நாஞ்சில் சம்பத்-தினகரன் அணி நடத்தும் எம்ஜிஆர் விழாவிலும் மோடிஜி … …!!!…???நேற்று எடப்பாடி அவர்கள் பிரதமரை சந்தித்து, டிசம்பர் மாதத்தில் தமிழக அரசு நடத்தவிருக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென்று அழைப்பு விடுத்ததை அடுத்து –

—–

திரு.ஓபிஎஸ் அவர்களுக்கு, 10 நாட்களுக்கு முன்னர் தான் சந்தித்தபோதே, தங்கள் அணியினர் அக்டோபர் மாதத்தில் நடத்தவிருக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள ஏற்கெனவே மோடிஜி ஒப்புக்கொண்டு விட்டார் என்பது –

நினைவிற்கு வரவே அதை நேற்று, 10 நாட்களுக்குப் பிறகு – அவசர அவசரமாக அறிவித்தார்.

—–

இதற்கிடையே, நேற்று நள்ளிரவில், தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட நாஞ்சில் சம்பத் அவர்கள், திடீரென்று அவசர press meeting ஏற்பாடு செய்து –

” உண்மையில் 63 எம்.எல்.ஏ.க்கள் உள்ள தினகரன் அணியினர் நடத்தும் விழா தான் மெஜாரிடி விழா எனவே பிரதமரை நாளையே சந்தித்து, உண்மை நிலையை விளக்கி,

தினகரன் அவர்கள் திஹார் ஜெயிலிலிருந்து வெளிவந்ததும் -தினகரன் அணி நடத்தவிருக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்க இருக்கிறோம்…..

ஜனாதிபதி தேர்தலுக்கு இந்த 63 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுக்களும் அவசியம் என்பதை மோடிஜிக்கு நாங்கள் எடுத்துச்சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் அவராகவே புரிந்து கொள்வார் ” என்று கூறி இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருப்பதாக செய்தி.

—–

” தரை நிலவரத்தை ( ground realities…!!! ) மோடிஜிக்கு யாரும் எடுத்துச்சொல்லவில்லை போலிருக்கிறது. எங்கள் அணியில் 9 எம்.எல்.ஏ.க்கள் இருப்பது அவருக்கு இன்னும் தெரியவில்லை. இதை தெரியப்படுத்தி, நாங்கள் கரூரில் நடத்தவிருக்கும் பிரம்மாண்டமான எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் ” என்று கோரிக்கை விடுப்போம் – என்று திரு.செந்தில் பாலாஜியின் அறிக்கை வந்து கொண்டிருக்கிறதாம்….

—–

ஜனாதிபதி தேர்தலில் எந்தவித risk -உம் எடுக்கக்கூடாது என்று பாஜக தலைமை முடிவெடுத்திருப்பதால், ஜுலை 25 -வரை (ஜனாதிபதி தேர்தல் நடக்கும் நாள் …) தமிழ்நாட்டிலிருந்து ஒரு எம்.எல்.ஏ. அழைப்பு விடுத்தாலும் கூட
மோடிஜி வந்து கலந்து கொள்வதாக உறுதி அளிக்கப்படும் என்று பத்திரிகை தகவல்கள் தெரிவிக்கின்றன….

எல்லாருக்கும் உதவும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
நாமம் என்றும் வாழ்க….!!!

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to நாஞ்சில் சம்பத்-தினகரன் அணி நடத்தும் எம்ஜிஆர் விழாவிலும் மோடிஜி … …!!!…???

 1. தமிழன் சொல்கிறார்:

  பூனை இளைத்தால், எலிகள் வந்து விசாரித்துவிட்டுப் போகுமாம். அப்படி ஆகிவிட்டது அதிமுகவின் கதை.

  மத்திய அரசு நய வஞ்சகர்களால் சூழப்பட்டது என்றும் (எந்த மத்திய அரசும்), மானிலங்களின் நலன் அவைகளுக்கு இரண்டாம் பட்சம்தான், அரசியல், அதிகாரம், அதன் மூலம் பணம் சேர்ப்பு, இவைகள்தான் மத்திய அரசின் முதல் முன்னுரிமை என்றுதான் நான் புரிந்துகொள்கிறேன்.

  ஜெ. எவ்வளவு தைரியமாக இந்த வஞ்சகக் கழுதைப்புலிகளை (மத்தியில் இருப்பவர்கள்) சமாளித்திருப்பார். வீட்டுக்கே வந்தபோதும், மதிய உணவு மட்டும் அளித்துவிட்டு, ஆனால் அதிமுகவைப் பணயம் வைக்காமல் எப்படி தைரியத்தோடும், மக்கள் ஆதரவோடும் ஆட்சி நடத்தினார். (கருணானிதியையும் கம்பேர் பண்ணுகிறேன். அவர், தன், தன் குடும்ப நலத்துக்காக யாரையும் கைவிடவோ, காட்டிக்கொடுக்கவோ, காலில் விழவோ, மற்ற எவரின் நலத்தையும் பணயம் வைக்கவோ தயங்கமாட்டார். எம்ஜியாரைவிட மிகப் பெரிய நடிகன் கருணானிதி)

  இரண்டு குழுக்களும் (ஓபிஎஸ் ஈபிஎஸ்) மத்திய அரசின் ஆதரவு தேவை என்று அவைகளுக்கு அடங்கிப் போவதுபோல் தெரிகிறது. இரட்டை இலை முடக்கம் யாரால் நிகழ்ந்தது, யார் அந்தச் சூத்திரதாரி என்பதும் தெள்ளெனப் புரிகிறது.

  பாஜக, தமிழக நலன்’களைக் காவு கொடுக்கிறது. இது எதிர்காலத்துக்கு நல்லதல்ல. பாஜகவின் இத்தகைய செயல்களின்மூலம், காங்கிரசை தமிழகத்தில் அழித்த இந்திரா காந்தியைப்போல, மோடி அவர்களும் தமிழகத்தில் பாஜகவை அழிப்பதே கடமை என்று கொண்டிருக்கிறார் போலும் (காங்கிரசாவது வளர்ந்த மரம். அதை இந்திரா அவர்கள் பட்டுப்போகச் செய்தார், தமிழகத்தில். பாஜக இப்போதான் முளைவிட ஆரம்பித்திருக்கிறது. முளையிலேயே கிள்ளிவிடுகிறார் மோடி அவர்கள். பாராட்டுக்குரிய செயல்தான்). ஜனாதிபதி தேர்தல் வாக்குகளுக்காக இப்படி தன்னுடைய இமேஜையே தாழ்த்திக்கொள்கிறதா பாஜக? எப்படியும் எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்று சேரவே முடியாது (ஒவ்வொருத்தரிடமும், பாவமூட்டை போல் ஊழல் வழக்குகளும், அவர்கள்மேல் சிபிஐ என்ற கத்தியும் தொங்குகிறது). பாஜக மக்கள் ஏற்றுக்கொள்ளும் ஒரு நபரை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்மொழிந்தால் நிச்சயம் சில பல எதிர்க்கட்சிகளும் வாக்களிக்கும். எதற்கு ஜனாதிபதி தேர்தலை மட்டும் முன்னிருத்தி ஒரு கட்சியின் புகழை (பாஜக) தாழ்த்திக்கொள்கிறார்கள்?

  தலைவன் என்று காண்பித்துக்கொண்டால்தான் தமிழகத்தில் வாக்குகள் கிடைக்கும். அடுத்தவர் முதுகில் ஏறி கோட்டைக்கு அரைக்காதம்கூட செல்லமுடியாது. இதனை மோடிக்குச் சொல்லுபவர் யார்? அவர் செய்யும் (பாஜக செய்யும்) செயல்களால், ஆசியாவின் பெரிய கொள்ளையன் குடும்பம் பதவிக்கு வருவதில்தான் முடியும் போலிருக்கிறது. அது தமிழகத்தின் அழிவிலும் இட்டுச்சென்றுவிடும்.

  • Antony சொல்கிறார்:

   Even after seeing the current state of ADMK, you are praising JJ’s management skills..

   • தமிழன் சொல்கிறார்:

    ஜெ. அவர்களின் Management Skillsக்கு என்ன குறை? கடைசி வரையில் அவர் சிங்கமாக இருந்தார். மத்தியில் மிருக பலத்துடன் கூடிய பாஜகவுக்கும் அவர் பயப்படவில்லை. (அடிபணியவில்லை, அதேசமயம் தேவையில்லாமல் எதிர்க்கவில்லை). 40% வாக்கு வங்கி இருந்த கட்சியை கடைசி வரையில் ராஜாபோல் முழு ராணுவக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

    அரசியல் கட்சிகளிலோ, ஆட்சியிலோ, Succession Planning எப்போதும் வேலைக்காகாது. அதிமுக, திமுக மாதிரி, கம்பெனியோ அல்லது தனியார் நிறுவனமோ இல்லை. சொத்துக்களை, தன் குடும்பத்துக்கே கொடுப்பதற்கு இது திமுகவோ அல்லது வீரமணியின் தி.க வோ கிடையாது. அதிமுகவின் தலைவர், மக்கள் விருப்பப்படுட்டுத் தேர்ந்தெடுப்பபவரே. அதனால் காலம் நிச்சயம் காண்பிக்கும்.

    இப்போது பலர், ஆதாயம் கருதி பலப் பல நிலைகளை மேற்கொள்ளலாம். ஆனால், அது இன்னும் சில வருடங்களுக்குத்தான். காலமும், தமிழக மக்களும் யார் அதிமுகவுக்குத் தலைமை தாங்கவேண்டும் என்பதைச் சொல்லுவார்கள்.

 2. புதியவன் சொல்கிறார்:

  கா.மை. சார்… இந்த சந்தர்ப்பத்துல, கல்யாணத்துக்கு, பெற்றோரே, மாப்பிள்ளைக்கு அழைப்பு அனுப்பும் மேட்டரை (திமுகல உல்டா. கருணானிதியின் 60 ஆண்டு எம்.எல்.ஏ பணிக்காக நடக்கும் வைர விழாவுக்கு, கருணானிதியை அவர் பையன் ஸ்டாலின் அழைக்கிறார்) விட்டுட்டீங்களே.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   ஒரு நாளைக்கு ஒரு காமெடி போதும் என்று நினைத்தேன்.

   ஏற்கெனவே இன்றைய கோட்டா ” எம்ஜிஆர் நாமம் ” ரிலீஸ் ஆகி விட்டது.

   இருந்தாலும், நீங்கள் துவக்கி விட்டதால், தொடர்வது தானே நியாயம்.

   ஒன்றா, இரண்டா – எடுத்துச் சொல்ல…..!!!

   இதில் மாப்பிள்ளை யார் …? கலைஞர் தானே …? மாப்பிள்ளையை கேட்காமலேயா முகூர்த்தம் fix பண்ணி இருப்பார்கள்…
   பிறகு எதற்கு இன்விடேஷன் போட்டோ ஷூட்…?

   ஒரு விதத்தில் மனதுக்கு வருத்தமாக இருக்கிறது… பாவம் எப்படி சுறுசுறுப்பாக இருந்த கலைஞர் – இன்று அவரை,
   இவர்கள் கூலிங் கிளாஸ் போட்டு, மேக்கப் போட்டு, பொம்மை போல் உட்கார்த்தி வைத்து போட்டோ ஷூட் எடுப்பது ஒரு clear exploitation.

   வயதாவதும், அதன் காரணமாக இயலாமை ஏற்படுவதும் இயற்கை. ஆனால், அதை இவர்கள் மறைத்து, இன்னமும் அவர் active- ஆக இருப்பது போல்
   காட்டுவது pure political business. ஸ்டாலின் அவர்களுக்கு தன்னம்பிக்கை இல்லை. தன்னால் தனியாக நடத்திச் செல்ல முடியும் என்கிற
   நம்பிக்கை இல்லாததால் தான் இன்னமும் எதற்கெடுத்தாலும் செயற்கையாக கலைஞரை துணைக்கு வைத்துக் கொள்கிறார்.

   நாலே நாலு கோவில் குளங்களை மட்டும், திமுக தொண்டர்களை வைத்துக்கொண்டு தூர் வார வைத்து விட்டு, தமிழ்நாடு முழுவதும்
   திமுக தான் இந்த தூர் வாரும் பணியைச்செய்வது போல் விளம்பரம் கொடுக்கிறார்.

   தமிழகம் முழுவதும் இப்போது மக்களிடையே, குறிப்பாக பல இளைஞர்களிடம் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதை காண முடிகிறது.
   பல ஊர்களில் கருவேல மரங்களை வெட்டி அகற்றுவதிலும், கிராம ஊருணிகளை, குளங்களை, ஏரிகளை தூர் வாருவதும்
   அவர்களால் மேற்கொள்ளப்பட்டு, விளம்பரம் இல்லாமலே சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது தொடர விரும்புவோம்…வேண்டுவோம்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    நான் நினைக்கிறேன், புதிய தலைமுறை, ஸ்டாலினிடம் நம்பிக்கை வைக்காது என்று. அவர் செய்வது பழைய அரசியல்முறை. அதைக் கற்றுக்கொடுத்தவரே காலாவதியாகிவிட்டார் (தவறாச் சொல்லலை. அவருடைய காலம், Active Period, படம் காட்டுவது, அரதப்பழசான அரசியல், முடிந்தது). வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், ‘நான் பழைய திமுகவின் ஸ்டாலின்’ என்று காட்டிவிடுகிறார் (டைரக்ஷன் சரியில்லை). இனி பழைய முறையில் ‘படம் காட்டும்’ அரசியலோ, திமுகவினர் போல், அடாவடி அரசியலோ தமிழகத்தில் எடுபடாது. எந்தத் தவறு செய்தாலும் உடனே சமூக ஊடகங்களில் வந்துவிடும்.

    சரி…சரி… முதலமைச்சர் பதவி வந்து ஸ்டாலினுக்கு என்ன ஆகப்போகிறது. அவரது முன்னுரிமை, 40,000 கோடி திமுக அறக்கட்டளையை, அப்படியே தன் குடும்பத்திற்கு லபக்குவதுதானே.

   • kayshree சொல்கிறார்:

    this will happen to any body during old age….suffering is enormous…this might happen to you also… that is not exploitation…that is there passion towards kalaijnar karunanithi…..don’t read in between the lines by merely criticising everything as if every one is hundred percent perfect

    • தமிழன் சொல்கிறார்:

     “passion towards kalaijnar karunanithi” – எது.. 2006ல, (அல்லது 1996ல்) கருணானிதியை, சட்டசபை வளாகத்தில் ஸ்டாலின் கழுத்தைப் பிடித்ததா? (ஜூவியில் இதை எழுதியிருந்தார்கள். தனக்கு அமைச்சர் பதவியும் துணை முதல்வர் பதவியும் கேட்டு). தனக்குத் தலைவர் பதவி கொடுக்கவேண்டும் என்று ஸ்டாலின் கடுமையாக வற்புறுத்தி, அவர் கூட்டத்துக்கு இவர் லேட்டாகப் போனதும், கருணானிதியின் பொதுக்குழு கூட்டத்துக்கு ஸ்டாலின் லேட்டாகப் போய் கருணானிதியைப் பழிவாங்கியதும், ஸ்டாலின் இல்லாமல் கூட்டம் ஆரம்பித்தால் தன் எதிர்காலமே போய்விடுமே என்று துரைமுருகன் அமைதி காத்ததும், கருணானிதி கோபித்துக்கொண்டு கூட்டத்தில் பேசாமல் இருந்ததும்… இப்போதான் 1 வருடத்துக்கு முன்பு நடந்தது.

 3. கார்த்திகேயன் சொல்கிறார்:

  திவாகரன் ???

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சுட்டிக்காட்டியதற்கு நன்றி கார்த்திகேயன்.

   அது “தின” கரன் தான்… ஏகப்பட்ட “கரன்”கள் குடும்பத்தில் இருப்பதால்
   தவறு நிகழ்ந்து விட்டது. என் கவனக்குறைவு தான்.
   ஒரு தவறு கண்டுகொள்ளப்படாமலே இவ்வளவு தூரம் கடந்து வந்து விட்டது ஆச்சரியமாக இருக்கிறது.
   எல்லாருக்கும் புரிந்திருக்கிறது… எந்த கரனாக இருந்தாலும் ஒன்று தான் என்று….!!!
   (தவறு சரி செய்யப்பட்டு விட்டது…)

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.