2036 – ல் என்னென்ன இருக்கும்… ??


வித்தியாசமான செய்தி ஒன்று வந்தது –
சுவாரஸ்யமாக இருந்தது …
சிறு மாறுதல்களுடன் கீழே தந்திருக்கிறேன்…
படித்து பாருங்களேன் …
( நண்பர் செந்தில்நாதனுக்கு நன்றி )

—————–

1998ல தொடங்கின kotak (photo…) நிறுவனம், ஒரு லட்சத்து எழுபதாயிரம் வேலை ஆட்களோட சக்கை போடு போட்டது…! ஆனால் இன்னைக்கு….?

ஃபிலிமே இல்லாம போட்டோ எடுக்க முடியும்னு கனவு கூட கண்டிருப்போமா …? இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்ல…! வெள்ளை பேப்பர்ல print எடுத்து தான் photo பார்க்கமுடியும்கறது இவ்வளவு சீக்கிரமா வழக்கொழிந்து போகும்னு யார் நெனைச்சாங்க…?

பேப்பர் போட்டோ தொழிலுக்கு என்ன நடந்ததோ, அது இன்னும் என்னென்ன தொழில்களுக்கு அடுத்த பத்து வருஷத்துல நடக்கும்ங்கறது தான் இப்போ யோசனை ….!

தெருவுக்கு தெரு மொளைச்ச PCO, STD பூத்தெல்லாம் இப்ப எங்க போச்சு??

எதனால ? ஏன் இப்படினு கேட்டா?

டெக்னிகலா சொல்லனும்னா Artificial Intelligence. சிம்பிளா சொல்லணும்னா ‘Software’ என்கிற மென்பொருள். மனுஷ மூளையை விட திறமையா செயல்படும் இதுங்க தான் மேலதிகமான காரணமா இருக்கும்.!

உதாரணத்துக்கு சொல்லனும்னா…சொந்தமா ஒரு கல்யாண மண்டபம் கூட வெச்சிக்காம, ‘Bharat Matrimony’ வருஷத்துக்கு ஆயிரக்கணக்கான கல்யாணங்களை நடத்திக்கொடுக்குது…….கமிஷனோட…! இல்லீங்களா..?

‘Ubar’ங்கறது ஒரு சாதாரண மென்பொருள், ஒரு ஸ்கூட்டர் கூட சொந்தமா வெச்சிக்காம, இன்னைக்கு உலகத்துலயே பெரிய டாக்ஸி சேவை கம்பெனியா கொடி கட்டி பறக்குது…!

இந்த மாதிரி software tool எல்லாம் எப்படி நல்லா போய்ட்டு இருக்கிற தொழில்களை பாதிக்கும் ?

அதுக்கும் ஒரு நல்ல உதாரணத்தை சொல்லலாம்: உங்களுக்கு ஒரு சட்டச்சிக்கல் வருது…என்ன பண்றதுனு தெரியலை…! என்ன செய்வீங்க? ஒரு நல்ல வக்கீலா பார்த்து..யோசனை கேப்பீங்க…! சிக்கலோட தீவிரத்தை பொறுத்தோ அவரோட
பிரபலத்தை பொறுத்தோ உங்க கிட்ட அவரு fees வாங்குவாரு..! இல்லையா…!

இப்ப, அதையே ஒரு கம்ப்யூட்டர் சல்லிசா செஞ்சு கொடுத்தா ? உங்களோட சிக்கல் என்னனு சின்னதா சில வரிகள் type பண்ணின உடனே, IPC Section- னோட சரியான விவரங்கள அந்த கம்ப்யூட்டர் கொடுத்தா ? நாட்ல பெரும்பாலான வக்கீல்கள்
தலைல துண்ட போட்டுக்கிட்டு தானே போகணும்…!

IBM Watson, இப்ப அமெரிக்காவுல அதைத்தான் செஞ்சுகிட்டு இருக்கு. ஒரு லாயரால அதிகபட்சம் 70% தான் ஒரு சட்டச்சிக்கலுக்கு தீர்வு சொல்லமுடியும்னா, இந்த மென்பொருள் 90% சரியான தீர்வை சில வினாடில சொல்லுது…!

அதனால, அமெரிக்க பார் கவுன்சிலோட கணக்குப்படி, இன்னும் 10 வருஷத்துல அமெரிக்காவுல 90% வக்கீல்கள் காணாம போய்டுவாங்க..! அட யாருமே வராத கடையில இவங்க யாருக்கு டீ போடுவாங்க ?

ஆடிட்டர்கள், டாக்டர்கள்ள இருந்து ப்ரோக்கர்கள் வரை நிலைமை அதே தான்…!

80%-க்கும் மேலான சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் இனி ஆளுங்களே தேவை இல்லை..கம்ப்யூட்டரே பாத்துக்கும். ‘Subject Matter Experts’னு சொல்லப்படற விற்பன்னர்கள் தான் இனி பொழைக்க முடியும்…! சரியா…?

ஆட்டோமோட்டிவ் தொழில்நுட்ப துறைல 15 வருஷமா இருக்கறதால நான் 100% நம்புகிற ஒரு விஷயத்தை சொல்றேன் கேட்டுக்கோங்க…!

2020- ல Satellite மூலமா இயக்கப்படும் தானியங்கி கார்கள் ரோட்டுக்கு வந்துடும்.( நம்ம ஊர்ல இல்லீங்க..பணக்கார நாடுகளோட சில நகரங்களில் மட்டும் ) அதோட result மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா…ஒட்டுமொத்த ஆட்டோமோட்டிவ்
சம்பத்தப்பட்ட எல்லா நேரடியான, மறைமுகமான தொழில்களும் நிச்சயம் பாதிக்கப்படும்.

அடுத்த 10 வருஷத்துல இங்கேயும் அந்த நிலை வந்துடும்… யாருக்கும் கார் ஓட்ட வேண்டிய / வாங்கவேண்டிய தேவை இருக்காது,. ‘Driving License’ என்ற ஒன்று காணாமல் போயிருக்கும். பார்க்கிங் பிரச்சனை என்பதே இருக்காது. ஒரு
எடத்துக்கு போகணும்னா..உங்க செல்லில் இருந்து..ஒரு மிஸ் கால்..இல்ல..SMS…!

அடுத்த ரெண்டு நிமிஷத்துல உங்க முன்னாடி தானா ஒரு கார் வந்து நிக்கும். நீங்க போகவேண்டிய எடத்துக்கு சமர்த்தா கொண்டுபோய் விட்டுடும். கிலோமீட்டருக்கு இவ்வளோனு நீங்க காசு கொடுத்தா போதும்… அதையும் கார்டு மூலமா…! பொருட்கள் அனுப்புறது முன்னை விட சீக்கிரமாவும் பத்திரமாவும் இருக்கும்.

இதனால என்னவாகும்ன்னா……அடிக்கடி தேவைப்படாம பார்கிங்க்ல தூங்கற 37% வாகனங்கள் இருக்காது. சொந்தமா ஒரு டிரைவர், இல்ல டாக்ஸி டிரைவர்னு ஒருத்தனும் இருக்கமாட்டான். சிக்னல், ட்ராபிக்ஜாம் பத்தி எல்லாம் யோசிக்கவே
மாட்டோம். ‘Accident’ ரொம்ப கொறஞ்சு போய்டும். சிட்டில ‘கார் பார்க்கிங்’காக மட்டுமே ஆக்ரமிக்கப்பட்டிருக்கிற 17% நிலங்கள் காலியாயிடும். உலக அளவுல மோட்டார் வாகனங்களின் விற்பனை 90% கும் கீழ போய்டும். 10 கோடி பேர் வரைக்கும் வேலை போகும்.

Tesla, Apple, Microsoft, google இவங்க கட்டுபாட்ல தான் இந்த டிரைவர்கள் இல்லாத தானியங்கி கார்கள் இருக்கும். எல்லாமே மின்சாரத்துல தான் ஓடும். கடந்த முப்பதே வருஷத்துல 7% உலகளாவிய மின் உற்பத்தியை கொடுத்த
சூரிய மின்தொழில்நுட்பம், இன்னும் 10-15 வருஷத்துல 25% மேல் மின்சார தேவையை பூர்த்தி செய்யும்.

இதெல்லாம் நம்ம ஊருக்கு லேசுல வராதுங்கனு நீங்க நெனைச்சா..? உங்க நினைப்பை மாத்திக்குங்க…இன்னைக்கு பெரும்பாலான உலக நிறுவனங்களோட எதிர்கால பொருட்களை (Future Products) விற்பனைக்கு வெக்கப்போற முக்கிய சந்தை ஆசிய மார்க்கெட் தான்..குறிப்பா சீனா & இந்தியா. ஒரு காலத்துல இவங்களால கொஞ்சம் லேட்டா கண்டுக்க படற நிலைமையை செல்போன்கள் மாத்திடுச்சு. 15 வருஷ அமெரிக்க லாபத்தை செல்போன் கம்பெனிகள் 5 வருஷத்துல இந்தியால சம்பாரிச்சிட்டாங்க. இனிமே விடுவாங்களா ??

சரி, மேற்கொண்டு என்னென்ன தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகும் ?

முக்கியமா ‘Banking’ எனப்படும் வங்கி சேவைகள். ‘BitCoin’ னு ஒண்ணை பத்தி கேள்விப்பட்டு இருக்கீங்களா? இல்லனா கூகுளை கேளுங்க…! அடிச்சு சொல்லும் அடுத்த 10 வருஷத்துல உலக கரன்ஸி இப்படி ஏதாவது ஒண்ணு தான்னு.

அப்புறம், ‘Insurance’ எனப்படும் காப்பீட்டு திட்டங்கள். மொத்தமா செம்மஅடி வாங்கும்.

ரியல்-எஸ்டேட் (வீட்டுமனை) சுத்தமாக மாறிப்போகும். சிட்டிக்குள்ள குவியும் கலாச்சாரம் மாறிப்போய் பரவி வாழும் நிலை உருவாகும். வீட்டு பக்கத்திலயே Green House வெச்சு காய்கறி உணவு பொருள்கள் தயாராகும்.

விவசாயம்: இன்னைக்கு பணக்கார நாட்டு விவசாயிங்க, மெஷின்களை மேய்க்கும் மேனேஜர்களாக தான் இருக்காங்க. நம்ம ஊருக்கும் சீக்கிரமே இந்த நெலமை வந்துடும். நம்ம விவசாய தலைவருங்க அங்கமுத்து, பாண்டியன் எல்லாம் சீக்கிரம்
மெஷின் மேனேஜர் ஆயிடுவாங்க….

தாகம் எடுக்கறப்போ எல்லாம், காத்துல இருக்கிற ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீர் குடிச்சுக்கலாம்… அதுக்கும் கையளவு மெஷின் கண்டுபிடிச்சாச்சு….

‘Moodies’ங்கற (மோடிஸ் இல்ல..!!! ) ஒரு App, இப்பவே உங்க முகத்தை scan செஞ்சு உங்க மூடு என்னனு சொல்லுது…2020-ல நீங்க பொய் சொல்றீங்களா இல்ல உண்மைய சொல்றீங்களானு அச்சு பிசகாம சொல்லிடும். யாராலயும் ஏமாத்த முடியாது.

இப்பவே மனுஷங்களோட சராசரி ஆயுட்காலம் வருஷத்துக்கு 3 மாசம் கூடிகிட்டே போகுது (2012ல 79-ஆ இருந்த சராசரி ஆயுட்காலம் இப்ப 80 ஆயிடுச்சு). 2036 – ல மனுஷனுங்க நிச்சயம் 100 வருஷத்துக்கு மேல வாழ்வாங்க.

Tricoder X னு ஒண்ணு அடுத்த வருஷம் மார்கெட்க்கு வருது. உங்க செல் போன்ல உட்கார்ந்துகிட்டு வேலை செய்யும் இது, உங்க கண்ணை ஸ்கேன் பண்ணும். உங்க ரத்த மாதிரியை ஆராயும். உங்க மூச்சு காத்தை அலசும். உங்க உடம்புல என்ன வியாதி, எந்த மூலைல எந்த நிலைல இருந்தாலும் சொல்லிப்புடும். அப்புறம் என்ன 2036-ல 100 வருஷம் வாழறதெலாம் ஜுஜுபி. டாக்டர்கள் Clinic வைக்கத் தேவையில்லாம, online-ல யே ஒரு outpatient – ஐ Treat பண்ண முடியும். In-
patient-க்குத்தான் Hospital…!

அதனால்..மக்களே…! இன்னைக்கு பரபரப்பா இருக்குற 80-90% தொழில்கள் காணாம போய்டும்..ஆனா …… புதுசு புதுசா தொழில்கள் வரும்.. சூதானமா கத்துகோணும்.

—————

ஆமா …. இந்த வலைத்தளம் எழுதற வேலை எல்லாம் இருக்குமா – இருக்காதா..?

நல்ல வேளை – எனக்கந்த கவலை இல்லை….. 2036-ல் இருக்கறவங்க தானே கவலைப்படணும் …??? 🙂 🙂 🙂

———————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to 2036 – ல் என்னென்ன இருக்கும்… ??

 1. தமிழன் சொல்கிறார்:

  ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் ஆர்டரிங் பற்றி இது சொல்லலை. இந்த ஆன்லைன் ஆர்டரிங்னால, எத்தனை தொழில்கள் காணாமப்போகும்னு பாருங்க. இதுனால பயனாளர்களுக்கு நன்மைதான். எம்.ஆர்.பி என்று ஜல்லியடிக்கமுடியாது, அதுவும் எலெக்டிரானிக்ஸ் பொருட்கள் மற்றும் நிறைய பொருட்கள் ஆன்லைன்ல வாங்கறதுதான் பெட்டர். நான் இங்க தேடி என் பெண்ணுக்கு ஒரு டாடா கைக்கெடிகாரம் வாங்கிக்கொடுத்தேன். அதே கடிகாரம், ஆன்லைன்ல, 200 ரூபாய் கம்மி விலை. (நான் வாங்கிக்கொடுத்த திருப்தி இருக்காது என்றாலும்).

  இப்போ, பார்மஸிக்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்போறாங்க. காரணம், ஆன்லைன்ல மருந்துப்பொருட்கள் விற்பனை செய்வது அவங்களைப் பாதிக்குது என்று சொல்றாங்க.

  இன்னைக்கு செல்ஃபோனிலேயே, ஒரு நாளைக்கு எவ்வளவு ஸ்டெப்ஸ் நடக்கறோம்னு வருது. இதுமாதிரி எத்தனையோ அப்ளிகேஷன் நம்ம வாழ்க்கையை சுலபமாக்கும். பல தொழில்கள் அழிஞ்சாலும், புதிது புதிதாகத் தொழில் வாய்ப்பு உருவாகும் (உதாரணமா, உங்களுக்கு டிஃபன், இனிப்பு காரம் போன்றவைகள் அட்டஹாசமா செய்ய வருதுன்னு வச்சுக்கோங்க. உடனே ஒரு ஆன்லைன் சைட் ஆரம்பிச்சாப்போதும். ஆர்டரைப் பொருத்து செய்யலாம். ஆனால் கஸ்டமர் திருப்தி மிக முக்கியம். அது மட்டும் இருந்தால், பெரிய கடை வாடகைக்குப் பிடிக்கவேண்டியது இல்லை. யாருக்கும் காசு அழவேண்டியது இல்லை. நல்ல டெலிவரி Boys இருந்தால் போதும். இதுமாதிரி எத்தனையோ மாற்றங்கள் வரப்போகுது.

  தானியங்கிக் கார்லாம், 50 வருடங்களாவது ஆகும்னு நினைக்கிறேன். மற்றபடி, காலம் வேகமாக மாறுது. நல்ல பகிர்வு.

 2. இளங்கோ சொல்கிறார்:

  ஒரு பக்கம் தொழில் வாய்ப்புகளை இழந்து கொண்டே இருந்தாலும்,
  இன்னொரு பக்கம் புதிது புதிதாக வாய்ப்புகள் உருவாகிக் கொண்டே தான்
  இருக்கின்றன. நீங்கள் கூறுவது போல், நாம் நம்மை மாற்றீக்கொள்ள
  தயாராகிக் கொண்டே இருக்க வேண்டும். கவலைப்பட ஒன்றுமில்லை.
  வரவேற்கத்தக்கது தான். காவிரிமைந்தன் சார் – நீங்கள் நினைப்பது போல்
  2036 அவ்வளவு தொலைவில் இருப்பதாகத் தெரியவில்லை. நிச்சயம்
  உங்கள் வேறு டெக்னாலஜியில் சந்திப்போம்.

 3. குலாம் ரசூல் சொல்கிறார்:

  என்ன காமை சார் இப்டி சொல்லி போட்டீய. நீங்க நூரு வர்சம் வாலோனும்.
  ஒரு 110-தாவது…!

  கடவுள் அருள்புரியட்டும்.

 4. Sundar Kannan சொல்கிறார்:

  Small Change:
  மனுஷ மூளையை விட திறமையா செயல்படும் இதுங்க தான் மேலதிகமான காரணமா இருக்கும்.!

  மாற்றிக்கொள்ளவும்.
  மனுஷ மூளையை விட “வேகமாக” செயல்படும் இதுங்க தான் மேலதிகமான காரணமா இருக்கும்.!

 5. சிவம் சொல்கிறார்:

  மனுஷ மூளைக்கு 100 % மெமரி பவர் கிடையாது. ரிடென்ஷன் பவர்
  ஆளாளை பொருத்தது. ஆனால் கம்ப்யூட்டருக்கு 100 % மெமரி உண்டு.
  இந்த விதத்தில் கம்ப்யூட்டரை உயர்த்திச் சொல்லலாம்.

  ஆனால், மனுஷ மூளைக்கு இருக்கும் சுயமாக யோசிக்கும் திறமை
  கம்ப்யூட்டருக்கு கிடையாது. சொல்லிக்கொடுத்ததை, அல்லது
  ப்ரோகிராமில் வடிக்கப்பட்டதை மட்டுமே செய்யும். இந்த விதத்தில்
  மனுஷன் தான் ஒசத்தி.

  • புதியவன் சொல்கிறார்:

   மனிதன் உசத்திதான். ஆனால், ஒரு சில உசத்தி மனிதர்கள், 50 தானியங்கி மிஷின்கள் ஒரு தொழிற்சாலையை நடத்தப் போதுமானது. முன்னெல்லாம் ‘அக்கவுண்ட்ஸ்’ பிரிவுகளில் பெரிய தொழிற்சாலைகளில், கம்பெனிகளில் 50-100 பேர் இருந்த இடங்களில் இப்போது 20 பேரே ஜாஸ்தி என்றாகிவிட்டது. கம்ப்யூட்டரோ அல்லது தானியங்கி மிஷின்’களோ நேரத்தைப் போக்காது, கொடி பிடிக்காது, சலுகை விலையில் சாப்பாடு கேட்காது, போனஸ் கேட்டு ஸ்டிரைக் செய்யாது. தரமான பொருட்களைக் கொடுக்கும். (மனிதத் தவறுகளைப்போல் அல்லாது).

   ஆனால், 60 சதத்திற்குமேல் கல்வி அறிவு குறைந்த, ஏழ்மை நிலையில் இருக்கும் மனித வளம் உடைய நம் நாட்டுக்கு அவை நிச்சயம் கெடுதல்களைத்தான் செய்யும். Survival of the fittest என்று 20 சதம் மக்கள் தப்பித்துக்கொள்வார்கள். 10 சதம் எப்போயும் போல் பெரிய பணக்காரர்களாக இருப்பார்கள். 5 சதம் அரசியல்வாதிகள் பல்வேறு சொத்துகளுக்குச் சொந்தக்காரராக இருப்பார்கள். மீதி உள்ளவர்கள் வறுமையில் வாடி வதங்குவார்கள்.

   மாற்றத்தைத் தவிர்க்க முடியாது. ஆனால், 50% ஏழைகளைக் கருத்தில்கொள்ளவேண்டும்.

 6. paamaranselvarajan சொல்கிறார்:

  எல்லாவற்றிலும் மாற்றங்கள் … முன்னேற்றங்கள் ஏற்படும் …சரி.. இந்த காெள்ளைக்கும்பல் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் …?

 7. chandrasekaran narayanaswami (chennaipithan) சொல்கிறார்:

  பிரமிப்பாதான் .2036…19 ஆண்டுகள்தானே.நிச்சயமா இருப்பீங்க.நான் பார்க்கத்தானே போறேன்

 8. srinivasanmurugesan சொல்கிறார்:

  அய்யா!!!
  “Bitcoin” குறித்து அதிகம் பேசப்படுகிறதே…. அது குறித்து தாங்கள் விளக்க கேட்டுக்கொள்கிறேன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   srinivasanmurugesan,

   மன்னிக்கவும். எனக்கே இது குறித்து முழுவதுமாகப் புரியவில்லை.
   மற்ற நண்பர்கள் யாராவது இதுகுறித்து விளக்க முடியும் என்றால்,
   எனக்கும் சேர்த்து உதவி செய்யுங்களேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s