கொஞ்சம் தேடல் – கொஞ்சம் ஞானம் ….( 2 )
துவக்க காலத்தில், பல வருடங்களுக்கு முன்னர், நானும்
எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதைப் போல்,
எதைப் படித்தால், எந்த குருவிடம் சென்றால்,
எந்தஆன்மிக பெரியவரிடம் சென்றால்,
நம் சந்தேகங்கள் தெளியும் என்று தேடி அலைந்து கொண்டே இருந்தேன். கிடைத்ததை எல்லாம்படித்தேன். புகழ்பெற்ற சாமியார்கள், சந்நியாசிகள் அனைவரின்
உரைகளையும் கேட்டேன்… நிறைய ஆசிரமங்களுக்கு
சென்றேன்…. சில இடங்களில் தங்கவும் செய்தேன்….

ஆனால், யார் மீதும், என் மனதிற்கு ஒரு பிடிமானம் வரவில்லை. அங்கங்கே கிடைத்தவற்றை, தெரிந்து கொண்டவற்றை, எனக்கு ஏற்புடையதை மட்டும் மனதில் ஏற்று அசைபோட்டுக்கொண்டு நகர்ந்து விட்டேன்.

பல ஆண்டுகளுக்கு முன்னர், ஹடயோகம் பற்றி சில
விஷயங்கள் தெரிய வந்தன. இதையே அஷ்டாங்க யோகம்
என்றும் கூறுவார்கள்.

சுவாமி விவேகானந்தர் இதைப்பற்றி எழுதிய “ராஜயோகம்”
என்கிற புத்தகம், ராமகிருஷ்ண மடத்தின் மூலம் தமிழில்
வெளியிடப்பட்டிருக்கிறது.

பதஞ்சலி முனிவர் எழுதிய அடிப்படை சூத்திரங்களை வைத்து,
விவேகானந்தர், சாதாரண மக்களுக்கு எளிதில் புரியக்கூடிய
விதத்தில் விவரிக்கிறார்.

இது தனிமனிதன் ஒருவன், தன்னை ஆன்மிக வழியில்
உயர்த்திக் கொள்ள உதவக்கூடிய சில வழிமுறைகளை
சொல்கிறது. இதில் எட்டு வித யோக முறைகள் சொல்லிக்
கொடுக்கப்படுகின்றன.

சிலருக்கு, ” நான் ” யார் என்கிற கேள்விக்கு பதில் கிடைக்க
இந்த பயிற்சிகளும் உதவலாம்.

முதலில் இயமம், நியமம் என்கிற இரண்டு விஷயங்கள்.
இவை மிகவும் அடிப்படையான, மிகச்சாதாரண விஷயங்கள்.
கொஞ்சம் முயற்சி எடுத்துக்கொண்டால், யாராலும்
முடியக்கூடியதே. நல்ல நடத்தை, நல்ல குணங்கள் -இந்த
இரண்டும் தான் இயமம், நியமம்.

கோபம், ஆத்திரம், பிறரைப்பற்றி புறங்கூறுதல், பொய் பேசுவது
ஆகிய துர்குணங்களை தவிர்ப்பதும், உணவு விஷயங்களில்
ஓரளவு கட்டுப்பாடுடன் இருப்பதும் தான் இவை. ஆன்மிக
உய்வு பெற வேண்டும் என்கிற முயற்சியில் ஈடுபடுபவருக்கு
இதெல்லாம் ஒரு பொருட்டாகவே இருக்கக்கூடாது.
இந்த குணங்களின் அவசியத்தை எப்போதும் மனதில் நிலை
நிறுத்திக்கொண்டே இருந்தால், நாளடைவில் நமது குணங்கள்
ஒரு நிலைக்கு வந்து விடுவதை நாமே காணலாம்.

இந்த குணங்கள் நம்மிடையே நிலைத்து விட்டால், மற்றவர்
நம்மிடம் வித்தியாசமாகவும், மிகுந்த மரியாதையுடன்
அணுகுவதை நாமே அனுபவத்தில் உணர முடியும்.

மூன்றாவதாக சொல்லப்படுவது ஆசனம். ஒருவர் நல்ல
உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு இந்த ஆசனங்கள்
உதவும். இந்த ஆசனங்களை முறைப்படி, அனுபவம் பெற்ற
ஆசிரியர்களின் மூலம் தெரிந்து கொண்டு செய்வது தான் சரி.
ஆசனங்களை செய்வதன் மூலம், நல்ல உடல் நலத்தோடு
வாழலாம் என்பது உண்மையே என்றாலும் –

ஏற்கெனவே உடல் பிரச்சினைகள் இருப்பவர்களால், இதில்
கூறப்படும் பல ஆசனங்களை செய்வது இயலாத காரியமாகவே இருக்கும். யோகாசனங்களை உரிய முறையில்
கற்றுக் கொள்ளவோ, செய்யவோ முடியாதவர்கள் –

அதைப்பற்றி தீவிரமாக கவலை கொள்ள தேவை இல்லை.
அவர்களுக்கு எந்தவித தாழ்வு மனப்பான்மையும் தேவை இல்லை. இது இல்லாமலே கூட அவர்கள் அடுத்த நிலைக்கு நகர முடியும்.

நம்மால் செய்ய முடிந்த சாதாரண சில எளியமுறை உடல்
பயிற்சிகள், நடைப்பயிற்சி ஆகியவற்றை தினந்தோறும்
மேற்கொண்டால் கூட போதுமானதே. சிறிய, மற்றும் நடுத்தர
வயதில் இருப்பவர்கள், முறையாக ஆசிரியர்களின்
துணையுடன் யோகாசனம் கற்றுக் கொண்டு தொடர்வது,
அவர்கள் நல்ல உடல்நலத்தை தக்க வைத்துக் கொள்ள உதவும்.

இயமம், நியமம், ஆசனம் ஆகியவற்றிற்கு அப்பால்
நான்காவதாக வருவது “பிராணாயாமம்”. இதைச் சுலபமாக
புரிந்துகொள்ள வேண்டுமானால் “மூச்சுப் பயிற்சி” என்று
சொல்லலாம். நமது சுவாசத்தின் மீது கவனம் செலுத்தி,
அதை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது தான்
பிராணாயாமம்.

இதைப்பற்றி விவரமாக, முறையாக சொல்லிக் கொடுக்க,
வலைத்தளத்திலேயே பல தளங்கள் செயல்படுகின்றன.
நான் இங்கு எளிமையாகவும், சுருக்கமாகவும் அது என்ன
என்பதைப்பற்றி மட்டும் சொல்லிவிட்டு மேலே நகர்ந்து
விடலாமென்று நினைக்கிறேன்.

மூச்சை இடது நாசியின் வழியாக உள்ளுக்குள் இழுத்து,
சிறிது நேரம் நுரையீரலிலேயே அதனை தக்கவைத்துக்கொண்டு, பிறகு மெதுவாக வலது நாசியின் வழியே வெளியே விட வேண்டும். பின்னர் இதுபோன்றே வலது நாசியின் வழியே உள்ளுக்குள் இழுத்து, சிறிது நேரம் தக்கவைத்துக் கொண்டு, மெதுவாக, இடது நாசியின் வழியே வெளியே விட வேண்டும். இதற்கான எண்ணிக்கை, கணக்கும் இருக்கிறது.

முதல் முறை மட்டும் இதை முறையாக செய்யத் தெரிந்தவர் மூலம் கற்றுக் கொண்டு, பிறகு நாமே செய்யலாம். மிகச்சுலபமாக பழகி விடலாம். தினமும் எவ்வளவு நேரம் செய்வது என்பதை, நமது அனுபவத்தில் நாமே தீர்மானித்துக் கொள்ளலாம்.

பிராணாயாமத்தின் முக்கிய பலன் என்னவென்றால், அதில்
ஈடுபட்டிருக்கும்போது, அலையும் மனதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் இயல்பாகவே கொண்டு வந்துவிட முடிகிறது….

மனம் சுவாசத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதால், சுவாசத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்போது, மனமும் இயல்பாகவே கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுகிறது.

மேலும், சுவாசம் கட்டுப்பாட்டுக்குள் வரும்போது ரத்தஓட்டம்
சீரடைகிறது. படபடப்பை குறைத்து நம்மை நிதானத்திற்கு
கொண்டு வருகிறது… முன் கோபம் உடையவர்கள்
பிராணாயாமத்தில் ஈடுபடுவது, பெருமளவில் அவர்களின்
குணத்தை மாற்றிக்கொள்ள உதவும்.

ராஜயோகத்தில் எட்டு வித முறைகள் சொல்லப்பட்டிருந்தாலும், இந்த முதல் நான்கு மட்டும் தான் உடல் சார்ந்த பயிற்சிகள். பின்னர் வருபவை மனம் சார்ந்தவை. இந்த முதல் நான்கு வகை பயிற்சிகளை ஆர்வமுடைய யாரும், எந்த வயதிலும் மேற்கொள்ளலாம்.

நிச்சயமான பலன்களை கண்கூடாக பார்க்கலாம், உணரலாம்.

இந்த தலைப்பில் முந்தைய பகுதிக்குச் செல்ல …..

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to கொஞ்சம் தேடல் – கொஞ்சம் ஞானம் ….( 2 )

 1. தமிழன் சொல்கிறார்:

  லிங்க் சரி பண்ணுங்க. அந்த இடுகைக்குப் போகமாட்டேன் என்கிறது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி தமிழன்,

   இப்போது சரி செய்யப்பட்டு விட்டது.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. DeathBirthRaceR சொல்கிறார்:

  தேஞா 2 அற்புதம் (தேடல் ஞானம்) ஆனால் உயிரனைத்தும் காரியமாகுமா காகக்குமே இறைவன் காலமீந்த தத்துவமே புரிய புதிரிடமுடியுமா : அதுவே இயக்க தூய பணிபூரண இயக்கம் : தேட ஞான வழி அது நடந்து கடந்து இன்பமும் துன்பமும் மாயை என அறிவிக்க ஆன்மா அல்லலுற்றதை அற்புதமாக எடுத்தியம்பிய கால சிக்கலில் சித்தம் தெளிவாய் வாய்திறந்த தங்களுக்கும் அறிவியலுக்கும் அறிவுக்கும் மதம் அது யாதும் போற்றும் காரணண் இறைவன் என்பதை புரிய அற்புத உயிரின் கூறு எடுத்தியம்பிய துவக்க திருவருளின் துவக்கத்துக்கு வணக்கம் துவங்கட்டும் முடிவிலா கொஞ்சம் தேடல் – கொஞ்சம் ஞானம் என்றென்றுமே உயிரனைத்தின் கூறு அளவீந்த இறைவன் என்பதை எண்ணி தொடரட்டும் நிரந்தரமேது எதிலுமே யாவுமே காலசக்கரத்திலே……………………………………தொடரட்டும் அறிவீனத்துகளாத்மா நாமென ஆணாய் பெண்ணாய் கடக்க உயிராய் முயல்வோம் ……………………………

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர் கேஸ்ரீ அவர்களுக்கு,

  உங்களைப் போன்ற, வாக்கு “வன்மை” மிக்க மேதாவிகளை இந்த தளம் தாங்காது என்றும் எனவே இந்த தளத்திற்கு
  வந்து நீங்கள் கஷ்டப்படவோ, பின்னூட்டங்கள் இட்டு மற்றவர்களை கஷ்டப்படுத்தவோ வேண்டாம் என்றும் சில மாதங்கள் முன்னரே உங்களுக்கு எழுதி இருந்தேன்.

  நல்லவர்களுக்கு ஒரு முறை சொன்னால் போதும் என்பார்கள்.
  ஆனால், நீங்கள் மீண்டும் மீண்டும் இங்கு வந்து பின்னூட்டம்
  எழுதுகிறீர்கள். உங்கள் அதிமேதாவித்தனத்திற்கு முன்னால்,
  இந்த தளம் ஒன்றுமே இல்லை… இது எளியவர்களால்,
  எளியவர்களுக்காக இயங்கும் தளம். உங்கள் மேதாவித்தனத்தை, ஜீரணிக்கும் சக்தி இந்த எளியவர்களுக்கு
  இல்லை.

  எனவே, தயவுசெய்து இந்த விமரிசனம் தளத்திற்கு இனியும்
  வந்து, பின்னூட்டங்கள் எழுத வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மீறி நீங்கள் எழுதினால்,
  அதை பிரசுரிக்கும் நிலையில் நான் இல்லை என்பதையும்
  உங்களுக்கு மிக மிக தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மிகப்பெரிய மேதாவி ஒருவரை இந்த தளம்
  ஜீரணிக்க முடியாமல் இருப்பதற்காக வருந்துகிறேன்.

  நன்றி.
  வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • DeathBirthRaceR சொல்கிறார்:

   வாழ்த்துக்களுடன் சிறுவன் நிரந்தரம் பிரசுரமா எண்ணி வாழ்த்துகிறேன் ~ உங்கள் விருப்பம் தங்கள் பதிவின் சித்தம் வாழ்க புரிதல் மனமோ மதமோ சார்புள்ளதன்று தேடலின் நீளம் தாங்கள் வயதாலும் அனுபவத்திறத்தாலும் தூரம் ஆனால் எழுத்தின் கருணை தங்களை போல நானும் கற்க இங்கு சுதந்திரம் வலைத்தளமே அதில் பிரசுரிக்க இயலாமை நான் வருந்தேன் வாழ்த்த மறவேன் ~ செய்யுள் மனப்பாட பகுதி விளங்காது போயின் மனனம் செய்து எழுதி பிழை என ஏற்கும் ஆசானாய் எனக்கு உம்மெழுத்தே இலக்கண கருணையுயிர் வாழ்த்துக்கள் முதுநல் எழுத்தாளுமையின் கருணை கா.மை அவர்களுக்கு …..

 4. தமிழன் சொல்கிறார்:

  நீங்கள் எழுதியிருப்பது சரிதான். பிராணாயாமம்தான் முதல் படி. பொதுவாக தியானத்தின் முதல் படி, மூச்சை கவனிப்பது. மூச்சுதான் எல்லாவித உடல் இயக்கத்திற்கும் முதல்படி.

  பொதுவா நான் நினைப்பது, ஒவ்வொருவருக்கும் இத்தனை மூச்சுக்கள்தான் என்று எழுதப்பட்டிருக்கிறது என்று. SHORT BREATH உள்ளவர்களின் ஆயுளும் குறைவாகத்தான் இருக்கும். மூச்சைக் கவனிக்க ஆரம்பித்து மெதுவாக மூச்சு இழுத்து விட வேண்டும். (எப்போதுமே) இதைக் கவனத்தில் கொள்ள ஆரம்பித்தால் மூச்சின் இயக்கம் சீராக இருக்கும். மனது பட பட வென இருக்கும்போது மூச்சு சரியாக இருக்காது. இதனை நாமே அனுபவத்தில் உணரலாம்.

  மூச்சை கவனிக்கும்போது, பொதுவாக கவனம் ஒன்றிவிடும். அதனால்தான் இதனை தியானத்தின் முதல் படியாகக் கொள்கின்றனர். அல்லது, ஒரு DEITYஐ மனதில் நிறுத்தி ஒரு நாமத்தை (ராம அல்லது ஏதோ ஒன்றை) சொல்லலாம். கவனம் DEITYயிடம் இருக்கவேண்டும். இதுவும் முழுமையான தியானத்துக்கு இட்டுச்செல்லும். (வழி தெரிகிறது. ஆனால் போக இயலவில்லை).

  இன்னொன்று, உட்கார்ந்து, முதுகெலும்பை நேராக வைத்துக்கொள்வது. இதுவும் மிகவும் முக்கியம். நீங்கள் பரமாச்சாரியாரின் எந்தப் புகைப்படத்தைப் பார்த்தாலும், அவர் நேராக உட்கார்ந்திருப்பதைக் கவனிக்கலாம். அதுவும் அவர் ஜபம் செய்யும்போது (வயது முதிர்ந்த நிலையிலும்) முதுகெலும்பை நேராக வைத்திருப்பார். இது சின்ன வயதிலிருந்தே PRACTICEல் வருவது.

  இதுல இன்னொண்ணு. தியானத்தை, யாரும் யாருக்கும் அளிக்கமுடியாது. இது ஒரு பாதை. நாம்தான் முன்னேறிச் செல்லவேண்டும். சந்தேகம் வரும்போது ‘குரு’ ஸ்தானத்தில் உள்ளவர் சந்தேகம் தெளிவிக்கலாம். ஆனால் இது நாமே செல்லவேண்டியது (இதனை ஒட்டி ஒரு விஷயம். நாம், அப்பா, கணவன், பிள்ளை, நண்பன் என்று எந்த ஸ்தானத்தில் இருந்து நம் கடமையைச் செய்தாலும், நாம் என்பது நாம்தான். அதாவது நம் வாழ்வு என்பது நாம் மட்டும்தான். குழப்புகிறேனோ? ஒருவனின் வாழ்வின் நோக்கு ஒரு இடத்திலிருந்து ஆரம்பித்து ஒரு DESTINATIONஐ நோக்கிச் செல்கிறது. இதில் வழியில் பார்க்கும், பழகும் மக்கள்தான் நம் உறவினர்கள், நண்பர்கள். நம் கடமை அல்லது நோக்கம் அந்த DESTINATIONனுக்குச் செல்வது. அதை அடையும்போது நம்முடைய குண நலங்கள், செய்கைகள் மட்டுமே நம்மை எடை போடும். இதனை நாம் யோசித்துப்பார்த்தால் புரிந்துகொள்ள முடியும். இதனால்தான், தந்தை மறைந்த உடன் வருத்தப்படும் நாம், அடுத்து நம் வாழ்வில் கவனம் கொள்கிறோம், தந்தை மறைவையே நினைத்து வாழ்க்கை நிற்பதில்லை. அதாவது WE ARE JUST MOVING TOWARDS OUR DESTINY)

 5. Pingback: கொஞ்சம் தேடல் – கொஞ்சம் ஞானம் ….( 3 ) | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s