அதீத தன்னம்பிக்கையா, அநியாய ஆசையா…?

இன்று தமிழக அரசின் சார்பில் முக்கிய செய்தித்தாள்கள்
அனைத்திலும் ஒரு முழுபக்க விளம்பரம் வெளிவந்திருக்கிறது.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு
விழா கொண்டாட்டங்கள் பற்றிய அறிவிப்பு அது…

எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெறுவது
குறித்து நமக்கு மிக்க மகிழ்ச்சி தான்.

இந்த ஜூன் மாதம் துவங்கி, அடுத்த ஆண்டு ஜனவரி வரை
நடைபெறும் இந்த விழாக்கள் அனைத்தும் இப்போதைய
முதலமைச்சர் எடப்பாடி அவர்களின் தலைமையில் தான்
நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எடப்பாடி அவர்கள் அடுத்த ஜனவரி வரை முதலமைச்சர்
பதவியில் நிச்சயம் தொடர்வார் என்பதை அறிவிப்பது தான்
இந்த விளம்பரத்தின் முக்கிய நோக்கம் என்று கூட எடுத்துக்
கொள்ளலாம்.

ஆனால் ……. ஒரு சந்தேகம் –

அடுத்த ஜனவரி வரை தாம் முதலமைச்சராக நீடிப்போம்
என்கிற அவரது இந்த அறிவிப்பு அவரது அசாத்திய
தன்னம்பிக்கையை குறிக்கிறதா அல்லது அநியாய ஆசையை
வெளிப்படுத்துகிறதா…?

இதே அரசு அடுத்த ஆண்டு வரை நீடிக்க வேண்டும் என்று
வாழ்த்த நமக்கு மனம் இல்லை. ஆனால், அவரது
தன்னம்பிக்கையை பாராட்ட நமது மனதில் நிச்சயம் நிறைய
இடம் உண்டு…….

பாராட்டுவோம்….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to அதீத தன்னம்பிக்கையா, அநியாய ஆசையா…?

 1. தமிழன் சொல்கிறார்:

  முதலமைச்சர் என்ற பதவியில் யார் வேண்டுமானாலும் உட்கார்ந்துவிடலாம் (விதியும் வாய்ப்பும் இருந்தால்). ஆனால் ஆளுமைகளாக வரலாறு நினைவுகூறும் பெயர்களாக நிலைப்பது எல்லோருக்கும் கிடைக்காது. தமிழகத்திலேயே, காமராசர், கருணானிதி, எம்ஜியார், ஜெயலலிதா போன்றோர்தான் மக்கள் மனதில் உடனே வரும் பெயர்களாக (நல்லதற்கோ கெட்டதற்கோ. காமராசர்-கல்வி, கருணானிதி-ஊழல் குடும்பக் கொள்ளை, எம்ஜியார்-எளிய மக்களிடம் அன்பு, ஜெ-தைரியசாலி) அமைகிறது. இனி வருங்காலத்தில் அத்தகைய தலைவர் எப்போது உருவாகப்போகிறாரோ தெரியவில்லை. கண்ணுக்கு எட்டின காலம்வரை வேறு யாரும் உதிக்கப்போவதாகப் படவில்லை.

  முதலாளி இல்லாதபோது அதிகாரி கடையை நடத்துவதில்லையா. எடப்பாடியும் அந்த அதிகாரி போல்தான். எடப்பாடிக்குத் தெரியும், பாராளுமன்ற தேர்தல்வரை, சுற்றியிருக்கும் பாம்புகள் சீறும், கடிப்பதுபோல் நடிக்கும், ஆவேசம் காட்டும் ஆனால் கடிக்காது என்று.

  இடுகைக்குத் தொடர்பான செய்தி. உச்ச நீதிமன்றம், செய்தித்தாள், தொலைக்காட்சி அரசு விளம்பரங்களை முற்றிலுமாகத் தடை செய்யவேண்டும். சமூகத் தளங்களில் பைசா செலவில்லாதவகையில் எல்லா விளம்பரங்களும் வெளியிடப்படவேண்டும் என்று சொல்லவேண்டும். அரசின் இந்த விளம்பரங்களால், ஒவ்வொரு பத்திரிகையும் கல்லா கட்டியிருக்கும், அரசுக்கு 20 லட்சமாவது செலவழிந்திருக்கும். அதற்குப் பதில் அந்த 20 லட்சத்தில், 200 ஏழை மாணவர்களுக்கு (பொருளாதாரத்தில்) பொறியியலோ அல்லது மற்ற கல்விச் செலவுக்கு 10,000 ரூ கொடுத்திருக்கலாம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   32 மாவட்டங்களிலும், அடுத்த 6 மாதங்களுக்கு,
   அரசு சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள்
   என்று சொல்லி கோடிக்கணக்கில் கொள்ளை – இன்றே துவங்கி விட்டது.
   தொலைக்காட்சிகளில் பார்த்தீர்களா – ஒரு 30 திருடர்கள் தங்களுக்கு
   தாங்களே மாலை சூட்டிக்கொண்டு, மதுரையில் கால்கோள் விழா நடத்தியதை…!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • தமிழன் சொல்கிறார்:

    ஜெ. மறைவுக்கு முன், சி.ஆர்.சரஸ்வதி போன்றோர் அம்மா உப்புமா சாப்பிட்டார்கள், நூடுல்ஸ் தயார் பண்ணினார்கள் என்று சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் மறைவுக்குப் பின், ‘சின்னம்மாதான் ஜெ.வின் வளர்ச்சிக்குக் காரணம்’ என்று நாக்கைப் புரட்டிப்போட்டதும், ‘புரட்சித் தளபதி தினகரன்’ என்று நாஞ்சில் நாக்கால் காலை வருட ஆரம்பித்ததும், இந்தச் சேனல்களுக்கெல்லாம் ஒரு கும்பிடு போட்டவன், எப்பயாச்சும் சிரிப்பொலி, திரை நகைச்சுவை இருந்தால் ஆதித்யா, இல்லைனா நெட் ஜியோ, டிஸ்கவரி சேனலே துணை நமக்கு.

    இதனால் என்ன பயன் என்றால், இரத்தக் கொதிப்பு குறைய ஆரம்பித்துவிட்டது 🙂

    தெர்மொகோல் போட்டு சூரியனை மறைக்க முயற்சித்த விஞ்ஞானிகள் (15 லட்சம் சுருட்டுவதற்காக) வாழும் ஊரல்லவா. எம்ஜியாரைப் பற்றித் தெரியாதவர்களெல்லாம் இனி ‘நூற்றாண்டு விழா’ சாக்கில் கல்லா கட்ட ஆரம்பித்துவிடுவார்கள். அனேகமாக தினகரனுக்கும் எம்ஜியார் மேக்கப் ஆரம்பித்துவிடும்.

    பார்த்தீனியம் செடிகளான இரண்டு குடும்பங்கள் தமிழ்நாட்டிலிருந்து மறையும்போதுதான் (வேறு யார்.. கருணானிதி, சசிகலா/நடராஜன் கும்பல்) தமிழனுக்கு நல்ல நேரம் ஆரம்பிக்கும்.

 2. Lakshmi Mohan சொல்கிறார்:

  அன்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,

  நல்ல விளையாட்டு வீரர்கள் இல்லாத கிரிக்கெட் மேட்ச் போன்று தற்போது தமிழக அரசியல் களம் இருக்கின்றது.
  கலைஞரும் எம் ஜி ஆரும் ஆடிய அரசியல் போட்டிகளை பார்த்த நமக்கு இன்று சுவாரசியம் இல்லாமல் போய் விட்டது.
  ஜெவும் கூட கலைஞரை எதிர் கொண்டு அரசியல் செய்தது வியக்கத்தக்கது.

  காலம் செய்கின்ற கோலத்தை நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது.
  ஜெவின் மரணத்திற்குப் பின்னர் கலைஞரின் உடல் நிலை நலிந்ததும், அரசியல் வானம் வெளிறிப் போய்க் கிடப்பதும்
  என் போன்ற அரசியல் ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றமாகப் போய் விட்டது.சோ அவர்களின் மறைவும் கூட (கிரிக்கெட் மேட்ச் அம்பயர் போன்று ) இதற்கு கூடுதல் காரணங்கள்..
  ஓ பி எஸ் முதல்வராகத் தொடர்ந்திருந்தால் சற்றேனும் நன்றாக இருந்திருக்கும்.

  என்ன செய்வது ?
  உன்னை சொல்லிக் குற்றமில்லை ..
  என்னை சொல்லிக் குற்றமில்லை ..
  காலம் செய்த கோலமடி..
  கடவுள் செய்த குற்றமடி..

  என்று மனதை தேற்றிக்கொள்ள வேண்டியதுதான் போல…
  -இலக்குமி மோகன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   இலக்குமி மோகன்,

   இதெல்லாமே இறுதியில் ஒரு நல்ல முடிவை உண்டு பண்ணும்
   என்று என் உள்மனம் சொல்கிறது. இன்னும் கொஞ்ச நாட்கள்
   நாம் தான் பொறுமையோடு காத்திருக்க வேண்டும்… பார்ப்போம்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. Rajamanickam Veera சொல்கிறார்:

  எந்த வகையில் ஆனாலும் எம் ஜி ஆரின் இந்த நூற்றாண்டு விழாவை கொண்டாட வேண்டும். தமிழக மக்களுக்கு மனதார நன்மை செய்தவர், ஈழத்திலும் தமிழர்களின் துயர் துடைக்க முன் நின்றவர் என்ற வகையில் மிகவும் போற்றுதலுக்குரியவர். ஆனாலும் விழா முக்கியத்துவம் வாய்ந்தது, நிச்சயம் கொண்டாடப்பட வேண்டிய மக்கள் விழா. காமை சார் உங்களுக்கு என் தனிப்பட்ட கேள்வி, தமிழகத்தில் பாஜக பொறுப்புக்கு வர தங்களின் ஆலோசனைகள் என்ன? என்ன என்ன விஷயங்களில் மாற்றம் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? வாய்ப்பிருந்தால் தனிப்பட்ட முறையிலும் எழுதுங்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ராஜமாணிக்கம் வீரா,

   நான் இதுகுறித்து இப்போது விவரமாக எழுத முடியாத நிலையில்
   இருக்கிறேன்.

   சுருக்கமாக ஒன்றிரண்டு வார்த்தைகளில் –

   மற்ற கட்சிகளை பயமுருத்தியோ, உடைத்தோ, தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்திக்கொள்ள முடியும் என்று நினைப்பதை முதலில் அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

   அரசியலில் ஆர்வம் கொண்ட உங்களுக்கு தமிழகத்தின்
   தலையாய பிரச்சினைகள் என்ன என்ன என்பது தெரிந்திருக்கும்.

   இவற்றில் எதிலுமே மத்திய அரசு இதுவரை எந்த விதத்திலும்
   உதவவில்லை… அக்கறை காட்டவில்லை என்பது மட்டுமல்ல –
   தமிழக நலன்களுக்கு விரோதமாகவே பல முடிவுகளை எடுத்திருக்கிறார்கள்.

   தமிழக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க, உண்மையிலேயே
   பாஜக முயற்சி எடுத்துக் கொண்டால், சிலவற்றை செயலிலும் காட்டினால், தமிழக மக்களின் மனதில் பாஜக இடம் பெற வாய்ப்புண்டு…

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.