நாம் இதற்கு கூட வக்கற்று விட்டவர்கள் ஆகி விட்டோமா என்ன…?

தொல்பொருள் ஆராய்ச்சி என்பது உலகம் பூராவும் மிக
உற்சாகத்துடன், ஆர்வத்துடன் பார்க்கப்படும் ஒரு விஷயம்.
பண்டைய ரோம், கிரேக்க, நைல் நதியோர தொடர்புடைய
விஷயங்கள் எது கிடைத்தாலும், உலகத்தின் வெவ்வேறு
பகுதிகளிலிருந்து, தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள்
செலவைப்பற்றி கவலையே படாமல் தீவிர ஆராய்ச்சியில்
இறங்குகிறார்கள். எகிப்தில், அண்மையில் புதிதாக
கிடைக்கப்பெற்ற ஒரு 4800 வருட பழைய மம்மியில்
அவர்கள் தேடாத விஷயங்கள் இல்லை.

ஆனால், இங்கே ….?

அரசியல் சட்ட விதிகளின்படி, தொல்பொருள் ஆராய்ச்சி
மத்திய மற்றும் மாநிலங்களுக்கான பொதுப்பட்டியலில்
வந்தாலும், மாநில அரசு, அரசியல் சாசனப்படி தனக்குரிய
உரிமையை கூட பயன்படுத்தத் தெரியாத ஒரு அடிமை
அரசாக இருக்கிறது….

—————-

அண்மையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் – ஈரோடு
மாவட்டத்தில், சென்னிமலைக்கு மேற்கே 15 கிலோ மீட்டர்
தொலைவில் நொய்யல் ஆற்றின் வடகரையில் உள்ள
கொடுமணல் என்ற ஊரில் 50 ஏக்கர் பரப்பில் 9 அகழாய்வு
குழிகளும், 100 ஏக்கர் பரப்பிலான ஈமக்காட்டில் ஒரு ஈமச்
சின்னமும் அகழாய்வு செய்யப்பட்டன. இதுவரை
மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம், அங்கே விலை
உயர்ந்த கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கல்மணிகள்
செய்யும் தொழிற்கூடமும், செம்பு, இரும்பு மற்றும் உருக்கு
உருக்கப்பட்டதற்கான தொழிற்கூடங்களும் கண்டு
அறியப்பட்டுள்ளன.

கொடு மணலில் கிடைத்த மட்பாண்டம் கி.மு.3 ஆம்
நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்தது என்று
தெரியவந்திருக்கிறது. அங்கே கிடைத்துள்ள மட்பாண்டங்கள்
தமிழர்கள் 2,500 ஆண்டுகளுக்கு முன், எழுத்தறிவு பெற்று,
மிகச் சிறந்த சமூகமாக விளங்கியிருக்க வேண்டும் என்பதை
உறுதிபடுத்துகின்றதாம்.

இந்தக் கொடுமணல் அகழாய்வு களத்தைப் பாதுகாக்கப்பட்ட
சின்னமாக அறிவிக்க வேண்டுமென்று பலமுறை கோரிக்கைகள் விடப்பட்ட போதும், மத்திய அரசு ஏற்கத்தயாரில்லை…இங்கு மேற்கொண்டு ஆராய்ச்சிகள் தொடரப்படவும் இல்லை…. மாநில அரசும் – தன் அடிமைத்தனத்திலிருந்து வெளி வர விரும்பவில்லை.

—————–

மிகச் சமீபத்தில் வெளிவந்துள்ள இன்னொரு புதைபொருள்
அற்புதம் கீழடி.

மதுரையில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள
கீழடியில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கப்பெற்ற அகழாய்வில் 2200 ஆண்டு பழமையான 5300 பொருட்கள்
கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இங்கு சுமார் 110 ஏக்கர்
அளவில் பழங்கால பொருட்கள், ஆவணங்கள் புதைந்துள்ளன.

தனியார் வசமுள்ள இந்த இடத்தில், மத்திய தொல்பொருள்
ஆராய்ச்சி நிறுவனம், சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை மட்டும்
குத்தகைக்கு (வாடகைக்கு) எடுத்துக்கொண்டு ஆய்வுளை
நிகழ்த்தி இருக்கிறது. இந்த அகழ் ஆராய்வில்
அற்புதமான பல விஷயங்கள் வெளிப்பட்டாலும், இதனை
மேற்கொண்டு பெரிய அளவில் தொடர்வதற்கு மத்திய அரசு
எந்தவித ஆர்வமும் காட்டவில்லை.

பொதுமக்களும், பல தமிழாராய்ச்சி நிறுவனங்களும்
பலமுறை வேண்டுகோள் விடுத்தும், மத்திய அரசோ,
மாநில அரசோ இதில் எந்தவித அக்கரையோ, ஆர்வமோ
காட்டவில்லை. மாறாக, இதில் ஆர்வத்துடன் செயல்பட்ட
மத்திய அரசு அதிகாரியை அஸ்ஸாமுக்கு பணிமாற்றம்
செய்து விட்டனர்.

“கீழடியில் அகழ்வாய்வை தொடரவும், பழங்கால பொருட்களை கீழடியில் அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்” – என்று கோரி தனி நபர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்ததன் விளைவாக, இப்போது இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டிருக்கிறது.

சென்ற வாரம் வழக்கு விசாரணக்கு வந்தபோது,

“சிவகங்கை கீழடியில் அகழாய்வு பணி மேற்கொண்ட
தொல்லியல் கண்காணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டது,
அகழாய்வு நடைபெற்ற இடம் மூடப்பட்டது போன்றவை
தமிழர்களின் வரலாற்றை மறைக்க முயற்சி செய்வது போல்
உள்ளது” என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி
தெரிவித்துள்ளது.

—————————

ஒரு ஜனநாயக நாட்டில், ஒவ்வொரு விஷயத்துக்கும்,
பொதுமக்கள் நீதிமன்றம் சென்று தான் தீர்வை பெற முடியுமா ? மக்களின் நியாயமான கோரிக்கைகளை உணர்ந்து செயல்பட
துப்பில்லாத அரசுகள் இருந்தென்ன பயன்…?

தமிழர் நாகரிகம் வெளிப்படுவதில் மத்திய அரசுக்கு ஆர்வம்
இல்லையென்பது புரிகிறது. அவர்களது “சிந்து சமவெளி”
நாகரிகத்தை மிஞ்சுவதாக எதுவும் வெளிப்பட்டு விடக்கூடாது
என்பதில் அவர்கள் மிக கவனமாக இருக்கிறார்கள்…

தமிழக அரசுக்கு உணர்வுகளே இல்லையா…..?
பொதுப்பட்டியலில் உள்ள விஷயத்தில், தமிழக அரசு இன்னும்
தீவிரம் காட்ட வேண்டாமா..? மத்திய அரசு அக்கறை
காட்டவில்லை என்றாலும், மாநில அரசு அதிக ஆர்வத்துடன்,
செயல்பட வேண்டாமா…?

2500 ஆண்டுகளுக்கு முந்தைய சான்றுகள், தமிழகத்தில்
கிடைப்பது எவ்வளவு பெரிய விஷயம்…? உலக அளவில்
பேசக்கூடிய ஒரு விஷயம், தமிழகத்தில்பூமிக்குள் புதைந்து
கிடைப்பது தெரிய வந்தும், இப்படி எருமை மாட்டின் மீது
எண்ணை மழை பெய்தது போல் இருக்கலாமா…?

அரசு மெத்தனமாக இருந்தால், அதன் உறக்கத்தை கலைத்து
செயல்பட வைக்க வேண்டியது, தமிழ் ஆர்வலர்களின்
பொறுப்பு ; புதைந்து கிடக்கும் தமிழகத்தின் பண்டைய
பண்பாட்டை, கலாச்சாரத்தை, பூமிக்கு அடியிலிருந்து
வெளிக்கொண்டு வருவது நம் அனைவருடைய பொறுப்பும்
தான்.

தமிழ் அமைப்புகள் இன்னும் தீவிரமாக இயங்கி,
மத்திய, மாநில அரசுகளை இந்த விஷயத்தில் செயல்பட வைக்க தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.மத்திய, மாநில அரசுகள் – தங்கள் பொறுப்புகளிலிருந்து நழுவுவதை நாம் அனுமதிக்கக் கூடாது.

இப்போது நடப்பது வெறும் கண்துடைப்பு வேலை. பத்து ஆட்கள்
கூட வேலை செய்வதில்லை. இந்த அகழ்வாராய்ச்சிக்காக
அடையாளம் காணப்பட்டுள்ள நிலம் முழுவதையும், தகுந்த
இழப்பீடு கொடுத்து விட்டு, நில உரிமையாளர்களிடமிருந்து
தமிழக அரசு விலைக்கு வாங்கி கையகப்படுத்த வேண்டும்.
பெரிய அளவில் ஆட்களையும், நிபுணர்களையும் ஈடுபடுத்தி,
பணியை விரைவுபடுத்த வேண்டும். கிடைப்பனவற்றை
எல்லாம் உடனடியாக ஆவணப்படுத்தி, வெளியுலகிற்கு
அறிவிக்க வேண்டும்….

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

27 Responses to நாம் இதற்கு கூட வக்கற்று விட்டவர்கள் ஆகி விட்டோமா என்ன…?

 1. சைதைஅஜீஸ் சொல்கிறார்:

  எங்கே சென்றனர் நம் தமிழ் வாட்ச்மேன்கள்?
  குமரி கண்டம்
  பூம்புகார்
  கொடுமணல்
  கீழடி
  (நமக்கு தெரிந்து இது!
  தெரியாதது எவ்வளவோ?)

 2. vignaani சொல்கிறார்:

  தமிழகத்துக்கு சரியான இடம் தர மைய அரசு முன்வருவதில்லை என்ற குற்றச்சாட்டு அறிஞர் அண்ணாவின் ” வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” நாட்களிலிருந்து கேட்டு வந்தாலும், அது அரசியலுக்காக மிகைப் படுத்தத்தப்பட்டது என்று எண்ணிய தேசீய வாதிகள் உண்டு. இப்போது இந்த கீழடி விஷயத்தைப் பார்த்தால்
  பா ஜ க அனுதாபிகள் கூட இந்தக் கூற்றில் உண்மை உள்ளது என்றே எண்ணுவர்; எண்ணுகிறோம்.

  2. மாநில அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்று ஒரு விளக்கெண்ணையும் விளங்கவில்லை. அ ,தி மு க ஆட்சியில் ஜெ இருந்தபோது அவரைத் தவிர எதையும் எண்ணவு ம், பேசவும், முடிவெடுக்கவும் முடியாது. பின்திரை சொத்து குவிப்புகள், முதலியவை தோழி கவனித்துக்கொள்வார். இப்போது தோழி சிறையில். தினசரிகளில் தினகரன்- திவாகரன்- எடப்பாடி-பன்னீர் செல்வம் குழுக்களின் பரஸ்பர குற்றச்சாட்டு. ஸ்டாலினுக்கு இன்றே ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தல் வரவேண்டும்; இல்லை எடப்பாடி கோஷ்டி உடைந்து அவர்கள் ஆதரவில் தி.மு.க ஆட்சி அமைய வேண்டும். வேறு எந்த விஷயத்தையும் சிந்திக்கவும் நிலையில் இல்லை. கீழடி ஆராய்ச்சியெல்லாம் முக்கியமான விஷயமே அல்ல.
  3. தமிழக பா ஜ க . பாசிட்டிவ் விஷயங்களை எடுத்துக்கொண்டு தமிழ் மக்களிடையே நல்ல பெயர் வாங்க கூடாதா? இவர்கள் வீரமெல்லாம் இங்கே செய்தியாளர்களிடம் தானா? அவமானம்.

  • சைதைஅஜீஸ் சொல்கிறார்:

   என்ன விஞ்ஞானி அவர்களே,
   மூன்றாவதாக நீங்கள் சொன்னதற்காக “தேசவிரோதி” பட்டம் வாங்க தயாராகிவிட்டீர்கள் போல! வாழ்த்துகள்

 3. Sanmath AK சொல்கிறார்:

  Awaiting comments from friends தமிழன், புதியவன், Sundar Raman……….

  • Sundararaman சொல்கிறார்:

   Sir I have nothing to say except that fantastic, beautiful, big….temples in these kazagam rule as well as people apathy, and desire to run behind ( construct ) newer temples …so many magnificent temples are in depleted condition. Its a huge fraud…some of the temple has large land , area but no revenue. Hope a day will come where devotees are in charge of the temple.
   I have no idea as to what is the central govt budget for these historical searches , there must be a plan.
   I would like to conclude one Mr.Ahmed did the excavation work on Ayothiya and said there was a huge temple…but secular press and UPA didn’t take a notice of it.

   • Sanmath AK சொல்கிறார்:

    Come on my dear friend…. Why are you again and again pointing fingers at others when a question is asked to you ?…. I accept that there are so many temples which require lot of renovation(which we do from my family and also though organized trusts)….. I think I know a little bit about temples etc…..

    The matter of discussion here is the Centuries old Thamizh culture and civilization…. KM is pointing at State Govt for not properly pulling in Central Govt’s measures towards this archaeological work…… When the Central BJP Govt speaks proudly of India and Indians, we Thamizhs are also Indians and as Indians every Indian citizen should be proud that there existed a centuries old cultured civilization in a part of our country….. Why such importance is not being given to Keezhadi ??….. Here comes the suspicion on the Central Govt about their orientation towards Sindhu Civilization aka Aryan Civilization….

    Hope Ahmed & Ayodhiya has nothing to do with this topic….

    Present Central Govt works hard to portray to the country and also to the outside world a single Indian Culture & Civilization, which is nothing but Hindu-religion-based civilization, with all divisions…… All these are implied things which will not be either done or spoken explicitly….. The hatred “bhakts” have on thamizhs is that we are the ones able to interpret above very clearly and we are exposing them to their own men…..

  • இளங்கோ சொல்கிறார்:

   Mr.Sanmath AK,

   I really pity on you.
   What you expected and what Mr.Sundararaman says -see:

   “I have no idea as to what is the central govt budget for these historical searches , there must be a plan.”

   ” I would like to conclude one Mr.Ahmed did the excavation work on Ayothiya and said there was a huge temple…but secular press and UPA didn’t take a notice of it.”

   These people will never change. They are mesmerised by the magic of Mr.M.

 4. selvarajan சொல்கிறார்:

  கீழடி அகழாய்வுகள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்கள் நாகரீகத்தை, அறிவியல் முன்னேற்றத்தை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டியது. இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட்ட பணி தற்போது நிறுத்தப்பட்டு விட்டது என்பது வேதனையான ஒரு செயல் … தமிழனின் நாகரீகம் மற்றவற்றை விட மேலானது என்பது வெளிப்பட கூடாது என்கிற எண்ணத்தினால் வந்த விபரீத செயல் — மத்திய அரசின் பாரபட்சமான செயலுக்கு இதுவும் ஒரு உதாரணம் …

  அகழாய்வுக்கு மொத்தமாக ஆராய்ச்சிக்கு மார்க் செய்தது 110 ஏக்கர் — ஆனால் ஒரு சென்ட் இடத்தையும் அரசு கையப்படுத்தாமல் — அந்த ஊரை சேர்ந்த சோணைமுத்து என்பவரின் மகன் சந்திரன் என்பவரும், அப்துல் ஜப்பார் என்பவரின் மகன் திலீப்கான் என்பவரும் தங்களுக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலங்களை நீங்கள் தாராளமாக ஆய்வு செய்து கொள்ளுங்கள் என்று வழங்கியிருக்கிறார்கள். அதிலும் துண்டு துண்டாக வெறும் 50 சென்ட் இடங்களில் மட்டுமே ஆய்வு செய்ததிலேயே ” ஏகப்பட்ட ஆதாரங்கள் கிடைத்துள்ளன — அப்படியிருந்தும் திட்டத்தை மூடிவிட்டதின் மர்மம் மோடி அரசுக்குத்தான் தெரியும் ….

  இன்று அங்கே சென்று பார்த்தால் ஆய்வு நடந்ததற்கான எந்த சுவடும் இல்லாமல் மண்ணை மூடி மறைத்து விட்டனர் …கீழடியில் இரண்டு ஆண்டுகளாக செய்யப்பட்ட அகழாய்வில் மிக அதிகமான எண்ணிக்கையில் தொல் பொருட்கள் கிடைத்துள்ளன.
  உறை கிணறுகள், செங்கற் சுவர்கள், கூரை ஓடுகள், மண்பாண்டங்கள், மிளிர்கல், சூது பவளம், பளிங்கு, அகேட் மணிகள், பச்சை, மஞ்சள், நீல நிறக் கண்ணாடி மணிகள் அணிகலன்கள், யானைத் தந்தத்தினாலான தாயக்கட்டைகள், தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடுகள் என 5300 பொருட்கள் கிடைத்தகாக தெரிய வருகிறது ….

  அகழாய்வில் கிடைக்கும் தொல் பொருட்களை கார்பன் 14 எனும் ஆய்வுக்கு உட்படுத்தி கால நிர்ணயம் செய்யும் முறை வழக்கத்தில் இருக்கிறது. அவ்வாறு கார்பன் 14 கால ஆய்வுக்கு தொல் பொருட்களை அனுப்பும் கடமை மத்திய தொல்லியல் துறைக்கு இருக்கிறது. கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள 5300 தொல்பொருட்களில் வெறும் இரண்டே பொருட்களை மட்டுமே கார்பன் ஆய்வுக்கு அனுப்பியுள்ளது தொல்லியல் துறை. என்ன ஒரு கேவலமான செயல் … தமிழனின் நாகரிகத்தை மறைத்து இவர்கள் எதை சாதிக்க நினைக்கிறார்கள் ….

  இங்கே உள்ள விபச்சார ஊடகங்களும் — கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளும் — பதவிக்கு அலையும் சொறிநாய் கட்சிகளும் இதுபற்றி ஒரு வார்த்தை கேட்கவோ — அறிக்கை விடவோ — ஆர்ப்பாட்டம் செய்யவோ திராணியற்று — எங்கே தங்களுக்கு வருமானவரி ரெய்டு வந்து விடுமோ என்கிற பயத்தில் வாய்மூடி மௌனிகளாக இருப்பதும் — தமிழை வைத்து பிழைப்பை நடத்தும் கேப்மாரி பச்சோந்திகளும் — சூடு சொரணையற்று கிடப்பது தான் — திட்டத்தை கைவிட்டவர்களுக்கு கொண்டாட்டமாக ஆகிவிட்டது —

  எவனும் தமிழனின் நாகரிகத்தையும் — தொன்று தொட்ட அவனது கலாச்சாரத்தையும் — மொழியையும் என்றுமே மறைக்கவும் முடியாது — மறைய செய்யவும் முடியாது … !!! பணி மீண்டும் தொடங்கும் என்று வெறும் ” சால்ஜாப்பு ” வார்த்தைகளை சொல்லி மத்திய அரசு ஏமாற்ற நினைப்பது மட்டும் நடந்துகொண்டு இருக்கிறது — காலம் மாறும் — காட்சிகளும் மாறும் …. அப்படித்தானே …?

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  செல்வராஜன்,

  நல்ல பின்னூட்டம். பாராட்டுகள்.
  சொரணை கெட்ட அரசியல்வாதிகளோ, அவர்களது ஜால்ராக்கள்
  எவராவதோ இதைப் பார்த்தால் தேவலை….
  எல்லாரும் வெறும் வாய்ப்பேச்சு வீரர்கள்.

  இப்படியே, தமிழர் பண்பாடு, சரித்திரம், வீரம் செறிந்த வரலாறு
  அனைத்துமே மறைக்கப்படுகிறது – மறக்கடிக்கப் படுகிறது.
  இன்றைய நமது பள்ளிப்பிள்ளைகள் யாருக்கும் தமிழ்நாட்டின் வரலாறே
  தெரியாத அளவிற்கு திசை திருப்பப்பட்டு விட்டார்கள்.

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 6. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  சமூக அக்கறை எனும் பெயரில் வெறும் அரசியல் வெட்டிக் கதைகள் பேசுகிற என் போன்றோர் நிறைந்திருக்கும் பதிவுலகில் உண்மையிலேயே அக்கறை செலுத்தப்பட வேண்டிய விதயம் பற்றி எழுதியிருக்கிறீர்கள்! வெகு நாட்கள் கழித்து மீண்டும் உங்கள் தளம் வருகிறேன். இப்படி ஒரு பதிவுக்காக மிக்க நன்றி!

  அதே நேரம், சிந்துச் சமவெளி நாகரிகமும் தமிழருடையதே என்பதைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து வெகு காலத்துக்கு அஃது எந்த இனத்துக்குச் சொந்தமானது என்பதையே முடிவெடுக்க இயலாமல் இருந்தது. வழக்கம் போல, “சமற்கிருதம்தான் இந்தியாவிலேயே மிகவும் பழைய மொழி. எனவே, இவ்வளவு பழமையான நாகரிகம் கண்டிப்பாக ஆரிய நாகரிகத்தைச் சேர்ந்ததுதான்” என்று ஒரு சாரார் கூறிக் கொண்டிருந்தார்கள். ஆனால், அங்கு கிடைத்த பானை ஓடுகளில் இருந்த எழுத்துக்கள் ’தமிழ் பிராமி’ எனும் வகையைச் சேர்ந்தவை என்று ஐராவதம் மகாதேவன் அவர்கள் உறுதிப்படுத்தியதன் பின்னர் ‘சிந்துச் சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகமே’ என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

 7. குலாம் ரசூல் சொல்கிறார்:

  இந்த இடுகையை பொதுவெளியில் எல்லோரும் அறிய, படிக்க செய்யவேணும். தமிழ்மணம் மட்டுமல்லாமல் இன்னும் எதிலெல்லாம் பிரசுரிக்கமுடியுமோ அதிலெல்லாம் ஆவனசெய்ய சகோதரர்கள் முயற்ச்சி எடுக்கவேணும்.

  Welldone Bro. Sanmath AK, சகோ. செல்வராஜன். கவணம். ஆட்டோவோ ஐடி ரெய்டோ வரக்கூடும்.

  தமிழன் என்பவன் இந்தியனா?

  இல்லை என்று மத்திய மோடி அரசு சொல்லாமல் சொல்கிறது. இதுவரை இதற்கு நம்மவர்களிடம் இருந்து சரியான எதிர்வினை வரவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில போராட்டங்களை தவிர. இன்னும் பெரிய அளவில் கொண்டு செல்ல வேணும்.

  அவர்கள், மோடி அடிவருடிகள், சொல்கிறார்கள். பாஜக ஆட்சியில்லையேல் இங்கு எதுவும் இல்லை என்று. பாஜக ஆட்சி தவிர இங்கு எல்லாம் வேண்டும் என்று செவிட்டில் அறையும் விதமாக அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

  நடப்பவை நிச்சயம் நல்லதாக இல்லை. இதற்கு மோடி அரசு தான் பொறுப்பேற்கனும்.

 8. Rajamanickam Veera சொல்கிறார்:

  கீழடி ஆய்வுகள், ஆய்வு தரவுகள் அனைத்தும் மிக முக்கியமானது , ஆனால் சுற்றியுள்ள இடங்கள் அனைத்தும் யருக்கு சொந்தமான இடம் என விசாரித்து விட்டு பிறகு அங்கு ஏன் நிலத்தை கையகப்படுத்த முடியவில்லை என்ற உண்மை நிலையை சொல்லுங்கள். அப்புறம் சிந்து சமவெளி எழுத்துகள் எதுவும் தமிழ் பிராமி அல்ல, அவைகள் பிக்டோகிராப் எனும் சித்திர எழுத்து வகைகள். இப்படியான பொய்கள் நிஜ ஆய்வுக்கு பெரும் தடை. காவிரிமைந்தன் அய்யா, கொடுமணலிலும், மல்ல சத்திரம், மகாராஜா கடை , கீழ்வாலை செத்தவரை,திருமலை , ஆதிச்ச நல்லூர் என்ற எந்த தமிழக தொல்லியல் தடங்களுமே பாதுகாக்க பட வில்லை, அதே போல பிறமாநிலங்களில் உள்ள தமிழ் அடையாளங்கள் ஆதாரங்கள் எந்த அளவு ஆவணப்படுத்தப்பபட்டு இருக்கிறது என்று பார்த்திருக்கிறீர்களா, ? மோடியை குற்றம் சொல்வதற்கு முன் இங்கு தமிழகத்தில் மொழியை வைத்து வியாபாரம் செய்து வரும் எந்த அரசியல் கட்சி அல்லது வரலாற்று ஆய்வாளர்கள் இதற்காக முயற்சி செய்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?
  ஒரு உதாரணம் தமிழரின் ஆதி இருப்பிற்கான கல்வெட்டு ஆதாரம் என்பதே ஹாத்திகும்பாவின் காரவேலர் கல்வெட்டு தான். அது பற்றிய ஏதாவது ஒரு வரலாற்று செய்தியை தமிழில் படித்திருக்கிறீர்களா? திராவிட இயக்கத்தினர் ஏதாவது அதை காப்பதற்காக செய்திருக்கிறார்களா? நான் குறை சொல்லவில்லை, ஆனால் எதற்கெடுத்தாலும் ஒரு வித நக்கலோடும்,குறை சொல்லும் போக்கோடும் சிறுபான்மையினரும் மோடி வெறுப்பாளர்களும் செயல்படுவது கொஞ்சம் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


    நண்ப Peace,

    வலுவான ஆதாரம்.
    சரியான இடத்தில் தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

   • Rajamanickam Veera சொல்கிறார்:

    சகோதரரே அஸ்கோ பர்போலா நிச்சயமான இந்தியவியலாளர் தான் ஆனால் அதற்காக அவரின் அனைத்து கருதுகோள்களும் உண்மை என்று சொல்லி விட முடியாது, திஸீஸ் வேறு, ஹைப்போ தீஸீஸ் வேறு பர்போலாவின் கூற்று ஒரு ஹைப்போ தீஸீஸிஸ் , இந்த கட்டுரையிலும் எங்குமே தமிழ் பிராமி தான் ஹரப்பா,சிந்து, சரஸ்வதி நாகரீகத்தின் காலம் என சுட்டப்பட வில்லை, இதை எப்படி சரியான இடத்தில் இடப்பட்ட சரியான செய்தி என்கிறீர்கள் காமை அய்யா.உதாரணமாக அவர் இக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் ஆரிய, திராவிட இனக்கொள்கை, படையெடுப்பு, இதெல்லாம் அப்பட்டமான பொய் என்று நிறுவப்பட்டிருக்கிறது.அதோடு சிந்து, சரஸ்வதி நாகரீக முத்திரைகளில் இருக்கும் யோகத்தில் அமர்ந்த நிலையில் இருக்கும் சிவனின் வடிவம் திராவிட பண்பாட்டு கூறுகளோடு எப்படி இணைகிறது, அங்கு கிடைத்துள்ள வேள்விக்கான எரிகுளங்கள்,குதிரைகளின் அச்சுக்கள், இவைகள் ஆரியர்கள் குதிரை மீதேறி வந்து சிந்து நாகரீகத்தை அழித்தார்கள் என்ற கதையோடு பொருந்தவே இல்லையே இது பற்றி மிஷல் தனினோ நிறைய எழுதி இருக்கிறார். சரஸ்வதி , சிந்து நாகரீகத்தோடு மட்டுமல்ல உலகின் பல தொன்மையான நாகரீகங்களோடு தமிழர்களுக்கு தொடர்பிருக்கிறது. இணையத்தில் நிறைய இருக்கிறது படித்து பாருங்கள்.

     • Rajamanickam Veera சொல்கிறார்:

      சகோதரர் அமைதி சொல்வதை நான் கண்டிப்பாக ஒப்புக்கொள்கிறேன், என் கருத்து மாறுபாடுசிந்து சரஸ்வதி நாகரீகத்தில் தமிழ் பிராமி இருந்தது என்பதை தான் மறுக்கிறேன். சரஸ்வதியின் மிச்சங்களில் இருக்கும் மொழி பிக்டோகிராப் எனும் சித்திர எழுத்துக்கள், அவைகளை மொழி பெயர்ப்பதிலும், பொருள் கொள்வதிலும் பலவிதமான கருது கோள்கள் இருக்கின்றன. சமஸ்கிருத அறிஞர்கள் சிலர் அவை சமஸ்கிருத மொழி கிடும்பத்திலிருந்து வர்ந்திருக்கும் என சொல்ல விழைகிறார்கள், ஐரோப்பிய அறிஞர்கள், சிந்துவிற்கும், மெசபடோமிய, மயன் நாகரீகத்திற்கும் இடையே இருக்கும் தொடர்பை கொண்டு அந்த இந்தோ- ஐரோப்பிய நாகரீக மிச்சம் என நிறுவ முற்படுகிரார்கள். ஆனால் இந்த பிக்டோகிராம்கள் பெரும்பாலும் தமிழ், தமிழர் ப்ண்பாடு,திராவிட மொழிக்குடும்பங்களின் ஒலி, ஓசை கூறுமுறைகளை , நம்பிக்கைகளை ஒத்துருக்கிறது என்பது தான் பெரும்பாலான அறிஞர்களின் கூற்றாக இருக்கிறது. சரஸ்வதியின் சித்திர எழுத்துக்கள், சின்னங்கள், தமிழ், பிராகுயி மொழிக்கு அருகில் இருப்பதாக தான் சொல்லப்படுகிறது அதில் இடம் பெற்றிருக்கும் மீன் சின்னம் விண்மீனை குறிப்பதாக படிக்கப்பட்டிருக்கிறது எழு மீன், அறுமீன், மேமீன் என்றெல்லாம் படிக்கப்பட்டிருக்கிறது, அதோடு அங்குள்ள பிற பண்பாட்டின் கூறுகளையும்,நாம் கருத்தில் கொண்டே மேல் முடிவுகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. இன்னொரு விஷயம் சரஸ்வதி நாகரீக எழுத்துக்கள் வலமிருந்து இடம் வரும் எழுத்துக்கள்,ரீபஸ் கொள்கைப்படி இது திராவிட மொழிக்குடும்பத்தில் இருந்தே கிளைத்திருக்க முடியும் என்கிறார்கள். உங்களின் கார்டியன் செய்தியை படித்த பிறகு பர்போலாவின் கருதுகோளை ஆதாரமாக கொண்டு முன் நகரும் ராஜேஸ் ராவின் டெட் பேச்சை மீண்டும் பார்த்து விட்டு உங்களின் பார்வைக்கும் சமர்ப்பிக்கிறேன். இன்னும் சில சுவாரஸ்வயமான கருதுகோள்களையும் ஆய்வுகளையும், இரவில் அனுப்புகிறேன். உங்கள் தரப்பு வலுவாகிக்கொண்டே செல்கிறது நண்பரே

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Rajamanickam Veera,

   இந்த வெறுப்புணர்வு, ஒருவித பரஸ்பர அவநம்பிக்கை
   ( mutual distrust ) காரணமாக எழுவது….

   இதற்கான மூல காரணம் உங்கள் கட்சியும் ஆட்சியும் தான்.

   நீங்கள் சிறுபான்மை மக்களை அச்சுருத்துகிறீர்கள்…. அதன் விளைவாக அவர்கள் உங்கள் மீது அவநம்பிக்கை கொள்கிறார்கள். பயமுருத்தல் வெறுப்பை தான்
   உண்டாக்கும். மனதில் கலக்கத்தையும், கலவரத்தையும் தான் உருவாக்கும். ஒரு விதத்தில் உங்கள் கட்சி அதைத்தான் விரும்புகிறது. அப்போது தான் polarization ஏற்படும். வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது உங்கள் உத்தியாக இருக்கிறது.

   ஒரே நாடு என்கிற வரைக்கும் தான் உண்மை.

   நீங்களோ – ஒரே நாடு, ஒரே இனம், ஒரே மதம், ஒரே மொழி,
   ஒரே கட்சி, ஒரே தலைவர் என்று பயணப்பட துவங்கி விட்டீர்கள்….

   உங்கள் கட்சியின் போக்கு மாறாத வரையில், தேசத்தில் அமைதியும், வளமும் ஏற்படப்போவதில்லை. முடிந்தால்,
   கொஞ்ச நேரம் உங்கள் மனதிலிருந்து கட்சிப்பற்றை அகற்றிவிட்டு, நிதானமாக யோசித்துப் பாருங்கள்… உண்மை தான் என்று உங்கள் உள்மனதுக்கு கூட தோன்றும்.

   எந்த மதத்தினராக இருந்தாலும் சரி, எந்த மொழியினராக
   இருந்தாலும் சரி, எந்த இனத்தவராக இருந்தாலும் சரி –
   வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்று அனைவரையும் மதித்து, அரவணைத்து போகும் தலைமை தான் இன்றைய தேவை.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Rajamanickam Veera சொல்கிறார்:

    கா.மை அய்யா, நீங்களே ஏன் நம்பிக்கை இழக்கிறீர்கள். இந்த நாட்டின் பண்பாட்டு அடிப்படைகளில் இதன் கலாச்சார மதிப்பீடுகளில் நான் பெரும் நம்பிக்கை கொண்டிருக்கிறேன், பாஜகவோ, அல்லது வேறு எந்த அரசியல் அமைப்போ, இங்கு ஒற்றை நம்பிக்கையை திணீப்பார்களே ஆனால் அது அவர்களுக்கு தான் அழிவை தரும். இங்குள்ள ஒவ்வொரு இந்துவும், ஒவ்வொரு இந்தியனும், நம் தேசத்தி பன்மை தன்மையை பேணவே விரும்புகிறார்கள், அவர்கள் கம்யூனிஸ்ட்களாகவோ, இஸ்லாமியர்களாகவோ, ஏன் கிறிஸ்த்தவர்களாகவோ கூட இருக்கலாம் அவர்கள் இந்த ஒற்றை படை தன்மையை தங்களின் இந்திய பண்பாட்டு அடிப்படையாலேயே எதிர்க்கிறார்கள். சிறுபான்மையினருக்கு , ஒடுக்கப்பட்டவர்களுக்கு எந்த தீங்கும் இழைக்கப்பட்டு விடவே கூடாது என்ற நோக்கத்திற்காக எந்த ஒரு எதிர் நிலைக்கும் செல்ல இந்திய பண்பாட்டு இந்து தயாராக தான் இருப்பான் அதற்கு நீங்களே உதாரணம், இந்து இறை நம்பிக்கையை பெருமையாக சொல்லக்கூடிய, கலை, இசைகளில் ஆர்வமுள்ள, பெரும்பாலும் சைவ உணவு சாப்பிடக்கூடிய பொருளாதார தளைகள் இல்லாத உங்களை போன்ற பலரும் குரல் கொடுக்கிறீர்கள். இதுவே நம் பண்பாட்டின் வெற்றி என்று தான் நினைக்கிறேன். நான் என் தேசத்தின் அனைவரையும் நேசிக்கிறேன். அவர் இஸ்லாமியராகவும், பார்சியாகவும், சீக்கியராகவோ, வேறு எந்த இறை வழிபாட்டாளராக இருந்தாலும், ஏன் இறை மறுப்பாளராக இருந்தாலும் அவரின் கருத்துரிமைக்கு, அவரின் வழிபாட்டு செயல்பாடுகளுக்கு நிச்சயம் பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பது தான் ஒரு சராசரி பாஜக தொணடனின் ஆசை. நான் உங்களை போன்ற ஒவ்வொருவரை பார்க்கும் போதும் மேலும் மேலும் நம்பிக்கை கொள்கிறேன். இளைய பாரதம் எப்போதும் போல அனைவரையும் அரவணைத்து பேணி பாதுகாத்து போற்றும் என்று உறுதியாக நம்புகிறேன்.
    நன்றி

 9. paamaranselvarajan சொல்கிறார்:

  அய்யா …..! ” ரப்பர் ஸ்டாம்ப் “ரெடி பண்ண கேன்வாசிங் தாெடங்கி விட்டார்கள் … யார் வருங்கால ரப்பர் ஸ்டாம்ப் என்பதை தாேராயமாக காேடிட்டு தெரிவியுங்களேன் ….!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   million dollar question …!!!
   தலைவர் மனதில் இருப்பதை யார் அறிவர்….?

   இருந்தாலும், எனக்கு தோன்றுவதைச் சொல்கிறேன்…
   அத்வானிஜியை ஒருவழியாக வழக்கில் சிக்க வைத்து ஒதுக்கி,
   ஓரம் கட்டி விட்டார். ஒரு claim தொலைந்தது.

   திருமதி சுஷ்மா பெயர் அடிபட்டது. ஆனால், அவர் அத்வானிஜியின் சீடர்.
   எனவே வாய்ப்பு இல்லை.

   மக்களவை தலைவர் – தலைவரின் பரம ரசிகர்.
   சொன்ன பேச்சை கேட்பவர்…
   எந்த விதத்திலும் அவரால் ஆபத்து இருக்காது.
   எனவே அவருக்கு வாய்ப்பு இருக்கிறது என்று தோன்றுகிறது.

   நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்…?

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 10. புதியவன் சொல்கிறார்:

  பாஜக அரசு, தமிழன், தமிழ் நாகரீகம், போன்ற எதிலும் அக்கறை கொள்ளவில்லை. அதன் முதல் அஜெண்டா, இந்தியன், இந்தி, இந்து, இந்திய கலாச்சாரம் (ஒற்றை, இதில் மானில மொழிகளைப் பற்றி அக்கறை இல்லை) என்பதையே முதலில் வைக்கிறது.

  இந்தியாவுக்கு என்று ஒரு மொழி தேவைதான். அது மற்ற மொழிகளை ஒதுக்கிவைப்பதனால் நடக்காது. துரதிருஷ்டவசமாக, தமிழக அரசியல்வாதிகள் தங்கள் ஊழலினால், சிபிஐ என்ற கத்தி தலைக்குமேல் தொங்குவதால் வாயைத் திறக்காமல் இருக்கின்றனர்.

  ஜல்லிக்கட்டு பெரிய அளவில் எதிரொலித்ததால், வேறு வழியில்லாமல் அப்போது மத்திய அரசின் துணையோடு சுமுக தீர்வு காணப்பட்டது. அதற்கு அப்புறமும் மாடுகள் பிரச்சனை, பீட்டா என்று இன்னமும் பிரச்சனைகள் இருக்கின்றன, மத்திய அரசின் நிலை பீட்டாவுக்குச் சாதகமாகத்தான் இருக்கிறது.

  எனக்கு சப்பாத்தியும் பிடிக்கும். ஆனால், சப்பாத்தி மட்டும்தான் சாப்பிடணும்னு சொன்னால், கண்டிப்பாக சப்பாத்தியை வெறுப்பேன். சாப்பாட்டுக்கே இப்படின்னா, மொழி, கலாச்சாரத்தில் மக்கள் எவ்வளவு கடுமையாக இருப்பார்கள் என்று சொல்லத்தேவையில்லை. எனக்கு இன்னமும் இந்தி கற்றுக்கொள்ளவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது. ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள் ஹிந்தியைக் கற்றுக்கொள் என்ற அழுத்தத்தைத் தந்தால், நான் கனவிலும் ஹிந்தியைக் கற்றுக்கொள்ளமாட்டேன். நம்முடைய பண்டிகை பொங்கல்தான். தீபாவளி அல்ல. நம்முடைய வருடம் சித்திரையில்தான் ஆரம்பிக்கிறது.

  தமிழக பாஜக பொம்மைகள் தங்கள் தலைமையிடத்தில் இதனைக் கொண்டுசெல்லவேண்டும். இல்லாவிட்டால், விதையிலிருந்து செடி வராது, கருகிவிடும்.

  வரலாற்றை யாரும் மறைக்க இயலாது. இந்தியாவின் தொன்மை மொழி, சமஸ்கிருதம் மற்றும் தமிழ். வேறு எந்த ஒரு மொழியும் அல்ல. பார்ப்பன எதிர்ப்பு என்று சமஸ்கிருதத்தை இழிவு படுத்திய தமிழ்த்தலைவர்கள், அந்த வெறுப்பை தமிழர்களிடம் விதைத்தவர்கள், இப்போது இறந்துபோய்விட்டார்கள் அல்லது செயலற்றுவிட்டனர் அல்லது சிபிஐ வழக்குவரும் என்று பயந்துகிடக்கின்றனர். இந்திய கலாச்சாரம் இந்த இரண்டு மொழியின்பாற்பட்டது. மற்ற மொழிகளெல்லாம் இதிலிருந்து தோன்றியவைதான், அல்லது வெளியிலிருந்து வந்தவை. அரசு சமஸ்கிருதத்தின் சாயல் என்று இந்திக்கு முக்கியத்துவம் கொடுத்தால், தமிழுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். தமிழ்க் கலாச்சாரத்தை, இப்போது உள்ள அரசியல் வியாதிகளை (கருணானிதி, ஸ்டாலின் இன்ன பிற புற்று நோய்கள்) வைத்து எடைபோடக்கூடாது. அவர்கள் கொள்ளைக்காரர்கள், மாஃபியா கும்பல். அவர்களுக்கும் தமிழ்க் கலாச்சாரத்திற்கும் சம்பந்தம் கிடையாது.

  பாஜக கீழடியை மட்டும் தனித்துச் செய்வதாக நான் நினைக்கவில்லை. அவர்கள் தமிழ், தமிழன், தமிழ்க் கலாச்சாரம் இவற்றையே கண்டுகொள்ளாத, அழிக்க நினைக்கும் வந்தேறிகளைப்போல நடந்துகொள்வதாகத்தான் நினைக்கிறேன். இன்னும் கடுமையாகச் சொல்லப்போனால், இஸ்லாமிய படையெடுப்பு எப்படி நம் கலாச்சாரத்தை அழித்ததோ, அழிக்க முயற்சி செய்ததோ அதுபோல், உள் நாட்டில் ஹிந்திப் படையெடுப்பு தமிழ்னாட்டின்மேல் நடப்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. இதனை இந்திய கலாச்சாரத்தைக் கொண்டுள்ள தமிழர்கள் அனைவரும் எதிர்க்கவேண்டும். (இஸ்லாமியர்கள், கிறுத்துவர்கள் செய்வார்கள் என்று நாம் வாளா இருக்கக்கூடாது)

 11. தமிழன் சொல்கிறார்:

  மற்றவர்களின் பின்னூட்டங்களை இன்னும் படிக்கவில்லை. இந்தியாவின் கலாச்சாரம் 6 சமயங்களின் பாற்பட்டது (கிறித்துவ, இஸ்லாமியர்கள் இதில் சேர்த்தியில்லை). அவற்றை மொத்தமாக்கித்தான் 200 வருடங்களுக்குள்ளாக, ஹிந்து என்ற பெயரில் கொண்டுவந்திருக்கிறார்கள், எல்லா மக்கள் மனதிலும் இது புதைந்துவிட்டது (இதைப்பற்றி நிறைய எழுதமுடியும். இப்போது, சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம்…. என்றெல்லாம் வித்தியாசப்படுத்திப் பார்க்கமுடியாது. ஒவ்வொருவரும் மற்ற சமயத்தின் சடங்குகளையும் வழக்கங்களையும் எடுத்துக்கொண்டு, மொத்தமான கலவையாகிவிட்டது. சைவன் வேறு, வைணவன் வேறு, சமணம், புத்தம் வேறு வேறு. ஒருவன் இன்னொருவனுடன் கலக்கமுடியாது IDEOLOGICAL) இதைத் தவிர அவரவர் முன்னோர்களை வழிபடுவதும் சில சமூகங்களால் கடைபிடிக்கப்பட்டுவந்திருக்கிறது.

  எனக்கென்னவோ, பாஜக, தமிழனின் தொன்மையைப் புதைக்க நினைக்கிறது. அதாவது அவர்கள் ஹிந்து என்ற BRANDஐக் கொண்டுவருகிறார்கள். அப்போ, இன்னும் 200 ஆண்டுகளில், தமிழ்க்கலாச்சாரம் என்ற ஒன்றே மறைந்துபோகும் (இதில் யாரும் சந்தேகப்படவேண்டாம். இப்போதே, கடந்த 60-100 ஆண்டுகளிலேயே பல வழக்கொழிந்துபோய்விட்டன. இப்போதே பொங்கல் என்பது 90% லிருந்து 30%க்கும் குறைவானவர்கள் கொண்டாடும் நிலைக்குவந்துவிட்டது. இதை CHALLENGE செய்யாதீர்கள். நான் கேட்கும் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியாது, தெரியாது. 30-40 ஆண்டுகளுக்கு முன் பொங்கல் என்றால் என்ன, இப்போது பொங்கல் என்றால் என்ன என்பதை யோசியுங்கள். உங்களுக்கே தெரிந்துவிடும். பொங்கலின்போது இரண்டு கடமைகள் உண்டு. தன்னுடைய அல்லது பிறரின் மாடுகளுக்கு உணவு, காசு, துணி கொடுப்பது, விவசாயிகளுக்கும் விவசாயம் சார்ந்த அல்லது பிற தொழிலாளர்களுக்கும் காசு, உடை, கரும்பு/மஞ்சள் கொடுப்பது. இது இப்போது எத்தனைபேரிடம் உள்ளன?)

  தமிழர்கள் தங்கள் கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்கக்கூடாது. ( நாம் அதில் முனைப்பு காட்டுவதில்லை). பார்த்தினீயங்கள் (பாஜக அல்லது பிற மொழியாளர்கள்) அதனை அழிக்கவந்தால் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது.. நம்முடைய தமிழகத்திலேயே (குறிப்பாக கோவைப்பகுதி)) புல்லுருவிகள், கேரளாவிலிருந்து கழிவைக் கொண்டுவந்து நம் நிலத்தில் புதைத்துவிட்டுச் செல்கிறார்கள். நாமும், இது கோயமுத்தூர் பார்டரில்தானே நமக்கு என்ன வந்தது என்று வாளா இருக்கிறோம். இது நல்லதல்ல.

  நான் பிராமணன் இல்லை, ஆனால் முன்னேறிய சமூகம். பார்ப்பனர்களை எதிர்க்கிறார், நமக்குப் பாதகமில்லை என்று நாம் கொள்ளையனை, கழிசடையனை வளர்த்துவிட்டோம். இப்போது, தமிழனைத்தானே அழிக்கிறார்கள், நமக்குப் பாதகமில்லை என்று மற்ற மானிலங்கள் நினைக்கும், நினைத்து சந்தோஷப்படும். அவர்களுக்குத் தெரியும் தமிழ்தான் இந்தியாவின் தொன்மை மொழி, சமஸ்கிருதத்துக்கு அடுத்தபடியாக என்று. சமஸ்கிருதம் அழிந்துபட்டது. அடுத்து தமிழ்தான்.

  தமிழர்கள் ஒன்றுபடவேண்டிய தருணமிது..

 12. Karthik சொல்கிறார்:

  it is better to change the country rather than losing self respect. Either we need to enter and try to change the system or get out of this country.
  Really feeling very bad and handicapped.

 13. இளங்கோ சொல்கிறார்:

  எங்கே ? எங்கே போவீர்கள் தோழரே ?
  சொந்த நாட்டில் உங்களை நிலைநிறுத்திக்கொள்ள முடியாத நீங்கள்
  எங்கே போவீர்கள் ?
  கமலஹாசன் என்னும் ஒரு “மேதாவி” சொன்னதை நீங்களும்
  திரும்பச் சொல்ல வேண்டாம். இது “நம்” நாடு. நமது வாழ்வும் இங்கு தான்;
  வளமோ, வளர்ச்சியோ இங்கு தான்; சாவும் இங்கு தான்.
  தேவை தன்னம்பிக்கை. விடாமுயற்சி.
  74 வயது முதியவர் ஒருவர் இன்னும் நம்பிக்கை இழக்காமல்
  “இன்றில்லா விட்டாலும், நாளையாவது மாறும்” என்று விடாப்பிடியாக
  எழுதிக் கொண்டிருப்பதை படித்து விட்டுமா உங்களுக்கு இத்தகைய எண்ணங்கள் ?

 14. தமிழன் சொல்கிறார்:

  “கமலஹாசன் என்னும் ஒரு “மேதாவி” – எனக்கும் கமல் ஹசன் மேல் வெறுப்புதான் (அவர் நடிப்பில் இல்லை. அவருடைய மேதாவித்தனமான கருத்துக்களில்). ஆனால் அவருடைய குடும்ப வரலாறு தற்போது படித்துக்கொண்டிருக்கிறேன். அது எனக்கு வித்தியாசமான செய்திகளைச் சொல்லுகிறது. கமல் ஹசன் தந்தையார், எப்படி தன் சமூகச் சிந்தனையிலிருந்து விலகி, பொதுவுடமை, மற்றவர்கள் எல்லோரும் மதிக்கப்படவேண்டியவர்களே என்றெல்லாம் வித்தியாசமாகச் சிந்தித்தார், எப்படி மற்ற மதத்தவரை மதித்தார், தனக்கு உதவிய இஸ்லாமியரான ஹசன் (முழுப்பெயரை அப்புறம் எழுதுகிறேன்) பெயரை, தன் ஒவ்வொரு மகனுக்கும் வைத்தார் என்பதெல்லாம் படிக்கும்போது, கமல் ஹசன் சிந்தனைகள் அவரது அப்பாவின் சிந்தனைகளை ஒட்டி எழுந்திருக்கிறது என்று புரியமுடிகிறது. அவர் நல்ல ORATORஆக இல்லாமல் இருக்கலாம், அவருடைய தொழில், பிறந்த குலம் ஆகியவற்றினால் அவர் சில அரசியல்வாதிகளிடம் COMPROMISE செய்திருக்கலாம், ஆனால் அவர் தேர்ந்தெடுத்த வாழ்க்கைமுறைக்கு ஒரு காரணம் இருக்கிறது, ஒரு LINAGE இருக்கிறது என்றே தோன்றுகிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.