” அலெக்சா ” தரவரிசை பற்றி …….!!!

நேற்றிரவு நண்பர் மென்பொருள் பிரபு அவர்களிடமிருந்து
ஒரு மெயில் வந்தது.

” உங்கள் வலைத்தளம் அலேக்சா தரவரிசையில் அரை
மில்லியனுக்கும் கீழே போய் தங்களுக்கு பெரும் அங்கீகாரம்
தேடித் தந்துள்ளது…” என்று.

எனக்கு இந்த அலெக்சா தர வரிசை பற்றி எல்லாம் முதலில்
ஒன்றுமே தெரியாது. நண்பர் பிரபு சொன்ன பிறகு தான்
கொஞ்சம் விவரம் தெரிந்து கொண்டேன்.

உலக அளவிலும், இந்திய அளவிலும் வெளிவரும்
ப்ளாக்’குகளை traffic -ஐ அடிப்படையாக வைத்து ஒரு
தரவரிசையை உண்டாக்கி, தொடர்ந்து அதனை maintain
செய்து online- ல் அந்த விவரங்களை வெளியிட்டு வருகிறது
அலெக்சா.

நண்பர் பிரபு, இந்த தகவல்களை உங்கள் வலைத்தளத்தில்
வெளியிட்டு, வாசகர்கள் விமரிசனம் தளத்தின் தாக்கத்தை
உணர்ந்து கொள்ளச் செய்யுங்கள் என்று கூறி இருந்தார்.

முதலில் இது தற்பெருமையாக நினைக்கப்படுமோ என்று
நான் தயங்கினேன். ஆனால் பிரபு,

இதை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வது தான் முறை.
ஏனென்றால் அதில் அவர்களுக்கும் பெரும்பாதி பங்கு உண்டு
என்று சொல்லவே, மகிழ்வுடன் இந்த தகவல்களை
வாசக நண்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

முதலில், இது பெருமைப்படத்தக்க நிலை தானா என்று
உறுதிபடுத்திக் கொள்ள விரும்பினேன். எனவே,
http://www.alexa.com/siteinfo/vimarisanam.wordpress.com
தளத்திற்கு சென்று விமரிசனம் தளத்தை தமிழில்( தமிழ்மணம்
பட்டியலில் உள்ள) புகழ்பெற்ற இன்னும் சில தளங்களின்
நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். விமரிசனம் தளத்தின் நிலை
உறுதியானது…..

ஆனால், ஒரு விஷயத்தை இங்கு சொல்ல விரும்புகிறேன்.

இந்த நிலை எந்த விதத்திலும் என் தலையில் கனத்தை
ஏற்றாது…. ஆனால், இந்த அங்கீகாரம் எனக்கு மிகுந்த மன
மகிழ்ச்சியை அளிக்கிறது என்பது உண்மை…!!!

இன்று விமரிசனம் வலைத்தளம் இந்த அளவுக்கு
மதிப்பு பெற்றிருப்பதற்கு காரணம் என் உழைப்பு மட்டும்
அல்ல. விமரிசனம் தளத்தின் முக்கிய பெருமை, அதில்
முன்வைக்கப்படும் பொருள் பொதிந்த விவாதங்கள் தான்.
விமரிசனத்தின் பெருமையே, அதில் வெளியாகும்
கண்ணியமான, கருத்துள்ள, தரமான பின்னூட்டங்களே.

அதற்கு முக்கிய காரணம் வாசக நண்பர்களாகிய நீங்கள் தான்.
இது உங்களின் ஒத்துழைப்புடன் மேலும் தொடர்ந்து படரும்
என்று நம்புகிறேன்.

என் மீது பெரும் அன்பு வைத்தும், விமரிசனம் தளத்திற்கும்,
எனக்கும், பெரும் ஆதரவு தந்தும் ஊக்குவிக்கும் நண்பர்கள்
அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றியையும்,
வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தருணத்தில் நண்பர் மென்பொருள் பிரபு அவர்களுக்கும்
என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்… அவர் அக்கறை
எடுத்துக்கொண்டு, தெரிவித்ததால் தான் எனக்கு இந்த
விஷயமே தெரிய வந்தது. இல்லையேல், இந்த மகிழ்ச்சியை
நான் தவற விட்டு விட்டிருப்பேன்.

alexa rank details –

Global Rank – 495,802

Rank in India – 52,317

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

26 Responses to ” அலெக்சா ” தரவரிசை பற்றி …….!!!

 1. சைதைஅஜீஸ் சொல்கிறார்:

  வாழ்த்துகள் மற்றும் நானும் விமரிசனம் தளத்தின் வாசகன் என்பதில் பெருமையும் கொள்கிறேன்

 2. RAMANATHAN சொல்கிறார்:

  HEARTY CONGRATULATIONS…
  (Y)OUR BELIEF TODAY OR TOMORROW THINGS WILL CHANGE BECOMES TRUE

 3. paamaranselvarajan சொல்கிறார்:

  மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் …. !!!

 4. Dhamodharan Subramaniam சொல்கிறார்:

  வாழ்த்துக்கள்!!!

 5. Srini சொல்கிறார்:

  Congratulations Sir. Vazthukal. May God Bless you good health to continue this good work.

 6. Buttersnr@Gmail.com சொல்கிறார்:

  தங்களது மதிப்புமிக்க
  தளத்திற்கு உலகளவில்
  கிடைத்த அங்கீகாரத்துக்கு
  பாராட்டுகள்.
  வாழ்க வளமுடன்

  கொச்சின் தேவதாஸ்

 7. பாமரன் சொல்கிறார்:

  காவிரிமைந்தன் அய்யாவின் விமரிசனம் வலைத்தளம்
  மேலும் புதிய உயரங்களை தொட வாழ்த்துக்கள்.

  • srinivasanmurugesan சொல்கிறார்:

   வாழ்த்துகள் மற்றும் நானும் விமரிசனம் தளத்தின் வாசகன் என்பதில் பெருமையும் கொள்கிறேன்.மேலும் புதிய உயரங்களை தொட வாழ்த்துக்கள்………

 8. Swag_Sans சொல்கிறார்:

  All the very best

 9. M.Syed சொல்கிறார்:

  வாழ்த்துகள் அய்யா !!!

 10. புதியவன் சொல்கிறார்:

  பாராட்டுகள் கா.மை. சார். நியாயமான கருத்துக்களை, விமரிசனங்களை நீங்கள் தொடர்ந்து வைப்பதால்தான் நிறையபேர் இந்தத் தளத்தைப் பார்வையிடுகிறார்கள். வாழ்த்துக்கள்.

 11. இளங்கோ சொல்கிறார்:

  விமரிசனம் தளத்தின் மதிப்பு எங்களுக்கு ஏற்கெனவே தெரியும்.
  அது தெரியாதவர்களுக்கு இந்த தரவரிசை உதவும்
  நீங்கள் தொடர்ந்து நிறைய எழுத இறைவன் உங்களுக்கு நல்ல
  ஆரோக்கியத்தை அருள வேண்டுகிறேன்.

 12. சிவம் சொல்கிறார்:

  காவிரிமைந்தன், உங்களை வாழ்த்துவதற்கு வயதிருக்கிறதோ இல்லையோ நிறைய மனம் இருக்கிறது. மனதாற வாழ்த்துகிறேன். நீண்ட நாட்கள்
  நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்திருந்து நிறைய எழுதுங்கள்.

 13. Paiya சொல்கிறார்:

  Congrats. We pray to GOD to bless you with good health to continue writing.

 14. Christopher.H சொல்கிறார்:

  Best Wishes, Sir.

 15. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  வாழ்த்து கூறிய அனைத்து நண்பர்களுக்கும்
  என் உளமார்ந்த நன்றிகள்.

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 16. A.K. Srinivasan/ Dubai. சொல்கிறார்:

  On seeing this very happy.With blessings of God Vazgha Valamudan.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி ஸ்ரீநிவாசன்.

   -வாழ்க வளமுடன்,
   காவிரிமைந்தன்

 17. N.Rathna Vel சொல்கிறார்:

  மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி ரத்னவேல்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 18. Ganpat சொல்கிறார்:

  உங்களின்,
  நேர்மையான கொள்கைகள்+
  நேர்மறை எண்ணங்கள்+
  சமூக அக்கறை+
  கடும் உழைப்பு
  வீண்போகவில்லை என்று அறிய மிக்க மகிழ்ச்சி.
  மனமார வாழ்த்தி வணங்குகிறேன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கண்பத்,

   எல்லாம் உங்களைப் போன்ற நண்பர்களின்
   அரவணைப்பு தான் காரணம். மிக்க நன்றி.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 19. தமிழன் சொல்கிறார்:

  பாராட்டுகள் காவிரி மைந்தன் சார். தரத்தைத் தவறவிடாதீர்கள். நாங்கள் கவனிக்க மறந்ததை நீங்கள் எழுதுகிறீர்கள். You are also fair in your approach and accept opposite views. வாழ்த்துக்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி தமிழன்,

   முடிந்த வரை இயங்குகிறேன். அப்படியும் எங்காவது
   “தரம்” தவறினால் அவசியம் சுட்டிக் காட்டுங்கள்.
   நிச்சயம் திருத்திக் கொள்ளலாம்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 20. Peace சொல்கிறார்:

  இன்னும் பல காலம் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் !

 21. D. Chandramouli சொல்கிறார்:

  Wow! Congrats!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.