திரு.அர்னாப் கோஸ்வாமிக்கு – திரு.குருமூர்த்தி அளித்த மிக முக்கியமான ஒரு பேட்டி…..!!!

துக்ளக் ஆசிரியரும், முக்கிய பாஜக பிரமுகர்களில் ஒருவருமான திரு.எஸ். குருமூர்த்தி, இன்று மாலை, ரிபப்ளிக் தொலைக்காட்சியின் திரு.அர்னாப் கோஸ்வாமிக்கு கொடுத்த பேட்டியில்,


– திரு.ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி
என்றும்,

– அவர் பாஜகவில் சேர மாட்டார், தனிக்கட்சி தான்
துவங்குவார் என்றும்,

– தனிக்கட்சியை துவக்குவதற்கான அடிப்படை ஏற்பாடுகளில்
அவர் ஏற்கெனவே ஈடுபட்டு வருகிறார் என்றும்,

– தேசிய அளவில் அவர் NDA-வில் ( பாஜக தலைமையிலான
தேசிய ஜனநாயக கூட்டணியில் ) சேருவார் என்றும் –

– கூறினார்.

திரு.குருமூர்த்தி அவர்களைப்பற்றியும், அவர் பேசும்
தோரணைகளையும் நன்கு அறிந்தவன் என்கிற
முறையில், இந்த அறிவிப்பை அவர் ரஜினிகாந்துடன் கலந்து
ஆலோசிக்காமல் வெளியிட்டிருக்க வாய்ப்பில்லை என்றே
கருதுகிறேன்…. எனவே, இந்த செய்தியை, நிச்சயமாக
ஆதாரபூர்வமானதாக எடுத்துக் கொள்ளலாம்.

திரு.குருமூர்த்தி மேலும், பேட்டியில் பேசுகையில்,
பாரதிய ஜனதா கட்சியில் சேருவது, திரு. ரஜினிகாந்தின்
reputation -க்கு (கௌரவம்…?) உகந்ததாக இருக்காது என்பதால்,
அவர் பாஜகவில் சேர மாட்டார்… ஆனால், திரு.நரேந்திர
மோடியுடன் அவருக்கு இருக்கும் நட்பு காரணமாக, தேசிய
அளவில் கூட்டணியில் சேருவார் … என்று கூறி இருக்கிறார்…


ஆக இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன…

1) திரு.ரஜினிகாந்த் தனிக்கட்சி துவங்கி, தமிழக அரசியலில்
இறங்குவது உறுதியாகி விட்டது…..

2) பாஜகவில் சேருவது தனது சுதந்திரமான செயல்பாட்டை
கட்டுப்படுத்தும் என்று ரஜினிகாந்த் நினைக்கிறார்.

– இனி தமிழ்நாட்டில் அரசியல் நிகழ்வுகள் புதிய திசையில்
பயணிக்கத் துவங்கும்…

சில கட்சிகள் ரஜினியுடன் கூட்டணி சேர ஏற்கெனவே துண்டு
போட்டு வைத்திருக்கின்றன….

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பிறகு, புதிய
நிகழ்வுகளுக்கான, அடிப்படை நகர்வுகள் துவங்குமென்று
தோன்றுகிறது….

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to திரு.அர்னாப் கோஸ்வாமிக்கு – திரு.குருமூர்த்தி அளித்த மிக முக்கியமான ஒரு பேட்டி…..!!!

 1. amazon offers சொல்கிறார்:

  Very nice article, a very good read.

 2. சந்திரசேகரன். வெ.க சொல்கிறார்:

  புலி வருது புலி வருதுனு சொல்லியே ஒரு மாமாங்கம் ஓடி போச்சு,இனியாச்சும் ரசிகர்களின் உணர்வுகளை உசுப்பிவிட்டு அதை பட வெற்றிக்கு பயன்படுத்தும் மலிவு தந்திரங்களை விடுத்து களத்தில் இறங்கி தன்னை நிரூபிக்கட்டும்.
  “நல்ல பொழுதையெல்லாம்
  தூங்கி கழித்தவர்கள் நாட்டை கொடுத்ததுடன்
  தானும் கெட்டார்”
  இதனை மனதில் வைத்து காலம் அறிந்து செயல் பட வாழ்த்துக்கள்

 3. selvarajan சொல்கிறார்:

  // “துக்ளக்” ஆசிரியர் குருமூர்த்தி அவர்கள், தனி கட்சி உருவாவதை ஆதரிக்கிறார்…!!!
  Posted on ஜூன் 1, 2017 by vimarisanam – kavirimainthan // என்ற இடுகைக்கு யாம் இட்ட பின்னூட்டம் : —
  paamaranselvarajan சொல்கிறார்:
  3:05 பிப இல் ஜூன் 1, 2017
  // தனி கட்சி ஆரம்பித்தால் தான் பா.ஜ.க. வுக்கு வசதி … அப்பாேதுதானே ரஜினிக்கு வாக்குவங்கி எவ்வளவு என்றுதெரியும் … அதை வைத்து கூட்டாளியாக சேர்த்துதேர்தலை சந்திக்கலாம்… பழம் நழுவுது … பாலில் விழப்பாேவுது என்று பினாத்தலாம்..!
  ரஜினி நேரிடையாக பா.ஜ.க. வில் ஐக்கியமானால் தமிழகத்தில் எடுபடாது என்பதை ஆடிட்டர் கணக்குப்பாேட்டு எழுதுகிறார்..!!
  இருவரின் திடீர் “ஞானாேதயமும்” இங்கே எடுபடாது என்பதுதான் நிதர்சனம் … !!! // என்று பதிவிட்டு இருந்தேன் … அதே பின்னூட்டம் தான் ” இந்த இடுகைக்கும் …..

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  திரு.ரஜினிகாந்த் தனிக்கட்சி ஆரம்பிப்பார் என்று சொல்வது வரை திரு.குருமூர்த்தி சொல்வது சரியாக இருக்கலாம்.

  அதை அடுத்து, NDA -வில் சேருவார் என்று குருமூர்த்தி கூறுவது
  அவரது சொந்த எதிர்பார்ப்பு மற்றும் விருப்பமாக இருக்கலாம்.

  பாஜக வுடனான உறவை பொறுத்த வரையில், ரஜினிகாந்த்,
  ஜெயலலிதா அவர்கள் கடைபிடித்த நிலையை ( கூட்டணி இல்லை அதே சமயம் பகையும் இல்லை…) மேற்கொள்வது
  நல்லது என்று நினைக்கிறேன்.

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • இளங்கோ சொல்கிறார்:

   பாஜக ஒரு சுயநலவாத கட்சி.
   தன்னுடன் சேருபவர்களை கூட அது அழித்து விடும்.
   தமிழகத்தின் நலன் காக்கப்பட வேண்டுமானால்,
   ரஜினிகாந்த், பாஜகவுடன் கூட்டணி வைக்கக்கூடாது.
   தனித்தே நிற்க வேண்டும்.

   • புதியவன் சொல்கிறார்:

    ஐயா இளங்கோவன்… எந்தக் கட்சியும் சுய’நலக் கட்சிதான். கட்சித் தலைவரின் முதல் அஜென்டா, தன்னுடைய கட்சிதான். இதற்கு விதிவிலக்காக அதிசயமாக ஏதாவது நடந்திருக்கலாமே தவிர எல்லோரும் சுயனலவாதிகள்தான்.

    90 எம்.எல்.ஏக்களை வைத்துக்கொண்டு, மற்றவர்களிடம், அரிசி கொண்டுவா, நான் உமி வைத்திருக்கிறேன் ஊதி ஊதி தின்னுகிறேன் என்று 5 ஆண்டுகள் யாருக்கும் பங்கு கொடுக்காமல் ஆட்சி புரிந்த கருணானிதி சுயனலவாதி இல்லையா?

    வைகோ கட்சிக்கும் சேர்த்து தனக்கே லபக் என்று நல்ல மந்திரிப் பதவிகளை வாங்கி, நாடு கெட்டால் என்ன, தான் நல்லா இருந்தாப் போதும் என்று எல்லாத் திசைகளிலும் கொள்ளையடித்த கருணானிதி சுயனலவாதி இல்லையா?

    நாங்க என்ன வேணும்னாலும் செய்துப்போம், கண்ணை மூடி ஆதரவு தரணும் ஒரு கேள்வியும் கேட்கக்கூடாது, ஆனால் உனக்கு சில மந்திரிப் பிச்சை போடுகிறோம் அதை வைத்து கொள்ளையடித்துக்கொள் என்று சொல்லி, சரியான சமயத்தில் காலை வாரி பெயரை நாசம் செய்த காங்கிரஸ் சுயனலவாதியில்லையா?

    அதிமுகவுடன் தேர்தலைச் சந்தித்து, தேர்தல் முடிந்தவுடன், திமுக ஆட்சியைப் பிடித்ததை அறிந்து, தன் கட்டப்பஞ்சாயத்துக்கு அரசு உதவி வேண்டும் என்று டபக் என்று திமுகவை ஆதரித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுயனலவாதி இல்லையா?

    • இளங்கோ சொல்கிறார்:

     மிஸ்டர் புதியவனின் கண்டுபிடிப்பு:
     நீ ஏன் அயோக்கியனாக இருக்கிறாய் என்று ஒருவரிடம் கேட்டால்,
     அவர், தான் அயோக்கியன் இல்லை என்று நிரூபிக்கவோ, சொல்லவோ
     கூட வேண்டாம். மற்ற எல்லாரும் யோக்கியரோ என்று பதிலுக்கு கேட்டு விட்டால் போதும். இவர் அயோக்கியனாக இருப்பது நியாயப்படுத்தப்பட்டு விடும்.

 5. Sundar Raman சொல்கிறார்:

  பா ஜா க ..ஒரு சுயநலவாதி கட்சி … அதாவது அது வளரவேண்டும் என்று ஆசைப்படும் கட்சி . ஆனால் எதுத்தாப்புல யாரு இருக்காங்க ? லல்லு யாதவ் பதிவில் கா.மை சார் கோடிட்டு காட்டும் கட்சியா ? ஊழல் பெருச்சாளிகளா ? .

  சட்டம் தன கடைமையை செய்தால் , தி.மு.க காலியாகிவிடும் .. மாறன், கனிமொழி, ராஜா, T .R .பாலு , ஜகதரட்சகன் , நேரு, வீராசாமி… யாரு பாக்கி இருக்கா ?

  ரஜினி க்கு வயதாகி விட்டது , அரசியில் என்பது ஓர் ஆபத்தான விளையாட்டு , மக்கள், பத்திரிக்கை, என எல்லாரும் கை கொடுத்தாலும் கூட , அவர் ஆரோக்கியம் நிச்சயமாக கை கொடுக்காது . மேலும் ரசிகர்கள் தான் உண்டே ஒழிய தொண்டர்கள் கிடையாது , கட்சி அமைப்பு இல்லை . சிரஞ்சீவி போல கொஞ்ச காலம் கட்சி ..பின் எல்லாத்தையும் மறந்துட்டு திரும்பி போக வேண்டியது தான் .

  சட்டம் தன கடைமையை செய்யுமா ? அப்படி செய்தால் தி .மு.க மற்றும் அ .தி .மு .க இரண்டுமே பாதிக்கப்படும்

 6. இளங்கோ சொல்கிறார்:

  – “சட்டம் தன கடைமையை செய்தால் , தி.மு.க காலியாகிவிடும் .. சட்டம் தன கடைமையை செய்யுமா ?-”

  மோடிஜியின் காரியம் முடியும் வரை சட்டம் எப்படி
  தன் கடமையை செய்யும் ? அதுவரை “சும்மா” மிரட்டிக் கொண்டே தான் இருக்கும்.

  – “ரஜினி க்கு வயதாகி விட்டது “-

  மோடிஜிக்கு எத்தனை வயசு ஆகிறது ?
  வெங்காயம் ஜிக்கு ?
  ஜெட்லிஜி’க்கு ?
  சு.சு.ஜி’க்கு ?

  – ” மேலும் ரஜினி க்கு ரசிகர்கள் தான் உண்டே ஒழிய தொண்டர்கள் கிடையாது , கட்சி அமைப்பு இல்லை “-

  குருமூர்த்திக்கு தெரியாத உண்மையை
  சுந்தர்ராமன் கண்டு பிடித்து விட்டார் போலிருக்கிறதே.
  பின் ஒன்றுக்கும் உதவாத ரஜினியின் தவடையை பிடித்துக்கொண்டு பாஜக ஏன் தொங்குகிறதோ ?

 7. இளங்கோ சொல்கிறார்:

  இன்று வெளிவந்திருக்கும் நக்கீரன் செய்தியிலிருந்து :

  // சறுக்கலை ஏற்படுத்தும் என நம்புகிறார் ரஜினி!

  அரசியல் பிரபலங்களுடன் ரஜினி சந்திப்பதை மாநில உளவுத்துறையை விட மத்திய உளவுத்துறைதான் உன்னிப்பாக கவனிக்கிறது. அவர்களிடம் நாம் விசாரித்தபோது, “ரஜினியை பற்றி செய்தியறிவது எங்களுக்கு கொடுக்கப்பட்ட பெரிய அசைன்மெண்ட்! அரசியலுக்கு வருவதில் ரஜினி உறுதியாக இருக்கிறார். தனிக்கட்சிதான், அதில் மாற்று யோசனையே அவருக்கு இல்லை. பா.ஜ.க.வில் சேரும்படி அமித்ஷாவும் ஆடிட்டர் குருமூர்த்தியும் ரஜினியை வலியுறுத்தினார்கள். அப்போது, “வேண்டாம்; விட்டுடுங்களேன்; விருப்பமில்லை’ என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டார்.

  அரசியலுக்கு ரஜினி வருவது உறுதி; ஆனால், பா.ஜ.க.வில் இணைய அவர் விரும்பவில்லைன்னு நாங்கள் டெல்லிக்கு அறிக்கை அனுப்பிய பிறகுதான், “பா.ஜ.க.வில் இணையுங்கள்’னு அழுத்தம் கொடுத்தார் அமித்ஷா. ஒப்புக்கொள்ளவில்லை ரஜினி. சில பிரபலங்கள் மூலமாக, “பா.ஜ.க.வை பகைச்சிக்க வேண்டாமே’ என ரஜினியிடம் சொல்லிப் பார்த்தபோதும், “அரசியல்ங்கிறது என் தனிப்பட்ட விருப்பம். நெருக்கடி கொடுத்தெல்லாம் என்னை வளைக்க முடியாது. பா.ஜ.க. அதைப் புரிஞ்சிக்கணும். அவங்களின் நெருக்கடிக்கு எப்போதும் பணியமாட்டேன். எனக்கு யாரும் கெடு விதிக்க முடியாது’’ என அன்பாகச் சொன்னதுடன், “அரசியலில் முதலில் என்னை ஸ்ட்ராங் பண்ணிக்கொள்ளவே நினைக்கிறேன். அப்புறம் அந்தந்த நேரத்தில் முடிவெடுத்துக்கொள்ளலாம்’ என உறுதியாக சொல்லிவிட்டாராம் ரஜினி. பா.ஜ.க.வில் இணைவது தனக்கு சறுக்கலை ஏற்படுத்தும் என நம்புகிறார் ரஜினி” என்று சுட்டிக்காட்டுகிறார்கள் உளவுத்துறையினர். //

 8. இளங்கோ சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  கொஞ்சம் கூட கூச்சமின்றி, வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி
  எல்லாரையும், தரங்குறைந்த வார்த்தைகளால் தாக்குதல்
  நடத்துகிறாரே சு.சு. இவரை என்ன செய்வது ?

 9. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இளங்கோ,

  சாக்கடையிலேயே விழுந்து புரண்டு
  கொண்டிருக்கும் காட்டுப்பன்றிகள்
  பசுமையான காய்கறி தோட்டங்களில்
  புகுந்து அசிங்கம் செய்தால் நம்மால்
  என்ன செய்ய முடியும்…? வேண்டுமானால்
  அவற்றிற்கு சு.சுவாமி என்று பெயர் வைக்கலாம்..!!!
  காட்டுப்பன்றிகளை நம்மால் வேறென்ன செய்ய முடியும்…?

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • புதியவன் சொல்கிறார்:

   ஒருத்தர். அவருக்கு படிப்பு இருக்கிறது. அனுபவம் இருக்கிறது. அறிவு இருக்கிறது. வாதிடும் திறமை இருக்கிறது. ஆனால், நெடிய அரசியலுக்குப் பின், அவருக்கு ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை. எப்படியாவது மந்திரிசபையில் நுழையணும்னு 3 வருஷமாப் பார்த்தார், என்ன என்னவோ சொல்லிப்பார்த்தார்.. ஒண்ணும் நடக்கலை. யார் யாருக்கோ எதிராகக் கருத்துக்களை அள்ளித்தெளித்தார். பத்திரிகையில் செய்தியானதே தவிர அவருக்கு ஒன்றும் நடக்கவில்லை.

   ஒரு பூனையை ரொம்ப கார்னர் செய்தா அது எந்தப் பக்கம் பாய்வது என்று புரியாமல் கடைசியில் நம்ம பக்கமே பாயும். அதுபோல, எந்த நோக்கமும் இல்லாமல், எல்லாரையும் நோக்கி சகதியை வீசுகின்ற குணம் சு.சுவிற்கு சில வருடங்களாக அமைந்துவிட்டது. அவருடைய கருத்துக்களை ஆச்சரியமாகக் கேட்டுக்கொண்டிருந்தது போய் (அவர் தைரியத்தை மனதளவில் மெச்சிக் கேட்டுக்கொண்டிருப்போம்), அவர் கருத்துக்கள் அருவருப்பை வரவழைக்கின்றன (சசிகலா சிறையிடக்கூடாது, அவர்தான் அதிமுக தலைவி, ரெட்டை இலை சின்னம் சம்பந்தமாக இதுபோன்ற பல). இனி சு.சு ஒரு ‘தொந்தரவு கொடுக்கும் கட்டுச்சோற்றில் சேர்த்துக்கட்டிய பெருச்சாளி’ என்றுதான் அவர் மறைவுக்குப் பின்னும் நினைவுகூரப்படுவார்.

 10. தமிழன் சொல்கிறார்:

  யார் என்ன சொன்னாலும், ரஜினி களத்தில் இறங்கினால் அவரை ஜெ. போல மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதிமுக என்பது (அந்தக் கட்சியே திமுகவைப் பிடிக்காத பொதுமக்கள் அரவணைத்துகொண்ட கட்சி) கரைந்து அந்த ஆதரவும் ரஜினியின் கட்சிக்கே வந்துசேரும்.

  ஆனால்…. ரஜினி தும்பைவிட்டுவிட்டாரே. இப்போ இந்த வயசுல, வேகமாக இயங்கமுடியாத உடல் நிலைல எப்படி கட்சி துவங்கமுடியும்? துவங்கினாலும் வெற்றி பெறமுடியும்? ஏனென்றால், 3-5 வருட கடும் உழைப்பு கட்சியைத் தூக்கி நிறுத்த, மக்கள் நம்பிக்கையைப் பெற, அவசியம். அதற்கான உடல் பலம் ரஜினியிடம் கிடையாது. ஒருவேளை கட்சி துவங்கி, அஜீத்தை உள்ளே கொண்டுவந்தால் சாத்தியமாகலாம்.

  இல்லைனா….. இது வெறும் அறிவிப்பு என்ற அளவில் நின்று, மக்கள் மனதில், ‘எதற்கும் தைரியம் இல்லாத ஆள், வெறும் பட வெற்றிக்காக சும்மா சும்மா ஊதற ஆள்’ என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது.

  ஒன்று எல்லோரும் நினைவில் கொள்ளவேண்டும். மோடி, பாஜக இரண்டும் ஜெ. வுக்கு நட்பு என்றபோதும், ஒருபோதும் அவர் தமிழ்னாட்டு நலனை விட்டுக்கொடுத்ததில்லை. ஒருபோதும் கட்சியை அடகு வைத்து தன் கேஸ்களை வாபஸ் வாங்கிவிடுங்கள், (‘சர்க்காரியா கமிஷனைக் கலையுங்கள் உங்கள் காலடியில் நாயை விட நன்றியுள்ளவனாகக் கிடப்பேன்’ என்றதுபோல) என்று சொன்னதில்லை. சு.சுவுக்கு வேட்பாளர் சீட் கொடுத்து தன் அணியில் சேர்த்தபோதும், தன்னுடைய கேசை வாபஸ் வாங்கணும் என்று ஜெ. சொன்னதில்லை என்று சு.சுவே சொல்லியிருக்கிறார். தன் சுய நலத்துக்காக கோர்டையோ நீதிபதிகளையோ ஜெ அணுகியதில்லை ஆனால் கருணானிதி அப்படிப்பட்டவர் இல்லை என்று முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே சொல்லியிருக்கிறார்.

  பார்ப்போம்.. ஒருவேளை ரஜினி தீவிர அரசியலுக்கு வந்தால் ஜெ. பாதையில் செல்கிறாரா என்று. அதை விட்டுவிட்டு தன் சொத்தை தன் குழந்தைகளுக்கு நிச்சயம் செய்துவிட அரசியலில் இறங்குவதாக பாவ்லா காண்பித்தால் (அதாவது தன் குழந்தைகளின் அரசியல் அந்தஸ்துக்காக) ரஜினி தன் நிலையைத் தானே தாழ்த்திக்கொண்டதற்கு ஆளாவார்.

  யாரும் நக்கீரன் கருத்துக்கணிப்பையோ அல்லது லயோலா கருத்துக்கணிப்பையோ நம்மவேண்டிய அவசியமில்லை. இரண்டும் யார் சூத்திரதாரியாக நின்று ஆட்டிவைக்கிறார்கள் என்று பார்த்தாலே புரிந்துவிடும். நக்கீரன், திமுக சார்பு நிலை எடுத்து, தீவிர திமுக தொண்டனாக 15 வருடங்களுக்குமேல் உழைத்து தன் பத்திரிகையின் கிரெடிபிலிட்டியை முழுவதுமாகத் தொலைத்த கதைதான் நம் எல்லோருக்கும் தெரியுமே. விகடனும் இந்த வழியில் பீடு நடை போட்டுக்கொண்டிருக்கிறது.

  • இளங்கோ சொல்கிறார்:

   எங்கேயாவது துவங்கிவிட்டு, சுற்றீவளைத்து புதியவன்
   பாஜகவுக்கு வக்காலத் வாங்கும் தந்திரம் புரிகிறது.
   பாஜக இன்றைய ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுத்ததற்கான காரணம், பின்னணி என்ன என்பது
   தான் கேள்வியே தவிர, என்றைக்கோ காங்கிரஸ் பிரதிபா
   பாடீலை தேர்ந்தெடுத்தது அல்ல. எதற்கெடுத்தாலும் பழைய
   கதையை காரணம் காட்டாமல் நேரடியாக பதிலுக்கு வாருங்கள் மிஸ்டர் புதியவன்.

   //சிலர் (இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள்) நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர். அந்தத் தலைவர் அத்வானி கோவைக்கு வந்தபோதுதான் அவரைக் கொல்ல பயங்கரவாதிகள் குண்டுவெடித்தனர். அப்படிப்பட்டவர்கள், வாஜ்பாய்க்கு அடுத்த தேர்தலில், அத்வானி, பாஜகவுக்கு ஓட்டுப்போட்டார்களா? இது, ஊர் ரெண்டுபடவேண்டும் என்ற எண்ணத்தினால் சொல்லப்படுவது.//

   முட்டாள்தனமான வாதத்திற்கு இதைவிட வேறு சிறந்த உதாரணம் சொல்ல முடியாது. எவனோ தீவிரவாதி குண்டு
   வைத்தால், அந்த community பூராவையும் வம்புக்கு இழுப்பது
   தான் தீவிர பாஜககாரர்கள் கடைபிடிக்கும் தந்திரம்.
   அத்வானிஜியை ஏன் consider பண்ணவில்லை என்று கேட்கிற நான் உங்கள்definition எதற்கு உள்ளும் வரவில்லை. பெரும்பாலானவர்கள் அப்படித்தான். உங்கள் வாதம் என்னை
   போன்றவர்களுக்கு எப்படி பொருந்தும் ?

   //புகழ் வாய்ந்தவர்களுக்குக் கொடுத்திருக்கவேண்டும் என்று இளங்கோ அவர்கள் எழுதுவது ஆச்சரியமாக இருக்கிறது.//

   இதிலென்ன ஆச்சரியம் ? வாஜ்பாய் காலத்தில் திருமதி ருக்மிணி தேவியை consider பண்ணவில்லையா ? உங்களுக்கு அமிதாப், ரஜினி தவிர வேறு யாரையும் தெரியாதா ?

   // பாஜக சொன்னதா அவர் தலித் என்பதால் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று?//

   அதைத்தான் சொல்லச் சொல்கிறோம். எந்த காரணத்தை வைத்து இந்த வேட்பாளரை தேர்ந்தெடுத்தனவ்ர் என்று
   வெளிப்படையாகச் சொல்ல பாஜக தலைமைக்கே தைரியமில்லையே. “தலித்” ஓட்டுகளை திசை திருப்பத்தான்
   எந்று அவர்கள் எப்படி வெளிப்படையாக சொல்வார்கள் ?
   அவர்களே கவலைப்படாதபோது புதியவன் ஏன் இவ்வளவு
   கஷ்டப்பட்டு வக்காலத் வாங்குகிறார் தெரியவில்லை.

   //ஒருவேளை கட்சி துவங்கி, அஜீத்தை உள்ளே கொண்டுவந்தால் சாத்தியமாகலாம்.//
   மீண்டும் மீண்டும் அஜித்தை பிடித்துக் கொண்டு ஏன் அய்யா
   தொங்குகிறீர்கள் ? அவர் அரசியலுக்கு வருவதாக உங்களிடம் மட்டும் தனியாக சொல்லி இருக்கிறாரா ?

   // யாரும் நக்கீரன் கருத்துக்கணிப்பையோ அல்லது லயோலா கருத்துக்கணிப்பையோ நம்மவேண்டிய அவசியமில்லை. //
   இதை நீங்கள் சொல்லிக்கொடுத்து தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற அவசியத்தில் யாரும் இங்கே இல்லை. விமரிசனம் பின்னூட்டங்களில் எழுதுபவர்களை லேசாக எடைபோட வேண்டாம் மிஸ்டர் புதியவன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.