அரசியல் இவரை கெடுத்ததா – அ – இவர் அரசியலை கெடுத்தாரா……?


மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்…சுதந்திர போராட்ட தலைவர் ஜெய்பிரகாஷ் நாராயண் அவர்களின் சீடராக அரசியலில் நுழைந்தவர்… கல்லூரியில் படிக்கும்போதே, மாணவர்
தலைவராக உருவானவர்.

கல்லூரியில் மாணவத் தலைவராக இருக்கும்போதே,
கவுரவம் பார்க்காமல், அண்ணன் நடத்திய டீக்கடையில் ( !!! ) தினமும் காலையிலும் மாலையிலும் வேலை செய்து
பிழைத்தவர்.

பீகார் மாநில சட்டமன்ற உறுப்பினராக (எம்.எல்.ஏ.) ஆன பிறகு கூட, பியூனாக பணியாற்றிய இவரது அண்ணனுடன் பாட்னா வெடர்னரி கல்லூரி ஊழியர் குடியிருப்பில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தவர்…

எமெர்ஜென்சியின்போது, பிரதமர் இந்திரா காந்தி அவர்களால்
ஜெயிலில் தள்ளப்பட்டவர்.

இந்தியிலும், போஜ்புரியிலும், (இடையிடையே தப்பு தப்பான
ஆங்கிலத்தையும்) கலந்து அற்புதமாக உரையாற்றுபவர்.
இவரைப் பிடிக்காதவர்கள் கூட இவரது பேச்சை ரசித்துக்
கேட்பார்கள்…(அதில் நானும் ஒருவன்…!!!)

படிப்பறிவு இல்லாமை, அறியாமை, வறுமை, ஜாதி, மத
சச்சரவுகள் என்கிற அத்தனை வியாதிகளாலும் பீடிக்கப்பட்டு
கிடந்த பீகாரில் சுதந்திரம் வந்தது முதல் கோலோச்சிவந்த
காங்கிரஸை விரட்டி விட்டு ஆட்சியைப் பிடித்தவர். பீகார்
மக்களின் அமோக அன்பையும், ஆதரவையும் பெற்றவர்.

இவருக்கென்ன குறை…. ஆட்சியை பிடித்தவர் அமர்க்களமாக
தன் முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி மாநிலத்தை
முன்னுக்கு கொண்டு வந்திருக்க வேண்டாமா…?

பீகாரை வளம் கொழிக்கச் செய்திருக்க வேண்டாமா…?
அறியாமையை போக்கி, வேலைவாய்ப்பை பெருக்கி, குண்டர்களை அடக்கி – நல்ல ஆட்சியை தந்திருக்க வேண்டாமா…?

ஆனால் நிகழ்ந்தது என்ன….?
அகில இந்தியாவும் இப்படியும் ஒரு ஊழலா என்று
ஆச்சரியத்தினால் மூக்கில் விரலை வைக்கும்வண்ணம்
900 கோடி ரூபாய் அளவிற்கு மாட்டு தீவனத்தில் ஊழல்…

வண்டி வண்டியாக இன்னும் எத்தனையோ ஊழல்கள்.

முதலமைச்சராக இருந்ததென்னவோ ஆறு-ஏழு ஆண்டுகள் தான். ஆனால் அடுக்கடுக்கான ஊழல் புகார்கள். சிபிஐ-யால் கைது செய்யப்பட்டு சிறை செல்பவர்,
( 5 ஆண்டுகள் ஜெயில், 25 லட்சம் ரூபாய் அபராதம் –
அப்பீல் செய்து, ஜாமீனில் வெளிவருகிறார்….)

உலகிலேயே இல்லாத அதிசயமாக, படிப்பறிவோ -அரசியல் அனுபவமோ எதுவுமே இல்லாத தன் மனைவியை தன் இடத்தில்
முதலமைச்சராக அமர்த்துகிறார்.

இவரது கட்சியினரும், மக்களும் – எந்தவித மறுப்போ,
எதிர்ப்போ இல்லாமல் ஏற்றுக்கொள்கின்றனர். இத்தனைக்குப்
பிறகும், அந்த அளவிற்கு இவர் மீது ஈர்ப்பு அந்த ஜனங்களுக்கு.

அடுத்து சுமார் 8 ஆண்டுகளுக்கு அவரது மனைவியின்
மூலமாக கோலோச்சுகிறார்….

பின் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து, பாராளுமன்ற
உறுப்பினராகி, ரெயில்வே அமைச்சரும் ஆகிறார்….
5 வருடங்கள் ரெயில்வே அமைச்சர்…!!!

வரியே போடாமல், கட்டணமே உயர்த்தாமல், இவர்
ரெயில்வேயை நிர்வாகம் செய்த அழகு கண்டு இந்தியா
மட்டுமல்ல – உலகமே பிரமித்தது. ஹாவர்டு பல்கலையில்
இருந்தே இவருக்கு உரையாற்ற அழைப்பு வருகிறது.

( அத்தனையும் வெறும் பந்தா, வெத்து விளம்பரங்கள்…
என்று இவர் கீழே இறங்கிய பிறகு தான் தெரிய வந்தது…!
அப்போது இவர் வாங்கிய சுமார் ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் பற்றி – இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் கொஞ்சம் வெளியே தெரிய ஆரம்பித்திருக்கிறது….!!!)

(இவர் மீதான வழக்கு இன்னமும் சுப்ரீம் கோர்ட்டில்
அப்பீலில் இருக்கிறது….!!! )

2015 பீகார் சட்டமன்ற தேர்தலில் இவர் நிதீஷ்குமாருடன்
கூட்டணி வைத்து நல்ல வெற்றியை பெற்று, மீண்டும்
ஆட்சியை பிடிக்கிறார். இவர் அமைச்சர் ஆக தற்போதைய
சட்டம் இடம் கொடுக்கவில்லை என்பதால், இவரது இரண்டு
மகன்களை நிதிஷ்குமார் அமைச்சரவையில்
மந்திரிகளாக்குகிறார்….

இந்தியாவிலேயே இல்லாத அதிசயம் – இரண்டு சகோதரர்கள்
ஒரே மாநிலத்தில் அமைச்சர்களாக இருப்பது…. அதில் ஒருவர் துணை முதலமைச்சர் வேறு…!

மகளை எம்.பி. ஆக்குகிறார்…..!!!

இன்றும் பீகாரை ஆட்டி வைக்கிறார். அங்கே இருக்கும் அத்தனை ரவுடிகளும், குண்டர்களும் இவரது ஆட்கள்… ஆளும் கூட்டணியில் பார்ட்னர். முதலமைச்சர் நிதிஷ்குமார் சொல்லவும்
முடியாமல், மெல்லவும் முடியாமல் திணறுகிறார்.

தற்போது, தன்னுடைய லஞ்ச ஊழலின் மிச்ச மீதி கனவுகளை இரண்டு மகன்களின் மூலம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

இவரை அறிந்த அத்தனை அரசியல்வாதிகளுக்கும் தெரியும்
இவர் எப்பேற்பட்ட ஊழல்வாதி என்று….

இருந்தாலும், அத்தனை கட்சித்தலைவர்களையும்
(இடதுசாரிகள் உட்பட) தன் சாமர்த்தியத்தால் கட்டிப்போட்டு
வைத்திருக்கிறார்….

அடுத்ததாக, 2019 பொது தேர்தலில், மோடிஜியை எதிர்க்க
ஒரு மெகா கூட்டணியை ( “மஹா கட்பந்தன்…”) உருவாக்க
முயற்சிக்கிறார். அகிலேஷையும், மாயாவதியையும் கூட
இவருடன் சேர்த்துக் கொள்ள முயற்சிக்கிறார்…. !!!

நாம் தான் இப்படி நினைக்கிறோமே தவிர, பீகார் மக்களும்,
அரசியல்வாதிகளும், இவர் என்னவாவது செய்து மீண்டும்
ஆட்சியை பிடிப்பார் என்று நம்புகிறார்கள்….

இவரை என்னவென்று சொல்வது –
எதில் சேர்ப்பது…?
உலகிலேயே வேறெங்கும் பார்க்க முடியாத ஒரு அபூர்வ
அரசியல்வாதி திருவாளர் லாலு பிரசாத் யாதவ்.

கீழே இருப்பது சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர், பீகார் வெடர்னரி கல்லூரி ஊழியர்கள் குடியிருப்பில் – பியூனாக பணிபுரிந்து வந்த தனது சகோதரருடன் ஒண்டுக்குடித்தனம் செய்தபோது எடுத்த புகைப்படம்…
(லாலுவும், மனைவியும் … குழந்தைகளும்…)

( புகைப்படம் உதவி – நண்பர் செந்தில்நாதனுக்கு நன்றி… )

இன்றைய தினம் அவரது சொத்துக்களின் மதிப்பு
சுமார் 20,000 கோடிக்கு குறையாது என்று சொல்லப்படுகிறது…
நம்புவீர்களா…?

அ ர சி ய ல் – மனிதரை கெடுக்கிறதா அல்லது
இவரைப்போன்ற மனிதர்கள் தான் அரசியலை கெடுக்கிறார்களா…?

உங்களுக்கு தெரிந்தால்….. சொல்லுங்களேன்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to அரசியல் இவரை கெடுத்ததா – அ – இவர் அரசியலை கெடுத்தாரா……?

 1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இவருடைய ஒரு முக்கியமான இயல்பை, தகுதியை இடுகையில்
  குறிப்பிட்டுச் சொல்ல மறந்து விட்டேன்,.

  மானம், வெட்கம், ரோசம், சூடு, சொரணை – ஒன்றுமே இல்லாதவர் இவர். அரசியலில் முன்னுக்கு வருவதற்காக, இவை அனைத்தையும் தியாகம் செய்து விட்டார்..

  என்ன சொன்னாலும் துடைத்து விட்டு, போய்க்கொண்டே இருப்பார். தன் காரியம் நடக்க வேண்டும்.. அது ஒன்றே அவரது லட்சியம்… !

  ஆனால், அற்புதமான சொல்லாற்றல், சாமர்த்தியம் உடையவர்.
  சொல்லாற்றல் என்றால், தெளிவான மொழியறிவுடன் கூடியதல்ல – “கலோக்கியல்” என்று சொல்வோமே, அது போல் தன் மாநிலத்து மக்களை கவரும் விதத்தில், கிண்டலடித்துக் கொண்டே பேசுவார்….

  இவர் அரசியலில் தொடர்வதை எதுவும் தடுக்க முடியாது.
  குறைந்த பட்சம், அவரை பீகார் அரசியலோடு நிறுத்திக்கொள்ள வைத்தால் – நாடு தப்பிக்கும்.

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 2. சிவம் சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  ஒரு சின்ன கேள்விக்கு விளக்கம் சொல்லி விடுங்கள்.
  உங்கள் தலைப்புக்கு நான் பதில் சொல்லி விடுகிறேன்.

  நெய்க்கு தொன்னை ஆதாரமா ? அல்லது
  தொன்னைக்கு நெய் ஆதாரமா ?

 3. sridhar சொல்கிறார்:

  The article below proves again that the so called social warrior is only to squander the masses for the benefit of him and his family. He is another blot in the political leadership of India.

  http://timesofindia.indiatimes.com/city/patna/lalu-prasads-son-turns-to-tantra-vaastu-to-defeat-enemies/articleshow/58968983.cms

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s