மோடிஜியின் இந்த புகைப்படம் நிஜமானது தானா…? பின் ஏன் இப்படி….?மோடிஜி, மாற்றுத்திறனாளி ஒருவரை வீல்சேரில் வைத்து
தள்ளிக்கொண்டு வருவதாக ஒரு புகைப்படத்துடன்
ஒரு பெரிய விளம்பரம், மத்திய அரசால் வெளியிடப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள்பால் மோடிஜி கொண்டுள்ள அக்கறையை
அது தெரிவிக்கிறதாம்….!

இந்த புகைப்படம் நிஜமானது தானா …? என்கிற சந்தேகம்
இப்போது எழுகிறது…

காரணம்….?

மக்களின் அத்தியாவசிய பொருட்களின் மீது, ஏற்கெனவே
விதிக்கப்பட்டுள்ள வரிகளை விட குறைவானதாகவே ஜிஎஸ்டி
இருக்கும்….. என்றும், பல அத்தியாவசியமான பொருட்களுக்கு
ஜிஎஸ்டி- யில் வரியே இருக்காது என்றும் மத்திய அரசு
சொல்லி இருந்தது… பெரிய அளவில் விளம்பரங்களும்
செய்திருந்தது…

ஆனால், இப்போது வெளிவந்திருக்கும் செய்தி –

——————-

இதுவரை அனைத்துவித வரிகளிலிருந்தும் விலக்கு
அளிக்கப்பட்டிருந்த –

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் –
ப்ரெய்லி தட்டச்சு இயந்திரம்,
ப்ரெய்லி காகிதம்,
ப்ரெய்லி கடிகாரம்,
மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும்
மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்,
சக்கர நாற்காலி,
காதுகேள் இயந்திரம்,
ஊன்றுகோல்

ஆகியவைமீது 5 சதவிகிதம் முதல் 18 சதவிகிதம் வரை வரி
ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பொருள்களின்
விலை ஜூலை ஒன்றாம் தேதி முதல் அதிகரிக்கிறது.

ஏற்கெனவே வரி இல்லாத பொருட்களின் மீது இப்போது
வரி விதிக்கப்பட மாட்டாது என்கிற உறுதிமொழி மீறப்பட்டது
மட்டும் அல்ல –

Rights of Persons with Disability Act, 2016 -ல் தரப்பட்டுள்ள
உரிமைகளையும் மீறுவதாக இருக்கிறது…
————————————————-

கருணை – புகைப்படத்திற்காக மட்டும் தானா …?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to மோடிஜியின் இந்த புகைப்படம் நிஜமானது தானா…? பின் ஏன் இப்படி….?

  1. தமிழன் சொல்கிறார்:

    கா.மை. சார்… நீங்க ரொம்ப அவசரப்படுறீங்க. இப்போ என்ன இந்தியா முழுமைக்கும் எலெக்ஷன் நேரமா? அதற்கு முன்னால் சிலர் இதைப் பெரிதுபடுத்துவார்கள், பாஜக (இல்லை இல்லை), மோடி அவர்களே நேரடியாக இந்த உத்தரவை (ஜி.எஸ்.டி வரியைக் குறைத்து) போடுவார்கள், அது ஊடகங்கள் வாயிலாக பெரிய அளவில் கொண்டுசேர்க்கப்படும் (provided அதனால் வாக்குகளை அள்ளலாம் என்று நிச்சயமானால்). இதுதானே இந்திய அரசியல் வழக்கம். இதில் நேர்மை, நியாயம், பாவம் என்றெல்லாம் நீங்கள் எதிர்பார்க்கிறீர்களே :))

  2. M.Syed சொல்கிறார்:

    இன்னுமா சார் நம்புறீங்கள் . ஐயோ பாவம் சார் நீங்கள் !!!

  3. selvarajan சொல்கிறார்:

    இதுபோன்ற ” குல்ஜாக் ” காட்சிகள் தமிழ்நாட்டினருக்கு — தமாஷ் …. வடநாட்டினருக்கு சபாஷ் — நம்மூரில் அந்தகாலத்திலிருந்து நம் தலைவர்கள் கிழவிவை கட்டியணைப்பது — அழுக்கான குழந்தையை கொஞ்சுவது போன்றவற்றை பார்த்து – பார்த்து அலுத்துபோனவர்கள் நாம் — ! ஆனால் வடக்கே இதெல்லாம் புதுமையாக தெரியும் என்பதை மோடிஜி உணர்ந்து காரியமாற்றுகிறார்…. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பொருள்களின் மீது மட்டுமா வரியை போட்டு இருக்கிறார்கள் — பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களுக்கும் கூட வரியை அதிகரித்து நல்ல பெயரை தட்டி சென்றுள்ள அருண் ஜெட்லீ — ஒரு அற்புதமான நபர் ….!! ஜெயா தமிழ்நாட்டில் இதை இலவசமாகவே கொடுத்தார் என்பதையும் நினைக்க வேண்டியிருக்கிறது … ” மாயா … எல்லாமே மாயா ” — நிழல் நிஜமாகிறது …. வரிகளின் மூலம் …?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.