தமிழக அமைச்சர்கள் மீது, தேர்தல் கமிஷனின் உத்திரவுப்படி FIR பதியப்பட்டதா…???


சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் வைரக்கண்ணன் என்பவர்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தேர்தல்
கமிஷனிடம் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அதில்,
ஆர்.கே.நகர் தேர்தல் லஞ்ச ஊழல் விவகாரத்தில்
சம்பந்தப்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
உள்ளிட்ட எட்டு கேள்விகளை அவர் கேட்டிருந்தார்.

இதற்கு, “ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார்
தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி தினகரன்
மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி,
தங்கமணி, செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர் ஆகியோர் மீது
வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை
செய்துள்ளது” என்று பதில் வந்துள்ளது.

தேர்தல் கமிஷன், மேற்படி வழக்கறிஞருக்கு எழுதியுள்ள
கடிதத்தின் நகல் கீழே –

இதன்படி, முதல்வர் எடப்பாடி உள்ளிட்டோர் மீது வழக்கு
பதிவு செய்வதற்கான பரிந்துரையை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது தெரிய வருகிறது.

ஏப்ரல் 18-ந்தேதியே பிறப்பிக்கப்பட்டு விட்ட இந்த உத்திரவின்
மீது தமிழக தலைமை தேர்தல் அதிகாரியும்,
தலைமைச் செயலாளரும் எடுத்த மேல் நடவடிக்கைகள்
என்ன…? இந்திய தலைமை தேர்தல் கமிஷனரின்
உத்திரவுப்படி FIR பதியப்பட காவல் துறைக்கு உத்திரவு
பிறப்பிக்கப்பட்டதா…? FIR பதியப்பட்டு விட்டதா…? எப்போது…?

அதன் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் என்ன
என்பதை எல்லாம் தமிழக அரசு வெளிப்படையாக
தெரியப்படுத்த வேண்டும். தமிழகத்தில், எதிர்க்கட்சிகள் எல்லாம்
ஆழ்ந்த உறக்கத்தில் அல்லது இதைவிட வேறு முக்கியமான
வேலைகளில் ‘பிஸி’யாக இருப்பதால், பொதுமக்களே
இந்த கேள்விகளை கேட்க வேண்டிய அவசியம் உண்டாகி இருக்கிறது …!!!

லஞ்ச ஊழல் விவகாரங்கள் என்றால் – அதுவும் அமைச்சர்கள்
சம்பந்தப்பட்டது என்றால், தமிழக அரசு உடனுக்குடன்
disposal action எடுத்து விட்டிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

நம் கேள்விகள் எல்லாம், இரண்டு மாதங்கள் கடந்து விட்டனவே, தமிழக தலைமை தேர்தல் கமிஷனர் இதில் என்ன செய்திருக்கிறார்
அல்லது செய்யப்போகிறார் என்பது தான்…?

பொதுமக்களுக்கு, இது குறித்து விளக்கம் தெரிவிக்க வேண்டிய
கடமை தமிழக தேர்தல் கமிஷனுக்கு இருக்கிறது…

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to தமிழக அமைச்சர்கள் மீது, தேர்தல் கமிஷனின் உத்திரவுப்படி FIR பதியப்பட்டதா…???

 1. Ramesh சொல்கிறார்:

  Kavirimainthan Sir,

  You know nothing is going to change here.
  The whole system is corrupt. Even God cannot change these people.

  You are an Elderly person. This is Sunday.
  Atleast today you take some rest.
  watch tv. Have some entertainment.
  While I have lot of respects and appreciation for you,
  I also pity on you as all your efforts are seem to be futile exercise.
  I pray the Almighty to give you good health.

 2. தமிழன் சொல்கிறார்:

  அடடே… அட்வகேட் வைரக்கண்ணன் இப்போதுதான் வக்கீல் வேலை பார்க்க ஆரம்பித்திருக்கிறாரா? திருமங்கலம் இடைத்தேர்தல் நடந்தபோது பாவம்… பிறந்திருக்கமாட்டார் போலிருக்கிறது.

  தமிழ் நாட்டில் நடப்பது எல்லாமே அரசியல். யாருக்கும் நல்லது நடக்கவேண்டும் என்ற எண்ணம்லாம் கிடையாது. ஒண்ணு, காசு வாங்கிக்கிட்டு திமுக சார்பா வேலை செய்வார்கள் (இந்த SO CALLED பொதுமக்கள் சார்பான மனுக்கள் அளிப்பவர்கள்). நல்லவேளை, அதிமுகவில் ஆதிகாலத்தில் இருந்து இத்தகைய காசு வாங்கி நீதி நேர்மை பேசும் வக்கீல்கள், திமுகவைப்போல் இல்லை.

  மக்கள் இவர்கள் எல்லோரையும்விட CORRUPT. காசு கொடுக்காதீர்கள் என்று யார் சொல்கிறார்களோ அவர்களது கட்சிக்கு வாக்களிக்கமாட்டார்கள்.

  கண்ணை மூடிக்கிட்டு சொல்லலாம். இந்த அவல நிலைக்கு யார் காரணம் என்று. செயலற்ற கருணானிதியும் அவரது அடிப்பொடிகளும்தான்.

  • பிரசன்னா சொல்கிறார்:

   தமிழன்,

   திருமங்கலம் எப்படி இங்கே வந்தது ?
   திருமங்கலத்தைப் பற்றி பேசி இப்போதைய விஷயத்தை
   மறக்கடிக்க செய்யும் முயற்சியா ?
   இந்திய தேர்தல் கமிஷன் கொடுத்த உத்திரவை
   தமிழக தேர்தல் கமிஷனரும், தமிழக தலைமைச்செயலரும்
   நிறைவேற்றினார்களா இல்லையா ?
   இல்லை என்றால் ஏன் ? இது தானே கா.மைந்தனின் கேள்வி.
   நீங்கள் இந்த சப்ஜெக்டையே விட்டு வேறு எங்கோ சுற்றுவது ஏன் ? கருணாநிதி அவர்கள் கடந்த காலம். சசிகலா/தினகரன்
   குடும்பம் தான் நிகழ்காலம். நிகழ்காலத்தை குறித்து
   பேசுங்கள்.

   • கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

    தமிழன் கூறியதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.
    குரங்கை நினைக்காமல் மருந்து
    சாப்பிடச் சொன்னால் எப்படி
    நண்பரே.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s