(பகுதி-2) புகழ்பெற்ற அரசியல்வாதியின் தோல்வியுற்ற காதல் கதை …

ரட்டியை பீடித்த புற்றுநோய் அவரை பாடாய் படுத்தியது…
தனது இளம் வயது காதல் கனவுகளையும்,
அன்புக் கணவரும் தானும் சேர்ந்து கழித்த அந்த இனிய
நாட்களையும் நினைத்து நினைத்து –

அவர் தனது இறுதி நாட்களை, மும்பையின் தாஜ் பேலஸ்
ஹோட்டல் அறையிலேயே, உடலையும், மனதையும்
வருத்திக்கொண்டு கழிக்க நேர்ந்தது.

இறுதியாக – மிகச்சிறிய வயதில், அவரது 29-வது பிறந்த
நாளில், ( பிப்ரவரி,20, 1929 ) உயிர் பிரிந்தது. மும்பையின்
மஜகன் பகுதியில், இஸ்லாமிய மத வழக்கங்களின்படி,
அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.


மும்பையிலுள்ள ரட்டி”யின் கல்லறை


எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், ஒரு கற்சிலையைப் போல் உட்கார்ந்திருந்த ஜின்னா, இறுதியாக, சவப்பெட்டியின் மீது மண்ணைத் தூவநேர்ந்தபோது, தன்னையும் மீறி கதறி அழுதார்…

அந்த ஒரு சமயத்தில் தான், சாதாரண மனிதர்களைப்போல்,
அவரும் உணர்ச்சி வசப்படுவதை மற்றவர்கள் கண்டார்களாம்.

இங்கிலாந்தில் கல்வி பயின்று, ஷேக்ஸ்பியர் நாடகங்களில்
மிகவும் பிரியம் கொண்டு, தன் நிஜ வாழ்விலும் காதல்
வசப்பட்டு, திருமணமும் செய்து கொண்ட ஜின்னாவின்
கனவுகள் அனைத்தும், மிகச்சிறிய காலத்திற்கான மண
வாழ்க்கையுடன், சுக்கு நூறாக உடைந்து போயின.

அரசியலில் பெரியதொரு இடத்தைப் பிடிக்க அவர் கொடுத்த
விலை மிக அதிகம்…. தனது இனிய காதல் வாழ்வையும்,
பாசமிக்க அழகிய மனைவியையும் அவர் இழக்க நேர்ந்தது.

இதற்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையையொட்டி,
அவர் ஆகஸ்ட், 1947-ல் மும்பையை விட்டு ( இந்தியாவை
விட்டு …) இறுதியாக பாகிஸ்தானுக்கு கிளம்பியபோது, தன்
மனைவியின் கல்லறைக்குச் சென்று பிரியாவிடை பெற்றார்.

மீண்டும் ஒருமுறை அவர் மனம் உடைந்து கதறியதை
அவரது சுற்றத்தினர் காண நேர்ந்தது. பின்னர் அவர் எப்போதும்
இந்தியா வரவில்லை…( 1948-ல் ஜின்னா அவர்கள் காலமானார்..)

இந்த கதை இங்கும் முடியவில்லை….!!!

மனைவியின் மரணத்திற்குப் பிறகு, தீவிர அரசியலிலிருந்து
கொஞ்சம் விலகி, தன் மகள் தினாவுடன் ஜின்னா இங்கிலாந்து
சென்றார். அவரது சகோதரி ஃபாத்திமா அவர்கள் குழந்தையை
வளர்ப்பதிலும், அரசியலிலும், ஜின்னாவுக்கு உதவியாக
இருந்தார். தினா வளர்ந்து இளம்பருவத்து பெண் ஆனார்…

ஜின்னா, தன் மகள் தினாவுடன் – 1930 -களில் ….

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது ஜின்னா
அவர்களின் வாழ்க்கையில் உண்மையானது…

ஜின்னாவின் மகள் தினா, காதல் வசப்பட்டார்… யாருடன்…?
நெவிலே வாடியா என்கிற பார்சி இனத்தைச் சேர்ந்த
ஒரு பணக்கார இளைஞருடன், தினா காதல் கொண்டார்…!!!

பல ஆண்டுகளுக்கு முன்னர் தனது மாமனார் தின்ஷா பெட்டிட்
அவர்களுக்கு ஜின்னா, எத்தகைய துயரத்தை கொடுத்தாரோ,
அதே துயரம் இப்போது ஜின்னா அவர்களுக்கு அவரது
மகளால் வந்தது.

அரசியலில், சமுதாயத்தில், ஒரு பெரிய முஸ்லிம் பிரமுகராக
உருவாகியிருந்த ஜின்னாவால், தன் மகள் வேற்று பிரிவைச்
சேர்ந்த நெவிலே வாடியாவை மணக்க விரும்புவதை
ஏற்க முடியவில்லை…. மகளிடம் அவளது காதலை
மறக்கச் சொன்னார்….

” இந்தியாவில் இத்தனை முஸ்லிம் இளைஞர்கள்
இருக்கிறார்களே, இவர்கள் அத்தனை பேரையும் விட்டு விட்டு,
போயும் போயும் ஒரு பார்சி இளைஞரை காதலிக்கிறேன்
என்கிறாயே…”

என்று தன் ஒரே மகளிடம் கேட்டிருக்கிறார்
ஜின்னா.

“இந்தியாவில், எத்தனையோ முஸ்லிம் பெண்கள்
இருக்கையில், நீங்கள் ஏன் பார்சி பெண்ணான என் தாயை
காதலித்தீர்கள் – மணம் செய்து கொண்டீர்கள்…?”

என்று பதிலுக்கு தன் தந்தையை வினவினாள் அவரது மகள்.

என்ன பதில் சொல்வார் தந்தை…?
தின்ஷா பெட்டிட்டுக்கு ஜின்னா கொடுத்த அதே துயர அனுபவம், இப்போது அவரது மகளால், ஜின்னா அவர்களுக்கு திரும்ப கொடுக்கப்பட்டது.

மகள் வீட்டை விட்டு வெளியேறி விரும்பியவரை
மணந்து கொண்டார். ஜின்னா தன் மகளுடனான உறவை
முறித்துக் கொண்டார்…. பிற்காலங்களில், தன் மகளைப்பற்றி
குறிப்பிட நேர்ந்தபோது, ” திருமதி வாடியா ” என்றே
சொன்னார் ஜின்னா…

ஜின்னா உருவாக்கிய பாகிஸ்தான் தேசத்திற்கு குடிபோக
அவரது மகள் மறுத்து விட்டார். மும்பையிலும்,
லண்டனிலுமாக அவரது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். கடைசியாக தந்தையும், மகளும் சந்தித்துக் கொண்டது, பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னர் 1946-ல்.

1948, நவம்பரில், ஜின்னா அவர்கள் காலமானபோது,
அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள அவரது மகள்
தினா பாகிஸ்தான் சென்றார்…. அதன் பிறகு 2004-ல்
ஒரு தடவை சென்று வந்தார்… அவ்வளவே.

தினா, தனது கணவர் குடும்பத்துடன் தன்னை முழுவதுமாக
இணைத்துக் கொண்டு, இந்தியராகவே வாழ்ந்தார்.
தற்போது தினா வாடியா, அமெரிக்காவில் வசிக்கிறார்.
அவரது மகன், நஸ்லி வாடியா – இன்று இந்தியாவின் மிகப்பெரிய
வர்த்தக நிறுவனங்களுக்கு சொந்தக்காரர்.
இந்தியாவின் புகழ்பெற்ற பாம்பே டையிங்,
பிரிட்டானியா, Go-Air ஆகிய கம்பெனிகள் இவர்களுடையதே…!!!

அரசியலுக்குள் குடும்பத்தையும் நுழைப்பதன் மூலம் –
இரண்டிலும் வெற்றி பெற, இந்தக்கால அரசியல்வாதிகள்
அற்புதமான வழிகளை உருவாக்கிக் கொண்டு விட்டார்கள்….!!!
(கலைஞர், லாலு யாதவ், சந்திரபாபு நாயுடு…etc.etc… )

பாவம் ஜின்னா –
அவர் போன நூற்றாண்டு அரசியல்வாதி ஆயிற்றே…
அதுவும், சுதந்திரத்திற்கு முந்தைய அரசியல்வாதி….!!!
இந்த நெளிவு சுழிவுகளெல்லாம் தெரிந்திருக்கவில்லை…
அரசியலில் வெற்றி பெற்றாலும், குடும்ப வாழ்வை
இழந்தார்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to (பகுதி-2) புகழ்பெற்ற அரசியல்வாதியின் தோல்வியுற்ற காதல் கதை …

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப peace,

   நான் பொதுவாக மத வித்தியாசங்களை பெரிதாக நினைப்பதில்லை.
   இறுதியில் சென்று சேரும் இடம் ஒன்றே தான்…
   அவரவர் வழி அவர் அவருக்கு…
   மதம் -என்பதை விட மனிதம் என்பது முக்கியம் அல்லவா …

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 1. புதியவன் சொல்கிறார்:

  இது நான் இதுவரை கேள்விப்படாதது. அதனாலென்ன. காந்தியின் மகனும் இஸ்லாத்தைத் தழுவினார். கேரள அரசனும் (குலசேகர ஆழ்வாரின் மருமகன்) இஸ்லாத்தைத் தழுவினார். இது அவரவர் எண்ணத்தைப் பொறுத்தது.

  ஆனால் பொதுவாக, எதைத் தேர்ந்தெடுத்தாலும், அதற்கேற்ப தங்கள் வாழ்க்கைமுறை, கொள்கைகள், நடத்தை எல்லாவற்றையும் அமைத்துக்கொள்ளவேண்டியிருக்கும்.

  மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்கள், தாய் கட்சியை இன்னும் கடுமையாக எதிர்ப்பார்கள், புதிதாக சேர்ந்த கட்சிக்கு கடுமையான ஆதரவைத் தருவார்கள் (கே கே எஸ் எஸ் ஆர், எ.வ. வேலு, சேகர் பாபு, அனிதா, கருப்பசாமி பாண்டியன் போன்று).

  ஜின்னாவுக்கு தலைமைப் பதவி என்ற ஆசையில், அவரைப் பகடையாகப் பயன்படுத்தி பாகிஸ்தான் என்ற தனி நாட்டை அமைத்துக்கொண்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. மவுன்ட் பேட்டன் பிற்காலத்தில், ஜின்னா இவ்வளவு சீக்கிரமாக இறப்பார் என்று தெரிந்திருந்தால், பிரிவினையை ஒத்திப்போட்டிருப்பேன் என்று வருத்தப்பட்டிருந்தார். இயற்கை, கடவுள், இப்படி நடப்பதுதான் இந்தியாவுக்கு நல்லது என்று நினைத்ததோ என்னவோ.

 2. ramana சொல்கிறார்:

  Fantastic historical record

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.