பல்ட்டியா அல்லது பயமா …? அறிஞர் அண்ணாவும்… மோடிஜியும் ஒன்றாமே…!!!

நியூஸ் 18 தமிழ்நாடு சேனலின் முதன்மை ஆசிரியர் மு.
குணசேகரனுக்கு (திருமதி சசிகலாவின் கணவர்) நடராசன்
அவர்கள் அளித்த பேட்டியிலிருந்து சில பகுதிகள் –

——————

கேள்வி: ஒரு கூட்டத்தில் அதிமுகவை பாஜக பிளவுபடுத்தப்
பார்க்கிறது என்று கூறினீர்கள். தமிழ்நாட்டை காவிமயமாக்க
அனுமதிக்க மாட்டோம் என கூறினீர்கள். ஆனால் அதிமுகவில்
உங்கள் எண்ணம் ஈடேறவில்லையே?

பதில்: ஒருவேளை நான் அப்படி பேசியதே அதுமாதிரியான
செயல்பாட்டுக்கு அவர்களைத் தூண்டியதோ என்னவோ.
ஆனால் நான் பிரதமர் மோடியையோ முன்னணி பாஜக
தலைவர்களையோ நான் எந்த விமர்சனமும் செய்யவில்லை.
அதை புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள சிலர் சில சதிவேலைகளில் ஈடுபட்டு
நம்மைத் தாக்குகிறார்களோ என்று என்னால் அப்போதே உணர
முடிந்தது. அந்த வேகத்தில் வந்த வெளிப்பாடுகளாக அந்த
வார்த்தைகள் இருக்கலாம்.

அதிமுகவை உடைக்கப்பார்க்கிறார்கள் என்று முன் கூட்டியே
உணர ஆரம்பித்ததால் அதை பேசியிருக்கலாம்.

ஆனால் பாஜக தலைமைக்கு,
மோடிக்கு எதிரான பேச்சு அல்ல அது.

அண்ணா சாமானியர்கள் எப்படி முதல்வராக முடியும்
என்று நிரூபித்தாரோ –
அதுபோல மோடியும் ஒரு சாமானியராக
இருந்து உயர்ந்த பதவிக்கு வந்ததால் அவர் மேல் எப்போதும்
எனக்கு மிகுந்த மரியாதையும் பற்றும் உண்டு.

—————————————-

இது …..

மனமாற்றத்தை குறிக்கிறதா…? அல்லது
பயத்தையா….?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to பல்ட்டியா அல்லது பயமா …? அறிஞர் அண்ணாவும்… மோடிஜியும் ஒன்றாமே…!!!

 1. M.Syed சொல்கிறார்:

  சந்தேகமே வேண்டாம் பயத்தின் வெளிப்பாடு தான் ஐயா . நம் நாடு {பிஜேபி அரசு) சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறது இது நாட்டில் கவலையளிக்கும் விஷயம் ஐயா .

 2. SELVADURAI MUTHUKANI சொல்கிறார்:

  செய்திருக்கும் பாவங்கள்தான் பயத்தின் அடிப்படை. தலைவர்கள் சுயநலமில்லாமல் இருந்தால் பயம் தேவையில்லை!!!

 3. selvarajan சொல்கிறார்:

  பாவ்லா …? நட்டு கழன்ற நடராஜனின் பேட்டி …! ஒரு அருமையான .. அதிசயமான செய்தி : — Posted Date : 14:29 (12/06/2017) Last updated : 18:00 (12/06/2017)
  தோசை ₹10… மதிய உணவு ₹15… மூலிகை உணவு சாப்பிட சென்னையில் ஓர் இடம்! http://www.vikatan.com/news/agriculture/92029-this-herbal-restaurant-gives-dosa-for-just-10-rupees.html?utm_source=newsletter&utm_medium=content&utm_campaign=12218 …. ஊருக்கு இரண்டு இது போல உணவகம் இருந்தால் எவ்வளவு … நல்லது ….!!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   நான் கூட அந்த இடத்திற்கு போயிருக்கிறேன்.
   அதற்கென்று சில நிரந்தர வருகையாளர்கள் உண்டு.
   எப்போதும் கூட்டம் இருக்கும்.

   நான் இன்னும் சில இடங்களில் கூட இந்த மாதிரி உணவகங்களை
   பார்த்திருக்கிறேன். ஆனால், இவ்வளவு மலிவாக எங்கும் இல்லை.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. venila சொல்கிறார்:

  யார்க்கு தெரியும்?

 5. தமிழன் சொல்கிறார்:

  மு. குணசேகரனுக்கு – இவருக்கும் நடு நிலைக்கும் சம்பந்தமில்லை. இவர் ஒரு திமுக ஆள்.

  நடராஜன் – இவருக்கும் உ.பிரதேச அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு உண்டு. (எல்லாம் பணம் பதுக்கல்தான் வேறென்ன). பாஜகவின் STRONG ARM இவரைப் பயமுறுத்துகிறது. (காங்கிரஸ் அரசு கருணானிதியை இரும்புக்கரம் கொண்டு பயமுறுத்தியது நினைவுக்கு வருகிறதா? 25 சீட்டுதான் கொடுப்பேன் என்ற கருணானிதியை, கழுத்தில் கத்தி வைத்து 65 சீட் வாங்கியது ஞாபகம் வருமே) பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இதில் வித்தியாசமே இல்லை.

  இதைவிட ஒரு கவலையளிக்கும் செய்தி உண்டு. காங்கிரஸ் எப்படி அரசு அதிகாரிகளுக்கு, நீதிபதிகளுக்கு அரசியல் பதவிகள் கொடுத்ததோ (வேறு என்ன.. கள்ளத்தனம்தான்) அதுபோல பாஜகவும் செய்கிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, உடனடி கவர்னர்.. இப்போ ஜனாதிபதி பதவிக்கும் பரிசீலிக்கப்படுகிறார். இது நாட்டிற்கு ஏற்படுகின்ற புற்று நோய் என்றே நான் நினைக்கிறேன். (நம்ம ஊர் ஊழல் வியாதி கருணானிதி, அவருடைய தள்ளுவண்டியைத் தள்ளும் போலீஸ்காரருக்கு, 50 லட்சத்திற்கு 3 கோடி பெறுமான அரசு வீட்டை ஒதுக்கினாரே… அந்த போலீஸ் காரர் மாதச் சம்பளம் 3000 ரூ.அனேகமாக அது பினாமி பர்சேஸ்தான். அதேபோல் உளவுத்துறை தலைவரின் மகளுக்கும் விதிகளுக்குப் புறம்பாக அங்கு வீடு ஒதுக்கினார். ஒருவேளை இந்தியாவில் உள்ள எல்லா அரசியல்வாதிகளும் கெட்டதற்கு கருணானிதிதான் காரணமாக இருக்கமுடியும். ஏனென்றால், அவருக்கு முன்பு இத்தகைய புற்று நோய் இந்தியாவில் இல்லை)

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தமிழன்,

   இதற்கு சம்பந்தம் இல்லாத ஒரு விஷயம்…

   ராஜாஜியும், காந்திஜியும் – சம்பந்திகள் ஆனது எப்படி
   என்பது குறித்து உங்களுக்கு எதாவது தெரிந்திருந்தால்
   சொல்லுங்களேன். எனக்கு இது குறித்த விவரங்கள்
   எங்கும் படிக்க கிடைக்கவில்லை…

   – வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • தமிழன் சொல்கிறார்:

    இதுபற்றிப் படித்திருக்கிறேன். இது அரசியல், ராஜாஜியின் அரசியல் முன்னேற்றம், காந்திகிராம், காந்தியை தேவதூதர் என்று மனதில் வைத்திருந்த பலகோடி மக்கள், அதாவது அவர் சொன்னால் அதுதான் முடிவு என்பது போன்றவை சம்பந்தப்பட்டது. நினைவுக்கு வரும்போது நிச்சயம் எழுதுகிறேன்.

    • தமிழன் சொல்கிறார்:

     ராஜாஜி, காந்தீயக் கொள்கைகள்பால் ஈர்க்கப்பட்டு அவருக்கு அத்யந்த சினேகிதர், சீடர் ஆகிறார். ஆனாலும் காந்தியின் முடிவுகள், கருத்துக்கள் தவறாக இருக்கும்பட்சத்தில் அவரிடத்தில் தைரியமாகப் பேசுவதற்கு அவர் தயங்கியதில்லை (மற்றவர்கள் பயந்தார்கள்). இருவருக்கும் இந்து முஸ்லீம் கிறிஸ்தவர்கள் (கடைசியில் குறிப்பிட்டதற்கு ஆதாரம் தெரியவில்லை) ஒற்றுமையோடு சகோதரர்களாக இருக்கவேண்டும் என்பதுதான் எண்ணம். ராஜாஜியின் இத்தகைய கருத்துக்களை அவருடைய சமூகம் விரும்பவில்லை. ராஜாஜி, சபர்மதி ஆஸ்ரமத்தில் தன் பெண்ணை ஊழியத்துக்காக சேர்த்தார். காந்தியின் கடைசி மகன் தேவதாஸ் காந்தி, அந்தப் பெண்ணை விரும்புகிறார். (லக்ஷ்மிக்கு அப்போது 15 வயது). ராஜாஜியும் காந்தியும், இது மிகக் குறைந்த வயது, 5 வருடங்கள் இருவரும் பார்க்கக்கூடாது, பேசக்கூடாது. அதற்கு அப்புறமும் விருப்பம் இருந்தால் திருமணம் என்று சொல்கின்றனர். 5 வருடங்கள் கழித்து லக்ஷ்மியை மணந்துகொள்கிறார். ராஜாஜி இந்த விஷயத்தில் சாதி பார்க்காமல் (காந்தீயக் கொள்கை) நடந்துகொண்டார். சம்பந்தி என்பதனாலும் ராஜாஜிக்கு ஒரு மதிப்பு மிக்க இடம் இருந்தாலும், ராஜாஜி பெரும்பாலும் காந்தியின் சீடராகத்தான் கருதப்படுகிறார். காந்தியுடன் கூடவே இருந்ததில் தேவதாஸுக்கு ஒரு இடம் உண்டு. ராஜாஜி, திருச்செங்கோடில் காந்தி ஆஸ்ரமம் நடத்தினார். அங்கு தன் மகளையும் பேரன்/பேத்தியையும் கொஞ்ச காலம் வைத்துக்கொண்டார். ஓரளவு ரீசனபிள் குணம் கொண்ட தேவதாஸ் காந்திக்குத்தான் ராஜ்மோகன் காந்தி…. கிருஷ்ணகாந்த் காந்தி போன்றோர் பிறக்கின்றனர். ராஜாஜி சுதந்திர இந்தியாவின் 2வது கவர்னர் ஜெனெரலாக ஆனார். தேவதாஸ் காந்தி தன் 57வது வயதில் இறந்தார்.

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      தமிழன்,

      தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

 6. paamaranselvarajan சொல்கிறார்:

  தாங்கள் ஒருவரிடம் குறிப்பிட்டுகே ட்டுள்ள ” ராஜாஜியும் காந்திஜியும் சம்பந்திகள் ” ஆனது எப்படி என்பதற்கு விளக்கம் கூறுவது தவறுதான் …. இருந்தாலும் ஒரு சிறு குறிப்பு மட்டும் தங்கள் பார்வைக்கு …. இருவரின் வாரிசுகளின் அதிதீவிர காதல் தான் ….!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   ஒரு தவறும் இல்லை.
   நீங்களே சொன்னாலும் சரி தான்…

   எப்படி, எப்போது நிகழ்ந்தது அது…?
   இரண்டு புகழ்பெற்ற தந்தைகளின் response எப்படி இருந்தது..?
   துவக்க கால எதிர்ப்புகள் ஏதேனும் உண்டா..?

   பலருக்கும் இதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம்
   இருக்கும் என்பதால், நீங்கள் இங்கேயே தாராளமாக கூறலாம்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • paamaranselvarajan சொல்கிறார்:

    மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன் …. பார்க்கவும் ….!

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     கிடைக்கப் பெற்றேன்.
     மிக்க நன்றி செல்வராஜன்.

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.