அடுத்த தமிழக முதல்வர் யார்…? பாஜகவின் இல.கணேசன் சொல்கிறார்….!!!

நேற்றைய தினம் வெளிவந்துள்ள ஒரு பேட்டியில், தமிழக
பாஜக தலைவர் திரு.இல.கணேசன் அவர்கள் கூறுகிறார் –

————-

“சிங்கத்துக்கு யாரும் முடிசூட்டிவிட வேண்டியதில்லை….”
என்று சமஸ்கிருதத்தில் ஒரு வாக்கியம் உண்டு. தன்னுடைய
திறத்தால், அது தானாகவே காட்டுராஜா ஆகி விட்டது.
அப்படி உருவான தலைவர் நரேந்திர மோடி…..!!!
உடனே அவர் தேசியத் தலைவர் என்று சொல்லாதீர்கள்.
காந்தி, இந்திராகாந்திக்காகவே இந்தியா முழுக்க காங்கிரஸ்
கட்சிக்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். நம் மக்கள்
மோடியையும் அப்படி மனதில் நிறுத்துகிற காலம்
தமிழகத்துக்கு வந்து விட்டது.

மோடி கைகாட்டுகிறவர் தான் தமிழ்நாட்டின்
முதல் அமைச்சர் ஆவார். மோடியின் கண் அசைவில்
திறம்பட இயங்கும் தமிழ்நாட்டு நிர்வாகம்….”

நமக்குத் தெரியும்…
இல.கணேசன் சார் சொன்னா சரியா தான் இருக்கும்..!!!

———————

நாம் தான் கண்ணதாசன் பாடல்களை என்றும்
மறப்பதில்லையே…

“பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது –
“கருடா சௌக்கியமா….?”

“யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே… ! ” -கருடன் சொன்னது…
அதில் அர்த்தம் உள்ளது….

————————

ஆனால் ஒரு விஷயம்…. இல.கணேசன் சார் எதிர்காலத்தை
பற்றி மட்டும் இங்கே சொல்கிறார்…சரி.

ஆனால், நிகழ்கால முதல்வரே –
மோடிஜி அவர்களின் கண்ணசைவிலும் அவரது ஏஜென்சிக்களின் கையசைவிலும் தீர்மானிக்கப்பட்டவர் தான் –
என்பதை சொல்ல மறந்து விட்டாரே….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to அடுத்த தமிழக முதல்வர் யார்…? பாஜகவின் இல.கணேசன் சொல்கிறார்….!!!

 1. இளங்கோ சொல்கிறார்:

  கணேசன் ஜி சொன்னதும் – சொல்ல மறந்ததும் ?

 2. சிவம் சொல்கிறார்:

  எத்தனை அனுபவப்பட்டும், தமிழக பாஜகவுக்கு புத்தி வருவதாக இல்லை.
  மோடி தமிழ்நாட்டு பிரச்சினைகளை கண்டுகொள்ளாத வரையில்,
  தமிழ் நாட்டு மக்களும் அவரை கண்டு கொள்ளப்போவதில்லை.
  தமிழக பாஜகவின் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர வேண்டும் என்கிற ஆசை நிறைவேற வேண்டுமானால், அவர்கள் மோடிஜியிடம் தமிழகத்தின் மிக அவசியத்தேவைகளை நிறைவேற்றித் தரும்படி கேட்க வேண்டும்.
  தமிழகத்தின் தேவைகளை நிறைவேற்றித்தருவதன் மூலம் மட்டுமே
  பாஜக இங்கு இடம் பெற முடியும். இல்லையென்றால் இப்படி ப.சாமி, மு.சாமி,
  கு.சாமி என்று யார் முதுகிலாவது சவாரி செய்துகொண்டே இருக்க வேண்டியது தான்.

 3. தமிழன் சொல்கிறார்:

  “மோடி கைகாட்டுகிறவர் தான் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆவார். மோடியின் கண் அசைவில் திறம்பட இயங்கும் தமிழ்நாட்டு நிர்வாகம்….” – இல கணேசன் அவர்கள், அவருக்குப் பிச்சையிடப்பட்ட எம்.பி பதவிக்காக அதற்கு ஏற்றபடி ஜால்ரா போடுகிறார். அதனால் இன்னும் சில பல ஆதாயங்கள் அவருக்குக் கிட்டும்.

  ‘மோடி கைகாட்டுகிறவர் தமிழ்’நாட்டு முதலமைச்சர் ஆவார்’ – ஐயோ பாவம். பகல் கனவு காண கணேசன் அவர்களுக்கு இல்லாத உரிமையா? ஆடு கத்துவதால் பொழுது விடியுமா? இப்போது பாஜக நடந்துகொள்வது மக்களுக்கு உவப்பில்லாதது. அசிங்கமானது. தெரிந்தோ தெரியாமலோ, பாஜக தங்கள் நடத்தையின்மூலம் மக்கள் வெறுப்பைச் சம்பாதிக்கிறது. பாஜகவுக்கு இதனால் ஒரு ஓட்டுகூட கூடப்போவதில்லை.

  இந்திராவையும் மோடியையும் ஒரே தட்டில் வைக்க முடியாது. இந்திரா இருந்தபோது மற்றவர்கள் டம்மி என்பது தெளிவாக மக்களுக்குத் தெரிந்தது. நல்லதோ கெட்டதோ, அது இந்திராவுக்குப் போய்ச் சேர்ந்தது. ஆனால் இப்போது, மோடி பெயர், நல்லனவற்றிற்க்கு மட்டும் முன்மொழியப்படுகிறது. மற்ற எல்லா கெட்ட விளைவுகளுக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை என்று பாஜக பரப்புரை செய்வதாகத்தான் தெரிகிறது. அது உண்மை என்றால், மோடிக்கு பிறரைக் கட்டுப்படுத்தும் வல்லமையோ ஆளுமையோ இல்லை என்றுதான் ஆகிறது. இந்திரா அவர்கள், பேச்சு மட்டுமல்ல, செயலிலும் வலிமையைக் காண்பித்தார்கள். மோடி அவர்கள் இன்னும் அந்த நிலைக்குச் செல்லவில்லை. இப்போது மோடி நன்றாகப் பேசுகிறார், தனிப்பட்டமுறையில் அவர் பணம் சம்பாதிக்கவோ ஊழல் செய்யவோ இல்லை என்றுதான் தோன்றுகிறது. இங்கு மக்களே, பெரும்பாலும் ஊழலில் பங்குள்ளவர்கள். (லஞ்சம் கொடுப்பதிலிருந்து, லஞ்சம் வாங்குவதிலிருந்து, தவறுகளுக்குத் துணை இருப்பதுவரை). அதனால், வெறும் ‘ஊழல் செய்யாதவர்’ என்ற பெயர் உபயோகம் இல்லை. ‘ஊழல் செய்யாத, ஆனால் மக்கள் மீது அக்கறை கொண்ட கட்சி’ என்ற பெயர்தான் பாஜகவுக்கு வாக்குகள் வாங்கித்தரும். அந்த நிலை இப்போது இல்லை.

  மோடியை மக்கள் மனதில் நிறுத்த, அவர், தமிழ்நாட்டுக்கு என்ன செய்துள்ளார்? அதை முதலில் பாஜக கணேசன்கள் சொல்லட்டும். தமிழக உணர்வுக்கு மரியாதை கொடுத்துள்ளாரா? தமிழகப் பிரச்சனைகளைக் காதுகொடுத்துக் கேட்டுள்ளாரா? தமிழக நலனுக்குப் பாதகமான செயல்களைச் செய்ய ஏன் முனைந்துள்ளனர்? ஒரு குறிப்பிடத்தக்க செயலும் செய்யாமல், மோடி படத்தைக் காண்பித்தால் வாக்குகள் வருமா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.