பாலாற்றில் என்ன செய்ய முடியும்…? என்னென்னவோ செய்யலாமே..!!!


பாலாறு கர்நாடகாவில் நந்தி மலையில் உற்பத்தியாகி,
93 கிலோமீட்டர் கர்நாடகா மாநிலத்தில் ஓடி, அதன் பின்
ஆந்திர மாநிலத்திற்குள் நுழைந்து, வெறும் 33 கி.மீ.
மட்டும் ஆந்திரத்திற்குள் ஓடி, பின் தமிழ்நாட்டிற்குள்
நுழைந்து – 222 கிலோ மீட்டர் தூரம் ஓடி, சென்னை /
செங்கல்பட்டு அருகே வங்கக்கடலில் கலக்கிறது.

ஆந்திராவில் தடுப்பணை கட்டி விட்டார்கள் என்று திரும்ப
திரும்ப புலம்புவதில் எந்த பயனுமில்லை. கட்டப்பட்ட
தடுப்பணை எக்காரணம் கொண்டும் இடிக்கப்பட

போவதில்லை. எனவே, அதை ஜீரணித்துக் கொண்டு
மேற்கொண்டு நாம் என்ன செய்யலாம் என்பதை யோசிப்பதே
புத்திசாலித்தனம்…. மீதியெல்லாம் வெறும் அரசியல்…!!!

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஒரு
ஆய்வு அறிக்கை தமிழக அரசால் கிடப்பில் போடப்பட்டிருப்பது
தெரிய வருகிறது. நீர் மேம்பாட்டுக்காக, தமிழக அரசு, உலக
வங்கியின் உதவியை நாடியபோது, அதன் சார்பாக
ஆய்வுகளை மேற்கொண்ட நிபுணர்கள், சென்னைக்கு தெற்கே,
பாலாற்று நிலத்தடி நீர் கசிந்து வீணாக கடலுக்கு போய்க்
கொண்டிருப்பதை கண்டறிந்தனர். ( பாலாற்றில், மேற்பரப்பில் தான் நீரோட்டம் இல்லையே தவிர, நிலத்தடியில் நிறைய நீர்
கசிந்து கடலுக்கு போய்க்கோண்டிருப்பது இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது ..)

எனவே, பாலாறு, கடலில் கலக்கும் இடத்திற்கு முன்னரே,
சதுரங்கப்பட்டினத்தில், படுகைக்கு கீழே 50 அடி ஆழம்
அளவிற்கு தோண்டி பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி
நிலத்தடி நீரைச் சேமித்து வைக்க வேண்டும் என்று நிபுணர்கள்
அறிக்கை அளித்தனர்.

ஆனால், அடுத்த மழைக்காலம் வந்து, அப்போதைய தேவை
தீர்ந்து விட்டதால், இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு
விட்டது. 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், அரசு மட்டத்தில்
யாருக்கும் இதன் நினைவு வந்ததாகத் தெரியவில்லை.

இப்போது சதுரங்க பட்டினத்தில் அந்த 50 அடி ஆழ
தடுப்பணையை கட்டினால், மழைக்காலத்தில் வரும் நீரும்,
கூடவே நிலத்தடி நீரும் கடலில் சென்று கலப்பது
தடுக்கப்படும். பாலாற்றின் இரு கரைகளையொட்டியும்
குறைந்தபட்சம் 8-10 கிலோ மீட்டரில் உள்ள ஊர்கள்
அனைத்திலும் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்பதோடு
மட்டும் அல்லாமல்,

சென்னைக்கும் குடிநீர் சப்ளை செய்ய பெரிய அளவில்
உதவியாக இருக்கும்.

அதோடு நில்லாமல் பாலாறு தமிழகத்தில் நுழைந்ததிலிருந்து
கடலில் கலக்கும் வரை ஓடும் வழி நெடுக ஒவ்வொரு
30-40 கிலோமீட்டருக்கும் ஒன்றாக தடுப்பணைகள் கட்டினால்,
அது போகும் பாதை முழுவதும், பாசனத்திற்கும், குடிநீருக்கும்
உதவியாக இருக்கும்.

பாலாற்றில் வருடம் முழுவதும் நீர் ஓடுவதில்லை
என்றாலும் கூட, ஆந்திராவிலிருந்து தண்ணீர் கொஞ்சம் கூட
வரவில்லை என்றாலும் கூட,

தமிழகத்தில் ஓடும் 222 கி.மீ. தூரத்துக்குள்ளாக – வடகிழக்கு
பருவ மழைக்காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர்
மாதங்களில் பெய்யும் மழையின் நீர் ஓடிக்கொண்டு தான்
இருக்கிறது – சில சமயம் அதிகமாகவும், சில சமயம்
கொஞ்சமாகவும்… !

நிறைய தடுப்பணைகள் கட்டப்படுவதன் மூலம் இந்த நீர், நிலத்திற்கு மேலும், நிலத்தடியிலும் சேமிக்கப்படும். இது ஆற்றின் இரண்டு கரைகளிலும் உள்ள ஊர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

துரதிருஷ்டவசமாக, தடுப்பணைகளின் அவசியத்தையும்,
அதன் பயன்களையும் தமிழகம் இன்னும் உணரவில்லை.

மிகக் குறைந்த செலவில் தடுப்பணைகளை அமைத்து
விடலாம். இதற்கு அரசாங்கம் பெரிய திட்டங்கள் எல்லாம்
போட்டு நிதி ஒதுக்கீடு செய்வதெல்லாம் அவசியமே இல்லை.
ஆற்றங்கரையில் உள்ள சில நகராட்சிகளை ஒருங்கிணைத்து
இதனை சுலபமாக செய்து விடலாம்….

செய்வார்களா…? இன்றில்லா விட்டாலும் நாளையாவது –
செய்வார்கள் என்று நம்புவோம்…!!!

——————————————-

பின் குறிப்பு –

நான் இந்த இடுகையை நேற்றே எழுதி விட்டேன்.
இன்று பதிவில் இடும் சமயத்தில், தமிழ்நாட்டில்
நிறைய தடுப்பணைகள் கட்டப்படும் என்று
அமைச்சர் அறிவித்திருப்பதாக செய்தி வருகிறது.
எழுதிய நேரம் நல்ல நேரம் தான் என்று மகிழ்ச்சியாக
இருக்கிறது…. இந்த திட்டங்களில் பாலாறும்
சேர்க்கப்பட்டால், மிக்க மகிழ்ச்சி…!!!

ஏற்கெனவே எழுதிய இடுகையை மாற்றம் செய்யாமலே
பதிவிட்டிருக்கிறேன்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to பாலாற்றில் என்ன செய்ய முடியும்…? என்னென்னவோ செய்யலாமே..!!!

 1. இளங்கோ சொல்கிறார்:

  Super Sir. உங்கள் ஆலோசனைகளை தமிழக அரசுக்கும்
  அனுப்பி வையுங்களேன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி இளங்கோ.
   சில சமயம் எனக்கே கூட இப்படி தோன்றும்.
   அந்த மாதிரி சமயங்களில் சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு
   ஏற்கெனவே அனுப்பிக்கொண்டு தான் இருக்கிறேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.