அமைச்சர்கள் மீது FIR…ஆஆஆ …? நடக்குமா….?


இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தலமைச்செயலருக்கும்,
தமிழக தலைமை தேர்தல் ஆணையருக்கும், ஏப்ரல் -18ந்தேதி
எழுதியதாகச் சொல்லப்படும் கடிதத்தை பற்றிய விஷயமே,
செய்தியாளர்கள் சொல்லித்தான் தனக்கு தெரியும் என்றும்
அத்தகைய கடிதம் எதுவும் தன்னிடம் வரவில்லை என்றும்
சொல்லி விட்டார்…. முக்கியமானவர்.

இவர் இப்படி சொல்லி விட்டாரே…அடுத்து என்ன செய்வது….?
யாராவது தலைமை செயலரை பார்த்து கேட்க
வேண்டும்… அவர் என்ன சொல்லக்கூடும்…?

கடிதத்தை எழுதியது, அகில இந்திய தேர்தல் கமிஷன்.
முதலில் விலாசமிட்டிருப்பது தமிழக தேர்தல் கமிஷனுக்கு.
எனவே,அந்த கடிதத்தின் மீது மேல் நடவடிக்கை எடுக்க
வேண்டியது தமிழக தலைமை தேர்தல் கமிஷனர் தான்.
எங்களுக்கு, தகவலுக்காகவே copy அனுப்பப்பட்டிருக்கிறது…!!!

இவர் இப்படி சொல்லி விட்டால் அடுத்து என்ன செய்வது…?

அடுத்து யாராவது தமிழக தலைமை தேர்தல் கமிஷனரை
பார்த்து கேட்க வேண்டும்… அவர் என்ன சொல்லக்கூடும்…?
இது குறித்து, எடுக்க வேண்டிய மேல் நடவடிக்கை குறித்து,
தமிழக அரசிடமிருந்து தகவலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இவரும் இப்படி சொல்லி விட்டால்….?

அடுத்து இந்திய தலைமை தேர்தல் கமிஷனை பார்த்து
என்ன மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேட்க
வேண்டும்…

அவர்கள் என்ன சொல்லக்கூடும்….?

உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்திரவு போட்டு விட்டோம்.
இப்போது ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக தேர்தல் கமிஷன்
“பிஸி” யாக இருப்பதால், அதன் பிறகு தான் இந்த
விஷயத்தில் “கவனம்” செலுத்த வேண்டும்…!!!

மத்தியில் ஆளும் கட்சிக்கு ஜனாதிபதி தேர்தல் மற்ற
அனைத்தையும் விட முக்கியமானது. தமிழக ஆளும்
கட்சியின் அனைத்து பிரிவு எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுக்களும்
அவர்களுக்கு மிக மிக அவசியம்….!!! ( gold தமிழ்ச்செல்வன்
உட்பட….!!!)

அப்படி, இப்படியென்று இதற்குள் ஜூலை 17
வந்து விடாது….?

அதற்கப்புறம்…..? அம்புட்டு தான். மடமடவென்று
முடிவுக்கு வந்து விடும் விஷயம்…

மாநிலத்தில் இருக்கிற ஆளும்கட்சி அடிமைகளில், எந்த
அடிமை தனக்கு அதிக உபயோகமாக இருக்குமென்று மத்திய
ஆளும் கட்சி தீர்மானிக்க வேண்டும்.

அதற்கப்புறம்…?

வேகமாக…. மிக வேகமாக நகரும் காட்சிகள்….!!!!
பொம்மலாட்டம் தான்….
நிறைய வேடிக்கைகள் நிகழும்…!!!
ஆட்டம் முடிவுக்கு வரும்…!!!

இடையில் யாராவது கோர்ட்டுக்கு போனால்…?
போகட்டுமே… கோர்ட்டும், முதலில் சம்பந்தப்பட்ட
அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்புங்கள் என்று கூறி
ஒரு மூன்று நான்கு வாரங்கள் அவகாசம் கொடுத்தால் –
தீர்ந்தது…………………………………( ஜனநாயகம்…!!!)

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to அமைச்சர்கள் மீது FIR…ஆஆஆ …? நடக்குமா….?

 1. புதியவன் சொல்கிறார்:

  ஐயையோ… நீங்கள் அரசு வேலை பார்த்தவரா? வேலையில் சேரும்போதே எப்படி எப்படி நழுவலாம்னு சொல்லிக்கொடுத்திடுராங்களா? அல்லது இப்போது நீங்கள் எல்லோருக்கும் ஐடியா கொடுக்குறீங்களா?

  நீங்கள் சொல்வதுபோல் நடந்தால், யாரும் சட்டப்படி குறை சொல்லமுடியாது. அவ்வளவுதான். பத்திரிகைகள் இந்த ஒரு நாள் செய்தியைப் போட்டுவிட்டு அடுத்த புதிய செய்திக்காகக் காத்திருக்கவேண்டியதுதான்.

  இதில்தான் காமராஜ் போன்ற மக்கள் தலைவர்கள் மாறுபடுகிறார்கள். அவர்கள் “சட்டப்படி” என்று சொல்லி தார்மீகத்தைத் தொலைக்கமாட்டார்கள். அவர்களுக்கு தார்மீக நெறிதான் முக்கியம், சட்டம் வெறும் GUIDELINESதான். ஆனால் இப்போ இருக்கிற அதிகாரிகள், அரசியல்வாதிகள் எல்லோருக்குமே சட்டம் என்பது, எப்படி எஸ்கேப் ஆகலாம் என்பதற்கான GUIDELINES. தார்மீக நெறி-அப்படீன்னா என்ன?

 2. தமிழன் சொல்கிறார்:

  மிகுந்த வருத்தம் தரும் செய்தி… ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு. அத்வானி a deserving candidate. அவர் நாட்டுப்பற்று உள்ளவர். கட்சிக்காகப் பாடுபட்டவர். அவருக்கு கௌரவம் தராதது மன வருத்தம்தான்.

  காங்கிரஸ் கட்சி, அதாவது சோனியா காந்தி, எப்படி அலட்சியமாக நம்ம Institutionஐ அவமதிக்கும் விதமாக, பிரதீபா பாட்டீலைத் தேர்ந்தெடுத்ததோ அதுபோல்தான் மோடி அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளதும் என்று தோன்றுகிறது. (பிரதீபா பாட்டீல் UNLIKE KALAAMji, இருக்கிற சேர்களையெல்லாம் பதவி விட்டுட்டுப் போகும்போது கொண்டுபோக முடியுமா என்று இழுத்துப்பார்த்தாராம் :)). EXAGGERATING.)

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சொல்வதை எல்லாம் ஏனென்று கேட்காமல் அப்படியே
   செய்பவராக, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக,
   ஆர்.எஸ்.எஸ்.ஐயும் திருப்திபடுத்தும் விதமாக வேறு
   யாரும் கிடைத்திருந்தால், இப்போதையவருக்கு இந்த சான்ஸ்
   கிடைத்திருக்காது….!

   இந்தியாவில் “ஜனாதிபதி” ஆவதற்கு முக்கிய தகுதி –
   என்னவென்று ஏற்கெனவே சோனியாஜி செய்து காட்டினார்…

   அதை இப்போது மோடிஜி இன்னும் பலமான அடித்தளத்துடன்
   செய்து காட்டுகிறார்.

   வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு எதாவது பொறுப்பு
   நமக்கு இருக்கிறதா என்ன…?

 3. selvarajan சொல்கிறார்:

  அமைச்சர்கள் மீது மட்டும் எப்.ஐ ஆர் … போட்டால் போதாது போல தோன்றுகிறது …. கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக — பேரத்தில் பல தொடர்புகள் — ஆளாளுக்கு அகப்பட்டதை சுருட்டும் போக்கில் ஏகப்பட்ட தகிடு தத்தங்கள் நடந்துள்ளது போல தெரிகிறது …..

  ஜெயலலிதா என்கிற ஒரு ஆளுமை மறைந்ததினால் இன்று அந்த கட்சியின் போக்கு சிரிப்பாய் சிரிக்கிறது … அவர் இருந்தவரை ஒருவர் தவறு செய்தார் என்ற செய்தி ஊடகங்களுக்கு செல்வதற்கு முன்பே ” அவர் பதவி ” பறிக்கப்பட்டு — விசாரணைக்கு உடபடுத்தப்பட்டது — கைது செய்யப்பட்டது போன்றவை துரித கதியில் நடந்தேறும் … ஆனால் தற்போது கேள்விகளுக்கும் — கேலிகளுக்கும் ஆளாகி திக்கு முக்காடுகின்ற கழிசடைகளை என்னவென்று அழைப்பது ….

  ஒரு முழுமையான ” கூவத்துர் நிலவரம் ” பற்றி விசாரணை நடத்தினால் — பல விவரங்கள் வெளிச்சத்திற்கு வரும் என்பதற்கு சான்றாக ஒரு செய்தி தங்களின் பார்வைக்கு : — Posted Date : 15:50 (19/06/2017) Last updated : 18:00 (19/06/2017)
  // “நடந்தது எம்எல்ஏ விற்பனையே அல்ல… சதுரங்க வேட்டை!’’ #MLAsForSale பின்னணியை விவரிக்கும் ஆதம்பாவா // http://www.vikatan.com/news/tamilnadu/92748-adham-bava-explains-about-mlas-for-sale-issue.html?utm_source=newsletter&utm_medium=content&utm_campaign=12432

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   இந்த விவகாரங்களைப் பற்றிய முழு விவரமும் என்றைக்காவது
   வெளிவரும் என்கிற நம்பிக்கை யாருக்காவது இருக்கிறதா…?

   சுயநலவாத கூட்டங்கள்…
   இவர்கள் அத்தனை பேரையும் எப்படியாவது
   ஒரே இடத்தில் கூட வைத்து………………………………..
   (பாராட்டு விழா நடத்த வேண்டுமென்று கூறுகிறேன்… அவ்வளவு தான்…)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.