GST – என்கிற மெகா மோசடி….!!!யானையை பார்த்த குருடர்கள் போல்,
ஒவ்வொரு அரசியல்வாதியும், ஒவ்வொரு பொருளாதார
நிபுணரும் ஆளாளுக்கு,விளக்கம் கொடுத்தனர். GST வந்து
விட்டால் நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடும் என்று
மட்டும் தான் சொல்லவில்லை. மற்றபடி அனைத்து
மக்களுக்கும், அனைத்து வியாபாரிகளுக்கும் பெரிய
விடிமோட்சம் என்று பறையடித்து, பத்திரிகைகளிலும்,
தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்கள் வேறு.

கிட்ட வரும்போது தான், விவரங்கள் ஒவ்வொன்றாக
வெளிவரும்போது தான் வண்டவாளங்கள் எல்லாம் தெரிய
ஆரம்பிக்கின்றன.

சுதந்திரம் கிடைத்ததிலிருந்து இதுவரை இல்லாத மிகப்பெரிய
மோசடி இது… மாநில அரசுகளும், மத்திய அரசும் சேர்ந்து
நடத்தும் மெகா மோசடி… மக்கள் மீதான தாக்குதல்.

மக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்காமல், விவாதிக்க
வழி எதுவும் செய்யாமல் குருட்டுத்தனமாக மக்களை மிக
மோசமாக பாதிக்கும் முடிவுகள் எடுப்பது.

முன்பெல்லாம் எந்த பொருளுக்கு வரி விதிப்பது என்றாலும், மாநில சட்டமன்றத்திலோ, பாராளுமன்றத்திலோ, முறையாக பட்ஜெட் மூலம் மசோதா முன்வைக்கப்பட்டு, விஷயம் விவாதங்களுக்கு உட்படுத்தப்படும் என்கிற முறையில், முடிவு எதுவும் எடுக்கப்படும் முன்பே மக்களுக்கு அதைப்பற்றிய தங்கள்
கருத்தை தெரிவிக்க உரிய வாய்ப்புகள் இருந்தன.

இப்போது முற்றிலும் இருட்டடிப்பு செய்து, மூடிய அறையினுள் சில மாநில, மத்திய மந்திரிகள் சேர்ந்து எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி என்று குருட்டுத்தனமாக முடிவெடுத்திருக்கின்றனர்.

கொஞ்சநஞ்சம் அல்ல 5 சதவீதத்தை விட்டால் அடுத்தது 12, 18, மற்றும் 28 சதவீதம்…
சும்மா பந்தை பொந்துக்குள் போடுவது போல் கிட்டத்தட்ட
1211 பொருட்களை, அவர்களுக்கு தோன்றிய பொந்துகளுள்
போட்டு விட்டார்கள். யோசித்து தீர்மானித்த மாதிரியே இல்லை.

இந்த பந்து, பொந்து விளையாட்டுக்காக இவர்களுக்கு
ஸ்ரீநகர் வரை ஒரு உல்லாச சுற்றுலா பயணம், ஸ்டார் ஓட்டல்களில் வாசம் ….!!!

வெளியே தம்பட்டம் அடிக்கப்பட்டது – உணவுப் பொருட்கள்
அனைத்துக்கும் வரியிலிருந்து முற்றிலுமாக விலக்கு
அளிக்கப்படுகிறது என்று. உணவுக்கு விலக்கு என்று
தீர்மானிக்கும் அறிவாளிகள், தாகம் தீர்க்க குடிக்கும்
குடிதண்ணீருக்கு( cane water ) எப்படி வரி போட்டார்கள்…?

தண்ணீர் குடிப்பது ஆடம்பரமா, …? …luxury-யா …?

மக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க வாய்ப்பு கொடுக்காமலே ஜூலை 1- ந்தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்று அறிவிப்பு
வந்து விட்டது.

சாதாரண ஓட்டல்களில் சாப்பிடும் இட்லி, தோசைக்கு
12 % வரி. ஏசி ஓட்டல்களில் சாப்பிடுபவர்களு 18 % தண்டம்.
என்ன அயோக்கியத்தனம் இது…?

வருடத்திற்கு பத்து மாதங்கள் வெய்யில் வெளுத்து வாங்கும் சென்னை, திருச்சி, மதுரை போன்ற ஊர்களில் மக்கள் நிம்மதியாக உட்கார்ந்து சாப்பிட சாதாரண ஓட்டல்களில் கூட ஏசி வசதி செய்து தரப்படுகிறது. இது ஆடம்பரமா…?

இதற்கு தண்டனை 18 % வரியா…? கிட்டத்தட்ட
சாப்பாட்டிற்கு ஐந்திற்கு ஒரு பங்கு வரியா…?

இதென்ன ஜனநாயகமா அல்லது பகாவலி ஆட்சியா ….?
மக்கள் அனைவரும் குடும்பம் குடும்பமாக தெருவோர
கையேந்தி பவனில் தான் சாப்பிட வேண்டும் என்று இந்த
மந்திரிகள் விரும்புகின்றனரா…?

கிட்டத்தட்ட 1211 பொருட்களுக்கு இப்படி மந்திரிகள்
மூடிய அறையில் உட்கார்ந்து முடிவெடுத்திருக்கின்றனர்.

இதன் விளைவுகள், நமக்கு ஜூலை 1-ந்தேதிக்கு
பிறகு, நடைமுறையில் அனுபவிக்கும்போது தான் ஒவ்வொன்றாக தெரிய வரும்….

இன்னும் என்னென்ன அதிர்ச்சிகள் காத்திருக்கின்றனவோ…!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to GST – என்கிற மெகா மோசடி….!!!

 1. Bagawan சொல்கிறார்:

  Dear Sir,
  In most countries there is only one GST rate with exemptions for some essential items. The GST rate in Malaysia is only 6% introduced around 2 years ago and in Singapore it is 7%. Previously it was only 5% when GST was introduced in Singapore.
  We are paying for the wrong choice of government we elected.

 2. கார்த்திகேயன் சொல்கிறார்:

  “பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” – வேற என்ன சொல்ல 😭

 3. புதியவன் சொல்கிறார்:

  நான் வசிக்கும் தேசத்தில், அதன் சுற்றுவட்டார தேசங்களில், வாட் வரி போடவேண்டும் என்று உத்தேசிக்கும்போதே, ஹோட்டல்களுக்கு கிடையாது என்று சொல்லியிருக்கிறார்கள்.

  “வராக் கடன்” கொடுத்த அரசியல்வாதிகளில் வீட்டில் ரெய்டு நடத்தி பணத்தை மீட்டால், இன்னும் நூற்றாண்டுகளுக்கு அரசுக்கு வரியே தேவையில்லை. நரசிம்மராவ் காலத்துக்கு முன்பு (அதாவது அறிஞர் மன்மோகன்சிங், சௌதி வேலையிலிருந்து துரத்தப்படாத காலத்துக்கு முன்பு) இந்தியா இன்னும் நிம்மதியாக இருந்ததுன்னுதான் தோணுது.

  மற்ற நாடுகளைவிட நாம் முன்னேறணும்னு நினைச்சால், அரசு, வரி போடறதுல மட்டும் முன்னேற்றமடையச் செய்யுது. இப்போ புதுசா, ‘மாட்டுக்கறி’ என்று தேவையில்லாதவற்றில் முன்னுரிமை கொடுத்துச் செயல்படுது. என்ன திட்டம், எங்கே இந்தியாவைக் கொண்டுபோய் விடப்போறாங்கன்னே தெரியலை. வாஜ்பாய் காலத்தை இந்தியாவுக்கு சாலைகள் கொண்டுவந்த காலம்னு நினைவுகூறமுடியும். சென்ற காங்கிரஸ் அரசை, ஊழல்கள் எப்படியெல்லாம் மா’நிலக்கட்சிகளோடு சேர்த்துச் செய்யலாம் என்று காட்டிய காலம், அதற்கு முந்தைய 5 ஆண்டுகாலம், எப்படி தமிழ் இனத்தை மானிலக் கட்சியோடு சேர்ந்து அழிக்கலாம் என்று காட்டிய காலம். மோடி அவர்களின் 5 வருட ஆட்சியை எப்படி நினைவுகூறப்போகிறோம்? ஒன்றும் தெரியவில்லை.

  என் வருத்தம் எல்லாம், கம்யூட்டர் (ஐ.டி) போன்ற பிரிவினர், ஷேரில் லட்ச லட்சமாகச் சம்பாதிப்பவர்கள், ஏகப்பட்ட வாகனங்களை வாங்கி வாழ்க்கையை அனுபவிப்பவர்கள், பெரும் பணம் பெறும் நடிக/நடிகைகள்/இயக்குனர்கள் போன்றோர் – எத்தனை வரி போட்டாலும் கொடுத்துவிடுவார்கள். 50% மேல் உள்ள ஏழைகள், 20% மேல் உள்ள நடுத்தர வர்க்கம் – எங்க போவார்கள்?

  இதைப் பிரச்சாரம் செய்ய ஆட்கள் இல்லையா இப்போ? அல்லது இதுல கவனம் திரும்பக்கூடாது என்பதற்காக ‘மாட்டு இறைச்சி’ போன்ற தேவையில்லாத சென்சேஷனல் பிரச்சனைகளை அரசு தூண்டுகிறதா?

  • குலாம் ரசூல் சொல்கிறார்:

   //இதுல கவனம் திரும்பக்கூடாது என்பதற்காக ‘மாட்டு இறைச்சி’ போன்ற தேவையில்லாத சென்சேஷனல் பிரச்சனைகளை அரசு தூண்டுகிறதா?//

   இதுல என்ன சந்தேகம்.

   இவர்கள் இந்துராஷ்ட்ரம் வேறு அல்ல கொண்டுவரப் போகிறதாக சொல்கிறார்கள். அது எப்படி இருக்கும் என்று தெரியாது. ஆனால் இப்படி தானோ என்று இவர்களே முகவுரை எழுதுகிறார்கள். பேஷ்..பேஷ்…

   அல்ல இவர்களின் இந்துராஷ்ட்ரம் இப்படி இருக்கும்.

 4. தமிழன் சொல்கிறார்:

  1970கள்ல அரசு விரைவு பஸ்கள் (திருவள்ளுவர்) அறிமுகம். போக்குவரத்துத் துறை அமைச்சர் முத்துசாமி, வித்தியாசமாக, சீட்களை மறைக்கும் விதமா திரைச்சீலை கொண்டுவந்தார் (ஒரு பஸ்ல ஈரோடிலிருந்து செல்லுவது என்று ஞாபகம்). அதாவது, கூஃபே போன்று.

  அரசு போக்குவரத்துத்துறையை ஒழுங்கா நடத்தமுடியலைனா, அதுக்கு எதுக்கு அமைச்சர்? தனியார் நிறுவனம் பஸ்களை செம லாபத்தில் நடத்துவது சாத்தியம்னா, அரசும் அதே தரத்தில், ஸீரோ லாபத்தில் நடத்தமுடியாதா? அரசுக்கு ஸ்லீப்பர் பஸ் போன்று தரமான பஸ் விடத்தெரியாதா? தனியார் பணியாட்களுக்கு என்ன சம்பளமோ, சலுகையோ அதனையே அரசு கொடுக்கமுடியாதா?

  தடுப்பணை, தூர் வாருவது – இதிலெல்லாம் அரசு கவனத்தைச் செலுத்தக்கூடாதா? டாஸ்மாக் வருமானத்தை இதில் திருப்பினால், தம்ழ்னாடும் விவசாயிகளும் மகிழ்வார்களே.

  இன்றைக்கு ஆவின் பற்றி அமைச்சர் சொல்கிறார். அது சரியாகத்தான் இருக்கும். ஆவின், தீபாவளிக்கு இனிப்புகள் செய்து ஆவின் பூத்களில் விற்கும்போது, நொடிப்பொழுதில் (நான் அதிகமாகச் சொல்லவில்லை. 1 மணி நேரத்துக்குள்) விற்றுத்தீர்ந்துவிடுகிறது (ஏனென்றால், தனியார் கடைகள் நெய் இனிப்புகளை கொள்ளை லாபம் வைத்து விற்கிறார்கள். உதாரணமா, ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நெய் லட்டு (திருப்பதி லட்டு அளவு) 150 ரூ-இப்போ ஜாஸ்தியாயிருக்கலாம்.. திருப்பதி நெய் லட்டு அடக்கவிலை 37 ரூ, பக்தர்களுக்கு 20 ரூ).

  மத்திய அரசு, CAN WATERக்கு (பெப்சி போன்ற பன்னாட்டு கம்பெனி) கடுமையான வரிவிதிப்பையும், உள்ளூர் சிறு தொழில்களுக்கு வரியில்லாமலும் செய்யத்தெரியாதா? ஒரு ‘கால்’ உள்ளவனையும், ரெண்டு கால் உள்ள ப்ரொஃபஷனலையும் ஒரே மாதிரி பந்தயத்தில் ஓடச்செய்யலாமா? பன்னாட்டுக் கம்பெனிகள் பணத்தைக் குவித்து எதிரிகளை இல்லாமல் செய்யும், 3 வருடங்களுக்கு நஷ்டத்தைத் தாங்கும். இது உள்ளூர் பொருட்கள் தயார் செய்பவர்களுக்கு முடியுமா?

  அரசு என்பது மக்களுக்காக என்பது போய்விட்டது போலிருக்கிறது. 50% ஏழைகள் எக்கேடு கெட்டுப் போகட்டும் என்று அரசு விட்டுவிட்டதா? அல்லது, டாஸ்மாக் மூலம் மக்கள் புத்தியை மழுங்கடித்ததுபோல், தேவையில்லாத பிரச்சனைகளைக் கிளப்பி, சந்தடி சாக்கில் பணக்காரர்களின் அரசாக ஆகிக்கொண்டிருக்கிறதா?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ஒரு முக்கியமான பாயிண்டை எழுத மறந்து விட்டேன்.

   இந்த இடுகையை எழுதத்தூண்டிய கேன் தண்ணீருக்கான ஜிஎஸ்டி எவ்வளவு என்று சொல்ல மறந்து விட்டேன்..

   18 % வரி…!!! மக்களை மறந்த அயோக்கியர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.

   நகரங்களை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து இந்த பஞ்ச காலத்தில், பெரிய போர்வெல் ( borewell ) குழாய்களைப் போட்டு, தண்ணீர் எடுத்து, கேன் களின் நிரப்பி, வேன் களில் கொண்டு வந்து கொடுக்கப்படும், கிட்டத்தட்ட குடிசைத்தொழிலான தண்ணீருக்கு தான் 18 சதவீத வரி.

   மக்களுக்கு அத்தியாவசியமான குடிதண்ணீரை (காசுக்கு கூட) கொடுக்க வக்கில்லாத அரசுக்கு, பிறர் கொடுக்கும் தண்ணீருக்கு வரி போட என்ன யோக்கியதை இருக்கிறது…?

   இன்னொரு விஷயம் – ஆயுர்வேத மருந்துகளுக்கு தற்போது 7 % வாட் வரி விதிக்கப்படும் நிலையில், GST -யில் 12 % ஆக உயர்த்தப்படுகிறது….

   நிஜமாகவே இதையெல்லாம் யோசித்து தான் முடிவெடுக்கிறார்களா இல்லை லாட்டரி மாதிரி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து வரி போடுகிறார்களா என்று புரியவில்லை.

   இன்னும் அப்பளம், வடம், துடைப்பக்கட்டைக்கெல்லாம் என்ன வரி போடப்போகிறார்களோ தெரியவில்லை.

   நொந்துபோன பதஞ்சலி’க்காரரே கேட்கிறார்… ஆயுர்வேத பொருட்களுக்கு வரியை உயர்த்தினால் “அச்சே தின்” எப்படி வரும் என்று…

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • தமிழன் சொல்கிறார்:

    “இல்லை லாட்டரி மாதிரி குலுக்கல் முறையில் ” – கா.மை. சார்.. கொஞ்சம் பொறுத்திருங்கள். நிச்சயம் யாராவது எல்லாப் பொருட்களையும் ஸ்டடி செய்து, எதனால் இப்படிச் செய்திருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பார்கள்.

    ‘மேக் இன் இந்தியா’ன்னு சொல்லிட்டு, இப்படிச் செய்வது எந்த லாஜிக்ல வருமோ.

    என்னைக் கேட்டால், ஒரு குறிப்பிட்ட பணத்தை முதலீட்டாகப் போட்டுச் செய்யும் தொழில்களுக்கெல்லாம் விலக்கு கொடுக்க வேண்டும். ஏனென்றால் அது குறுகிய மார்க்கெட்டுக்காக உற்பத்தி செய்யப்படுவது. உதாரணமா, டீம் குடி தண்ணீர் – இது நிச்சயமா கும்பகோணத்துல கிடையாது. அங்க, ஒரு உள்ளூர் குடி தண்ணீர் கேன் விற்பனையாகும்.

    உங்கள் பதில் பயத்தைத் தூண்டுகிறது. சிறு குடிசைத் தொழிலான அப்பளாம், வடாம், இனிப்பு கடைகள் (நெல்லை அல்வா போன்ற அந்த இடங்களுக்கு மட்டும் விற்பனை செய்யப்படும்) – இவைகளுக்கும் ஜி.எஸ்.டி. போட்டு கழுத்தை நெறிக்காமல் இருந்தால் சரிதான்.

 5. paamaranselvarajan சொல்கிறார்:

  ஆங்கிலேயர் ஆட்சியில் ” குனிந்தால் வரி, நிமிர்ந்தால் வரி, நின்றால் வரி, உட்கார்ந்தால் வரி, நில வரி, நீர் வரி, பாசி வரி, ரோட்டு வரி, காட்டு வரி, வீட்டு வரி, மோட்டு வரி, கொடுக்கல் வரி, வாங்கல் வரி, வருமான வரி, தொழில் வரி, டோல்கேட் வரி, ரயில் வரி, சாக்கடை வரி, சாராயக்கடை வரி, மாட்டு வரி, நாய் வரி, பூனை வரி, இறக்குமதி வரி, ஏற்றுமதி வரி ” என்று ஏகப்பட்ட வரி விதிப்புகளை பற்றி … மகாகவி பாரதி சுட்டிக்காட்டி வருந்தியதை பாேல … இந்த காேணல் மானலான … எதை …எதற்கு … ஏன்செய்கிறாேம் என்பது புரியாமல் ..ஏனாே தானாே எனறு ஆட்சிசெய்கிற …இவர்களை எண்ணி எதனால் அடித்துக் காெள்ளுவது என்று புரியாமல் தவிப்பதுதான் …இன்றைய மக்களாட்சி என்று மார்தட்டிக்காெள்வாேம்…..?

 6. kayshree சொல்கிறார்:

  OPS was responsible for his intransigence of appoving this when he was chief minister of tamilnadu when AMMA passed away, who did not give her concurrence. it was a diabolic move by bjp as soon as Amma died to get the concurrence of the tamilnadu govt. without understanding the implications of what was what, he blindly signed in order to remain in power. now the people are suffering.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.