கடைசியில் திரு.ஜெட்லியே சொல்லி விட்டார் .. “மாயா – மாயா” எல்லாம் மாயா…!!!


செல்லாத நோட்டுகளால் – என்னென்ன பலன் கிடைத்ததென்று….

நாம் விவரமாக அலச வேண்டிய அவசியமே இல்லை.கடைசியாக, ஒருவழியாக நிதியமைச்சர் திரு.ஜெட்லி அவர்களே ஒப்புக்கொண்டு விட்டார்…

500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக அறிவித்ததால்
கிடைத்த பயன் இவை தான் என்று…

இது தான் இறுதிப்பலன் –

நிதியமைச்சரின் உரையிலிருந்து –(http://www.newindianexpress.com/nation/2017/jun/01/demonetisatio
n-had-three-distinct-benefits-jaitley-1611644.html)

————————————————–

ஜெட்லிஜியின் இந்த அறிவிப்பிலும் கைவைத்து விட்டது
ரிசர்வ் வங்கி இன்றைய அறிவிப்பின் மூலம் –

டிஜிடல் பரிவர்த்தனைகள் – கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போய், மே 28-ந்தேதிய பரிசீலனையின்படி, கிட்டத்தட்ட பண மதிப்பீட்டு இழப்பு அறிவிக்கப்பட்ட நவம்பர் மாதத்திய அளவிற்கே சென்று விட்டதாம்…!!!

கீழே ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு செய்தி –


இந்த நாட்டின் மக்கள் அனைவரையும் நான்கு, ஐந்து மாதங்கள்
அப்படி போட்டு வதைத்தது – கடைசியில் இதற்குத்தானா ஆண்டவனே….???

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to கடைசியில் திரு.ஜெட்லியே சொல்லி விட்டார் .. “மாயா – மாயா” எல்லாம் மாயா…!!!

 1. இளங்கோ சொல்கிறார்:

  //கடைசியில் இதற்குத்தானா ஆசைப்பட்டீர் ஆள்பவரே 😉 🙂 🙂 //

  -இப்படி வைத்துக் கொள்ளலாமா ?

 2. ramesh sekar சொல்கிறார்:

  I bring the following two news items for the information of
  all readers.

  மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா
  நேற்று நிருபர்களிடம் கூறுகையில்,

  “கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வர மத்திய அரசு
  கொண்டு வந்த பிரதமர் கரீப் கல்யாண் திட்டம் எதிர்பார்த்த
  வெற்றியையும் தரவில்லை. வரவேற்பும் இல்லை.
  7 மாதங்களில் இந்த திட்டம் மூலம் 5000 கோடி மட்டுமே
  வசூலாகியிருக்கிறது”

  சரிந்தது ஜிடிபி

  2016-2017-ம் நிதியாண்டின், ஜனவரி-மார்ச் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) 6.1 சதவிகிதம் சரிந்துள்ளது.

  2016-17-ம் முழு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.1 சதவிகித வளர்ச்சியே அடைந்துள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள குறைந்த வளர்ச்சியாகும்.

 3. Sridhar சொல்கிறார்:

  Dear KaaMai sir,
  At the outset, i agree that DeMonetisation has not yielded the desired or projected result

  I personally feel, we are also responsible for the expected CHANGE not Happening.

  YES, THE POLITICIANS (FROM BJP,CONGRESS,ADMK,DMK…..) ARE NOT ACTING WITH RESPONSIBILITY.

  Are WE, the CITIZENS of this country, including those doing business and consumers, wanting a CHANGE? and what will we contribute for the CHANGE? We, the responsible business and consumers, had an opportunity to move to the digital mode, which can be experimented for stopping the unaccounted wealth accumulation, but the mighty irresponsible business people created deterrence and we, the consumer also fell in the trap and we are slowly coming back to the tested and proved way of unaccounted wealth accumulation, the cash business.

  I Personally feel we are not giving the hand to come out of the DISTRESS situation and WE are happy to be in this mess.

  Our PM will also slowly drift to meeting Actresses, enjoy the foreign trips give way to someone else, who will start the foreign trips again, we will keep tab of the no of foreign trips and no of meeting of Actors and actresses.

  WHO IS GOING TO DISCUSS “OUR” ROLE IN THE CHANGE WE WANT.

  இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா ?

  Thanks.

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  ஸ்ரீதர்,

  Digitalization – யாரால் முடியுமோ அவர்கள் செய்யலாம்.
  ஆனால், சாதாரண பொதுமக்கள் தலையில் அதை வற்புறுத்தி திணிப்பது சரி இல்லை என்பது என் கருத்து.

  Digitalization -ஆல் சாதாரண பொது மக்களுக்கு எந்தவிதத்தில் பயன்…? அநாவசியமான உபத்திரவங்கள் தான். கூடுதலாக
  ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் தண்ட கமிஷன் வேறு..

  அதனால் தான், கையில் பணம் புரள ஆரம்பித்தவுடன் பழைய வழிக்கு மக்கள் திரும்பி விட்டனர். எந்த சீர்திருத்தமும் மக்களுக்காக தான் இருக்க வேண்டும்…

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • Sridhar சொல்கிறார்:

   Exactly Sir, this change has/had difficulties and did we want to undergo the difficulties to welcome the CHANGE envisaged is my question and we have reconciled ourselves that the other person (the creators of unaccounted wealth) is so mighty so let us enjoy the present small comforts and let our generation face the heat of the mighty wrongdoers and struggle.
   I personally feel, there is a TRUST DEFICIT in both sides which helps the people who find pleasure in exploiting the under priviledged.

   When we have more discussion on our roles in THE CHANGE we want, we will not find the ways to fight the wrongdoers.

   OUR CONTRIBUTION FOR THE CHANGE WE WANT HAS ALWAYS HELPED US ACHIEVE THE SUCCESS.

   Thanks sir for your patience in reading and allowing me to give my thought.

 5. புதியவன் சொல்கிறார்:

  கா.மை. சாரின் கருத்து ஒத்துக்கொள்ளவேண்டிய கருத்து (டிமானிடைசேஷன் தொடர்பாக எழுதிய இடுகைகள்). நம்ம நாட்டுல, மக்கள் மாறுவதற்கும் நிரம்ப காலம் எடுக்கும் (கல்வியறிவு, பொது அறிவு இல்லாததால், 70% மக்களுக்கு). திருட்டுக் குணத்தோடே பிறந்த அரசியல்வாதிகளால், அரசு எடுக்கும் நல்ல நடவடிக்கைகளும் தோற்றுப்போகிறது (இல்லாட்டா ரெட்டி, சேலத்தில் பிடிபட்ட பாஜக பிரமுகர் போன்ற பலரிடம் புது 2000 ரூ கொள்ளை கொள்ளையா பிடிபட்டதே, தமிழக அரசியல்வாதிகள், அரசு பஸ் கலெக்ஷனை பழைய 500,1000க்கும் மாற்றினார்கள் என்று பேச்சு அடிபட்டதே, கோவில் உண்டியலில் பழைய நோட்டைப் போட்டுவிட்டு, புது நோட்டுகளைப் பெற்றுக்கொண்டார்கள் என்று பல செய்திகள் வந்ததே). மத்திய தர வர்க்கம் மிகவும் கஷ்டப்பட்டார்கள் (3-4 மாதத்துக்கு). அதுவும்தவிர, வெளினாட்டிலிருந்து ஊருக்கு விடுமுறைக்கு வந்தவர்களும் அவதிப்பட்டனர். நிறைய பிஸினெஸ்களும் பாதிப்புக்குள்ளாயின.

  To hear, it did not work out simply, is undigestable.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.