புகழ்பெற்ற அரசியல்வாதி ஒருவரின் – தோல்வியுற்ற காதல் கதை …!!!


நம்மிடையே வாழ்ந்த, சென்ற நூற்றாண்டின் புகழ்பெற்ற,
வெற்றிகரமான அரசியல்வாதி ஒருவரின் தோல்வியுற்ற
நிஜக்காதல் கதை இது.

அண்மையில் இவரைப்பற்றிய புத்தகம் ஒன்றை படித்தபோது
தான் இந்த கதை விவரமாக தெரிய வந்தது. ஏதோ ஒரு உணர்வு – மனதை வருத்தியது – மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென தோன்றியது. சுருக்கமாக கீழே –

———————————————————

அந்நாளில் மும்பையின் புகழ்பெற்ற வக்கீல், சுதந்திர போரட்ட
காலத்திய மிகப்பெரும் அரசியல்வாதிகளில் ஒருவர்,
இன்றைய பாகிஸ்தான் உருவாக காரணமாக இருந்தவர் –
திரு.மொஹம்மது அலி ஜின்னா, அவர்களின் உண்மைக்கதை
தான் இது….

இந்தியா, பாகிஸ்தான் – அரசியலுக்கு எந்தவிதத்திலும்
சம்பந்தம் இல்லாமல், ஒரு நிஜ வாழ்க்கை கதையை
இங்கு சொல்ல முயன்றிருக்கிறேன்…

பிரிவு படாத பிரிட்டிஷ் இந்தியா…
1916-ஆம் வருடத்திய கோடைக்காலம்… இடம் இந்தியாவின்
புகழ்பெற்ற கோடைவாசஸ்தலமாகிய டார்ஜிலிங்….!

தின்ஷா மானெக்ஜி பெட்டிட், மும்பையின் புகழ்பெற்ற
வர்த்தக பிரமுகர்களில் ஒருவர். அவர் தனது குடும்பத்துடன்,
டார்ஜிலிங் வந்திருக்கிறார். இமயமலையை நோக்கி
அமைந்திருக்கும் அவர்களது விருந்தினர் விடுதி…

அதே நாட்களில் மும்பையில் புகழ்பெற்ற வக்கீலாக
உருவெடுத்திருந்த திரு.மொஹம்மது அலி ஜின்னாவும்
அங்கே தங்கி இருக்கிறார். இங்கிலாந்தில் பாரிஸ்டருக்கு
படித்து விட்டு, மும்பையில் வக்கீலாக பணிபுரியத் துவங்கி,
குறுகிய காலத்திலேயே தன் தொழிலில் நல்ல இடத்தை
பெற்றிருந்தார் ஜின்னா..

தின்ஷா மானெக்ஜி பெட்டிட், ஜோராஷ்டிர இனத்தைச் சேர்ந்த,
மும்பையில் மிகவும் புகழ் வாய்ந்த வர்த்தக குடும்பத்தை
சேர்ந்தவர். மிகப்பெரிய செல்வந்தர்.

இருவரும், ஏற்கெனவே மும்பையில் ஒருவரையொருவர்
நன்கு அறிந்திருந்தனர்.

இது காதலும், உணர்வுகளும், ஏக்கமும், பிரிவும், துன்பமும்,
கோபமும், தனிமையும் நிறைந்த இரண்டு உள்ளங்களின்
தோல்வியுற்ற ஒரு காதல் கதை. மிகவும் மன உறுதிவாய்ந்த
இரண்டு பேரும், விதியின் விளையாட்டால், தங்கள்
நிம்மதியையும், திருமண வாழ்வையும் இழந்த கதை.

தனிப்பட்ட முறையில் திரு.ஜின்னா, அந்த அளவிற்கு
மத விஷயங்களில் தீவிரமானவர் அல்ல. இங்கிலாந்தில்
படித்ததும், அந்த சூழ்நிலையில் நீண்ட காலம் இருந்ததும்
இரவு விருந்துகளில் கலந்து கொள்வதும், மது அருந்துவதும்,
மேற்கத்திய உடை கலாச்சாரங்களில் கலந்ததும் அவரை
முற்போக்கான, நாகரிகமான மனிதராகவே காட்டியது….

லண்டனில் இருக்கும்போது, ஷேக்ஸ்பியர் நாடகங்களில் கூட
நடித்திருக்கிறார். அவருக்கு உருது மொழியில் அவ்வளவு
பரிச்சயம் இருந்தது இல்லை. ஆங்கிலமும், தாய்மொழியான
குஜராத்தியுமே அவரறிந்த மொழிகள். தொழில் முறையில்
புகழும், வெற்றியும் கைகூடவே, மும்பையின் பெரும்
பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்தார். 40 வயதாகியும்
அதுவரை திருமணத்தில் நாட்டமின்றியே இருந்தார்….

ரத்தன்பாய் பெட்டிட், தின்ஷா பெட்டிட் அவர்களின் செல்வ
மகள். ( பிப்ரவரி, 20, 1900 ) புகழ்பெற்ற டாட்டா குடும்பத்தை
சேர்ந்தவர். பிறக்கும்போதே பணக்காரர். தங்கத்தொட்டிலில்
வெள்ளிக் கரண்டியுடன் வளர்ந்தவர். மிக மிக அழகானவர்.

மிகுந்த புத்திசாலி, …. எனவே, மும்பை செல்வந்தர்களின்
வட்டத்தில் சிறிய வயதிலேயே மிகவும் புகழுடன் வலம்
வந்தார். “மும்பையின் நைட்டிங்கேல்” என்று தோழிகள்
வட்டத்தில் அழைக்கப்பட்டவர் அவர். ஒரிஜினல் ஆங்கிலேய
பெண்களைத் தோற்கடிக்கும் அளவிற்கு, ஆங்கிலத்தில்
சரளமாக பேசக்கூடியவர்.( எனவே, கூடவே கொஞ்சம்
செருக்கும், ஈகோவும்…!!!).

இந்த இருவரும், டார்ஜிலிங்கில் அடிக்கடி சந்தித்து பழகக்கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகியது…. புத்திசாலிகளும்
திறமையாளர்களுமான இருவருக்கும் இடையே ஒரு ஈர்ப்பு
உண்டாகி இருவரும் காதல் வசப்பட்டபோது ஜின்னா
அவர்களின் வயது 40. பெட்டிட்டின் வயதோ -16 தான்.

ஒரு நாளிரவு. ஓட்டலில், ஒரே மேஜையில் உணவருந்தி
கொண்டிருந்தபோது, ஜின்னா, தன் காதலியின் தந்தையான
தின்ஷா பெட்டிட்டிடம் “இரண்டு வேறுபட்ட சமுதாயத்தினரிடையே உண்டாகும் திருமண பந்தங்கள்” பற்றிய அவரது கருத்து என்னவென்று கேட்டார்…

பொதுவாக, முற்போக்கான செல்வந்தராகிய தின்ஷா பெட்டிட்,
தன்னைப் பொருத்த வரை அதில் தவறு எதையும் காணவில்லை என்று சொல்லி இருக்கிறார்….

அடுத்த கணமே, ஜின்னா, எந்தவித தயக்கமுமின்றி,
தின்ஷாவிடம், அவரது மகளுக்கும், தனக்குமிடையே
உண்டான காதலைப்பற்றி கூறி, அவரது ஒப்புதலைக் கோரி
இருக்கிறார்.

நடைமுறை என்று வந்தவுடன், தின்ஷா இதை ஏற்கவில்லை.
அவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள்
என்பதும், இருவருக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம்
(40 – 16) மிக அதிகம் என்பதும் அவரது மறுப்புக்கான உடனடி
காரணங்கள்.

அவர்களது காதல் மற்றும் திருமண பந்தத்தை ஏற்க மறுத்த
தின்ஷா பெட்டிட், தனது செல்ல மகளிடம் மிகவும்
வலிமையான வார்த்தைகளால், புத்திமதிகள்
சொல்லிப்பார்த்தார்…. காதல் வசப்பட்ட மகள் எதையும்
ஏற்கத்தயாரில்லை.

எனவே, மகளின் நடமாட்டத்திற்கு தடை விதித்தார் தின்ஷா
பெட்டிட். “ரட்டி”க்கு அப்போது 16 வயதே ஆகியிருந்ததாலும்,
சட்டபூர்வமாக திருமணமாக, குறைந்த பட்சம் 18 வயது
நிறைவேற வேண்டும் என்பதாலும், அடுத்த இரண்டு
ஆண்டுகள் ஜின்னா, பெட்டிட் – இருவருமே அமைதியாக
இருந்தனர்.

ரட்டிக்கு 18 வயது நிரம்பியதும், அவர் இஸ்லாமிய மதத்துக்கு
மாறி, தனது பெயரை மரியம் என்று மாற்றிக்கொண்டு,
ஜின்னா அவர்களை திருமணம் செய்து கொண்டார்.
( இந்த மரியம் என்கிற பெயரை, பின்னர் பெட்டிட் எப்போதுமே
பயன்படுத்தவில்லை …! தன் பழைய பெயரிலேயே
இயங்கினார்…)

nikahnama

மும்பை மலபார் ஹில்ஸ்-ல் இருந்த, ஜின்னா அவர்களின்
மாளிகையில் அவர்களது “நிக்காஹ்” நடந்தது. மணமகளின்
வீட்டிலிருந்து யாரும் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை.

தின்ஷா தனது செல்ல மகள், உயிருடன் இருக்கும்போதே –
இறந்து விட்டதாக அறிவித்து விட்டு, அவருடனான, தங்களது
குடும்பத்தினரின் உறவை முற்றிலுமாக முறித்துக் கொண்டார்.

ரட்டியும் இது குறித்தெல்லாம் எந்தவித கலக்கமுமின்றி தன்
முடிவில் வைராக்கியமாகவும், பிடிவாதமாகவும் இருந்தார்.

திருமணம் ஆன ஒன்றிரண்டு வருடங்கள் இனிமையாக
கழிந்தன. அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.
ரட்டி, ஜின்னாவை – பிரியமுடன் “ஜெ (J )” என்றும், மகளை
“டி” ( D – டினா…) அழைப்பது வழக்கம்.

ஆனால், சீக்கிரத்திலேயே அவர்களது இனிமைக்கு பங்கம்
வந்தது. ஜின்னா, 1922-வாக்கில், அரசியலில் சில
பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்ததன் காரணமாக, தன் முழு
நேரத்தையும் அரசியலிலேயே செலவழிக்க நேர்ந்தது.
இருவருக்குமிடையே குறைந்த நெருக்கம், அவர்களது மண
வாழ்வில் கசப்பை உண்டாக்கியது.

காதலித்து மணந்த மணாளன், தன்னை புறக்கணிப்பதை
அவரால், அவரது ஈகோவால், தாங்கிக்கொள்ள முடியவில்லை.

ரட்டி, தனது 3 வயது மகள் டினா’வுடன் லண்டனுக்கு சென்று
தனியே தங்கலானார். சில வருடங்கள், தனது கணவரையும்,
குடும்பத்தினரையும் விட்டு விட்டு, தனியே லண்டனில்
தங்கினார். பிறகு இந்தியா திரும்பிய அவர் ஜின்னாவுடன்,
தனது தொடர்பை அதிகரித்துக்கொள்ள முயன்றார். ஆனால்,
உடைந்த பந்தம் மீண்டும் பழைய அளவிற்கு ஒட்டவில்லை.

1925-ல், மும்பையில் ஒரு ராணுவ கல்லூரி அமைப்பது
சம்பந்தமான கமிட்டியில், ஜின்னாவும் ஒரு உறுப்பினராக
நியமிக்கப்பட்டார். இதன் காரணமாக, ஐரோப்பாவுக்கும்,
வட அமெரிக்காவிற்கும், சுமார் 5 மாதங்கள் ஜின்னா
பயணப்பட வேண்டியிருந்தது. மனைவியுடனும், பெண்
குழந்தையுடன் அதிக நேரம் செலவழிக்க வாய்ப்பு கிட்டும்
என்கிற எண்ணத்துடன், ஜின்னா, ரட்டியையும், டினாவையும்
கூடவே அழைத்துச் சென்றார்.

ஆனால், இந்த பயணம் எதிர்பார்த்ததற்கு நேர்மாறான
விளைவுகளையே உருவாக்கியது. அவர்களிடையே இருந்த
தூரம் இன்னும் அதிகமாகியது. அருகிலேயே இருந்தும்
இருவரும் இதயத்தால் வெகுதூரத்தில் இருந்தனர்.

நாளடைவில் இந்த பிளவு அடைக்க முடியாததாயிற்று.
1927 -ல் 18 வயதில் காதல் திருமணம் செய்துகொண்ட ரட்டி
தனது 27-வது வயதில் கணவனை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து
தனியே வாழ நேர்ந்தது.

தனிமை ரட்டியை வாட்டி வதைத்தது. மனமுடைந்த ரட்டி,
தனியுலகில் வாழத்துவங்கினார். தனக்குள்ளேயே ஒரு உலகை
சிருஷ்டி செய்து தனிமையில் வாழத்துவங்கிய அவர்,
வெளியுலகுக்கு வருவதை முற்றிலுமாக தவிர்த்தார்.

நாளடைவில் இது அவரது உடல்நலனையும், மன நலனையும்
வெகுவாக பாதித்தது.

மருத்துவம் செய்துகொள்ள, ஃப்ரான்சுக்கு சென்ற ரட்டி,
1928-ல் தன் காதல் கணவனுக்கு எழுதிய கடைசி கடிதம் இது –

ரட்டியின் மேற்கண்ட கடிதத்திலிருந்து, மனதை உருக்கும்
சில பகுதிகள் கீழே –

“…When one has been as near to the reality of Life (which after all is Death) as I have been dearest, one only remembers the beautiful and tender moments and all the rest becomes a half veiled mist of unrealities.

Try and remember me beloved as the flower you plucked and not the
flower you tread upon.” …

“.. Darling I love you – I love you – and had I loved you just a little less I might have remained with you – only after one has created a very beautiful blossom one does not drag it through the mire.
The higher you set your ideal the lower it falls. I have loved you my darling as it is given to few men to be loved. I only beseech you that the tragedy which commenced in love should also end with it…”

( இந்த இளம் பெண்மணியின் சோகம் இன்னும்
முடியவில்லை….அடுத்த பகுதியிலும் தொடர்கிறது…..)

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to புகழ்பெற்ற அரசியல்வாதி ஒருவரின் – தோல்வியுற்ற காதல் கதை …!!!

 1. சிவம் சொல்கிறார்:

  கே.எம். சார்,

  நீங்கள் சொல்வது போல் அரசியல் கலவாத இந்த அரசியல்வாதியின்
  தனிப்பட்ட வாழ்க்கை மனதை வருடத்தான் செய்கிறது.
  இந்த மாதிரி திருமணங்களில், இருவரில் யாரேனும் ஒருவர் தான் வெற்றி பெற
  முடிகிறது. ஜின்னா அவர்களின் அரசியல் வெற்றிக்கு கொடுக்கப்பட்ட பலி தான்
  அவரது காதல் மனைவி “ரட்டி”யின் மண வாழ்வு.
  அரசியல் விமரிசனங்கள் மட்டும் அல்லாமல்,
  மிக அழகாக கதை சொல்லும் திறனும் உங்களிடம் இருக்கிறது. பாராட்டுகள்.

 2. kalakarthik சொல்கிறார்:

  உயர்திரு காமராஜ் அவர்கள் கூட காதல் தோல்வி காரணமாகவே சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டார் என்பது உண்மையா அண்ணா

  kalakarthik
  karthik amma

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கார்த்திக் அம்மா,

   மன்னிக்கவும். நீங்கள் சொல்லும் விஷயம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.
   நான் எங்கும் படிக்கவும் இல்லை… கேள்விப்படவும் இல்லை.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. தமிழன் சொல்கிறார்:

  பொது வாழ்வுக்கு ஒரு குறிக்கோளோடு வந்தவர்களுக்கு சொந்த வாழ்வு சாதாரணமானவர்களுக்கு இருப்பதுபோல் இருக்காது. பெரும்பாலும் ஒட்டுறவு குறைந்துவிடும். ஜின்னா போன்ற ஒரு தலைவருக்கு (அவர் நம்பிய கோஷத்தை முன்னெடுத்துச் சென்றதால்), மனைவியை அவரது அன்பை இழக்கவேண்டிய சூழ்நிலை.

  நீங்கள் எழுதுவீர்கள் என்று நினைக்கிறேன். பிரிவினையின் சமயம், கடைசி முறையாக அழுத கண்ணீரோடு மனைவியின் சமாதியைப் பார்த்தபின் தன் புதிய தேசத்துக்குச் சென்றார் ஜின்னா (பிறகு எப்போதும் திரும்பிவரப்போவதில்லை). அவரது பெண்ணோ (டினா), தனது மும்பை வீட்டிலேயே இருந்துகொண்டார் (தந்தையுடன் செல்லாமல், சுதந்திர இந்தியாவிலேயே வாழும்பொருட்டு).

  எந்தத் தலைவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை என்பது குலைந்துதான் போகும். சுதந்திர இந்தியாவில், ‘வாரிசுகளைப் பெறுவது’ என்ற கடமை முடிந்துவிட்டால், அவரவர் அவரவர் வழியிலேயே சென்றுவிடுவார்கள். கணவன்-மனைவி அல்லது தாய், என்ற பந்தம் பெரும்பாலும் இருக்காது. (காமராஜருக்கே, அம்மா என்ற பந்தம் இருக்கவில்லை, அல்லது காண்பிக்கும் சந்தர்ப்பமே இல்லையே)

  • Ganpat சொல்கிறார்:

   //எந்தத் தலைவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை என்பது குலைந்துதான் போகும்.// இதற்கும் உலகப்பிரசித்தி பெற்ற விதிவிலக்கு சென்னையில் தான் உள்ளது.தன குடும்பதைத்தவிர வேறு ஒரு ஈ காக்கை பற்றியும் கவலைபடாதவர நம் தமிழின தலிவர்.

   • தமிழன் சொல்கிறார்:

    ‘நான் ஒரு பத்தி சேர்த்திருந்தேன். அப்புறம் அதை நீக்கிவிட்டேன். நீங்கள் அந்த SUBJECTஐத் தொட்டிருப்பதால் இப்போது விளக்கமாக எழுதுகிறேன். யாரும் எல்லாவற்றிலும் பெரிய ஆளாக ஆக இயற்கை அனுமதிக்காது. எல்லாம் கிடைத்தவன் என்று ஒருவனும் கிடையாது. அரசியல் அதிகாரத்தில் இருக்கும் எல்லோரும் சூழ்’நிலைக் கைதிகள்தான். ஒன்று கிடைக்கவேண்டுமானால் மற்றவற்றை இழந்துதான் ஆகவேண்டும். இது அரசருக்கும், அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் உள்ளதுதான். இதில் விதிவிலக்கு என்று நான் அறிந்தவரையில் ஒருவரும் இல்லை.

    திமுக தலைவர் கருணானிதிக்கு, தான் தன் குடும்பம் என்பதில் மிகவும் தெளிவு உண்டு. அவரது PRIORITY, முதல்ல தான் (அதுல மனைவி இணைவி சேர்ந்தாலும், அவர்களும் தான்’ல’ அடக்கம்தான், ஆனால் கட்சிக்குப் பாதகமாயிடக்கூடாது), அப்புறம் தன் கட்சி (ஏனென்றால், கட்சி அபிமானம் இல்லை. அந்த TOOL இல்லைனா எந்தக் கொள்ளையும், அதிகாரமும் சாத்தியமல்ல), அதன்பின், கட்சிக்காகத் தான் தெரிவு செய்த மகன் (இதைப்பற்றியும் எழுதலாம். கிட்டத்தட்ட ஷாஜகான் தாரா வைத் தேர்ந்தெடுத்ததுபோல, அதாவது தனக்குப் பாதிப்பு வரக்கூடாது என்பது நோக்கம்), அதன் பின் மகள், அதன் பின் தன் குடும்பம், அக்கா குடும்பம், தன் புரவலர்கள், கட்சியின் தன் ஆட்கள், அப்புறம்தான் மற்றவர்கள். பணம் சம்பாதிப்பது எல்லாமே அவருடைய குடும்பத்துக்குத்தான் (அக்கா குடும்பம்லாம், கப்பம் கட்டும் வகையைச் சேர்ந்தது. TYPICAL MAFIAதான்)

    அவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை குலைந்துதான் போயிற்று. (இதில், எம்ஜியார் EPISODEஐச் சேர்க்கவில்லை. அப்போது மு.க.முத்துவை வைத்து எம்ஜியாரின் சினிமா புகழைக் குலைக்கச் செய்த சதியும், ஆட்சி அதிகாரத்தால் எம்ஜியாரின் சினிமா வாழ்க்கையை முடக்கச் செய்த செயலும், அதன் விளைவுகளையும் எழுதவில்லை. அதுவும் காலம் அவருக்குக் காண்பித்த விளைவுதான். மு.க.முத்து குடிகாரராகி, வாழ்க்கை சின்னாபின்னமாகி, அவரது எதிரியான அதிமுக தலைவரிடமே கையேந்தும் நிலைமைக்குக் கொண்டுவந்தது. காலம் கருணானிதி முகத்தில் பூசிய சாணியை, அவர் பிறர் அறியாவண்ணம் துடைத்துக்கொண்டார்).

    தன்னுடைய நலனையே முக்கியமாகக் கருதியதால், கொள்ளையடிக்கும் பணத்தையே முக்கியமாகக் கருதியதால், மக்கள் மத்தியில் மதிப்பிழந்துபோனார். அவருடைய தனிப்பட்ட விருப்பத்தால், மானம் இழந்து, திகார் ஜெயிலில் சக்கர நாற்காலியோடு அவரை வாசலில் காத்திருக்கவைத்தது, கீழே திமுக கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போது, சிபிஐ மேல் தளத்தில் அவரது மனைவியை விசாரித்தது (அறிவாலயத்தில்), பதவி, பண ஆசையினால், மானமும் மதியும் இழந்து மெத்தைபோட்டு ஏர்கூலர் வைத்து மனைவி இணைவி துணையோடு 1 1/2 மணி நேரம் அண்ணா சமாதியில் படுத்துக்கொள்ளச் செய்தது உண்ணாவிரதம் என்ற பெயரில், ‘தமிழினத் தலைவர்’ என்ற பெயருக்காக உழைத்த உழைப்பையெல்லாம் எல்லோரும் எள்ளி நகையாடும்வண்ணம் தன்மானம் இழந்து நாடகம் நடத்தி இனி எக்காலமும் அவர் இலங்கைத் தமிழர்களுக்குச் செய்த துரோகத்தை மறக்கமுடியாவண்ணம் செய்தது, சொந்த மகன் அழகிரி, தான் தெரிவு செய்த மகனை, ஸ்டாலினை ‘இறந்துபோய்விடுவான்’ என்று சொன்னான் என்று அரற்ற வைத்தது. அடுத்த தலைவர் என்று தன்னால் அறிவிக்கப்பட்ட ஸ்டாலினோடே அரசியல் செய்ய வைத்தது (ஸ்டாலின் கையெழுத்திட்டு APPROVE செய்யவேண்டிய நிலையையும், அவர் வந்தால்தான் கூட்டம் தொடங்கும், அதுவரை தான் காத்திருக்கிற நிலையையும் காலம் உண்டாக்கியது), கடைசிவரை பதவிப்பித்தில் ஸ்டாலினைத் தலைவராக்க மனமில்லாமல் தவிக்கச் செய்தது (காலம், கருணானிதியைச் செயலற்றவராக்கி, ஸ்டாலினைத் தலைமையேற்கச் செய்தது). இப்போதும் அவர் மனது நிச்சயம் சொல்லும், ‘இத்தனை ஊழலும், பணம் கொள்ளையடித்ததும் ஸ்டாலின் ஒருவனுக்குத்தானா? சே.. என்ன வாழ்க்கை வாழ்ந்தோம்’. தன் சொந்த வீட்டையே (அதிலயும் மா’நகராட்சி இடத்தை அபகரித்து, அதைச் சட்டபூர்வமாக்கியது) யாருக்குக் கொடுப்பது என்று தீர்மானிக்கமுடியாமல் இயற்கை தன் கைகளைக் கட்டிப்போட்டுவிட்டதே என்பதையும் நினைத்துக்கொண்டிருப்பார். அவர் பல்லாண்டு வாழ்ந்து, தான் செய்த செயல்களின் விளைவுகளைப் பார்க்கவேண்டும் என்பதே என்னுடைய ஆசை.

    • தமிழன் சொல்கிறார்:

     இன்னும் ஒன்றைக் குறிப்பிடலாம். கலைஞர் தொலைக்காட்சிக்காக வந்த ஊழல் பணமான 200 கோடியை யாரிடம் கொடுத்தார்கள் (எல்லோருக்கும் தெரிந்ததுதான்). ஆனால் அந்த ஊழல் பணம் வர கருணானிதிதான் திட்டம் போட்டது. கடைசியில், சிபிஐ கழுத்தைப் பிடிக்கவும், தான் தப்பிவிட்டார். 60% மனைவியைத் தப்பவிட்டார். 20% பெண்ணை மாட்டிவிட்டார், ஆனாலும் கனிமொழி, உண்மையைச் சொல்லவில்லை (யாரிடம் பணம் கொடுத்தார்கள் என்று. சொன்னா கனிமொழிக்கும் ஆபத்து. ஏன்னா MAFIAல தலைவர் SAFETYதான் முதல் PRIORITY) ஆனால், எல்லா ஆவணங்களையும் முன் தேதியிட்டு திருத்தி, உண்மையான ஆவணங்களைக் கிழித்துப்போட்டார். (காங்கிரஸ் இதற்கு உதவியாக இருந்தது)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.