கலைஞர் ….

நாளைய தினம்( ஜூன், 3 ) தனது 94-வது பிறந்த நாளை
சந்திக்கும் கலைஞர் கருணாநிதி அவர்கள் விரைவில் நல்ல
உடல்நலம் பெறவும், நீடூழி வாழவும் வாழ்த்துவோம்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to கலைஞர் ….

 1. selvarajan சொல்கிறார்:

  பள்ளி படிப்பையே முழுவதும் முடிக்காத ஒருவர் – தலை சிறந்த கதை எழுதுபவர் — கட்டுரையாளர் — கவிதைகளின் கவிஞன் — வசனகர்த்தா — தமிழ் புலமை மிக்கவர் கர கரப்பான கவர்ச்சிக்கு குரலில் ” என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்று அழைத்து அனைவரையும் கட்டிப்போட்ட மேடை பேச்சாளர் … கடந்த மூன்று மாதங்களாக மௌனமாகி போனது விதியின் விளையாட்டா …?

  அத்தனை திறமைகளையும் அவருக்கு கொடுத்தது இறைவனின் அருளா .? பெரியார் பாசறையின் பயிற்சியா .? சுய முயற்சியா ..? தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆவலா ..? தன் தலைவன் அண்ணா இரண்டு எம்.ஏ .பட்டதாரியை போல சிறந்து விளங்க வேண்டும் என்ற வீறாப்பா ..? எது இந்த மனிதனை அனைத்து துறைகளிலும் சிறக்க வைத்தது என்பதே கேள்விக்குறி தான் …

  இந்திய அரசியல் மட்டுமின்றி உலக அரசியல் மற்றும் பல விவரங்களை விரல் நுனியில் வைத்துக்கொண்டு — புள்ளி விவரங்களோடு எப்போது கேட்டாலும் கூறி அசரடிக்கும் அந்த திறமை — நிறைந்த நினைவாற்றல் — எந்த விதமான கேள்விக்கும் ஒரு நக்கலான பதிலை கூறி கேட்டவரின் வாயடைக்கும் சாமர்த்தியம் … ஆச்சர்ய மனிதன் ….

  எம்.ஜி.ஆர் . கட்சியில் இருந்து நீக்கப்பட்டு தனிக்கட்சி துவக்கி தேர்தலில் தொடர் வெற்றிகளை பெற்று — இவர் ஆட்சியில் அமர முடியாமல் சுமார் 13 – வருடங்கள் எம்.எல்.ஏ . என்கிற பதவி ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு — தன்னுடைய கட்சியினரையும் — தொண்டர்களையும் கலைந்து விடாமல் கட்டிக் காப்பாற்றிய ஒரே தலைவன் இவராகத்தான் இருக்க முடியும் … எத்தனை சோதனைகள் வந்தாலும் தளர்ந்து விடாமல் — சாதனையாக மாற்றிய சரித்திர நாயகன் … வாழட்டும் இன்னும் பல்லாண்டு ….

  அவரிடம் பிடிக்காத மாற்று கருத்துக்கள் ஆயிரம் இருந்தாலும் — தனிமனித உழைப்பையும் — எழுத்தாற்றலையும் போற்றியே ஆக வேண்டும் … ” கேள்வியும் -நானே .. பதிலும் நானே ” என்கிற அந்த மாமனிதன் இன்று நெஞ்சுக்கு நீதி என்பதை நினைத்து கொண்டு — உழைத்தது போதும் ஓய்வாக இரு என்று நிம்மதியாக இருக்க வைத்த அந்த கண்ணுக்கு புலனாகாத ” சக்திக்கு ” நன்றி கூறுவதோடு …. வரலாறு பேசும் வையகம் உள்ளளவும் உம்மை ….

  மீண்டும் அந்த கவர்ச்சி கர கரப்பான குரல் ஒலிக்க வேண்டும் என்று இறைவனிடம் … கேட்போம் …. எல்லாம் அவன் செயல் ….!!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   கலைஞரைப்பற்றி, சுருக்கமாகவும், விளக்கமாகவும் – அருமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள். அவருடைய
   அரசியலைப்பற்றி நமக்கு ஆயிரம் வேறுபாடுகள் இருந்தாலும்,
   அவர் மீண்டும் நல்ல உடல் நலம் பெற்று, தள்ளாத இந்த வயதில் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. Srini சொல்கிறார்:

  தனிமனித உழைப்பையும் — எழுத்தாற்றலையும் போற்றியே ஆக வேண்டும் – no one can disagree on this. He is an example for the same. I just read an article in times of india

  http://timesofindia.indiatimes.com/city/chennai/kalaignar-do-you-remember/articleshow/58972367.cms?utm_source=toiandroidapp&utm_medium=Whatsapp&utm_campaign=show

 3. தமிழன் சொல்கிறார்:

  பயணத்தில் இருக்கிறேன். கருணாநிதி கடுமையாக உழைப்பவர். ஆனால் அவர் உழைப்பு அவர் குடும்பத்துக்குத்தான் பெரும்பாலும் உபயோகப்பட்டது. நல்ல எழுத்தாற்றலும் நினைவாற்றலும் உண்டு. அதிலும் பயன் பெற்றது அவர்தான். ஓரளவு கலங்காத மனம் கொண்டவர். அதுவும் அவரது சொந்த நலன் கருதித்தான். அவர் பலருக்குச் செய்த உதவி பலன் கருதித்தான், அல்லது அப்படிப் பலன் பெற்றவர்கள் தனக்கு ஜால்ராக் கருத்துக்களைக் கூறியபோது அவர்களைக் கொச்சைப்படுத்தவும் தயங்கியதில்லை. அவர் செய்தவைகள் எல்லாமே, அவர் திறமை உழைப்பு எல்லாமே அவரின் குடும்பத்தை ஆசியாவிலேயே பெரிய பணக்கார்ர்களாக உயர்த்தியிருக்கிறது. சமூகத்தைப் பிளவுபடுத்தி அதன் பயனை அவர் அறுவடை செய்தார்.

  அவர் செய்த கரமங்களின் பயன்களைக் காணவும் அனுபவிக்கவும் நீண்டகாலம் ஆரோக்கியமாக இருக்கட்டும்

 4. சிவம் சொல்கிறார்:

  //அவர் செய்த கரமங்களின் பயன்களைக் காணவும் அனுபவிக்கவும் நீண்டகாலம் ஆரோக்கியமாக இருக்கட்டும்.//

  🙂 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s