பார்த்தசாரதி சார் இன்னும் கொஞ்சம் தெளிவாக பேசினால் தான் என்ன….???


கமல் அவர்கள் எழுதுவது மட்டுமல்ல – பேசுவது கூட பல சமயங்களில் சரியாகப் புரிவதில்லை…

அவர் வேண்டுமென்றே மற்றவர்கள் முழுவதுமாக புரிந்து கொள்ளக்கூடாது என்று அப்படிப் பேசுகிறாரா…? அல்லது அவர் ஸ்டைலே அப்படித்தானா…?

” என்னைப்போன்ற அறிவுஜீவிகளின் பேச்சை புரிந்துகொள்ள கொஞ்சம் கூடுதல் அறிவு வேண்டும் ” என்று நினைக்கிறாரோ…?

– அல்லது முழுவதுமாக புரியும்படி பேசினால், பின்னால் பின்வாங்க நினைத்தால் முடியாமல் போய் விடும் என்று நினைப்பா…?

நேற்றைய தினம் ஒரு செய்தியாளர் சந்திப்பில், திரு.ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதைப்பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், கமல் சொன்னதும் ….

முதலில் இந்த வீடியோவை பாருங்களேன்…

– ” என்னைக் கேட்டால், யாருமே அரசியலுக்கு வரக்கூடாது…அறிவாளிகளும், படித்தவர்களும் அரசியலுக்கு வரக்கூடாது…”

——-

” அரசியலுக்கு வர என்ன செய்யவேண்டுமென்று தெரிந்தால், நானே அரசியலுக்கு வந்திருக்க மாட்டேனா…? ”

——
தமிழ்நாட்டு அரசியலுக்கு தமிழர்கள் மட்டும் தான் வர வேண்டும் என்று சொல்வது பற்றி –

” காந்திஜி வரவில்லையா, நேருஜி வரவில்லையா, போஸ் வரவில்லையா..?” என்கிறார்…

அவர்கள் எல்லாரும் தமிழ்நாட்டு அரசியலுக்கா வந்தார்கள்…?

சிலர் எப்போதுமே வெளிப்படையாக பேசுவார்கள்… இவருக்கு நேரடியாக எதையும் சொல்லும் வழக்கமே கிடையாது போலும்….

—————–

பின் குறிப்பு –

அதென்ன தலைப்பில் “பார்த்தசாரதி” என்று சிலர் நினைக்கக்கூடும்.

இரண்டு காரணங்கள் –

– தலைப்பில் சினிமா நடிகர்களின் பெயரைப்பார்த்தாலே, தமிழ்மணம் மென்பொருள், திரைமணத்தின் பக்கம் தள்ளி விடுகிறது… நான் இது அரசியல் தலைப்பிலேயே படிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.

– அண்மையில் ஒரு நீதிமன்ற ஆவணத்தில் பார்த்தேன்… கமலுக்கு “பார்த்தசாரதி” என்றும் ஒரு பெயர் இருக்கிறது….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to பார்த்தசாரதி சார் இன்னும் கொஞ்சம் தெளிவாக பேசினால் தான் என்ன….???

 1. சைதைஅஜீஸ் சொல்கிறார்:

  நாம எல்லோருமே ஒருவித அச்ச உணர்வோடவே வாழ பழகிவிட்டோம்! ஆல்வேஸ் டு பீ ஸேஃப்!!
  அச்சம்= கமல்
  ஸேஃப் = சாரதி

 2. சிவம் சொல்கிறார்:

  1) தான் ஒரு சினிமா நடிகனாக அல்லாமல் “அறிவுஜீவி” யாகவே
  உணரப்பட வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு எப்போதும் உண்டு.
  அவரின் எல்லா செய்கைகளிலும், பேச்சுகளிலும் இதை காணலாம்.

  2) மிதமிஞ்சிய முன் ஜாக்கிரதை உணர்வு.
  எதிர்ப்பு வந்தால், நான் அப்படி சொல்லவில்லையே – நீங்கள் தவறாக புரிந்து கொண்டால் நான் என்ன செய்வது என்று கேட்க உதவும்.

  3) ரஜினியின் அரசியல் பிரவேசம் அவருக்குள் ஏற்படுத்தி இருக்கும் ஒரு வித
  தாழ்மையுணர்வு. (inferiority complex)

 3. இளங்கோ சொல்கிறார்:

  “பார்த்தசாரதி ” புதுசா இருக்கே; இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே சார்

 4. paamaranselvarajan சொல்கிறார்:

  ” பிக் பாஸ் ” நிகழ்ச்சி தாெகுப்பாளர் இந்த அளவுக்குதெளிவாக பேசினால் பாேதாதா …?

 5. kayshree சொல்கிறார்:

  Paramakudi Parathasarathy Iyengar was his father ..

  • paamaranselvarajan சொல்கிறார்:

   கமலின் அப்பா திரு.டி.சீனுவாசன். கமலின் இயற்பெயர் தான் ” பார்த்தசாரதி” விக்கிபீடியாவில் காணலாம் …!

 6. NS RAMAN சொல்கிறார்:

  Kamal needs more clarity on his political views. But his political knowledge is at par with any common man. In tamilnadu we are expecting and believing cinema actors are heros in real life and they know everything under Sun. As a result in the past 5,decades we elected only glamor political leaders without any visionary..

 7. Mahesh Thevesh சொல்கிறார்:

  ஒரு துறையில் நாட்டம் உடையவர்கள் மற்றத்துறைகளில் சிரத்தை காண்பிப்பதில்லை.அதுவும் கனவுலகு என கூறப்படுகிறசினிமாத் துறையில் இருப்ப வர்களுக்கு மற்றதுறைகள் ஒரு பொருட்டாகத்தெரிவதில்லை.தங்கள் முன்னேற்றம் தவிர வேறு எதிலும் நாட்டம் இருப்பதில்லை.அவர்களின் பொது அறிவும் பூஜ்ஜியமே, பொது மக்கள் தங்கள் Hero worship ல் அவர்களை அறிவாளிகள் எனத்துதிபாடுகிறார்கள். மற்றப்படி பொதுமக்களின் பொது அறிவிலிருந்து மேம்பட்டதில்லை.ஒரு சில புறநடை இருக்கலாம். பள்ளிப்படிப்பையே பூர்த்தி செய்யாதவர் களிடம் தெளிவு, விவேகம், அறிவு இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பது எங்கள் அறியாமையே ஆகும்,

 8. தமிழன் சொல்கிறார்:

  கமல் அவர்களுக்கு அவர் சார்ந்த சமூகத்தினால், எப்போதும் திமுகவைச் சார்ந்தே இருக்கவேண்டிய நிலைமை. சினிமாவிலும், அவருக்கு ரஜினி அளவு மக்கள் ஆதரவு இல்லை. இன்றைக்கும் இருவரும் வெவ்வேறு இடங்களில் கூட்டம் நடத்தினால், கமலுக்கு மக்கள் ஆதரவு சுத்தமாக இல்லை என்பது தெரிந்துவிடும். கமல் சிவாஜி போல. மக்கள் ரசிப்பார்கள், வாக்குகள் கிடையாது. ரஜினி, எம்ஜியார் போல, மக்கள் ரசிப்பார்கள், நல்லவர் என்று நம்புவார்கள், வாக்களிப்பார்கள்.

  கமல் எப்போதும் என்ன பேசுகிறார் என்பது, மற்றவர்களுக்குப் புரிவது கடினம். இதன் காரணம் அவருக்கு Clear thought process கிடையாது. ஒன்றைச் சொல்ல வருவதற்குள் அவர் mindல் வேறொரு விஷயம், அதுவும் சொல்லவரும் விஷயத்துக்கு contraryயாக ஓடும். அதனால்தான் இந்த clarity இல்லாத பேச்சு.

 9. Chaaru சொல்கிறார்:

  சாதாரண மனிதன் மாதிரி தான் நினைப்பதை டீக்கடையில்- ஒரு பேருந்து நிறுத்தத்தில் பேசுவதைப்போல கமல் போன்ற ஆளுமைகளால் பேச முடியாது. அதுவும் இந்த நிகழ்ச்சி வேறு ஒரு காரணத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டது. வேண்டுமெண்றே பத்திரிக்கையாளர்கள் கமல் வாயை நோண்டுகிறார்கள். அதுவும், ரஜினி அரசியல் பிரவேசம் பற்றி ரஜினியிடம் கேட்பார்களா? அவர் சொல்வதை மட்டும் கேட்டுக்கொள்வார்கள். கமலிடம் எகனை மொகனையாக கேள்வி கேட்பது…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.