இந்த அசிங்கத்திற்கு வெட்கப்படுவதா… கோபப்படுவதா அல்லது வேதனைப்படுவதா …?


டெல்லியில் நேற்று நடந்த ஒரு பிறந்த நாள்
வைபவம்…

ஒரு இந்தியனாக இந்த அசிங்கத்திற்கு வெட்கப்படுவதா…
கோபப்படுவதா அல்லது வேதனைப்படுவதா …?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to இந்த அசிங்கத்திற்கு வெட்கப்படுவதா… கோபப்படுவதா அல்லது வேதனைப்படுவதா …?

 1. புதியவன் சொல்கிறார்:

  கா.மை. சார்… என்னதான் நாம் இந்தியர்கள், பாரம்பர்யமான நாகரீகமுடைவர்கள் என்று பெருமை பேசினாலும், 30% க்கும் மேலே (50%ஆகவும் இருக்கலாம்) நம்மிடம் இருப்பது மனிதப் பிறவி எடுத்த அறிவற்றவர்கள். இதை நாம் ஒத்துக்கொண்டாகவேண்டும். இதை ‘ஹிந்து சேனா’ என்று மட்டும் நான் பார்க்கவில்லை. எல்லா அரசியல் கட்சிகளிலும் குறைந்த பட்சம் 40% ஆவது இந்த மாதிரி ஈனப் பிறவிகள் இருக்கின்றனர். நம் பாராளுமன்ற உறுப்பினர்களே, தங்கள் மதிப்பை இழந்து, அமெரிக்க பிரசிடென்ட் வரும்போது அவருடன் கை குலுக்க போட்டோ எடுத்துக்கொள்ள போட்டி போட்டதை நாம் பார்த்தோமே.

  சினிமா நடிகர்களுக்கு கட் அவுட் வைத்து அதற்கு பாலாபிஷேகம், பீராபிஷேகம் செய்யும் மாக்கள் இருக்கும் தேசத்தில், சொந்தக் குடும்பத்தைக் காக்க வக்கில்லாத இந்த ஈனப் பிறவிகள் போஸ்டருக்கு கேக் ஊட்டிவிடுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. தன் தேசத்தைப் பற்றியும் தங்களைப் பற்றியும் கொஞ்சம்கூட தன் மானம் இல்லாத இவர்கள் அனைவரும் (சினிமா நடிக நடிகைகளின் ரசிகர்கள், அரசியல் தலைவர்களின் அடிவருடியாக இருக்கின்ற கட் அவுட், போஸ்டர் வைக்கின்ற அடிவருடிகள் அனைவரும்) இந்தியர்களாகப் பிறந்ததற்கு நாம்தான் வருத்தப்படவேண்டும்.

  போகிற போக்கைப் பார்த்தால், நெல் வயல்களில் உள்ள களைகள் போல இவர்கள் இல்லை, களைகள் இருக்கும் வயல்களில் சில நெற்கதிர்களும் இருக்கின்றன என்ற நிலைக்கு நல்லவர்களின் நிலை இந்தத் தேசத்தில் ஆகிவிடும்போல் தோன்றுகிறது. வெட்கப்படவேண்டிய விஷயம்.

  • ssk சொல்கிறார்:

   கல்வி இல்லை/மறுக்க பட்டது பல நூற்றாண்டுகளாக. அதன் பயன் இதுவே. ஆனால் இவர்களுக்கும் இன்றைய எல்லா சுகங்களும் வேண்டும். எதுவும் இல்லாவிட்டாலும் வாழ்வில் ஒளிர வழி உள்ள இடம் அரசியல். இவர்களை வைத்து முன்னேறிய தலைவர்கள் , இவர்கள் இப்படியே இருக்க வைத்து விட்டனர். அரசியல், சினிமா போன்ற இடங்கள் எல்லாம் இவர்களைபோற்றும் இடம்.

 2. paamaranselvarajan சொல்கிறார்:

  நீங்கள் குறிப்பிட்டுள்ள மூன்றையும் செய்ய வேண்டியதே தேவையில்லை … இந்த காேமாளிகளின் செயலை பார்த்து வாயில் எச்சில் இருந்தால் காரி உமிழ்ந்துவிட்டு செல்வது தான் ….உத்தமம் …..!

 3. சிவம் சொல்கிறார்:

  படத்திலுள்ள கேக் ஊட்டப்படும் கிறுக்கர் தொடர்ந்து
  இந்தியாவுக்கு பாதகமான செயல்களிலெயே ஈடுபட்டு வரும்போது,
  என்ன காரணத்தை வைத்து இந்த கிறுக்கர்கள் கேக் ஊட்டி
  அந்த கிறுக்கரை கொண்டாடுகின்றனரோ ?

 4. இளங்கோ சொல்கிறார்:

  இந்து சேனா என்பது, விஹெச்பி, பஜ்ரங் தள் போல், பாஜகவின் ஒரு அங்கம் தானே ? அப்படியானால்,
  பாஜக ட்ரம்பை கொண்டாடுகிறதா ?
  இந்தியர்களுக்கு விசா கொடுக்க மறுக்கிறார்,
  பாரிஸ் ஒப்பந்தம் இந்தியாவிற்கு சாதகமாக இருக்கிறது
  என்று ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுகிறார்;
  இந்த ஆளை பாஜக ஏன் ஆதரிக்க வேண்டும் ?
  மோடிஜியை அமெரிக்கா வரும்படி அழைத்தாரே என்பதற்காகவா ?

 5. M. Syed சொல்கிறார்:

  அமெரிக்காவில் ட்ரம் வெற்றி பெற்றத்துக்கே நம்நாட்டிலும் அமெரிக்காவிலும் உள்ள சில பிஜேபி அல்லக்கைகள் கொண்டாடி மகிழ்ந்தனர். காரணம் ட்ரம் முஸ்லீம் எதிர்பாளராம் அதனால் தான் என்று சந்தோசப்படுகின்ரானர் முட்டாள்கள் .சென்ற மாதம் தான் சௌதியில் சென்று பில்லியன் கணக்கில் தன் வியாபாரத்தை முடித்துவந்தார் இந்த யோக்கியன். அமெரிக்காவில் இந்தியருக்கு எதிராக வேலை வாய்ப்புகளை பறிதார். வரும் 2018. ம் வருடம் IT. வேலை வாய்ப்புக்கள் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது காரணம் ட்ரம்பின் கை காரியம் தான். சில முட்டாளாக்களின் செயலால் நாம் வெட்கப்படத்தான் வேண்டும் .

 6. IK சொல்கிறார்:

  பின்லேடன் உட்பட பல தீவிரவாதிகளின் பெயர்களை தம் பிள்ளைகளுக்கு வைத்து மகிழும் முசுலிம் பெற்றோர்கள் உள்ள நாட்டில், இந்த ட்ரம்ப் வெறியர்கள் செயல் ஒன்றும் வருந்ததக்கதல்ல.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.