கூவத்தூர் லட்டுவும், எடப்பாடி அல்வாவும் 60 நாள் கெடுவில் முடிந்து விடுமா…?

மாதா மாதம் “லட்டு” கிடைக்கும் என்று உறுதி கூறப்பட்டு,
கூவத்தூரில் குடி வைக்கப்பட்டவர்கள், நாளாவட்டத்தில்
தங்களுக்கு கிடைப்பது “அல்வா”வே என்றுணர்ந்து புரட்சி
குறித்த சிந்தனையில் ஈடுபட்டிருந்த சமயத்தில்,

வடதிசை திஹாரிலிருந்து வந்த தேவ மைந்தன்,
” இன்னும் லட்டு திங்க ஆசையா, கண்ணா…? நான்
இருக்கும் வரை “லட்டு”விற்கு என்ன பஞ்சம்…!!!” எனக்கூறி
மீண்டும் லட்டு வழங்கும் படலத்தை துவங்கி வைக்க

துவக்கத்தில் இரண்டாக இருந்தது, நேற்று பதினொன்றாகி,
இன்று இருபத்தொன்றாக மலர்ந்திருக்கிறது….

“லட்டு” கிடைக்கும் செய்தி தெரிந்து, வெளியூர் கூட்டம்
எல்லாம் ஓடி வந்து கொண்டிருக்கிறதாம்…. இன்னும் இரண்டு
நாட்களுக்குள்ளாக இருபது+1 மந்திரிகளைத்தவிர மற்ற
அத்தனை பேரும் லட்டு வாங்க போய் விடுவார்கள் என்று
எதிர்பார்க்கலாம்….

ஆனாலும், “அல்வா”க்காரர் அணி கவலைப்பட வேண்டிய
அவசியமே இல்லை. 60 நாட்கள் முடிந்தவுடன் இவர்கள்
கேட்காமலே தானாகவே இன்னொரு 30 நாட்கள் extension
வரும்…. அதற்குப் பிறகு இன்னொன்றும்…!!!

“லட்டு”வுக்காக போகிறவர்கள், அவசரப்பட்டு ஆட்சியை
கவிழ்த்து விட்டால், “லட்டு” தின்னும் வாய்ப்பை நிரந்தரமாக
இழந்து விடுவார்களே…முதலுக்கே மோசம் வரலாமா…?”
அந்த நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பது தானே
“அனைவரின்” ஒருமித்த “லட்சியமும்” குறிக்கோளும்….!!!

எனவே இப்போதைக்கு அல்வா ஆட்சிக்கு எந்த பாதிப்பும்
வராது….!!! மக்கள் பிரதிநிதிகள் ஒரு பக்கம் “லட்டு”வுக்கு
விசுவாசமாக இருந்தாலும், மறுபக்கம் அல்வா ஆட்சி
கவிழாமலும் பார்த்துக் கொள்வார்கள்…!!!

– இதில், “நிச்சயம் எதாவது நடக்கும்” என்று மிகுந்த
நம்பிக்கையுடன் இலவு காத்த கிளியாக காத்திருக்கும்
தளபதியின் நிலையை நினைக்கும்போது தான் பாவமாக
இருக்கிறது…!!!

இன்னும் எத்தனை காலம் தான்…..????

—————————————————-

இத்தனை பேரும் வந்தது இவரால் தானே…?

ஆனால், இவர் பாட்டை எவர் கேட்கிறார்…?
இவர் கட்சிக்காரரே ஏமாற்றுகிறார், திருடுகிறார்,
மக்களை கொள்ளை அடிக்கிறார்

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to கூவத்தூர் லட்டுவும், எடப்பாடி அல்வாவும் 60 நாள் கெடுவில் முடிந்து விடுமா…?

 1. Dhamodharan Subramaniam சொல்கிறார்:

  The movie will run till July . After president elections, we can get clarity.

 2. இளங்கோ சொல்கிறார்:

  அடுத்து தேர்தல் நடக்கும்போது, இதில் ஒருத்தரை கூட மேடை ஏற விடக்கூடாது. இவர்களில் எவருக்கும், மக்களிடையே வந்து ஓட்டு கேட்கும் தகுதி கிடையாது.
  மீறி தெருவில் வந்தால், ஓட ஓட விரட்ட வேண்டும்.

 3. natchander சொல்கிறார்:

  Elango ji why wait till elections…
  even now youths ladies and others should do agitation against these MLAS
  in their respective areas…

 4. புதியவன் சொல்கிறார்:

  மந்திரியாக உள்ளவர், கப்பம் கட்டவேண்டாம். எம்.எல்.ஏக்களுக்கு மந்திரி தயவில் லட்டு கிடைக்கும். அது ஒன்றும் கிடைக்காதவர்கள், அல்லது போதுமான அளவு கிடைக்காதவர்கள், சாராய ஆலை அதிபர் தினகரனிடம் லட்டு வாங்கிக்கொள்வார்கள். நிச்சயமாக அதிமுக ஆட்சி கலையுமாறு நடந்துகொள்ளமாட்டார்கள்.

  இரட்டை இலை கிடைக்காவிட்டால், உள்ளாட்சித் தேர்தலில் பின்னடைவைத் தவிர்க்கமுடியாது (ஓட்டு பிரிவதால். சின்னம் என்பது உள்ளாட்சித் தேர்தலுக்கு ரொம்ப அவசியமானது அல்ல). ஆனாலும் எப்பாடுபட்டாவது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வார்கள். நாளாக நாளாக, ஓபிஎஸ்ஸும் அவருக்கான மரியாதையை மக்களிடத்தில் இழந்துவிடுவார்கள். எதிரிகள் பிரிவதால்தான், ஸ்டாலினுக்கு வாக்குகள் கிடைக்கும். தகுந்த தலைவர் அதிமுகவுக்குக் கிடைத்தால், ஸ்டாலின் மீண்டும் இலவுகாத்த கிளியாகிவிடுவார்.

  எதற்காக ரஜினிக்கு திருமா ஆதரவு கொடுக்கிறார் என்பது தெரிகிறதா? திருமாவுக்கும் ஸ்டாலினுக்கும் ஒத்துப்போகவில்லை. தகுந்த தலைவர் அரசியலில் இருந்தால், திமுகவுக்கு எப்போதும் ஆதரவு கூடாது (கூட்டணியாக பல உருப்படியான கட்சிகள் சேர்ந்தால் ஒழிய)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s