ஒரே நாளில் திரு.ஸ்டாலின் மற்றும் திருச்சி சிவா ஆகியோரின் எதிரெதிரான கருத்துகள் ….!!!

சீரியஸ் விஷயமில்லை…இது ஒரு தமாஷ் தான்.
ஜூன் 17-ந்தேதி, நிகழ்ந்த ஒரு அரசியல் காமெடி….!!

….

கவர்னரை ராஜ்பவனில் சந்தித்து விட்டு வெளியே வந்த
திரு.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தபோது
கூறியதாவது –

” எம்.எல்.ஏ.க்களிடம் குதிரைபேர ஊழல் நடந்தது சம்பந்தமாக
சிபிஐ விசாரணை நடத்த கவர்னர் உடனடியாக உத்திரவிட
வேண்டும்….

இந்த அரசு உடனடியாக கலைக்கப்பட வேண்டும்…

சட்டசபையில் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம்
கொண்டு வரப்பட கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்”

——————————

செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர்
திருச்சி சிவா கூறியது –

” ஆளுநரே தேவையில்லை என்பதுதான் திமுக-வின்
நிலைப்பாடு. ஆட்டுக்கு தாடியும், ஜனநாயகத்தில் கவர்னரும்
தேவையே இல்லை ” என்று அண்ணாவே கூறி இருக்கிறார்….

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கையில், ஆளுநரே
அதிகாரத்தை கையிலெடுத்து செயல்படுவது ஜனநாயகத்துக்கு
எதிரானது.”

———————————-

இந்த முரண்பாட்டிற்கு காரணம் …???
திரு.ஸ்டாலின் பேசியது சென்னையில் –
தமிழ்நாடு கவர்னரை சந்தித்தவுடன்…. !!!

திருச்சி சிவா பேசியது –
புதுச்சேரியில் –
திரு.நாராயணசாமியை உடன்வைத்துக் கொண்டு…!!!
(திருமதி கிரண்பேடி படுத்தும் பாடு….!!! )

சென்னையில் ஒரு நியாயம், புதுவையில் இன்னொரு
நியாயம் … எப்படி…. 🙂 🙂

“இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா” …கவுண்டர் கூறியது
காதில் ஒலிக்கிறதா …!!!!

————————————————————–

இதனூடேயே இழைந்தோடும் இன்னொரு காமெடி –

ஸ்டாலின் அவர்களுக்கு சரியான ஆலோசகர்கள் இல்லையா
அல்லது யார் சொல்வதையும் அவர் ஏற்பதில்லையா என்று தெரியவில்லை….

திரு.ஸ்டாலின் கொடுத்த கோரிக்கை மனுவில் 2 விஷயங்கள் –

1) எம்.எல்.ஏ.க்களை வாங்க குதிரை பேரத்தில் ஈடுபட்டதால்,
ஆட்சியை உடனடியாக கலையுங்கள்….

2) மீண்டும் ஒருமுறை நம்பிக்கை இல்லா தீர்மானம்
கொண்டு வர அனுமதிக்கப்பட வேண்டும்….

ஆட்சியை கலைத்து விட்டால் அதற்கப்புறம் நம்பிக்கை
இல்லா தீர்மானம் எதற்கு…? இரண்டாவது வேண்டுகோளுக்கு
என்ன அவசியம்…?

மற்றொன்று –

எடப்பாடி அரசுக்கு மெஜாரிடி இல்லை என்று ஸ்டாலின்
அவர்கள் கருதுவாரேயானால், பின் அவர் கவர்னரை போய்
கெஞ்ச வேண்டிய அவசியமே இல்லை.

சட்டமன்ற தொடர் நடந்து கொண்டிருக்கிறது. மான்ய
கோரிக்கைகள் மீது தினமும் விவாதம் நடந்து
கொண்டிருக்கிறது.

எப்போது வேண்டுமானாலும், ஒரு வெட்டுத்தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றினால் போதும்… அரசு கவிழ்ந்து விடும்….
எடப்பாடி அவர்கள் ராஜினாமா செய்துவிட்டு போய்க்கொண்டே
இருக்க வேண்டியது தான்….!

இதைச் செய்யாமல், ஸ்டாலின் கவர்னரிடம் சென்று மனு
கொடுப்பது ஏன்…?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

One Response to ஒரே நாளில் திரு.ஸ்டாலின் மற்றும் திருச்சி சிவா ஆகியோரின் எதிரெதிரான கருத்துகள் ….!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  ஸ்டாலின் அவர்களின் கோரிக்கை மனுவில் மூன்றாவதாக ஒரு கோரிக்கை இருந்ததாமே. அதை நீங்கள் ஏன் எழுதவில்லை. எனக்குக் கிடைத்த தகவல்படி,

  3. அல்லது தயவு செய்து என்னை முதலமைச்சர் ஆக்கிவிடுங்கள். அப்புறம் காங்கிரஸ் அரசுக்கு இருந்ததுபோல், வாஜ்பாய் தலைமையிலான பாஜகவுக்கு திமுக விசுவாசமாக இருந்ததுபோல், இப்போதும் விசுவாசமாக நான் உங்களுக்கு இருப்பேன்

  என்று இருந்ததாம். ஆனால் கடைசியில் பாஜகவுக்கு திமுக என்ற உமி இப்போது எதற்குத் தேவை, அதுதான் அதிமுக என்ற அரிசி இருக்கிறதே என்பதனால், அந்த பாயிண்டை எடுத்துவிட்டார்களாம்.

  ஆளுக்கேற்றவாறு, இடத்திற்கேற்றவாறு கோமாளி வேஷம் போட்டதனால்தானே இன்று திமுக மக்கள் மத்தியில் மதிப்பிழந்து இருக்கிறது. திமுக, புதுவையில் ஒரு நிலை, தமிழகத்தில் ஒரு நிலை, தங்கள் சொத்துக்களைக் குவித்துள்ள கர்னாடகாவில் ஒரு நிலை, பணத்தைக் கொள்ளையடிப்பதற்காக மத்திய அரசில் இருக்கும்போது ஒரு நிலை என்று இடத்திற்கேற்ற பேச்சுதானே அவர்களின் டிரேட் மார்க்.

  வெளியே வரும்போது புதுச்சட்டை, காரிலிருந்து இறங்கும்போது, ரெண்டு பட்டனைக் கழற்றிவிட்டு, சட்டையை சட்டசபையில் கிழித்துவிட்டார்கள் என்று கருணானிதி, ‘கொல்றாங்க’ பஞ்சப்பாட்டு பாடியதுபோல் பாடிவரும் ஸ்டாலினுக்கு எப்படி மக்கள் மத்தியில் மதிப்பு இருக்கும்? ஏதோ காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்ததால், 98 எம்.எல்.ஏக்கள் கிடைத்தனர். இல்லாவிட்டால் 40ஐத் தாண்டியிருக்கமுடியுமா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.