ரெயில்வே கொள்ளை – நமது கருத்தை துக்ளக் – திரு.குருமூர்த்தியும் ஆதரிக்கிறார்….!

சென்ற வாரம் இந்த தளத்தில் ” மக்களிடம் அரசே கொள்ளை
அடிக்கலாமா…? (ஜூன் 8,2017) ” என்கிற தலைப்பில்
தத்கல் ப்ரிமீயம் என்கிற பெயரில் ரெயில்வே இலாகாவின்
அதீத பணப்பறிப்பு பற்றி ஒரு கட்டுரை எழுதி இருந்தேன்.

சில நண்பர்கள், நான் எழுதியதை குறை கூறி எழுதியும்,
அரசு /ரெயில்வே செய்வது நியாயம் தான் என்கிற மாதிரியும்
பின்னூட்டங்களில் எழுதி இருந்தனர்.

சிலர், பாஜக அரசும், மோடிஜியும் என்ன செய்தாலும் …
அதை யாரும் குறைகூறவே கூடாது என்கிற மனப்பான்மையில் இருக்கிறார்கள்.

நிஜமாகவே மக்களை பாதிக்கக்கூடிய விஷயங்களை கண்டித்து எழுதினாலும் கூட, அதை பாஜகவை / மோடிஜியை பிடிக்காததால் எழுதுகிறேன் என்கிற கண்ணோட்டத்திலேயே அணுகுகிறார்கள்.

நடுநிலையில் நின்று நல்லது, கெட்டதை பார்ப்பதை
அவர்களின் மோடிஜி பற்றிய அபிமானம் தடுக்கிறது ….!!!
மோடிஜி செய்தால் அது தப்பாக இருக்காது என்கிற முடிவில்
அவர்கள் ஏற்கெனவே தீர்மானமாக இருக்கிறார்கள்.

நான் குறை கூறுவது ஊழல் பற்றிய சமாச்சாரம் அல்ல…
கொள்கை முடிவுகள், நடைமுறை முடிவுகளில் தவறுகள்
போன்றவை…. இத்தகைய விஷயங்களில் தவறுவது
யாருக்கும் சாத்தியமே.. அவர் தெய்வப்பிறவியாக
இருந்தாலொழிய…!

அத்தகைய நண்பர்கள், மோடிஜிக்கு மிகவும் வேண்டியவரும்,
பாஜகவின் மிகத்தீவிரமான ஆதரவாளருமான துக்ளக்
ஆசிரியர் திரு. குருமூர்த்தி அவர்கள் சொன்னால் ஒருவேளை
ஏற்பார்களோ என்னவோ….

நான் ” மக்களிடம் அரசே கொள்ளை அடிக்கலாமா…? ”
என்கிற தலைப்பில் எழுதிய அதே விஷயத்தை இன்று
வெளியாகி இருக்கும் துக்ளக் இதழும் எழுதி இருக்கிறது…
திரு.குருமூர்த்தி அவர்கள் பார்த்து OK சொன்ன பிறகு தான்
இந்த கட்டுரை வெளிவந்திருக்கிறது….

“”பயணிகளை ஏமாற்றுவது, கொள்ளையடிப்பது,
இரண்டையும் ஏககாலத்தில் செய்திருக்கிறது ரெயில்வே…””

– கூறுவது காவிரிமைந்தன் அல்ல – துக்ளக் கட்டுரை…!!!

என்னை குறை சொன்ன நண்பர்களுக்கு
இதை சமர்பிக்கிறேன்…..திரு.குருமூர்த்தி ஏற்றுக்கொண்டதை
பார்த்த பிறகாவது அவர்கள் ஒப்புக்கொள்வார்களா – பார்ப்போம்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

20 Responses to ரெயில்வே கொள்ளை – நமது கருத்தை துக்ளக் – திரு.குருமூர்த்தியும் ஆதரிக்கிறார்….!

 1. தமிழன் சொல்கிறார்:

  அன்புள்ள கா.மை. சார்… உங்களைக் குறை சொல்லவில்லை. நீங்கள் வைத்தது விமரிசனம்தானே. அதில் என்ன தவறு இருக்கமுடியும்?

  துக்ளக் கட்டுரையையும் வாசித்தேன். இந்த தட்கல் டிக்கெட் கட்டணத்தை, ஏமாற்றுவது, கொள்ளையடிப்பது என்று சொல்ல முடியாது. நியாயமான அரசாங்கம்,
  1. இரயில்வேயில் வேலைபார்ப்பவர்களைத் தவிர, அவர் குடும்பம் குட்டிகளுக்கு ஓசி பிரயாணச் சீட்டு, சலுகைகள் வழங்குவதைத் தடை செய்யவேண்டும் (ஏர்லைன்ஸும் இப்படித்தான்).
  2. வெட்டியாக இரயில் நிலையத்துக்கு வருபவர்களை உடனே சிறையில் தள்ளவேண்டும் அல்லது 50,000 அபராதம் விதிக்கவேண்டும் (பிளாட்பார்ம் டிக்கட் இல்லாமல், வியாபாரம்/பிச்சை போன்றவற்றிர்க்கு வருபவர்களை).
  3. தேவையில்லாத வேலையாட்களை (NON PRODUCTIVE) வேலையை விட்டுத் தூக்கவேண்டும்.
  4. ரயில்வே லைனை அரசுக்கு இழப்பு ஏற்படும்படியாக, கிராஸ் பண்ணி, அதனால் அடிபடுபவர்களின் குடும்பத்திடமிருந்து, 50,000 ரூ CLEANING CHARGES என்று வசூலிக்கவேண்டும்.

  இதெல்லாம் செய்யமுடியுமா? மக்கள் ஒழுங்கீனத்தை மாற்றமுடியுமா? செய்யமுடியாததால்தான், அரசாங்கம் மறைமுக வழியில் பணம் திரட்டுகிறது. இது கொள்ளையல்ல. FINE for Citizen.

  கொஞ்சம் கடுமையான பின்னூட்டம்தான். ஆனால் வேறு என்ன மாற்று இருக்கிறது? கே.பி.என் டிராவல்ஸில் 1000 ரூ கொடுத்து பயணிக்க முடியுமென்றால், இரயிலுக்கு சௌகரியமாகச் செல்ல 1000 அல்லது 1200 கொடுப்பதற்கு என்ன பிரச்சனை? அரசு சாதாரண மக்களை வருத்தக்கூடாது என்றால், அந்த சாதாரண மக்கள், ரயில்வே ஒழுங்கை மீறும் மக்களை ஏன் தண்டிக்கக்கூடாது? அதனால்தானே சாதாரண மக்கள் அதிகம் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கிறது? சொன்னால் கடுமையாகத்தான் தெரியும். எத்தனை SUB WAYக்கள், வியாபாரிகள் என்ற போர்வையில் சோம்பேறிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஒன்றாவது நிம்மதியாகச் செல்லும்படியாக இருக்கிறதா? இந்தியா என்றால் ஒரு ஒழுங்கும் தேவையில்லையா? அப்படி என்றால், அதற்கான FINEதான் இது.

 2. சிவம் சொல்கிறார்:

  யார் செய்யும் தவறுக்கு யாருக்கு fine போடுவது ?
  குருமூர்த்தி சார் சொல்றது கூட தப்புன்னு சொல்றீங்களா ?
  பாஜக அரசாங்கத்தின் மீது அவருக்கு இல்லாத அக்கரையா ?
  உண்மையை ஒத்துக்கொள்ள மனமில்லாத ஈகோ தான் இங்கு
  வெளிப்படுகிறது. அந்த காலத்தில் சொல்வார்கள்; மளிகைக்கடை
  செட்டியாரிடம் “உப்பு” இருக்கா என்று கேட்டால் “பப்பு”(பருப்பு) இருக்கு
  என்பாராம். எதையும் இல்லையென்று சொல்லக்கூடாது என்பது
  அவரது லாஜிக். திரும்ப திரும்ப சுத்தம், டிசிப்ளின் என்று வ்ருகிறீர்களே
  தவிர, தத்கல் ப்ரிமீயம் அயோக்கியத்தனம் தான் என்று ஒப்புக்கொள்ள
  மாட்டீர்கள்.
  //மோடிஜி செய்தால் அது தப்பாக இருக்காது என்கிற முடிவில்
  அவர்கள் ஏற்கெனவே தீர்மானமாக இருக்கிறார்கள்.// காவிரிமைந்தன் சார்
  சரியாகத்தான் கணித்திருக்கிறார்.

 3. Sundar Raman சொல்கிறார்:

  அன்புள்ள கா.மை. சார் , மோடி நிறைய தவறு செய்கிறார் , முக்கியமாக இந்த மாறன், ஜகன்ரெட்டி , பவார் போன்ற திருட்டு கும்பல்களை தண்டிக்கவே இல்லை , இது பெரிய தவறு .
  குருமூர்த்தி சொல்வதாலேயே , ( வேறு ஒருவர் தான் எழுதி இருக்கிறார்) , ரயில்வே செய்வது தவறு என்று ஆகாது. இது வர்த்தகம் , சேவை அல்ல . அதிலும் கடைசி நிமிட பயண கட்டணத்தில் தான் இந்த மாதிரி அதிகம் , அதிகப்படி கொடுக்க முடியவில்லை என்றால் முன்பதிவு இல்லாத பெட்டியில் தான் பயணம் செய்ய வேண்டும் . சாதாரண கட்டணம் எப்படி இருக்கு , வசதிகள் இருக்கா , சுத்தம் இருக்கா , சாப்பாடு சுவையா இருக்கா – இந்த கேள்விகளை கேளுங்கள் , இதில் ஏதேனும் முன்னேற்றம் இருக்கா முன்பை விட ? … பெரிய இடங்களில் ஊழல் இருக்கா , அமைச்சர் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறாரா ? இல்லை பொய் சொல்கிறாரா ? இதெலாம் பாருங்கள் . மக்கள் போராட்டம் என்ற பெயரில் பஸ் /ரயிலை கொளுத்தவுது சரியா ? அண்மையில் கூட விவசாயிகள் போராட்டத்தில் , பஸ் , ஜீப் போன்றவை கொளுத்தப்பட்டன . நல்ல வேளை , அங்கு ரயில் ஏதும் அண்மையில் இல்லை . இந்த ரயில் நிறுத்தும் போராட்டம் , இன்னும் எத்தனை நாள் தான் செய்வார்கள் ? டால்மியாபுரத்தில் தொடங்கியது …

  • சிவம் சொல்கிறார்:

   //ரயில்வே செய்வது தவறு என்று ஆகாது. இது வர்த்தகம் , சேவை அல்ல .//

   இதை சுந்தர்ராமன் அய்யா சொன்னால் போதாது; ரயில்வே என்பது சேவை அல்ல – வர்த்தகம் தான் என்று கொள்கை முடிவாக மோடிஜியை /பாஜகவை அறிவிக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

   //கடைசி நிமிட பயண கட்டணத்தில் தான் இந்த மாதிரி அதிகம் //
   800 சீட்டில் 240 தத்கலுக்கு என்று பதுக்கி விட்டால், டிக்கெட்டுக்கு எங்கே போவது ? கடைசி நிமிடத்தில்தத்கலில் தான் வாங்க வேண்டும்.

   // அமைச்சர் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறாரா ? //
   முதலில் பிரதமர் எந்த கேள்விகளுக்காவது பதில் அளிக்கிறாரா அதை நீங்கள் சொல்லுங்கள்.

   //அண்மையில் கூட விவசாயிகள் போராட்டத்தில் , பஸ் , ஜீப் போன்றவை கொளுத்தப்பட்டன //

   மீண்டும் மீண்டும் டைவர்சன். கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. எதையாவது பதிலுக்கு கேட்டு வைக்க வேண்டியது.

   தேர்தல் நேரத்தில் பாஜக காரர்கள் நிறைய கேள்விகளுக்கு
   பதில் சொல்ல வேண்டியிருக்கும். அப்போது இப்படியெல்லாம் வழுக்க
   முடியாது.

 4. தமிழன் சொல்கிறார்:

  //மோடிஜி செய்தால் அது தப்பாக இருக்காது என்கிற முடிவில்
  அவர்கள் ஏற்கெனவே தீர்மானமாக இருக்கிறார்கள்.//

  அதையே ஞாபகப்படுத்தாதீர்கள். நானே, இன்னும் விதையை ஊன்றி தண்ணி மட்டும்தான் விட்டுட்டிருக்காங்களே. எப்போ மரமாயி, பழம் (பலன்) கொடுக்கும்னு நினைச்சுக்கிட்டிருக்கேன். ஒருவேளை, விதையை ஊன்றியிருக்கிறார்களா அல்லது பளிங்கு கோலிக்குண்டுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கிறார்களான்னு புரியலை. இதுல மோடியா இருந்தா என்ன பாஜகவா இருந்தா என்ன. ஏதேனும் செய்து 5 வருடத்தின் முடிவிலாவது என்னமேனும் சொல்லிக்கொள்ளும்படியான மாற்றம் இருக்கான்னு பார்க்கலாம். – சோகமா ஒரு இந்தியன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தமிழன்,

   உங்கள் நிலை (stand…) எனக்கு புரிகிறது.
   நான் ஏற்கிறேன்.

   பொதுவாக, நான் இடுகையிலேயே என் கருத்துகளை முன்வைத்து விடுவதால்,
   பின்னூட்டங்களில் மற்றவர்களின் விவாதங்களை சுவாரஸ்யமாக பார்த்துக்
   கொண்டிருக்கிறேன். தேவை ஏற்பட்டால் தவிர, நான் இடையில்
   குறுக்கிடுவதில்லை.

   நண்பர் “சிவம்” அவர்களுடைய விவாதங்களும் சுவாரஸ்யமாக
   இருக்கின்றன. சில சமயங்களில், நான் கூற வேண்டும் என்று நினைக்கும்
   கருத்துக்களை அவரே கூறி விடுகிறார்… நன்றி நண்ப சிவம்.

   பின்னூட்ட -கருத்து மோதல்களில் எனக்கு எந்த பிரச்சினையுமில்லை.
   அவை ஆரோக்கியமான முறையில் நடைபெற வேண்டும் – அவ்வளவே.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • குலாம் ரசூல் சொல்கிறார்:

   ஐயோ பாவம் ‘தமிழன்’, இந்தியனும். அவர்கள் விதைத்திருப்பது கோலிகுன்டு தான் என்று கூடியவிறைவில் தெரியவரும்.

   இன்று தெரியவந்த ஒன்று,

   மதிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில்,
   இந்திய எல்லைப் பகுதியில் செய்யப் பட்டுள்ள ஓளி விளக்கு ஏற்பாடாக, ஸ்பெய்ன்-மொரோக்கோ எல்லைப் பகுதியில் செய்யப் பட்டுள்ள ஓளி விளக்கு ஏற்பாட்டின் புகைப்படத்தை பயன்படுத்தியது அம்பளத்திற்கு வந்துள்ளது.

   கீழே அதன் தொடர்பான link,

   altnews:
   Home Ministry annual report uses picture of Spain-Morocco border to show Indian border floodlighting

   https://www.altnews.in/home-ministry-annual-report-uses-picture-spain-morocco-border-show-indian-border-floodlighting/

   Times of India:
   MHA uses photo of Spain-Morocco border in report on floodlighting at India-Pakistan border

   http://timesofindia.indiatimes.com/india/mha-report-wrongly-captions-photo-of-spain-morocco-border-as-indo-pak-border/articleshow/59146806.cms

   கொஞ்ச நாட்கள் முன்பு,

   a photo from China mentioned as Ahmedabad metro bus,
   surgical strikes,
   the model of Gujarath

   இப்படி தான் பொலைக்கனுமா?

   • தமிழன் சொல்கிறார்:

    குலாம் ரசூல் – உங்கள் விமரிசனங்கள் உள் நோக்கம் உடையது. 60 வருடங்களுக்கும் மேல் ஒன்றும் நடக்காத இந்தியாவில், இப்போது மோடி அவர்கள் மாற்றம் விளைவிக்க ஏதோ செய்துகொண்டிருக்கிறார். ஆனால் முதல் நாளிலிருந்து இஸ்லாமியர்கள் அனைவரும் (பெரும்பான்மைக்கும் மேல்) மோடியைப் பற்றி அவதூறாகவும், எதைச் செய்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் த்வனியிலும் எழுதுகிறார்கள். அதனால்தான் அவர்கள் விமரிசனத்தில் ஒரு மதிப்பும் நான் வைப்பதில்லை.

    கோவைக் குண்டுவெடிப்பு மும்பை குண்டுவெடிப்பு போன்றவை எந்த ஆட்சியில் நடைபெற்றன, இப்போது அந்த விதத்தில் இந்தியாவில் பயங்கரவாதச் செயல்கள் குறைந்துள்ளனவா, பயங்கரவாதிகள் கொஞ்சம் அடங்கிக் கிடக்கிறார்களா இல்லையா என்பதை உங்கள் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன். அந்த விதத்தில் மோடியின் பாஜக முன்னேற்றத்தை அளித்துள்ளது.

    நான் மற்றும் சாதாரண இந்தியர்கள் எதிர்பார்ப்பது அவர்களின் (இந்தியர்களின்) பொருளாதார முன்னேற்றம், நாட்டு மக்களின் முன்னேற்றம். அது இன்னும் எட்டப்படவில்லை, எட்டுவதற்கான வழியில்தான் செல்கிறோமா என்பது தெளிவாக இல்லை. இதுதான் கவலையில் ஆழ்த்துகிறது. பாஜக, அரசியல் பாதையில் இதுவரை, காங்கிரசைவிட வித்தியாசமாக எதுவும் செய்ததாகத் தெரியவில்லை, ஆனால் வெளிப்படையான ஊழல் இல்லை, தலைமை ஊழலுக்கு அப்பாற்பட்டு இருக்கிறது. உங்களுக்குக் கசந்தாலும் இதுதான் உண்மை.

    இதைத் தவிர, பாஜக, காங்கிரசைப் போல், கீழ்த்தர அரசியல் செய்கிறது என்பதும் கவலைக்குரியதாக இருக்கிறது.

    • குலாம் ரசூல் சொல்கிறார்:

     நன்பர் தமிழன்,

     நான் கொடுத்துள்ள தகவலில் என்ன உள்நோக்கம் கண்டீர். இதைபோல் காங்கிரஸ் செய்ததா?

     அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, சம்ஜுஹ்தா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பு, டெல்லி மெக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு இவைகள் போலும் தான் இந்த ஆட்சியின்போது நடக்கவில்லை. இந்த மூன்று குண்டுவெடிப்பையும் நடத்திய பயங்கரவாதிகள் யார்? அவர்கள் இப்போது எங்கு சென்றார்கள். எல்லாம் காங்கிரஸ் ஆட்சியின்போது தான் நடக்கின்றது. ஏன்? உங்கள் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.

     நான் காங்கிரஸை ஆதரிப்பவனல்ல. காங்கிரஸை மட்டுமல்ல எந்த அரசியல் கட்சியையும் ஆதரிப்பவனல்ல.

     மேலும், கோவை, மும்பை குண்டுவெடிப்புகளை பற்றி என்னிடம் பேசுகிறீர்கள். ஒரு முஸ்லிம் பேரை பார்த்தாலே உங்களை மாதிரியான ஆட்களின் மனங்களில் உறைந்துபோயுள்ளதை வெளிப்படுத்திவிடுகிறீர்கள்.

     நானும் கவனித்து வருகிறேன். பாஜக, மோடியை ஒரு முஸ்லிம் விமர்சித்துவிட்டால் விமர்சனத்தை விட்டு சம்பந்தமில்லாத எதையோ கொண்டுவந்து குதிக்கிறீர்களே ஏன்?

     உங்கள் பின்னூட்டத்தையே எடுத்துக்கொள்வோம்,

     //பாஜக, காங்கிரசைப் போல், கீழ்த்தர அரசியல் செய்கிறது//

     இது சொன்னது நீங்கள். இதைவிடவா நான் மோசமாக எழுதிவிட்டேன். இல்லை ஏதேனும் உள்னோக்கம் கற்பித்தேனா. இல்லை, உங்கள் எழுத்தை சரியாகவே புரிந்துகொண்டேன்.

     முதலில் உங்கள் உறைந்துபோன புத்தியை சரிசெய்யுங்கள். என் பின்னூட்டத்தை சரியான கோணத்தில் புரிந்துகொள்வீர்கள்.

     எல்லா ஊடகங்களும் எதையோகண்டு நடுங்கிகொண்டிருக்கின்றன. அதனால் இந்த ஆட்சியின் மீது வைக்கப்படுகின்ற விமர்சனங்களை அது செய்யும் நீங்கள் சொன்னதுபோலுள்ள அரசியலை கிட்டத்தட்ட எல்லா ஊடகங்களும் வெளிகொண்டுவராமல் மொளனம் சாதிக்கின்றன. அதனால் மக்களான நமக்கு அதிகம் உண்மை தெரியாமல் இருக்கு. பிற்காலத்தில் சஹாரா‍‍‍-பிர்லா டைரி குறிப்புபோல் எதுவும் வராதவரையில் நம்புவோம்.

     • Sundar Raman சொல்கிறார்:

      இந்த ஒளி விளக்கு , விவகாரத்தில் எதோ தவறு உள்ளது . 650 கி .மி இல்லமால் 65 கிலோ மீட்டர் மட்டுமே செய்தார்களா ? அப்படியானால் எந்த போட்டோவை காமித்தாலும் , உண்மை வெளி வந்துவிடும் . ( அங்கு இப்போது நிறய நிருபர்கள் உள்ளார்கள் … வெகு சுலபமாய் கண்டறியலாம் ),ஆனால் மாட்டார்கள் . தவறான போட்டோ அமைச்சர் கொடுத்து , அதிகாரிகளை மிரட்டி போடு என்று சொன்னாலும் , உடனே வெளியில் தெரிந்து விடும் . விஷமிகள் யாரவது , ( அலுவலகத்தில் அல்லது பிரின்டிங் ப்ரெஸ்ஸில் ) ஏன் இந்த போட்டோவை மாற்றியிருக்க கூடாது .

      உடனே வந்துவிட்டீர்கள் , அப்படியானால் எதுவுமே நடக்கவில்லையா … நாட்டில் முன்னேற்றமே இல்லையா ? அமைச்சர்கள் யாரும் உழைக்கவே இல்லையா ?

      உங்களுக்கு ஊழல் பெருச்சாளிகள் தான் இஷ்டம் என்றால் , அவர்களுக்கு ஓட்டு போடுங்கள் , ஆட்சியை மாற்றுங்கள் . ஓரணியில் வாருங்கள் , பலம் சேருங்கள் .

      எந்த ஊடகங்கள் பயந்து நடுங்குகின்றன ? ஆங்கில ஊடகங்கள் வரிந்து கட்டிக்கொண்டு , பொய்யும் புரட்டுமாக , பூந்து விளையாடுகிறது . சுதந்திரம் இல்லை என்று சொல்லிகொண்டே என்னவெல்லாமோ சொல்கிறார்கள் , எழுதுகிறார்கள் . வரம்பே கிடையாது . நீங்கள் கூட பின்னணி தெரியாமல் ஒரு பின்னூட்டம் .

 5. Sundar Raman சொல்கிறார்:

  Shivam sir , PM is certainly speaking where it is required – he is the most visible PM in the social medium . He does not give any interview to NDTV, and that is not a crime, ( the way NDTV has put up companies all over the world , and the amount of money transacted , sent , received – looks more like criminal den than media house ) . Railway employs lakhs of people, salaries have to be paid , safety need to be taken care of , stocks to be maintained – all these involves money , Railway is not making great profit – they have a job to do. Whereas you feel they are there to serve you . Be happy that PM is there to serve you ( he said he is prime savegan /watchman ) – I think he is doing great job of that. That was not a diversion, every year, all over India, railway properties have been getting damaged by protest, strike – it has a huge cost.

  • சிவம் சொல்கிறார்:

   சுந்தரராமன்,

   வெட்ட வெளிச்சமாக times of india விலேயே செய்தி
   வந்து விட்ட பிறகும், உள்துறை அமைச்சகம் internal enquiry -க்கு உத்திரவு இட்டிருக்கிறது என்ற பிறகும் கூட நீங்கள் உண்மையை ஏற்கத்தயாரில்லை.

   மோடிஜி மீது மோகம், பாசம் – திருதிராஷ்டிரன் மாதிரி; அவனுக்காவது பார்வை கிடையாது.
   உங்களைப் போன்றவர்களுக்கு, பார்க்க முடிந்தாலும்,
   கேட்க முடிந்தாலும், படிக்க முடிந்தாலும், மோடிஜிக்கு
   விரோதமான எந்த செய்தியையும் ஏற்க மாட்டீர்கள்.

   //இந்த ஒளி விளக்கு , விவகாரத்தில் எதோ தவறு உள்ளது . 650 கி .மி இல்லமால் 65 கிலோ மீட்டர் மட்டுமே செய்தார்களா ? அப்படியானால் எந்த போட்டோவை காமித்தாலும் , உண்மை வெளி வந்துவிடும் . ( அங்கு இப்போது நிறய நிருபர்கள் உள்ளார்கள் … வெகு சுலபமாய் கண்டறியலாம் ),ஆனால் மாட்டார்கள் . தவறான போட்டோ அமைச்சர் கொடுத்து , அதிகாரிகளை மிரட்டி போடு என்று சொன்னாலும் , உடனே வெளியில் தெரிந்து விடும் . விஷமிகள் யாரவது , ( அலுவலகத்தில் அல்லது பிரின்டிங் ப்ரெஸ்ஸில் ) ஏன் இந்த போட்டோவை மாற்றியிருக்க கூடாது .//

   எப்படியாவது, எதைச்சொல்லியாவது இதை நியாயப்படுத்த முயற்சிக்கிறீர்கள். ஆனால், முட்டாள்கள் கூட புரிந்து கொள்வார்கள். தவறு தெரிந்தே செய்யப்பட்டிருக்கிறது – அதுவும் உள்துறை அமைச்சகத்தில்.
   ஒன்றுக்கு பத்தாக சாதனைகளை பெரிதுபடுத்தி விளம்பரம்
   செய்வதில் தானே மத்திய அரசு இன்று தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. அதற்கு உங்களைப்போன்ற செலவில்லாத விளம்பர தூதர்கள் வேறு. நீங்கள் இப்படி எல்லாம்
   பொய்களுக்கு வக்காலத்து வாங்க ஆரம்பித்தால், பாஜகவின் விளம்பர தூதன் என்றே உங்களை புரிந்து கொள்ள முடிகிறது.

   ஒரு விஷயத்தில் மோடிஜி கொடுத்து வைத்தவர். எக்கச்சக்கமான படித்த அடிமைகள் அவருக்கு கிடைத்திருக்கிறாவர்கள்.

   • குலாம் ரசூல் சொல்கிறார்:

    நன்றி நன்ப சிவம்,

    நான் இப்போ தான் வந்தேன். சரியாகத்தான் சொல்லியுள்ளீர்கள்,”எக்கச்சக்கமான படித்த அடிமைகள்” உண்மை. இவர்கள் தான் 2014 தேர்தலுக்கு முன்பு குஜராத் ஒளிர்கிறது அது இது என்று சொல்லி பெரிய அளவில் பிரச்சாரம் செய்தவ‌ர்கள். இன்று குஜராத், தமிழகத்தை மற்றும் பல மாநிலங்களைவிடவும் பலவிதங்களில் கீழ் நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. பொய் தான் இவர்களின் மூலதனம். இப்போதும் அதே பிரச்சாரம்.

    டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில் பின்னூட்டங்களை பார்த்தீர்களேயானால் அதில் பிரசாத் என்பவர் இப்படி சொல்லியுள்ளார்.

    // BJP – RSS and its affiliates are the LIE Manufacturing Laboratory. – P Prasad //

    அதிலிருந்து உருவாக்கப்பட்டவர்கள் வேறு எப்படி இருப்பார்கள்.

    மக்கள் அமைதியாக பார்த்துகொண்டிருக்கிறார்கள். நேரத்தில் தன் சக்தியை வெளிப்படுத்துவார்கள். அதற்கு இன்னும் இரண்டு வருடம் தான்.

    • புதியவன் சொல்கிறார்:

     “குஜராத், தமிழகத்தை மற்றும் பல மாநிலங்களைவிடவும் பலவிதங்களில் கீழ் நிலையில் இருப்பது ” – இதெல்லாம் வெட்டிவாதம். முதலில் குஜராத்தியர்கள் குஜராத்தியில்தான் பேசுவார்கள். தமிழனுக்கு தமிழ் மட்டுமே பேசத் தெரியுமா? குஜராத் நிச்சயம் நம்மைவிட பலவிதங்களில் மேலோங்கியிருக்கிறது. குஜராத்தியர்கள் நிறையபேர் வியாபாரத்தில் ஈடுபட்டு செழித்துக்கொண்டிருக்கின்றனர். முதலில் ‘தூர் வாருவது’ என்றால் என்ன என்று தமிழனுக்குத் தெரியுமா? நீர் நிலைகளை எப்படிப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பது தமிழனுக்குத் தெரியுமா? பக்கத்தில் பெங்களூரில் எப்படி ஏரிகளைப் பாதுகாக்கிறார்கள், நாம் எப்படி, வரும் காவிரியில் கழிவுனீரை ஊற்றி பாழடிக்கிறோம், மணல் கொள்ளையில் ஈடுபடுகிறோம் என்பது தெரியுமா? நமது கலாச்சாரத்தைப் பேண தமிழனுக்குத் தெரியுமா (குஜராத்திகளைப்போல்)

     மோடியைப் பற்றி இஸ்லாமியர்கள் குறைத்து எழுத எழுத, மோடி அவர்கள் இந்தியர்களின் நன்மதிப்பை மேலும் மேலும் பெறுவார். இஸ்லாமியர்கள், இந்துக்களின்மீதுள்ள வெறுப்பால், மோடி, பாஜகவைத் தாழ்த்துகின்றனர். அதே காரணத்தால்தான் பாஜக, மோடி போன்றவர்கள் புகழ் பெறுகிறார்கள். அடுத்து உ.பி. யோகி போன்றவர்கள்.

     • Sundar Raman சொல்கிறார்:

      குஜராத்தில் பட்டினி சாவு , குழந்தைகளுக்கு போஷாக்கு இல்லை , குறைந்த பட்ச ஊதியம் இல்லை , அங்கு சுத்தம் கிடையாது , மலம் அள்ளுவது இன்னும் உண்டு , இப்படி எத்தனையோ பொய்கள் . அதாவது பரவாயில்லை , அங்கு புதிதாக ஒரு ஏக்கர் கூட பாசன வசதி கிடையாது …. வாய் கூசாமல் டிவியில் , பொய் சொல்வார்கள் , இந்த அழகில் , டிவி முதலாளிகள் மோதியின் ஆட்கள் என்ற பட்டம் வேறு ..

      அந்த மேதா பட்கர் தடுக்க நினைத்த நர்மதா மூலம் , சென்ற ஆண்டில் 6 அல்லது 7 மாவட்டங்களில் புதிதாக பாசன வசதி , எத்தனை லட்சம் ஹெக்டார்கள் பயன் அடைந்தது என்று யாருமே பேச மாட்டார்கள் .

      விவசாயிகளிடம் உங்களுக்கு மின்சாரம் வேண்டுமா கட்டணத்துடன் அல்லது இலவச மின்சாரம் ,ஆனால் எப்போதும் கிடைக்காது என்று வாதாடி , அங்கு அவர்கள் கேட்டுக்கொண்ட படி , 24 மணி நேரம் மின்சாரம் ஆனால் இலவசம் கிடையாது .

      மோதி பெரிய ஆள் ஆனதே அந்த குஜராத் காங்கிரஸ் தலைவர்களால் தான் ( ஒரு ஷக்தி சிங் கோயல் , அப்பறம் அமி பெஹென் …) இவர்களால் தான் . understand one thing, the more you punch Modi the more stronger he becomes அது அவர் வாங்கி வந்த வரம்

 6. NS RAMAN சொல்கிறார்:

  My opinion about black tickets sellers in cinema Hall is certainty wrong. They are all CA inter qualified people. One among them who passed CA FINAL now appointed as railway minister

 7. chaaru சொல்கிறார்:

  ஏற்கனவே ரயிலில் டிக்கட் எடுப்பது தெற்கேதான் அதிகம். வடக்கே அதிகம் வித்தாவுட்டில் செல்வார்கள்.

  //”சாதாரண மக்கள், ரயில்வே ஒழுங்கை மீறும் மக்களை ஏன் தண்டிக்கக்கூடாது? “//
  ரயில்வே காவல் துறையால் முடியாததை மக்கள் செய்வது சாத்தியமா? சில நேரங்களில் காவல் துறையே அவர்களுக்கு இருக்கிறது.

  //”FINE for Citizen.”//
  சட்டப்படியோ தர்மப்படியோ (legally or ethically) இது சரியானதா?

  • புதியவன் சொல்கிறார்:

   சரியில்லைதான் சாரு. நீங்கள் சொன்னதும் சரியானதுதான். ஆந்திராவைத் தாண்டியபின், இரயில்களில் ஒரு ஒழுங்குமுறையையும் காண இயலாது. பெரும்பான்மை மக்கள் பயணச்சீட்டு என்று ஒன்று எடுக்கிறார்களா என்பதும் சந்தேகம். சமீபத்தில் படித்தேன், முன்னேறிய மானிலங்களுக்கு மத்திய அரசின் உதவி, மற்ற மானிலங்களைவிட மிக மிகக் குறைவு. இது 50-60 ஆண்டுகளாக அப்படியே இருக்கிறது. அதாவது உ.பி. பீகார் போன்ற மானிலங்கள் முன்னேறுவதற்கான அறிகுறியே இருப்பதில்லை. இது எத்தனை காலத்துக்கு இப்படியே ஓடும் என்றும் தெரியவில்லை.

   “சட்டப்படியோ தர்மப்படியோ (legally or ethically) இது சரியானதா” – இதையொட்டி ஒரு கேள்வி. 1900 வருடத்தில் எத்தனை FORWARD CASTE அரசாங்கப் பணியில் இருந்தனர்? அதனை முறியடிப்பதற்காக அவர்களுக்கு ஒரு சலுகையும் கொடுக்காமல், மற்றவர்களை முன்னேற்ற இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. அப்போது, FORWARD CASTEல் எத்தனை ஏழைமக்கள் 50 வருடங்களுக்கும் மேலாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்? BACKWARD CASTEல் எத்தனை பணக்காரர்கள் தாங்கள் மட்டும் அந்தச் சலுகைகளை அனுபவித்தபடி இருக்கிறார்கள்? இன்றைக்கு, ‘சிறுபான்மை’ என்ற போர்வையில், 400க்கும்மேல் இஞ்சினீயரிங் கல்லூரிகள் யார் கையில் தமிழ்நாட்டில் இருக்கின்றன? இது சமூகம் ஏழைகளுக்கும் ஏதிலிகளுக்கும் தந்த அநியாய FINE இல்லையா? (குறிப்பு – நான் FORWARD CASTE என்று எண்ணாதீர்கள்)

   • chaaru சொல்கிறார்:

    அய்யா காவிரிமைந்தன் கொடுத்த ரயில்வே சம்மந்தமான இடுகைக்கு நான் பதிலளித்தேன். நீங்கள் கேட்பது சமூக-பொருளாதார-அரசியல்- கேள்வி. இருந்தாலும் என் அறிவுக்கு எட்டிய வரை பதிலலிக்கிறேன்.

    1. பிற்படுத்தப்பட்ட- தாழ்த்தப்பட்ட மக்கள் 2000 வருடங்களாக பாதிக்கப்பட்டதற்கும், அதே 2000 வருடங்கள் வருணாசிரம தர்ம அடிப்படையில் முற்பட்ட மக்கள் அனுபவித்ததும் உண்மைதானே? கடந்த 50 வருடங்கள் மட்டும் BC-SC மக்களை முன்னேறிவிடுமா? அல்லது இந்த 50 வருடங்கள் மட்டும் FC மக்களை தாழ்த்தி விடுமா?
    (என்னை தயவுசெய்து FC-BC-SC அல்லது வேறு மதம் என்று சுருக்க வேண்டாம். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை.

    2. ஜாதி வழி quota முறை பொருளாதார சிக்கல்களை நீக்காது. நான் ஒத்துக்கொள்ளுகிறேன். ஒரே ஜாதியில் குறைந்த அளவு பணமுடைய மக்களுக்கு உள் ஒதுக்கீடு செய்யலாமே? நான் அதற்க்கு முழு ஆதரவு. அதாவது 10-15% சதவீதம் என் ஜாதி ஒதுக்கீட்டில் குறைந்த பொருளாதார மக்களுக்கு (என் ஜாதிதான்) தரலாமே?

    3. சிறுபான்மை (சாதி, மத, பிற) அடிப்படியில் சிறுபான்மை போர்வையில் இருக்கும் கல்வி-வியாபார- சமூக நிறுவனங்களுக்கு அரசு உதவியியை நிறுத்தலாம். அவர்கள் தன் பணத்தை கொண்டு நடத்துகையில், ஒன்றும் செய்ய முடியாது. மாறாக கல்வி-உட்கட்டமைப்பு- சேவையில் (education -infrastructure-service) போன்றவற்றில் குறை வந்தால் AICTE, court, மாநில அரசுகளையோ நாடலாம். அற வழியில் யாருக்கும் தீங்கு இலைக்காமல் போராடலாம்.

    புரிதலுக்கு நன்றி. இந்த கருத்துக்களால் யாரின் மணமாவது புண்பட்டால் எடுத்துவிடுகிறேன். வணக்கம்.

    P.S. நான் அந்த சாரு அல்ல….

    • புதியவன் சொல்கிறார்:

     //பிற்படுத்தப்பட்ட- தாழ்த்தப்பட்ட மக்கள் 2000 வருடங்களாக பாதிக்கப்பட்டதற்கும், அதே 2000 வருடங்கள் வருணாசிரம தர்ம அடிப்படையில் முற்பட்ட மக்கள் அனுபவித்ததும் உண்மைதானே? // – இது அடிப்படையில்லாத பேச்சு. யார் பிற்படுத்தப்பட்டவர்கள்? தாழ்த்தப்பட்டவர்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொன்னால் அதில் அர்த்தம் இருக்கிறது. வேறு யாரும் பாதிக்கப்படவில்லை. முற்படுத்தப்பட்டவர்கள் என்று கருதப்படுபவர்கள் என்ன அனுபவித்தார்கள்? இதெல்லாம் வெட்டி அரசியல்வாதிகளின் பேச்சு.

     ராஜராஜ சோழனை வன்னியர் என்று சொல்கிறார்கள் (உடையார் என்றும் சொல்கிறார்கள்). அவர் யாரால் பாதிக்கப்பட்டார்? எந்த அரசன் முற்படுத்தப்பட்ட ஜாதி? ( நீங்கள் சொல்லும் 2000 வருடக் கதைக்காகக் கேட்கிறேன்).

     தெலுங்கர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்காக நடந்த சதிதான், திராவிடர்கள் என்ற பேச்சு. நீங்கள் சொல்வதில் கொஞ்சமாவது நியாயம் இருந்தால், தாழ்த்தப்பட்டவரைத்தானே தலைவராக ஏற்றுக்கொள்ளவேண்டும்? யார் அப்படிச் செய்கிறீர்கள்? இன்றைக்கும் தாழ்த்தப்பட்டவரை ஏறி மிதிப்பது பிற்படுத்தப்பட்டவர்களா இல்லையா?

     இன்றைக்கு பிற்படுத்தப்பட்டவர் என்ற போர்வையில் மற்றவர்களின் உழைப்பை உறிஞ்சுவதனால், ‘பிற்படுத்தப்பட்டவர் இட ஒதுக்கீடு’ என்று சொல்கிறீர்கள். நியாயமாகப் பார்த்தால் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டும்தான் இதற்குத் தகுதி உடையவர்கள். அவர்கள்தான் 2000 வருடங்களாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லும் தகுதி உண்டு. மற்றவர்களுக்குக் கிடையவே கிடையாது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.