்த கொள்ளைக்காரர் … மாட்டுத்தீவனத்தில் கூட கொள்ளையடித்து சிறைத்தண்டனை பெற்றவர்…
இவரது விசேஷ குணாதிசயம் – வெட்கங்கெட்டவர்…எவ்வளவு அவமானம் வந்தாலும் துடைத்து விட்டுப் போய்க்கொண்டே இருப்பவர்..

இரண்டாமவர் – முதல்வரைப் போல அல்ல… உணர்வு பூர்வமானவர்… ஆனால், இவரைக் குறித்த நிறைய புகார்கள் நீண்டகாலமாக விசாரணையில் இருந்து வந்தன…

ஆனால், இந்த ரெய்டுக்கு எதிராக இரண்டு தரப்புமே ஒரே வாதத்தை முன்வைக்கின்றன.

“பாஜக அரசு எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கிறது… பயமுறுத்த முயற்சிக்கிறது. அரசை எதிர்த்து குரல் கொடுப்பதால் – அடக்க நினைக்கிறது ….விசாரணை ஏஜென்சிக்களை தவறாக பயன்படுத்துகிறது….”

குறைந்த பட்சம் இந்த இரண்டு விவகாரங்களிலும் பொது மக்கள் அப்படி நினைக்கவில்லை….

இரண்டிலுமே ” நடவடிக்கை எடுக்க ஏன் இவ்வளவு தாமதம் …? ” என்பது தான் பொதுமக்களின் கேள்வியாக இருந்தது…!!!

நடவடிக்கைக்கு உள்ளானவர்களின் கேள்விகளின் பின்னணியில் பழைய அனுபவங்கள் இருக்கின்றன… சாதாரணமாக சிபிஐ, வருமான வரி, அமலாக்கத்துறை ஆகியவை ரெய்டுகள் நிகழ்த்தும்போது, பரபரப்பை கிளப்பினாலும் –

அதன் பின் அந்த விவகாரங்கள் ” கிணற்றில் போட்ட கல்”லாகி விடுகின்றன. அநேக ரெய்டுகளின் பின்னால், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதாக தெரிவதில்லை.

எனவே, குறைந்த பட்சம் இப்போதாவது இவர்கள் எழுப்பும் பழிவாங்கல் குறித்த புகார்களையாவது, கண்டுகொள்ளாமல் போவதை விடுத்து –

என்ன காரணத்திற்காக, எதை எதிர்பார்த்து ரெய்டுகள் நிகழ்த்தப்பட்டன… அதன் விளைவாக என்ன ஆவணங்கள், ஆதாரங்கள் கிடைத்தன, கைப்பற்றப்பட்டன -என்று மத்திய அரசு / சம்பந்தப்பட்ட இலாகாக்கள் –

– விளக்கமாக ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டால், அரசின் பக்கம் உள்ள நியாயம் பொதுமக்களுக்கு விளங்கும், இத்தகைய நடவடிக்கைகளின் பின்னாலுள்ள விவகாரங்கள் பொதுவெளிக்கு வரும் ; சம்பந்தப்பட்டவர்கள் ” பழி வாங்கப்படும் பலியாடுகள் /அப்பாவிகள் (victim ) ” என்கிற வேடம் கலைக்கப்படும்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

21 Responses to இரண்டு சிபிஐ ரெய்டு’களும் – ஒரு குற்றச்சாட்டும்…!!!

 1. Ganpat சொல்கிறார்:

  ரொம்ப அப்பாவி சார் நீங்க!! (நானும்தான் ;நாம் எல்லாரும்தான்!) 🙂 🙂 🙂

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கண்பத்,

   ஒருவர் முகத்தை மட்டும் பார்த்து இதைச்சொல்ல முடியும் என்றால் – இன்றைய தினத்திற்கு அப்பாவி கா.சி.யும் ப.சியும் தான்…!

   சரி தானே… 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. paamaranselvarajan சொல்கிறார்:

  ஊழல்.. அரசியல்வாதகள்… 2ஜி.. ஏசெல் மேக்ஸிஸ்…கே.டி.பிரதரஸ்..ரெய்டுகள்.. என்று நடந்துக் காெண்டுதான் இருக்கிறது.. பல ஆண்டுகளாக .. தாங்களும் பதிவுளை பாேட்டுக் காெண்டுதான் இருக்கறீர்கள் ..வாசன் ஐகேர் மூடப்பட்டது .. அதன் பிறகு நடப்பது என்ன எனறு மூடியவர்களுக்காவதுதெரியுமா..?

  இதெல்லாம் சுதந்தர இந்தியாவில் சகஜமான ஒன்று என்று அனைவருக்கம் மருத்து பாேன விஷயமான உணர்ச்சியாகி விட்டது என்பதுதான் நிதர்சனம்…?

  இந்த ” இல்லுமினாட்டி ” என்பதை பற்றி எழுதுங்களேன் …!!!

  • தமிழன் சொல்கிறார்:

   அன்புள்ள பாமரன் செல்வராஜ்,

   கா.மை. சாருக்குப் பதில் நான் எழுதுவது தவறு. இருந்தாலும், ‘இல்லுமினாட்டி’ என்பது இந்தியாவுக்குச் சம்பந்தமில்லாதது. அதற்கும், கிறிஸ்துவத்தைப் பரப்புபவர்களுக்கும் சம்பந்தமில்லை.

   இது ஆதிகால கிறிஸ்துவர்கள் (அப்போது கிறித்துவம் மதம் சார்ந்த ஒன்றாக ஆகிப்போனது. அதாவது கிறித்துவ மதம் என்ற பெயரில் அரசர்கள் தங்கள் அதிகாரத்தை ஸ்திரமாக்கினர், பல்வேறு சிறு சிறு அரசுக்களை ஒன்றிணைத்தனர்) கிறிஸ்துவின் கொள்கையிலிருந்து விலகுவதாக எண்ணி, அதனை வைத்து அறிவியல், கணிதம் போன்றவற்றில் ஆராய்ச்சி செய்பவர்களை ஒடுக்குவதாகவும் (எல்லாவற்றையும் கிறிஸ்துவின் கொள்கைகளுக்கு எதிரானது என்று தலைமைப் பீடம் சொல்லி முடக்கிவிடும்) எண்ணியதால், அவர்கள் ஒரு குழுவாக, மறைவான குழுவாக இயங்கினார்கள். அவர்கள் அவர்களுக்கென்றே மத வழக்கங்களையும் உண்டாக்கிக்கொண்டார்கள். அதைப் படிப்பதற்குக் கொஞ்சம் அருவருப்பாகத்தான் இருக்கும். உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன், கலிலியோ போன்ற பெரிய பெரிய விஞ்ஞானிகளும் இதில் இருந்தார்கள். (பூமி சூரியனைச் சுற்றுகிறது என்பதை கிறிஸ்துவ தலைமை பீடம் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்தக் கண்டுபிடிப்பை கிறித்துவத்துக்கு எதிரானது என்று கிறிஸ்துவ தலைமைப் பீடம் சொல்லியது)

   அமெரிக்காவில், ஆரம்பகாலத் தலைவர்கள் பலரும் இல்லுமினாட்டியைச் சேர்ந்தவர்கள். இதைப்பற்றி பெரிய இடுகையே எழுதலாம்.

   ஆமாம், நீங்கள் இல்லுமினாட்டி பற்றி என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள். ஏன் அதைனை எழுதச்சொன்னீர்கள் கா.மை. சாரை?

   • Sanmath AK சொல்கிறார்:

    day of reckoning = order of the day –> one of the general statutes of illuminati…. And so PamaranSelvaraj has roped in the “word” illuminati here, asking for a correlation – I guess…..

   • paamaranselvarajan சொல்கிறார்:

    காமை சாரை எழுத சாெல்லி கேட்டது தவறுதான் … இனி அவரிடம் இது பாேன்று கேட்க மாட்டேன் … நான்தெரிந்துக் காெள்ளவேண்டிதை வேறு பல தளங்களிலும் .. அல்லது உங்களை பாேன்ற அனைத்தும் அறிந்தவர்கள் மூலமும்தெரிந்து காெள்கிறேன் … நன்றி …!!!

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     செல்வராஜன்,

     நீங்கள் காவிரிமைந்தனை எழுதச்சொல்லி கேட்டதும் தவறில்லை…

     நண்பர் தமிழன் அது குறித்து விளக்கியதும் தவறில்லை…
     நீங்கள் ஏன் இதைப்பற்றி இங்கே எழுப்பினீர்கள் என்று அவர் வினவியதிலும் தவறில்லை.

     இந்த தளத்தில் யார் வேண்டுமானாலும், கருத்தும் சொல்லலாம் –
     விளக்கங்களும், எனக்கு பதிலாக – தாராளமாக கொடுக்கலாம்.

     எல்லா நடவடிக்கைகளும் எனக்கு ஒவ்வொரு விதத்தில் துணையாக
     இருப்பதாகவே நான் எப்போதும் எடுத்துக் கொள்கிறேன்.

     எங்கேயாவது, மாற்று விளக்கமோ, என் கருத்தை சொல்ல வேண்டிய அவசியமோ ஏற்படுமானால், அதையும் நான் தயங்காமல் சொல்லி விடுவேன்.

     செல்வராஜன் – மீண்டும் இந்த இடத்தில் சொல்ல விரும்புகிறேன்.
     மற்ற வலைத்தளங்களிலிருந்து விமரிசனம் மாறுபட்டு இருப்பது
     இதில் தான். இங்கு எல்லாருக்கும் பங்களிப்பு இருக்கிறது…
     உங்களையும் சேர்த்து… !!! தொடருங்கள்….

     ….

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   எனக்கு இதில் சுத்தமாக நம்பிக்கை இல்லை…

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • paamaranselvarajan சொல்கிறார்:

    அய்யா…..!தெரியாத்தனமாக கேட்டு விட்டேன் … இனி எதைப் பற்றியும் உங்களிடம் கேட்க மாட்டேன் …. ஏனென்றால் ” தமிழன் ” பாேன்றாேர் உங்களுக்காக மறு மாெழி கூற இருக்கும் பாேது …. அரைக்குறை அறிவுள்ளவனின் அசட்டுத்தனமான பதிவுதானே … என்னுடையது … தவறாக கேட்டதற்கு மன்னியுஙகள் …!!!

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     செல்வராஜன்,

     உங்களுக்கு தெரியாததால் நீங்கள் “அந்த” கேள்வியை கேட்கவில்லை –
     தெரிந்தே தான், வேறு காரணங்களுக்காக அதைக் கேட்டீர்கள்
     என்பதை நான் உணர்வேன்….
     இதில் மன்னிப்புக்கு எங்கே அவசியம்…? 🙂 🙂

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

 3. Kalai சொல்கிறார்:

  Day of reckoning is reserved for Arun Jetliji too!

 4. Sundar Raman சொல்கிறார்:

  இந்த ரைடும் பூர்ணமாக தெரியவில்லை , செய்திகள் மூலம் – FIR பதிவு செய்தது ஒரு சாதாரண குற்றத்துக்கு தான் என்பது போல தான் தெரிகிறது , காலப்போக்கில் நீர்த்து போகும் . இதை பற்றி விவாதிக்கும் பொழுது ஒரு டிவியில் , மாறன் மீதும் இப்படி தான் வழக்கு போட்டார்கள் , இப்போது அவர் நிரபராதி என்று அந்த டிவியில் சொன்னார்கள் ( IBN )…நிறைய சத்தம் தான் ( டிவியில் , பத்திரிக்கையில்) …விஷயம் ஒன்றும் இல்லை , எல்லாம் காற்று தான் …போக போகதான் தெரியும் . குருமூர்த்தி தான் பாவம் , என்னவெல்லாமோ எழுதினார் , ட்விட்டினார் …அடுத்த டார்கெட் குலாம் நபி ஆஸாத் ….இது என் அனுமானம்.

  இன்னமும் நான் நம்புவது … இந்த ஊழல் செய்தவர்கள் எல்லாருமே அடக்கி வாசிக்கவில்லை , நிர்வாண நடனம் ஆடினார்கள் , அவர்களிடம் இருக்கின்ற தடயங்கள் ஏராளம் ( உதாரணம் சசிகலா , தினகரன் ) … எப்பொழுது வேண்டுமானலும் வழக்கு தொடங்கலாம் ( நீதிமன்றம் – அது ஒரு பெரிய ப்ளாக் ஹோல் ) …தேர்தல் சமயத்தில் , இன்னும் கிளறுவார்கள் என நினைக்கிறேன் .

  சரியான நடவடிக்கை இல்லை என்றால் , மக்கள் மன்னிக்க மாட்டார்கள்

 5. புதியவன் சொல்கிறார்:

  காவிரி மைந்தன் சார்….

  நம்ம அரசியல்வாதிகளில் யார் மேல் ஊழல் மற்றும் கொள்ளையடிப்பது போன்ற குற்றச்சாட்டுகள் வைத்தாலும், பொதுமக்கள் அதைக் கொஞ்சம்கூட சந்தேகப்படமாட்டார்கள். சந்தேகப்பட்டால், அவர்கள் இந்தியாவில் வாழ்ந்ததில்லை என்றுதான் அர்த்தம்.

  குற்றச்சாட்டு என்னவென்றால், இஷ்டம்போல, தனக்குத் தேவைனா உடனே ரெய்டு, அதிரடி வளைப்பு, சிபிஐ வழக்குப் பதிவு, காவலில் எடுத்து புலன் விசாரணை – இது எதுவுமே ஆரம்பிக்கும் சூரத்தனம் அதற்கப்புறம் முழுமையாக இல்லை. ஆடிக்கு ஒருதடவை, அமாவாசைக்கு ஒரு தடவைன்னு இல்லாமல், லீப் வருடத்துக்கு ஒரு தடவை, ஏழு கோள்களும் ஒரே வரிசையில் நிற்கும்போது ஒரு தடவை என்று நடவடிக்கை எடுப்பதால்தான், (1) இவர்கள் வேண்டுமென்றே அரசியல் காரணங்களுக்காகவும், மிரட்டவும், சில அனுகூலங்களைப் பெறவும் செய்கிறார்கள் என்றும் (2) நமது சிபிஐ எந்தக் குற்றச்சாட்டையும் நிரூபிக்கும் திறமை இல்லாதவர்கள் என்றும் (3) கைதுகளிலோ, குற்றம் சாட்டுவதிலோ ஒரு லாஜிக்கும் இல்லாதவர்கள் என்றும் எல்லோரும் நினைக்கிறார்கள். (இப்படி நினைக்காதவர்கள், மறதி மன்னர்களாக இருக்கவேண்டும் அல்லது இந்திய அரசியலையோ நிகழ்வுகளையோ படிக்காதவர்களாக இருக்கவேண்டும்).

  என்னை எரிச்சல்படுத்தும் இரண்டு நிகழ்வு.
  1. மாட்டுத்தீவன ஊழல், லாலுவைக் குற்றம் சாட்டி, அவர் தன் மனைவியை டம்மியாக முதல்வராக்கி, அப்புறமும் அரசியலில் கோலோச்சி, மத்திய அமைச்சராகி, தற்போது மகனைத் தன் இடத்துக்குக் கொண்டுவரும் வரையிலும் இன்னும் எந்த வித முன்னேற்றமும் இல்லை.
  2. கலைஞர் தொலைக்காட்சி 200 கோடி லஞ்சம் வாங்கியது வெள்ளிடைமலையெனத் தெரியும்போது, 60% உரிமையாளரான தயாளு அம்மையாரை விட்டுவிட்டு, 20% உரிமையாளரான கனிமொழியைச் சிறையில் அடைத்தது எந்தவித நியாயம்?

  ஏற்கனவே ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள், சிறையடைப்புகள் நிகழ்ந்துள்ளன. என்ன முன்னேற்றம் கண்டுள்ளார்கள் இந்த அதிகார வர்க்கம் (போலீஸ், சிபிசிஐடி, சிபிஐ). என்னைக்கேட்டால், குற்றம் 2 ஆண்டுகளுக்குள் நிரூபிக்கப்படாவிட்டால், சிபிஐ குழு (யார் யார் ஈடுபட்டார்களோ அவர்கள் எல்லோரும்) பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்படவேண்டும். அவர்களுக்கு பென்ஷன் போன்ற எந்தச் சலுகைகளும் கொடுக்கக்கூடாது (குறிப்பாக கவர்னராக ஆக்கிவிடக்கூடாது). நம்ம ஊரில், கிரானைட் கொள்ளை, தாதுமணல் கொள்ளை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் 2 மாஃபியா தலைவர்களைச் சிறையிலடைத்தார்கள். பத்திரிகைகளும் தமிழ்’நாட்டையே இரண்டுபேரும் கொள்ளையடித்ததுபோல் எழுதினார்கள். அப்புறம் பலப் பல வருடங்கள் கடந்துவிட்டன. என்ன நடந்தது?

  இது அரசியல் பழிவாங்கல் என்று யார் சொன்னாலும் (காங்கிரசைச் சேர்ந்தவர்கள்) அவர்கள் தேசத்துரோகக் குற்றச்சாட்டுக்காக வாழ்’நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்படவேண்டும். ஏனென்றால் இது மக்கள் நம்பிக்கைக்கு எதிரானதாகவும், அவ’நம்பிக்கை விளைவிப்பதாகவும், தாங்கள் ஆட்சியில் இருந்தபோது நடந்த எல்லா சி.பி.ஐ, சிபிசிஐடி குற்றச்சாட்டுகளையும் காங்கிரஸ் தான் செய்தது என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதாகும்.

 6. Sanmath AK சொல்கிறார்:

  As of now, the only guy who logically criticizes the central govt, in a way understandable by layman, is PC… Lalu is trying to forge a secular alliance against BJP, doing behind the stage works…

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சன்மத்,

   திரு.ப.சி.அவர்கள் மிகவும் புத்திசாலி, கெட்டிக்காரர், நன்றாக பேசுவார், நன்றாக எழுதுவார் – நன்றாக விவாதம் செய்வார் -இதில் எந்தவித சந்தேகமும் இல்லை….

   திரு.லாலு அவர்கள் ஒரு பொறுக்கி., மட்டமான ஆசாமி, மானம்,ரோசம் எதுவும் இல்லாத 100 % சுயநலவாதி.. ஆனால் – அவர் பின்னாலும் ஒரு கூட்டம் இருக்கிறது.

   பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக இத்தகையோரை ஆதரிக்க முடியுமா…?

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 7. payroll inmac சொல்கிறார்:

  this is related to the upcoming presidential elections. Nothing more than that.

 8. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  onnume puriyale indiyavile, ennamo nadakkudhu marmama irukkudhu

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சந்திரமவுலி,

   இத்தனை காலம் கழித்து, இதாவது நடக்கிறதே என்று “மகிழ்ச்சி” கொள்ளுங்கள்…. 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 9. தமிழன் சொல்கிறார்:

  விரைவில் திருநாவுக்கரசருக்குக் கல்தா. ப.சிதம்பரத்துக்குப் பொறுப்பு கொடுக்கப்படலாம் (கொஞ்சம் அதிக அதிகாரத்தோட). கருணானிதி இல்லை. அதனால் ஸ்டாலின் கையை முறுக்கி டாமினேட் செய்து சீட் வாங்கலாம் என்பது காங்கிரசின் நம்பிக்கை. ப.சிதம்பரத்துக்கு, இந்த வயதான காலத்தில் தன் பையனுக்கு ஒரு பொறுப்பை வாங்கிக்கொடுத்துவிடவேண்டும். ப.சி. மூலம் காங்கிரஸ் புனர்வாழ்வு பெறலாம். அல்லது ப.சி + திமுக + வி.சி +…. போன்ற கட்சிகள் கூட்டணியாக வந்தால், பாஜகவுக்கு தமிழ்’நாட்டில் தலையெடுக்க முடியாது.

  இந்தத் திட்டங்களை முறியடிப்பதற்காக இவைகள் நடக்கின்றனவோ? சி.பி.ஐ எப்போதும் மத்தியில் ஆளுகின்ற அரசு சொல்வதைத்தானே செய்யும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தமிழன்,

   எனக்கு ஒரு சந்தேகம்….
   இந்த நடவடிக்கை திரு.அருண் ஜெட்லியால் எடுக்கப்பட்டது அல்லவோ என்று….

   சிபிஐ, உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தான் வரும். நேற்றைய ரெய்டுகளில் வருமான வரி துறையோ, அமலாக்க துறையோ ஈடுபடவில்லை… எனவே நிதியமைச்சருக்கு இதில் வேலை இல்லை….இது முழுக்க முழுக்க சிபிஐ வேலை மட்டுமே…

   திருவாளர் சு.சுவாமி எவ்வளவு சொல்லியும் திரு.ஜெட்லி கேட்கின்றபடி இல்லாததால், திரு.ராஜ்நாத் சிங்கை கொண்டு …. ஜி, இதை செய்து கொண்டு விட்டாரோ என்று தோன்றுகிறது …

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.