அந்த ” t ” யை மட்டும் நீக்கி விட்டால் போதும்….!!!

என்னால் அதைச்செய்ய முடியாது என்று நினைப்பவர்கள்
அந்த ” t ” யை மட்டும் நீக்கி விடுங்கள் போதும்….
மற்றவை தானே நிகழும்…!!!


Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to அந்த ” t ” யை மட்டும் நீக்கி விட்டால் போதும்….!!!

 1. இளங்கோ சொல்கிறார்:

  அவ்வளவு தானே சார்
  இவ்வளவெல்லாம் செஞ்சோம்
  இதைச் செய்ய மாட்டோமா- செய்தால் போச்சு 🙂

 2. புதியவன் சொல்கிறார்:

  வெட்கம் கெட்டு, தன் குடும்பத்துக்காக மக்கள் பணத்தைச் சுரண்டி ஊழலில் கருணானிதி குடும்பத்தைப் போல் திகழ முடியுமா? I CAN’T DO IT.

  எதையாவது செய்து திமுக தலைமைப் பதவியில் அமர்ந்துவிடவேண்டும் என்று 5 வருடங்களுக்குமேல் கடுமையாக முயற்சி செய்து, கடைசியில் செயல் தலைவராக மட்டுமே ஆக முடிந்த ஸ்டாலின் நடத்துவதுபோல் பற்பல கோமாளி நாடகங்கள் நடத்தி, மக்கள் ஆதரவை விட, நாடகங்கள் முதலமைச்சராக்கிவிடும் என்று நம்பி குட்டிக்கரணங்கள் போட்டு முயற்சி செய்யமுடியுமா? I CAN’T DO IT.

  எல்லா ஊழல் பணத்தையும் தானே கையாண்டு, கட்சி நிதி, அறக்கட்டளை போன்ற எல்லாவற்றிலும் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களையே போட்டு எல்லாப் பணத்தையும் சுருட்டி, எதை எதை கட்சி சார்பாக எதிர்க்கிறோமோ அதற்கு எதிராக தாங்களே நடந்துகொண்டு (ஹிந்தி படிப்பது, கூத்தாடிகள், தமிழே உயர்வு என்று சொல்லி மெட்ரிக் பள்ளி நடத்துவது போன்று பல) வெளியே, தான் மக்களுக்காக உழைப்பவன், நேர்மையானவன் என்று மானம் சூடு சுரணை இல்லாமல் பேச முடியுமா? I CAN’T DO IT.

  நாங்கள் வன்னியர் கட்சி அல்ல, மக்களுக்கான கட்சி, தாழ்த்தப்பட்டவருக்கான கட்சி என்று பேசிக்கொண்டே, தன் குடும்ப உறுப்பினர்களை அறக்கட்டளையில் வைத்துக்கொண்டு, ராமதாஸ்போல், ‘வன்னியர்களுக்கான சட்டக்கல்லூரியை அனுமதிக்காத அதிமுகவை விட்டு எல்லா வன்னியர்களும் வெளியேறி எங்களுடன் சேரவேண்டும்’ என்று அப்பட்டமாக ஜாதிக்கட்சி நடத்தி சமூகத்தை இன்னும் பிளவுபடுத்தமுடியுமா? I CAN’T DO IT.

  4 வருட எம்.எல்.ஏ பதவிக்காக, திருட்டுக் கும்பல் என்று அறியப்பட்ட மன்னார்குடி கும்பலுக்கு ஜால்ரா போட்டு, தனக்கு வாழ்வு தந்த ஜெ.வை மறந்துவிட்டு, காசைச் சுருட்ட முடியுமா? I CAN’T DO IT.

  ஒன்றுமேயில்லாமல் இருந்த தன்னை அரசியலில் ஒரு அடையாளம் கொடுத்த ஜெ.வை, அவர் மறைந்தவுடன் மறந்துவிட்டு, ‘சின்னம்மா இல்லையேல் ஜெ. கிடையாது’ என்று சி.ஆர்.சரஸ்வதி, வளர்மதி போன்ற மதிகெட்டவர்களைப்போல் நிறம் மாற முடியுமா? I CAN’T DO IT.

  ஆளுங்கட்சியாக இருந்தும், ஆளுங்கட்சி ஆதரவில் வெற்றி பெற்றும், பணம் வாங்கிக்கொண்டு வெளிநடப்பு செய்யும் வெட்கம் கெட்ட அரசியல்வாதி என்று பெயர் எடுக்க முடியுமா? I CAN’T DO IT.

  இதையா சார் சொல்றீங்க?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   உங்கள் பட்டியல் இன்னும் முடியவில்லை என்றே நினைக்கிறேன்…
   மூச்சு வாங்குகிறதா… கவலை வேண்டாம் .. அடுத்த பின்னூட்டத்தில்
   பார்த்துக் கொள்ளலாம்..

   ஒரு வெட்கங்கெட்ட மாநிலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம்.
   தவறு செய்பவர்களுக்கு வெட்கமில்லை.
   பார்த்துக் கொண்டிருப்பவர்களாகிய நமக்கு தான் வெட்கமாக இருக்கிறது.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.