கனவுலகில் மிதக்கும் நிதி ஆயோக் … இந்த அதிபுத்திசாலிகள் – உணர்ந்து தான் பேசுகிறார்களா…?


சென்ற வாரம் ரிசர்வ் வங்கியிலிருந்து வெளிவந்த ஒரு
தகவல், நவம்பர் முதல் மார்ச் வரை அதிகரித்திருந்த,

இணையம் மற்றும் மொபைல்கள் மூலமான
பணப்பரிமாற்றங்களின் அளவு, ஏப்ரல், மே மாதங்களில்
படிப்படியாக குறைந்து, தற்போது, பண மதிப்பிழப்புக்கு
( demonetization ) முன்னதான காலகட்ட அளவிற்கு
குறைந்து விட்டது…..

என்றும் –

கரன்சி தட்டுப்பாடு (cash crunch) ஏற்பட்டதால், வேறுவழியின்றி
இணையம், மொபைல் மூலமான பரிமாற்றங்களுக்கு
மாறியவர்களில் பெரும்பாலானவர்கள், மொபைல்
பரிமாற்றங்கள் சர்வீஸ், கமிஷன் என்று தேவையில்லாமல்
செலவை அதிகரிப்பதால், பழைய நிலைக்கு மீண்டும் திரும்பி
விட்டனர் –

– என்று ஒரு விளக்கமும் தெரிவிக்கப்பட்டது.

————————-

இந்த நிலையில், நேற்று, நிதி ஆயோக் தலைமைச்செயலதிகாரி அமிதாப் காந்த் கூறுவதை கேளுங்கள் –

இன்னும் 6 ஆண்டுகளில், வங்கிகள் கிளைகளுக்கு
அவசியம் இருக்காது ….!!!

– நிதி ஆயோக் தலைமைச் செயலதிகாரி அமிதாப் காந்த் கருத்து…..

தொழில்நுட்பம் வளர்ந்து வருவதால் ஆன்லைன் மூலமான வங்கி பரிமாற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு வங்கி கிளைகளுக்கான தேவை இருக்காது என நிதி ஆயோக் தலைமைச் செயலதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்தார்.

இன்னும் ஆறு ஆண்டுகளில் வங்கி கிளைகள் வைத்திருப்பது
என்பது அதிக செலவாக கூடிய விஷயமாக இருக்கும்.
குறிப்பாக ஆன்லைன் வங்கி பரிமாற்றங்களுடன் ஒப்பிடும்போது அதிக செலவு பிடிக்கும் விஷயமாக இருப்பதினால் வங்கி கிளைகளுக்கான தேவை குறையும்.

இணையம் மற்றும் மொபைல் போன்களின் வரவு காரணமாக
நிதிச்சேவை நிறுவனங்கள் தகவல்களை எளிதாக ஆராய்ந்து
கடன் வழங்க முடியும். இணையம் காரணமாக அனைவருக்கும், குறிப்பாக கிராமப்புரங்களில் இருப்பவர்களுக்கும் கூட நிதிசேவை கிடைக்கும்.

——————————————————

நகர்ப்புறங்களில் இருப்பவர்களே மொபைல் பரிமாற்றங்களை
குறைத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் என்று
ரிசர்வ் வங்கியே கூறும்போது,

கிராமப்புறங்களில் உள்ளவர்களிடையே உபயோகம் அதிகமாகும் என்றும், வங்கிக்கிளைகளுக்கான தேவையே இருக்காது என்றும் – இந்த நிதி ஆயோக்’- இன் முக்கிய மூளை கூறுகிறது.

இந்த மாதிரி நடைமுறை சாத்தியம் இல்லாத கனவுலகில்
மிதப்பவர்கள் தான் இன்றைய தினம் நிதி ஆயோக்’-இல்
அமர்ந்து கொண்டு இந்த நாட்டின் தலைவிதியை
தீர்மானிக்கிறார்கள்….

இந்த நிதி ஆயோக்’-இன் செயல்பாடுகள் ஆளும் பாஜகவின்
தொழிற்சங்க பிரிவான, ஆர்.எஸ்.எஸ்.- பாரதீய மஜ்தூர் சங் –
தொழிலாளர் அங்கமே கடுமையாக விமரிசிக்கும் அளவில்
இருக்கின்றன.

பத்து நாட்களுக்கு முன்னர், பி.எம்.எஸ். யூனியன் –

– ” நிதி ஆயோக் – கார்பொரேட் நிறுவனங்களின் ஏஜெண்டாகவே பணியாற்றுகிறது. மக்கள் நலனுக்கு விரோதமான ஆலோசனைகளை அரசாங்கத்துக்கு கூறி,

அரசையும், நாட்டையும் தவறான முறையில் எடுத்துச்
செல்கிறது.

இப்போது இருக்கும் நிதி ஆயோக் கலைக்கப்பட்டு, – உழைக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள் ஆகியோருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையிலும், அவர்களது நலனை முன்னெடுத்துச் செல்லக்கூடிய வகையிலும் இன்னும் விரிவான முறையில் திருத்தி அமைக்கப்பட வேண்டும்..

தொழிலாளர் விரோத நிதி ஆயோக் கலைக்கப்பட வேண்டும்
என்று BMS போராட்டம் நடத்தும்… பிரதமரிடம்
மனு ஒன்றையும் அளிக்கும்….”

– என்றெல்லாம் பாஜகவின் தொழிற்சங்க பிரிவே எதிர்ப்புக்
குரல் கொடுக்கும் அளவில் இருக்கிறது இவர்களின்
செயல்பாடு.

இது குறித்த செய்தி – புகைப்படம் கீழே –

மத்திய அரசு விழித்துக் கொள்ளுமா…?

நாம் கிடக்கிறோம் ஒரு பக்கம் –
கம்யூனிஸ்டுகளையும் விடுங்கள்…

குறைந்த பட்சம் பாஜகவின் தொழிற்சங்க பிரிவான BMS
சொல்லும் குறைகளையாவது, பாஜக தலைமை காது
கொடுத்து கேட்க வேண்டாமா …?

நடைமுறை சாத்தியமான முறையில் யோசித்து –
மக்களின் பலதரப்பட்ட பிரிவினரின் நலனுக்கும்,
இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் உகந்த திட்டங்களையும்,
ஆலோசனைகளையும் வடிவெடுக்கும் வகையில் –

“நிதி ஆயோக்”-கை மாற்றி அமைப்பார்களா …..?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to கனவுலகில் மிதக்கும் நிதி ஆயோக் … இந்த அதிபுத்திசாலிகள் – உணர்ந்து தான் பேசுகிறார்களா…?

 1. Dhamodharan Subramaniam சொல்கிறார்:

  this is a anti-national post 🙂

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி தாமோதரன்.

   இது அவசியம் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் தான்.
   கொஞ்சம் பின்னணியை தேடிக்கொண்டு பிறகு எழுதுகிறேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.