“துக்ளக்” ஆசிரியர் குருமூர்த்தி அவர்கள், தனி கட்சி உருவாவதை ஆதரிக்கிறார்…!!!


திரு.ரஜினிகாந்த், தனிக்கட்சி துவங்கக்கூடாது… தங்களுடன்
இணைய வேண்டும் என்று பாஜகவின் அகில இந்திய
தலைமையும், தமிழக பாஜக தலைவர்களும் கூறி வரும்
நிலையில், பாஜகவின் முக்கியஸ்தரும், துக்ளக் வார
இதழின் ஆசிரியருமான திரு.எஸ்.குருமூர்த்தி, ரஜினிகாந்த்
அவர்கள் தனிக்கட்சி தான் துவங்க வேண்டும் என்று
வலியுறுத்தி, அதற்கான காரணங்களையும், நியாயங்களையும் விளக்கி இந்த வார துக்ளக் இதழில் தலையங்கமே எழுதி இருக்கிறார்.

நண்பர்களும் படிக்க – கீழே….


Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to “துக்ளக்” ஆசிரியர் குருமூர்த்தி அவர்கள், தனி கட்சி உருவாவதை ஆதரிக்கிறார்…!!!

 1. சரித்திரத்தை மிகத்தெளிவாக புட்டுப் புட்டு வைத்து இருக்கிறார் கருத்து சொல்வது கடினமாக இருக்கும் போலயே….

  அப்படிப்பார்த்தால் அரசியல்வாதிகள் அனைவரையுமே மாநிலம் கடத்தி விரட்ட வேணடுமோ… ???

 2. தமிழன் சொல்கிறார்:

  குருமூர்த்தி அவர்களின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கவையே. ‘கன்னடர்’, ‘தமிழர்’ கோஷம்லாம் தமிழகத்துல எடுபடாது. தமிழக மக்கள், யார் தலைவனாக இருக்கத் தகுதி பெற்றவர்கள் என்பதைத் தீர்மானிக்கும்போது, பெரும்பாலும் சாதி, மதம், இனம், பண அந்தஸ்துல்லாம் குறுக்கே வராது. தங்களில் ஒருவர் என்ற நம்பிக்கை வரவேண்டும். (ஜெ.மீது அந்த நம்பிக்கை 1996ல் போனது, பிறகு மீண்டும் வந்தது. கருணானிதியின்மீது அந்த நம்பிக்கை எப்போதுமே இருந்ததில்லை. ‘சரவணபவன் அடைப்பா’, ‘சரி இந்தக் கேன்டீனுக்குப் போகலாம் என்ற மாதிரிதான் கருணானிதியை மக்கள் தேர்ந்தெடுத்தனர்’) – குருமூர்த்தி அவர்களின், பெரியார், கருணானிதி ஆகியோரைப் பற்றிய கருத்துக்களும் ஏற்றுக்கொள்ளத் தக்கவையே. இவர்கள் இருவரில், பெரியார், சமூகத்துக்குப் பாடுபட்டார். அதேசமயம் குணத்திலும் மிகுந்த மேன்மையும், கண்ணியம் நிரம்பியவராகவும் இருந்தார். அவரது கருத்துக்களில் பிடிப்பு, அதே சமயம் மாற்றுக்கருத்துடையவர்களை எள்ளி நகையாடாமை, அவர்களிடமும் புரிதலோடு, அவர்களுடைய எண்ணத்திற்கு மதிப்புக் கொடுப்பது, அவர்களது நம்பிக்கைக்கு மரியாதை கொடுப்பது என்று நிஜமாகவே பெரியாராகச் செயல்பட்டவர் ஈ.வெ.ரா அவர்கள். ‘பணத்தைச் சுருட்டி’ தன் நலத்துக்காகக் கொள்ளையடித்தவரையும் பெரியாரையும் கொஞ்சம்கூட COMPARE செய்ய இயலாது.

  ஆனால், ரஜினி, 1996ல் வரவேண்டியவர். அப்போது வயதும் இருந்தது, தெம்பும் இருந்தது. 20 வருடங்கள் தாமதித்து இப்போது எப்படி வர இயலும்? அரசியல் என்பது சினிமா அல்ல. வெறும் மேக்கப் போட்டு, 10 நிமிடங்கள் உறுமி, எதிரிகளைப் பந்தாடுவதற்கு. ரஜினிக்கு இப்போது மனம் இருந்தாலும், நிச்சயமாக சாத்தியமற்றது என்றே நான் நம்புகிறேன்.

 3. kayshree சொல்கிறார்:

  everything is happening with the understanding of the BJP hierarchy

 4. சிவம் சொல்கிறார்:

  திரு.குருமூர்த்திக்கு பாஜகவின் நன்மையையும், தமிழகத்தின் நன்மையையும்
  பிரித்துப் பார்க்க தெரிகிறது.
  பாஜக இப்போதைக்கு தமிழகத்தில் வளர வாய்ப்பே இல்லை என்பதை
  அவர் உணர்ந்து ஒப்புக்கொள்கிறார்.
  எனவே, ரஜினி தனியே வந்தாவது – தமிழகத்தை உருப்படச்செய்ய
  எதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்.
  அவர் விருப்பம் நிறைவேறுவது தமிழகத்திற்கு நல்லது தான்.

 5. Dhamodharan Subramaniam சொல்கிறார்:

  Rajini will start a new party in 2018 and will merge with BJP around 2019 elections.

 6. சந்திரசேகரன். வெ.க சொல்கிறார்:

  20 வருடங்களாக ரசிகர்களுடன் அரசியல் கண்ணாமூச்சி ஆடி ஆடி களைத்து போன ரஜினி இன்றைய சூழலில் எந்தளவு நம்பகமானவர் என்பதும் தெளிவற்ற குழப்பமான அரசியல் வெற்றிடத்தை பூர்த்தி செய்யகூடிய அளவு அரசியல் நெளிவு சுழிவுகள் தெரிந்தவராகவும் நிர்வாக ரீதியாக கடினமான முடிவுகளை எடுத்து நேர்மையாக செயல்படும் உறுதிமிக்கவரா என்பதும் முக்கியமான கேள்வி. இதற்கான பதில் அவரது கூற்று படி ஆண்டவனுக்குதான் வெளிச்சம்.

 7. paamaranselvarajan சொல்கிறார்:

  தனி கட்சி ஆரம்பித்தால் தான் பா.ஜ.க. வுக்கு வசதி … அப்பாேதுதானே ரஜினிக்கு வாக்குவங்கி எவ்வளவு என்றுதெரியும் … அதை வைத்து கூட்டாளியாக சேர்த்துதேர்தலை சந்திக்கலாம்… பழம் நழுவுது … பாலில் விழப்பாேவுது என்று பினாத்தலாம்..!
  ரஜினி நேரிடையாக பா.ஜ.க. வில் ஐக்கியமானால் தமிழகத்தில் எடுபடாது என்பதை ஆடிட்டர் கணக்குப்பாேட்டு எழுதுகிறார்..!!
  இருவரின் திடீர் “ஞானாேதயமும்” இங்கே எடுபடாது என்பதுதான் நிதர்சனம் … !!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.