சகலைக்கு என்ன … வேலை…? அதையும் திருமதி தமிழிசையே சொல்லட்டுமே…!!!


மே 24ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, அவரது இல்லத்தில் சந்தித்தார்.

இச்சந்திப்பு குறித்து எடப்பாடி அவர்கள் தெரிவிக்கையில், ‘இது அரசியல் காரணங்களுக்காக நிகழ்ந்தது இல்லை. அரசு சம்மந்தமாகத்தான் இந்தச் சந்திப்பு நடந்தது’ என்று தெரிவித்தார்.

ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்த திரு.ஸ்டாலின், இச்சந்திப்பு அரசியல் காரணங்களுக்காக நிகழ்ந்தது … அதிமுக-வின் இரு அணிகளையும் பிரிக்கவும், பின்னர் இணைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார் – என்று கூறி இருக்கிறார்…


இதற்கு எதிர்வினையாற்றிய திருமதி தமிழிசை சவுந்தரராஜன் நேற்று (மே 25 ) செய்தியாளர்களிடம்,

“எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்கிறார் என கூறியிருப்பது ஏற்புடையதல்ல. தமிழக முதல்வர் மற்றும் பிரதமர் சந்திப்பு எந்த அரசியல் காரணங்களுக்காகவும் நடைபெறவில்லை. இரு அணிகள் இணைப்பு குறித்து எதுவும் பேசப்படவில்லை…ஸ்டாலின் அவர்களின் பேச்சு கண்டிக்கத்தக்கது ” என்று கூறி இருக்கிறார்.

இரண்டு கேள்விகளுக்கு – தமிழிசை அவர்கள் பதிலளிக்க வேண்டும்.

1) முதல்வர், பிரதமரை சந்திக்கும்போது, அரசு அதிகாரிகள் உடன் இருக்கலாம்… இல்லாமல் தனிமையிலும் பேசலாம்…. ஆனால், தமிழக அரசில் எந்த பொறுப்பிலும் இல்லாத தனது மச்சானையோ, சகலையையோ எடப்பாடி
ஏன் கூட வைத்துக்கொண்டார்….?

அரசு விஷயங்களைத்தான் பேசினார் என்றால் – எடப்பாடி அவர்களின் செயல், அரசியல் சட்டப்படி பதவி ஏற்கும்போது அவர் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிரானது. அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களை உறவினர்களுடன் பேசுவதே சட்ட மீறல்.

அப்படி அரசு சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை என்று மறுப்பாரேயானால், பின், அது அரசியல் சம்பந்தப்பட்டட விஷயம் தான் என்று அவரே ஒத்துக் கொள்வதைப்போல் ஆகிறது…..

பிறகேன் அரசியல் பேசவில்லை என்று மறுக்க வேண்டும்…..?

—————

டெல்லியில் – பிரதமரும், முதல்வரும் என்ன பேசினார்கள் என்பது பற்றி தமிழகத்தில், குண்டுசட்டியில் குதிரையோட்டிக்கொண்டிருக்கும் ஒருவருக்கு என்ன தெரிந்திருக்க முடியும்…?

திருமதி தமிழிசையிடம் – பிரதமர் கூறினாரா….?

அரசியல் பேசவில்லை என்று இவர் மறுப்பாரேயானால், முதல்வர் தனது மச்சான் அல்லது சகலையை ஏன் உடன் அழைத்துப் போனார் என்பதற்கும் இவரே விளக்கம் கூறட்டுமே ….. அதையும் தெரிந்துகொள்வோம்……!!!

அதிமுக விவகாரங்களில் பாஜக தலைமை தலையிடவில்லை என்று கூறுவது முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் முயற்சி என்று தமிழக பாஜக தலைவருக்கு இன்னமும் தெரியவில்லையா…?

பூனை கண்ணை மூடிக்கொண்டால்….. அந்த பூனைக்கு மட்டும் தான் பூலோகம் இருண்டு போகும் …!!! பூலோகத்தில் உள்ள அத்தனை பேருக்கும் அல்ல…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to சகலைக்கு என்ன … வேலை…? அதையும் திருமதி தமிழிசையே சொல்லட்டுமே…!!!

 1. Nalini சொல்கிறார்:

  Nice questions? Do you think she is going to answer your questions? I heard she was a very proficient professor and a good Doctor. Once enter the politics they loose all good qualities.

 2. இளங்கோ சொல்கிறார்:

  சகலையை அழைத்துக் கொண்டு போனதற்கான காரணம் ரொம்ப சிம்பிள்…
  காலில் விழுவதையோ, கையை பிடித்துக்கொண்டு கெஞ்சுவதையோ,
  மற்றவர்கள் பார்த்தால் மானம் போய் விடுமே…
  தலைமைச் செயலாளர் முன்னாலோ, மற்ற அதிகாரிகள் முன்பாகவோ,
  இதைச் செய்ய முடியுமா ?

 3. paamaranselvarajan சொல்கிறார்:

  எடப்பாடிக்கும்.. பிரதமருக்கும் இடையே “துவிபாஷாக” அதாவது மாெழி பெயர்ப்பாளராக சென்றதாக பாென்.ரா . கூறுகிறார் … ஏதாே தமாஷ்கள் ….?

 4. புதியவன் சொல்கிறார்:

  எல்லா தொலைக்காட்சிகளிலும் தினமும் ஏதாவது வெட்டு அரட்டைக்கு நிறைய கட்சி செய்தித்தொடர்பாளர்கள் வருவார்கள். ஒன்றும் தெரியாமலேயே, கட்சியை விட்டுக்கொடுக்காமல் பேசிவிட்டுச் செல்வார்கள். அவர்களுக்கும் தமிழிசைக்கும் என்ன வித்தியாசத்தைக் கண்டுவிட்டீர்கள். தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்வதே பெரும் பாடு அவருக்கும்.

  (உங்களுக்குத் தெரிந்திருக்கும். தமிழிசை பாஜக தமிழகத் தலைவராக நியமிக்கப்பட்டதால்தான், வசந்த் அவர்களுக்கு காங்கிரஸ் தலைமைப் பதவி வழங்கப்படவில்லை. திரு’நாவுக்கரசருக்குச் சென்றுவிட்டது (ஆமாம்.. அதிமுகவைச் சேர்ந்த திரு’நாவுக்கரசருக்குத்தான். சந்தேகம் இருந்தால் தினமும் அவர் என்ன பேசுகிறார் என்று பாருங்கள். இவர் அதிமுக சார்பாகவும், இ.வி.கே.எஸ் இளங்கோவன் கடுமையான அதிமுக எதிர் நிலை எடுத்தும் பேசுவார்கள்))

  கா.மை. சார்… தயவு செய்து எடப்பாடியைப் பாராட்டுங்கள். மன்னார்குடி கண்காணிப்பு கேமராக்கள் இல்லாமல் தனியாக (அவரது உறவினரோடு) பிரதமரைச் சந்தித்துப்பேசியதே அவரது சாதனை அல்லவா? இதற்கு முன்பு, …கரன்கள் இல்லாமல் அவர் யாரையாவது சந்தித்திருக்கிறாரா?
  யானை இல்லாத காட்டில் பூனை எலிகளை வேட்டையாடுகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s