கிழிச்சீங்க …பாஜக 3 ஆண்டு பற்றி கூட்டாளி சிவசேனா விமரிசனம்….!!!


மத்தியில் பாஜகவின் 3 ஆண்டுக்கால ஆட்சி நிறைவையொட்டி, நாடு முழுவதும் கோலாகலமாக கட்சியினராலும், மத்திய அரசாலும் கொண்டாடப்படுகிறது.

தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும் மற்றும் எல்லா வித மீடியாக்களும் விரிவான விளம்பரங்களும், paid news செய்தி கட்டுரைகளும் வெளிவந்திருக்கின்றன.

கொண்டாட நிறைய பேர் இருப்பதால், நாம் அதன் அடுத்த பக்கத்தை பார்ப்போம்.

சிவசேனா, மஹாராஷ்டிர கூட்டணி அரசில் பாஜகவுடன் இணைந்து பங்காற்றுகிறது. மத்திய அரசிலும் பங்கு வகிக்கிறது. சிவசேனாவை சேர்ந்தவர் மத்திய மந்திரியாக இருக்கிறார்..!!!

பாஜகவின் “ஜிக்ரி தோஸ்த்” எனப்படும் (கொள்கையளவில்)
மிகவும் நெருங்கிய கூட்டாளியான சிவசேனா கட்சி என்ன
சொல்கிறது என்பதைப்பற்றி, தினமணி ஒரு செய்தி
வெளியிட்டிருக்கிறது…..

கூட்டாளியே விமரிசனம் செய்தால், சுவாரஸ்யமாக தானே
இருக்கும்….? நண்பர்களின் பார்வைக்கு கீழே –

( http://www.dinamani.com/india/2017/may/30/ )

Jpeg

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

17 Responses to கிழிச்சீங்க …பாஜக 3 ஆண்டு பற்றி கூட்டாளி சிவசேனா விமரிசனம்….!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  சிவசேனை கூட்டாளி இல்லை கா.மை. சார். கட்டுச்சோத்துப் பெருச்சாளி. பாஜக மற்றும் சிவசேனை, ஒரே ஆடியன்ஸை வாக்குக்காக எதிர்பார்ப்பதால், சிவசேனை, பாஜகவின்மீது கோபத்தில் இருக்கிறது. பால்தாக்ரே இல்லாததால், பாஜக விசுவரூபம் எடுத்துள்ளதும் (மகாராஷ்ட்ராவில்), சிவசேனையே இரண்டாகப் பிளவு பட்டுள்ளதும்தான் இந்தக் கோபத்திற்குக் காரணம்.

  பாஜக இதை வித்தியாசமாகச் செய்தது என்பதற்கு இதுவரை ஒரு உதாரணமும் இல்லை. (அதுக்காக 500/1000 ரூ என்று யாரும் வரக்கூடாது). ஒரு கவனிக்கத்தக்க வித்தியாசம், பிரதமர் ஊழலில் ஈடுபடவில்லை, உழைக்கிறார், தைரியமான முடிவுகளை எடுக்கிறார், அவருக்குத் தெரிந்த வரையில் ஊழலில் யாரும் ஈடுபடுவதைத் தவிர்க்கக் கண்காணிக்கிறார். இந்த 3 வருடங்களும், சினிமாவில் பில்டப் என்று சொல்வதுபோல்தான் போய்க்கொண்டிருக்கிறது. இடைவேளைக்குள்ளாவது என்ன செய்யப்போகிறார்கள் என்பது சரியாகத் தெரிந்தால் தேவலை.

  1. ஊழலுக்கு எதிராக நடவடிக்கை
  2. நாட்டின்மேல் கொண்ட அக்கறை (முழு இந்தியாவுக்கும். இப்போது தமிழகத்தில் மேற்கொள்ளும் எந்தத் திட்டமும் தமிழகத்துக்கு நல்லதல்ல)
  3. ஏழைகளின் மேம்பாடு, சுதேசிப் பொருட்கள், தொழில்களை ஆதரித்தல்

  இவைகளில் குறிப்பிடத்தக்க எதுவும் நடந்துவிடவில்லை. ‘ஊழலுக்கு எதிரான அரசியல் நடவடிக்கை’தான் நடக்கிறது என்று யார் குற்றம் சாட்டினாலும், அதை மறுப்பதற்கு ஒரு உதாரணமும் இல்லை.

  தங்க நாற்கரச் சாலை அமைத்த வாஜ்பாய் அரசே, ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று சொன்னதற்கு மக்கள் வாக்களிக்கவில்லை. இப்போதுள்ள அரசு, ‘மூன்றாண்டுச் சாதனை’ என்று சொல்ல எதுவுமில்லை. வெறும் விளம்பரங்களால் வாக்குகள் குவியுமா?

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  பற்றி எரிந்து கொண்டிருக்கும் ஒரு முக்கியமான விஷயத்தைப்பற்றி
  நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்….

  தனி மனிதரின் உணவு பழக்க வழக்கங்களில் கைவைக்க யாருக்கும் உரிமை இல்லை; இதுவரை யாரும், எந்த அரசும் – இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டதும் இல்லை.

  பாஜகவுக்கு / மோடிஜிக்கு, தனி மெஜாரிடி கொடுத்தது தவறு என்று நான் பலமுறை இந்த தளத்தில் எழுதி இருக்கிறேன். அதன் முக்கிய காரணங்களில் ஒன்று – தட்டிக்கேட்கவோ, தடை சொல்லவோ யாரும் இல்லை என்பதால், தனக்கு தனி மெஜாரிடி இருக்கிறது என்கிற தெம்பில் பாஜக தான் நினைக்கும்,
  தான் விரும்பும் – எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கிறது.

  மாட்டிறைச்சி சம்பந்தமாக சிலரின் தனிப்பட்ட விருப்பு, விருப்புகளை, 120 கோடி மக்கள் உள்ள இந்த நாட்டின் மீது திணிப்பது மிகப்பெரிய தவறு.
  சைவமோ, அசைவமோ – இறைச்சியோ-இல்லையோ – அது அவரவரின் தனிப்பட்ட விருப்பம், பழக்கம்.

  மத்திய அரசு, உருப்படியாக செய்யவேண்டிய வேலைகள் எவ்வளவோ இருக்கும்போது தேவையே இல்லாமல் – இப்போது இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறது…

  ஏழை மக்களின் தலையில் கை வைக்கும் முன் –
  மத்திய அரசு முதலில் ஒன்றை செய்து காட்ட வேண்டும்.

  கடந்த 2016-ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் மாட்டிறைச்சி அதிகம் ஏற்றுமதி செய்த நாடுகளின் பட்டியலில் 19.60 சதவிகிதம் ஏற்றுமதி செய்து இந்தியா முன்னிலையில் உள்ளது. கடந்த ஆண்டில் 11 லட்சம் டன் மாட்டிறைச்சியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் கூறியுள்ள மதிப்பீட்டின்படி இதன் மொத்த வருவாய் மதிப்பு 26,000 கோடி ரூபாய். தோல் துறை ஏற்றுமதியில் மட்டும் இந்தியா பெற்றுள்ள மொத்த வருவாய் 12 பில்லியன் டாலர்கள்.

  முதலில் “தில்” இருந்தால், மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்வதை மோடிஜி அரசு தடை செய்து காட்டட்டும்.

  இந்தியாவின் மிகப்பெரிய, முக்கியமான அந்த ஆறு கார்ப்பரேட் நிறுவனங்களின் மீது (அதில் மூன்றின் உரிமையாளர்கள் இந்து’க்கள்…. ஒருவர் பாஜகவின் முக்கிய பிரமுகர்…) முதலில் கை வைக்கட்டும் …

  மற்றதை …. பிறகு பார்ப்போம்.

  -காவிரிமைந்தன்

  • புதியவன் சொல்கிறார்:

   உங்களுடைய இந்தக் கருத்தை வரவேற்கிறேன். தேவையில்லாத, காசு பெறாத விஷயத்தில் அரசின் கவனம் செல்வதையும், அதன்மூலம் தேவையில்லாத மத ரீதியான பிளவை உண்டாக்குவதையும் வெறுக்கிறேன். நீங்கள் எழுதியுள்ளவை, அரசுக்குத் தெரியாமல் இருக்கமுடியுமா?

   எனக்கென்னவோ, வேற ஏதோ விஷயத்தில் மக்கள் கவனம் திரும்பக்கூடாது என்பதற்காக இது நடக்கிறதோ என்று எண்ணம். தமிழ்நாட்டில் இப்போது தேர்தல் வரப்போவதில்லை. பிறகு ஏன் இந்தப் பிரச்சனை பெரிதாகிறது? பாஜக வேறு ஏதோ முக்கியமான விஷயத்தை மறைப்பதற்காகவோ, கவனத்தை திசை திருப்பவோ இதனைச் செய்கிறது என்றே தோன்றுகிறது.

   நீங்கள் இன்னொன்றையும் கவனிக்கவில்லையா அல்லது பொறுத்திருந்து பார்ப்போம் என்று நினைக்கிறீர்களா என்று தெரியவில்லை. அத்வானி அவர்கள் மீது சி.பி.ஐ. குற்றச்சாட்டு. பல வருடங்கள் தூங்கிக்கிடந்தவைகள், ஜனாதிபதி தேர்தல் அருகில் இருக்கும்போது பூதாகாரமாகக் கிளம்புகின்றதா, கிளப்பப்படுகிறதா? இன்றைக்கு எடப்பாடியை ஆட்டிவைக்கும் அளவுக்கு மத்திய அரசு சென்றுள்ளது, தமிழகத்துக்கு நல்லதில்லை. ஜெ. மட்டுமே இதுவரை, தமிழகத்தின் நலனைக் காக்க மத்திய அரசை, தைரியத்தோடும் மக்கள் ஆதரவோடும் எதிர்த்துவந்துள்ளார். (எடப்பாடி தலையாட்டிப் பொம்மையைப்போல் இருக்கிறார் என்றால், கருணானிதி தன் பல்வேறு குற்றங்களால், காங்கிரஸ் அரசுக்கு அடிமையைப்போல் இருந்தார். பாஜகவுக்கும்தான்)

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    நேற்றிரவு, நீங்கள் எழுதிய இந்த வாசகத்தைப்பற்றி தான் நிறைய நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன்….

    ———————-
    // எனக்கென்னவோ, வேற ஏதோ விஷயத்தில் மக்கள் கவனம் திரும்பக்கூடாது என்பதற்காக இது நடக்கிறதோ என்று எண்ணம். தமிழ்நாட்டில் இப்போது தேர்தல் வரப்போவதில்லை. பிறகு ஏன் இந்தப் பிரச்சனை பெரிதாகிறது? பாஜக வேறு ஏதோ முக்கியமான விஷயத்தை மறைப்பதற்காகவோ, கவனத்தை திசை திருப்பவோ இதனைச் செய்கிறது என்றே தோன்றுகிறது.//

    ————————–

    பிறகு படுக்கும்போது சிலவற்றை வாசித்தேன் – உங்கள் வாசகத்திற்கு தொடர்புடைய சில கிடைத்தன –

    1) “ஏன் மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது..?” என்று தான் இன்று எல்லா பக்கமும் குரல் கேட்கிறது…

    இதற்கு முக்கிய காரணம் மோடிஜி ஆட்சியில் எங்கோ நடந்துவிட்ட அல்லது நடந்துகொண்டிருக்கின்ற ஒரு விஷயத்தின் மீது மக்களின் கவனம் போய் விடக்கூடாதே என்பதற்காக இருக்கலாம்….?

    எல்லாரையும் திசை திருப்ப பசுவை பயன்படுத்துகிறார்
    பிரதமர். “சாணக்கிய தந்திரம்” …?

    சாணக்கிய சாஸ்திரம் சொல்கிறது – “மன்னனைக் குற்றம்
    சாட்டி மக்கள் பேசிக் கொண்டிருந்தால், எதாவது ஒரு
    மரத்தில் ஒருவனை இருட்டில் ஏற்றிவிட்டு கத்தச் சொல்.
    மறுநாள் காலை முதல் மக்கள் எல்லாரும் அதைப்பற்றியே
    பேசுவார்கள்… குற்றம் மறந்து, பேச்சு திசை திரும்பி விடும்..”

    2) கடைசியாக கிடைத்துள்ள தகவல்படி, கடந்த
    காலாண்டில் GDP மிகப்பெரிய அடி வாங்கி இருக்கிறதாம்.
    பயங்கர வீழ்ச்சி என்று சொல்கிறார்கள்…!!!
    விவரங்கள் …. சீக்கிரமே வெளிவரலாம்….!

    தற்கால அரசியல்வாதிகள் – சாணக்கியருக்கே புத்தி
    சொல்லக்கூடியவர்கள்…. அப்புறமென்ன….!

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • புதியவன் சொல்கிறார்:

     சாணக்கியரைப் படிக்கவேண்டாம். ஒரு தடவை சோவின் ‘முகமது பின் துக்ளக்’ பார்த்தாலே போதும். என்ன மாதிரியான சிந்தனைகளெல்லாம் அரசியல்வாதிகளுக்கு வரும் என்று சோ மாதிரி சொல்ல இயலுமா?

     We miss you CHO Sir. முடிந்த அளவு சார்பு இல்லாமல் நேர்மையாக, மிகவும் நையாண்டியாக, வருமுன் உரைப்பவராக விமரிசனம் செய்தீர்கள். அதில் நேர்மை இருந்ததால்தான், கட்சி வித்தியாசமில்லாமல் எல்லோரும் உங்களிடம் நட்பாக இருந்தார்கள் (அரசியல் ரீதியாக உங்களைத் தாக்கியபோதும்). We miss you CHO Sir.

  • DeathBirthRaceR சொல்கிறார்:

   பாவற்காய் கரைசல் கசக்கிறது பீட்சா திண்பவர்கள் சொல்வார்கள் போக போக அட மருந்தென உணர வேளை வரும் வேலை ஜரூராக்க இளைய சமுதாயம் ஆயத்தமாக வித்திட்டமைக்கு நன்றி கா.மை ஜி…..

   எல்லாம் சில காலமே யாவும் என ஆயத்தமைக்கு யார் பொறுப்புணர்வோ …..!

 3. Sundar Raman சொல்கிறார்:

  கா மை ..சார் , சிவா சேனா அடிபட்ட எலி , எங்க நோண்டலாம்னு பாக்கறாங்க . மூன்று வருடங்களில் எதையுமே செய்யலையா … பெரும்பாலான ஏழைகளுக்கு வங்கி கணக்கு , மிகவும் குறைந்த பிரீமியத்தில் இன்சூரன்ஸ் , விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு , நீம் கோட் செய்த உரம் , மின்சாரம் இல்லாத கிராமத்திற்கு மின் இணைப்பு -மின்னல் வேகத்தில் , சாலைகள் , பாலங்கள் , ஆதார் கார்டு மூலம் சரியான பண உதவி , ( கசிவு இல்லாமல் ).முத்ரா திட்டம் மூலம் எண்ணற்ற மக்களுக்கு கடன் உதவி .பள்ளி பாடங்கள் வெப் சைடில் , கைத்தறி துறையில் நிறைய மாற்றம் அதனால் முன்னேற்றம் . நிச்சயமாக ஊழல் இல்லை.

  என்ன செய்யவில்லை என என்னை கேட்டால் , வேலை வாய்ப்பு பெருக வில்லை ..முத்ரா மூலம் கோடிக்கணக்கானவர்கள் பயன் பெற்றாலும் , படிப்பை முடித்து வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்களுக்கு சரியான வாய்ப்பு இல்லை .

  சின்ன சின்ன கிராமங்களில் , விவசாயிகளுக்க்காக தனி திட்டம் எதுவும் இல்லை …கொஞ்சம் மாத்தி யோசித்து , மத்திய அரசு , ஒரு 10,000 JCB மெஷின்களை , ராணுவம் , மற்றும் கல்லூரிகள் மூலம் கிராமம் கிராமமாக போய் தூர் வாரி , ஆழ படுத்தி , நீர் நிலைகளை மேம்படுத்தி இருக்கலாம் , இன்னும் செய்யலாம் …செய்வார்கள் என நம்புகிறேன் .

  எனக்கு தெரிந்து , யார் யார் என்ன சாப்பிட வேண்டும் என்று கட்டாயமாக சொல்லவில்லை என நினைக்கிறேன். நிச்சயமாக அங்கெங்கு வன்முறையில் ஈடுபடும் பசு நேசன்களை , கட்டாயமாக தண்டனை வழங்க வேண்டும் . மாடு பிடி ப்ரோக்கர்களுக்கு தான் தடை , விவசாயிகளுக்கு அதனால் சில /பல தொந்தரவுகள் . பசுமை விகடனும் , மற்றும் நம்மாழ்வார் சொல்வது , இயற்கை விவசாயம் தான் நல்ல்லது – இயற்கை விவசாயத்திற்கு இன்றியமையாதது கால் நடை செல்வம் .

  சில வீடியோ எல்லாம் பார்த்தல் அதிர்ந்து போவீர்கள் , ஒரு பெரிய கொட்டகைக்குள் மாட்டை அடைத்து , பெரிய வெடிக்கட்டை வெடிக்க செய்வார்கள் , அப்பொழுது தான் அது பயந்து அதன் ரத்த ஓட்டம் அதிகமாகும் , உடனே அறுத்தால் , அந்த மாமிசம் ரொம்ப நன்றாக இருக்குமாம் . லாரியில் கொண்டு போவதை பார்த்தால் , யாருக்குமே கண்ணீர் வரும் . ( கண்ணில் மிளகாய் வைத்து…. ) —இப்படி எல்லாம் செய்வது தவறு , தண்டனை உண்டு என்று தான் சொல்கிறது மத்திய அரசு .

  மத்திய அரசின் இந்த முடிவில் … கோர்ட்டுக்கு ஒரு செக் , மாடு பிடி விளையாட்டையே அது விலங்குகள் கொடுமை , அது இது ன்னு தடை செய்தார்கள் ( இன்னமும் தீர்ப்பு வெளியாகவில்லை) அதுவே கொடுமை என்றால் , மாட்டை , பசுவை ஒரு வரை முறை இல்லாமல் , எந்த இடத்தில வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும், எப்படிப்பட்ட கால்நடைகளையும் அறுத்து உண்பேன் என சொல்வது கொடுமையிலும் கொடுமை … கோர்ட் அதை சரி என்று சொல்ல முடியாது . ஆர்வ கோளாறில் , மக்களுக்கு மத்தியில் நடு சாலையில் ஒரு கன்றை அறுத்து , இளைஞர் காங்கிரஸ் பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொண்டுள்ளார்கள் . அது ஏற்கனவே போட்டோவாகவும் , விடியோவாகவும் எடுத்தாச்சு , இனி அது நிறைய வெளிவரும் . தி.மு கவும் அந்த வழியில் , வலையில் விழுகிறது . கர்நாடக காங்கிரஸும் அதே வலைக்கு வருகிறது .

  • சிவம் சொல்கிறார்:

   சுந்தர் ராமன்,

   உங்கள் பின்னூட்டங்களை வைத்து – நீங்கள் மட்டன் சாப்பிடுவதில்லை என்று நம்புகிறேன்.
   பாஜக அரசு திடீரென்று ஒரு உத்திரவை போட்டு, நாளை முதல் நீங்களும் உங்கள் குழந்தைகளும் சோறு சாப்பிடுவதை நிறுத்தி விட்டு, மட்டன் தான் சாப்பிட வேண்டும் என்று சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள் ?

   • சிவம் சொல்கிறார்:

    பாஜக அரசு மட்டன் சாப்பிடுவதை தடுக்கவில்லை,
    மட்டனுக்காக மாட்டை விற்பனை செய்வதை தான் தடுக்கிறது என்று சமாளிக்காதீர்கள். யாருமே மாட்டை இறைச்சிக்காக விற்கக்கூடாது என்றால் மாட்டிறைச்சி எங்கிருந்து வரும் ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   சுந்தர ராமன்,

   சிவசேனா சொல்வது போல் பாஜக / மோடிஜி அரசு ஒன்றுமே செய்யவில்லை என்று நான் சொல்லவில்லை. சிவசேனா ஏன் சொல்கிறது என்பதையும் அறிவேன்.

   நிறைய நல்ல விஷயங்களும் நடந்திருக்கின்றன.

   பத்து ஆண்டுக்கால காங்கிரஸ் கூட்டணியின் ஊழல் அரசை பார்த்த நமக்கு, இந்த அரசின் மீது பெரிய அளவில் ஊழல் புகார் எதுவும் இதுவரை சொல்லப்படவில்லை என்பதே ஒரு சாதனை தான்.

   ஆனால், மோடிஜி /பாஜகவின் கவனம், அக்கறை, செயல்பாடுகள் அனைத்தும் “நாடு முழுவதுக்கும் பாஜ கட்சியை எப்படி விஸ்தரிப்பது – அத்தனை மாநிலங்களிலும்
   பாஜக ஆட்சியை எப்படி கொண்டு வருவது..?” என்பதில்
   தான் முனைந்து செல்கின்றன… தேசத்தின் வளர்ச்சி எல்லாம்
   பொதுக்கூட்டங்களில் பேசுவதற்கு மட்டும் தான்.

   அதே போல், பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் அது ஆடும் நாடகங்கள் – காணச்சகிக்கவில்லை. இருக்கும் ஆட்சியை கவிழ்க்கவும், தங்கள் வசத்தில் கொண்டு வரவும் அது செய்யும் அசிங்கங்கள் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் தரம் தாழ்ந்து போகின்றன.

   “சப் கா சாத்” என்பது மோடிஜியின் பேச்சில் மட்டும் தான் இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களையும் அணைத்து
   செல்ல வேண்டும் என்கிற எண்ணம் சுத்தமாக இல்லை.

   ” நான் மெஜாரிடி – நீ மைனாரிடி… நான் சொல்கிறபடி தான்
   இங்கு எதுவும் நடக்க வேண்டும்….” என்று நினைத்தால்,
   இப்போதைக்கு கையில் அதிகாரம் இருக்கிறது – நடத்திக்கொள்ள முடியும்.

   ஆனால் – தேசத்தை இது எங்கு கொண்டு போய் விடும்…?

   இது பன்முனை கலாச்சாரங்களால், பல மொழிகளால்,
   பல இனங்களால், பல மதங்களால் இணைந்துள்ள ஒரு நாடு. இதில் எதாவது ஒரு இனம் அல்லது மொழி அல்லது மதம் – மற்றவற்றை அடக்கியாள வேண்டும் என்று முயற்சித்தால் ….

   அதன் விளைவுகள் இந்த தேசத்திற்கு நல்லதல்ல.
   அனைத்து மக்களும் நிம்மதி இழந்து தவிக்க நேரிடும்.

   இராக்கில் அமெரிக்கா செய்த தவறின் விளைவு தான் இன்று உலகம் பூராவும் பயங்கரவாதத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

   அடக்குமுறையாலும், அதிகாரத்தாலும் – யாரையும் நீண்ட
   நாட்களுக்கு அடக்கி வைக்க முடியாது. எல்லாருக்கும் உரிய இடத்தை, மரியாதையை, உரிமையை கொடுத்து அனைவரையும் அணைத்துச் செல்வதன் மூலமே
   நிரந்தரமான நிம்மதியை உருவாக்க இயலும்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Sundararaman சொல்கிறார்:

    I agree with your thoughts and intentions…and few points like democracy under attack in Goa , Arunachal, Manipur…but not certainly in New Delhi ( kejriwal is in the final dance stage…he already put his hand in head by watching mohini ).
    Congress with even this fewer states and MP’s , creating a hell..so BJP is being careful and bit nasty as well.
    Minority position is better in BJP ruled state than West Bengal.( education, employment , school enrollment)…watch they will get better in UP.

    Dear Shiva…please refer to my comments, only a broker ( from Kerala ) can’t buy, it can be sold to slaughter house.

    Again I say its a trap…see different high court ..different judgements. All are discussing for and against it.

 4. DeathBirthRaceR சொல்கிறார்:

  உயிர் ~ பல்லுயிர் ~ எல்லாம் ஏதோ என திண்ணமாய் நினையா தேசமாய் இருப்பதை சதா சர்வ சித்தமாய் தலைவன் இனி கிட்டாத தேசமே நம் தாய்த்திரு பாரத தேசம் ~ நடப்பிப்பது மோடி போல இனி வாய்க்காத தேசமே இளைய தலைமுறை தன்னிலை மறந்து தியாக திரு வாக்கியம் எடுத்தியம்ப கேட்கும் தலைவனை இனி ஒரு காலமும் கிட்டாத தாயீந்த தலைவன் ஆளும் ஏதும் வாழவே தேசமும் உயரவே என உள்ள காலம் சுட்டி காட்டு இளைய நாளைய இந்திய உலக உருவில் நாம் இதயம் என தூய்மை காட்டு இளைய திரவிய தூய இந்தியாவே வாழ்க ~ கல்வி ~ செல்வம் ~ வீரம் ~ தியாக திருவுள்ளம் இளைய அரவணைக்கும் இந்தியாவே என இதயமெல்லாம் துடிக்கட்டும் ~ கட்டமைக்கட்டும் வருங்காலம் வரவேற்க உலகே ஆயத்தமாக செயலாற்று என்னிந்திய மனிதமும் உயிரே என காடும் மலையும் சார்ந்த பசுமை பல்லுயிர் உலகே நிமிர வளரட்டும் ~ இயற்கை அன்னை சிலாகிக்க பசுமை விளங்கட்டும் யாவும் …………… சிந்தாத துயரா தேச சுதந்திர தியாகம் அறியாத இளைய இரத்தமா நம் தேசம் ~ செழிக்கட்டும் என துணையாயிரு இயற்கை என இறையாண்மை தேசமே நம் இளைய தேசம் ~ காலமே காக்கும் தூய ஆன்மா இறையாண்மா என் பல்லுயிர் போற்றும் தேசமென வாழ்க வாழ்த்து இதயங்களே மதமே கடந்து தூய்மை காட்ட துணி தேசமே…..

  • இளங்கோ சொல்கிறார்:

   DeathBirthRaceR,

   ப்ளீஸ் இதன் தமிழ் மொழிபெயர்ப்பையும் பதிவிடுங்களேன்.

  • DeathBirthRaceR சொல்கிறார்:

   தலைவன் ~ சதா சர்வ சித்தமெல்லாம் இனி மோடி தலைமை கிட்டாத பாக்கிய தேச பக்தி தாய்திருநாடே நம் பாரத தேசம்~ இளைய தலைமுறை குறிப்பு அடிகோடிட்டு தன் அடுத்த தலைமுறை என செவிசாய்த்து ஆழ அறிவியல் ஆன்மீக வழிநடத்தும் மனிதாபி தலைவரே (நடந்தது பின்னாள் என மோடி தன் தேசபற்றால் விவரித்ததை நாட்டு மக்கள் விமரிசித்ததை கேட்டு தனியனாக ஆதங்கம் காட்டி கொள்ளாத தலைவரை இனி பெறாதே நம் தேசம்) உலக உடலில் இந்தியா என்றுமே நிரந்தர இதயமாய் கமழும் பெரும் புண்ணிய தேசம் சான்றே இதற்கு அந்நிய தேசம் சுற்றுலா கடந்து உடலியக்க தத்துவம் கற்பிக்கும் பரவச சுத்த பல்லுயிர் வாழ இயற்கை செழிக்க தனிமனிதனும் செயலாற்றும் அடிமை படுத்தாத தனி தாய்திரு பாரத தேசம் ~ கல்விக்கு ~ செல்வத்துக்கு ~ வீரத்துக்கு ~ தியாக திருஉள்ளக்கருணைக்கு அச்சிட்ட வார்த்தாலும் முகவமைப்பு கிட்டா பூரண எல்லா காலமாற்றமும் தன்னகத்தே சுற்றிய வேற்றுமையிற் ஒற்றுமையுணர்வு பற்றிய பரிவுள்ள தேசம் நம் நாடு~ வருங்காலம் ஏதும் நிகழ்த்தி தோற்றமாற்றம் செய்யினும் அந்நியர் நாட்டு நெஞ்சும் பக்தி மற்றும் இன்ன பிற பழைமை ஆராய தேடும் உண்மை அறிவியலார் அறிவு தேட சுரக்கும் புதிரான அனைத்துக்கும் வரவேற்கும் ஆராதிக்கும் தேசம் நம் பாரத தேசம் ~ இளையோர் நலன் இளையோர் அறிவு கரம் நீட்டி வளர்க்க தேச திருவாசனை தடங்களின்றி தூய்மை வழிக்கு பணக்காரர் ஏழை பாகுபாடு களைய ஒற்றுமையாய் முயலும் முயற்ச்சிக்கு வளர்ச்சி சேர்க்கும் உழைக்கும் வர்க்க தேசம் நம் பாரத தேசம்~ இயற்கை காடு மலை எங்கும் பசுமை வேண்டும் என தீர்க்கமாய் ஆணாய் பெண்ணாய் பாகுபாடு மறந்துயர தோள் கொடுக்கும் பல்லுயிருக்கும் வாழ இயற்கை நம்பும் அரிதிபெரும்பான்மை பெற்ற ஒரே தேசம் இந்திய தேசம் இளங்கோ அவர்களே இன்னும் தேச நலன் விளங்க புரியா நிலை தங்களுக்கு எனில் தயவு கூர்ந்து visujjm@gmail.com கேளுங்கள் ஏழையாக நான் என் தேச நலன் விரும்ப எடுத்து கூறுவேன் நிறைய நம் பூமி என அயலவர் சொற்பம் சொல்ல நம் தேச இளைய சமுதாயம் அனைவரும் சொல்வர் நாம் வாழும் பூமி என நிந்திக்கும் தூய தேச சிந்தனை ஏதோ எனக்கு பெற்றதை விட அறிவிர் சிறந்தவர் நிரம்ப பரிசில் பெறா தேசம் நம் தேசமே எக்காலத்திலெமே நிஜம் தேச பற்று …..பேருக்கு புகழுக்கு சேர்க்காத பற்று நம் தேசபற்றே அனைத்துலக இயக்கத்திலுமே சான்று வரலாறு கூற அதிலும் சாமர்த்திய அறிவு கூறு போடும் உலகியலில் தன்னியல்பு மறவா பண்பாடு தேக்கிய தூய தேசமே நம் பாரத தேசம் ~ சான்று மனிதம் ~ மலை ~ காடு ~ இயற்கை ~ நதி விவசாயம் ~ இன்னும் மனக்கூடு நம் தேச ஒற்றுமை கூறு …..

   • இளங்கோ சொல்கிறார்:

    DeathBirthRaceR

    நன்றி DeathBirthRaceR. உங்கள் உரையை கேட்கும் பெரும் பேற்றை
    தந்தமைக்காக நன்றி. இனி என்றூம் உங்களை ஒன்றுமே கேட்க மாட்டேன்.
    பாவம் காவிரிமைந்தன் சார். அவர்மீது கொஞ்சம் கருணை காட்டுங்கள்.
    நீவிர் நீடூழி வாழ்க. பின்னூட்டம் எழுதாமல் இருந்தால் சிரஞ்சீவியாய்
    என்றும் வாழ்க.

    • DeathBirthRaceR சொல்கிறார்:

     சங்கடம் சுகம் துக்கம் அவர் அறியாததா அறிவிக்காததா கா.மை அறிந்த ஏதும் இளைய தலைமுறை என்னோடு யாவரும் அறிந்ததில்லையே! நானும் அவருக்கு கருவியே … நானிறக்கும் வரை புரட்டும் எழுத்தோவிய தேச மாற்றம் அவரீந்த வித்தே. நானிருக்கும் வரை நினைவே என்னை மறக்கினும் கா.மை அனுபவ மாறாதா இன்றிலா என்றாகினும் உணர்வை உள் வாங்கி ஜீரணிக்காத என் வாழ்வினை தொலைத்தே போயினும் நான் மறவேன் இவ்வுலக வலையச்சாணி கா.மை அவரை தேசபற்று மாற்றும் என்றாவது நானும் கருவியே இயக்கம் யாருக்கும் இறைவன் அறிவிப்பதுண்டோ : துவழாத தேச பக்குவத்திரை கா.மை அவர்கள் வாழ வணங்கும் சிறுவன் நான் என்றுமே உயிர் துச்சம் என்னிலையில் …..

     வாழ்க பிழை இருப்பின் ….. நிர்குணமறியா சுய இலாபம் கருதா தோன்றிய துச்சமென கக்கும் ஜீவாத்மா நானுமே …..
     வருந்துகிறேன் ஆணாக…..

    • தமிழன் சொல்கிறார்:

     நானும் முயற்சி செய்து தோற்றுவிட்டேன். Dr. Mrs Meenakshi….’ என்று ஒருவர் ஜூவியில் பின்னூட்டம் இடுவார். அவர்தான் என்ன சொல்லவறார் என்று புரிய கஷ்டமாயிருக்கும். அதனால் படிக்கவே மாட்டேன். இவர் அவரையும் மிஞ்சிவிட்டார். எனக்கென்னவோ, ஆங்கிலத்தில் எழுதி, கூகிள் தமிழ்ப்படுத்துவதை, அவர் படிக்காமலேயே காப்பி-பேஸ்ட் செய்கிறார் என்று தோன்றுகிறது.

     இருந்தாலும் அவர் ஆர்வத்தைப் பாராட்டுவோம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.