ஜிஎஸ்டி -க்கு எதிராக கொ(கு)திக்கிறார் டாக்டர் சு.சுவாமி …!!!


பாஜக வின் மூத்த தலைவர்களில் ஒருவர் –
பாஜக சார்பாக மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்…
அடிக்கடி எதாவது அதிரடி நிகழ்த்திக்கொண்டே இருப்பவர் –

ஆனாலும், பாஜகவில் இவரை மதிப்பவர்கள் தான்
யாருமில்லை. விஸ்வ ஹிந்து பரீஷத்’தில் நமது
நித்யானந்தாவுக்கு இருப்பது போல் இவருக்கும் சில
சிஷ்யகோடிகள் இருக்கிறார்கள். டாக்டர் சுவாமி என்று
பெயரைக் கேட்டதுமே புளகாங்கிதம் அடைந்து விடுவார்கள்…!
அவர்களை வைத்துக் கொண்டு இவரும் பெரிய பிஸ்தாவாக
தன்னை காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்.

தொடர்ந்து நிதியமைச்சகத்தை பற்றி மோடிஜிக்கு புகார் மனு
அனுப்பிக்கொண்டே இருக்கிறார். மோடிஜியின் அலுவலகத்தில்
அதற்கு என்ன ட்ரீட்மெண்ட் கொடுக்கப்படுகிறது என்பது
யாருக்கும் தெரியவில்லை. இவரும் நிறுத்துவதாக இல்லை.

லேடஸ்ட் …..

ஜி.எஸ்.டி.யை அமலுக்கு கொண்டு வருவதை தனது அரசின் மிகப்பெரிய சாதனையாக நினைக்கிறார் மோடிஜி.. எனவே, அதனை விமரிசையாக,

ஜூன் 30 நள்ளிரவு 12 மணிக்கு (ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வருகிறது ) ஒரு சிறப்பு பாராளுமன்ற கூட்டத்தை கூட்டி, அதில் பிரதமர் மோடிஜியும், ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியும் சேர்ந்து நாட்டுக்கு அர்ப்பணிப்பு செய்ய

ஏற்பாடாகிறது. இதற்கான பலத்த விளம்பரங்களுக்கும் ஏற்பாடு
செய்யப்பட்டிருக்கிறது….

இந்த சமயத்தில் போய் – வேண்டாத சட்டப்பிரச்சினைகளை
கிளறி பயம் காட்டுகிறார் பேரறிஞர் சு.சுவாமி. இது தொடர்பான
அவரது ட்வீட் செய்தியை கீழே பார்க்கலாம்.

 

 

இத்தோடு நிற்கவில்லை. வேண்டுமென்றே இந்து மத
அபிமானிகளை தூண்டி விடுகிறார். சர்ச்சுக்கும், மசூதிக்கும்
ஜிஎஸ்டி இல்லை… ஆனால் கோவில்களுக்கு மட்டும் உண்டு
என்று கிளப்பி விடுகிறார்… கீழே ட்விட்டரை பாருங்களேன்…

 

 

பூஜை சம்பந்தமான பொருட்களுக்கு, அது எந்த மதத்துக்கு
உரியதாக இருந்தாலும் சரி – ஜிஎஸ்டி யிலிருந்து விலக்கு
அளிக்கப்பட்டிருக்கிறது. அது போலவே லிக்கர் மற்றும்
பெட்ரோலியம் பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பினுக்குள்
கொண்டு வரப்படவில்லை. இந்த பொருட்களுக்கு
வரி விதிக்கும் அதிகாரம் தொடர்ந்து மாநிலங்களிடையேயே
இருக்கும். இதெல்லாம் ஏற்கெனவே ஜிஎஸ்டி கூட்டங்களில்
விவாதிக்கப்பட்டு செய்தியாகவும் வெளிவந்து விட்டன.
இது பேரறிஞர் சு.சுவாமிக்கு தெரியாமலா இருக்கும்….?
இருந்தும் வேண்டுமென்றே தூண்டி விடப்பார்க்கிறார்…!!!

பாஜகவினரிடம் அவருக்கிருந்த கொஞ்ச நஞ்ச
மரியாதையையும் இந்த உத்தம-வில்லன் – படிப்படியாக,
தன் செயல்களின் மூலம் இழந்து வருகிறார் என்று தான்
சொல்ல வேண்டும்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

One Response to ஜிஎஸ்டி -க்கு எதிராக கொ(கு)திக்கிறார் டாக்டர் சு.சுவாமி …!!!

  1. சுவாமி ரசிகன் சொல்கிறார்:

    ஐயோ பாவம் சுப்ரமணிய சுவாமி. ‘கழுதை தேஞ்சு கட்டெறும்பாயிற்று’ பழமொழியை இவருக்காக, ‘குன்று தேஞ்சு குட்டிச்சுவராயிற்று’ என்று வேண்டுமானால் சொல்லலாம்.

    எதிர்க்கவேண்டும், அதுவும் கூட இருந்தே எதிர்க்கவேண்டும் என்று தொடர்ந்து செய்பவர்கள் மரியாதை இழக்கத்தான் செய்வார்கள். இனி இவருக்கு எந்த அரசியல் வாய்ப்பும் கிடைக்காது. பாவம்தான். என்ன செய்ய. எங்க பாய்வார்னு தெரியாம எல்லா சைடும் பாஞ்சு, நகைக்கும்படியான ட்வீட்டுகளை இட்டால் எப்படி மரியாதை இருக்கும்?

    சு.சுவாமி எப்போதும் கட்டுச்சோத்தில் கட்டிய பெருச்சாளி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.