திரு.குருமூர்த்தி, திரு.ரஜினிகாந்த் பற்றி வெளியிட்ட மிக முக்கிய கருத்து….!!!


இன்று மாலை, ரிபப்ளிக் தொலைக்காட்சியின் திரு.அர்னாப்
கோஸ்வாமிக்கு கொடுத்த பேட்டியில், துக்ளக் ஆசிரியரும்,
முக்கிய பாஜக பிரமுகர்களில் ஒருவருமான திரு.எஸ்.
குருமூர்த்தி,

– திரு.ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி
என்றும்,

– அவர் பாஜகவில் சேர மாட்டார், தனிக்கட்சி தான்
துவங்குவார் என்றும்,

– தனிக்கட்சியை துவக்குவதற்கான அடிப்படை ஏற்பாடுகளில்
அவர் ஏற்கெனவே ஈடுபட்டு வருகிறார் என்றும்,

– தேசிய அளவில் அவர் NDA-வில் ( பாஜக தலைமையிலான
தேசிய ஜனநாயக கூட்டணியில் ) சேருவார் என்றும் –

– கூறினார்.

திரு.குருமூர்த்தி அவர்களைப்பற்றியும், அவர் பேசும்
தோரணைகளையும் நன்கு அறிந்தவன் என்கிற
முறையில், இந்த அறிவிப்பை அவர் ரஜினிகாந்துடன் கலந்து
ஆலோசிக்காமல் வெளியிட்டிருக்க வாய்ப்பில்லை என்றே
கருதுகிறேன்…. எனவே, இந்த செய்தியை, நிச்சயமாக
ஆதாரபூர்வமானதாக எடுத்துக் கொள்ளலாம்.

திரு.குருமூர்த்தி மேலும், பேட்டியில் பேசுகையில்,
பாரதிய ஜனதா கட்சியில் சேருவது, திரு. ரஜினிகாந்தின்
reputation -க்கு (கௌரவம்…?) உகந்ததாக இருக்காது என்பதால்,
அவர் பாஜகவில் சேர மாட்டார்… ஆனால், திரு.நரேந்திர
மோடியுடன் அவருக்கு இருக்கும் நட்பு காரணமாக, தேசிய
அளவில் கூட்டணியில் சேருவார் … என்று கூறி இருக்கிறார்…


ஆக இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன…

1) திரு.ரஜினிகாந்த் தனிக்கட்சி துவங்கி, தமிழக அரசியலில்
இறங்குவது உறுதியாகி விட்டது…..

2) பாஜகவில் சேருவது தனது சுதந்திரமான செயல்பாட்டை
கட்டுப்படுத்தும் என்று ரஜினிகாந்த் நினைக்கிறார்.

– இனி தமிழ்நாட்டில் அரசியல் நிகழ்வுகள் புதிய திசையில்
பயணிக்கத் துவங்கும்…

சில கட்சிகள் ரஜினியுடன் கூட்டணி சேர ஏற்கெனவே துண்டு
போட்டு வைத்திருக்கின்றன….

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பிறகு, புதிய
நிகழ்வுகளுக்கான, அடிப்படை நகர்வுகள் துவங்குமென்று
தோன்றுகிறது….

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to திரு.குருமூர்த்தி, திரு.ரஜினிகாந்த் பற்றி வெளியிட்ட மிக முக்கிய கருத்து….!!!

 1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர்களுக்கு,

  ரஜினிகாந்த் என்கிற பெயரை தலைப்பில் பார்த்ததும்,
  தமிழ்மணம் softwere இதை திரைமணம் பக்கம் தள்ளி விட்டது…

  நான் இதை அரசியல் தளத்தில் தான் பதிவுசெய்ய விரும்பினேன்.

  எனவே, மீண்டும் தலைப்பை மாற்றி, அரசியல் தளத்தில்
  மீண்டும் பதிவு செய்திருக்கிறேன்.

  பின்னூட்டமிடும் நண்பர்கள் அதை அடுத்த இடுகையிலேயே பதிவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 2. M D K SUBRAMANIAN சொல்கிறார்:

  INNORU VIJAKJANTH URUVAGIRAr

  • Mohammed Aneez சொல்கிறார்:

   மற்றவர்களோடு எங்கள் கருணை தெய்வம் ரஜினி அவர்களை ஒப்பிடவேண்டாம்.
   ரஜினி வந்தாலாவது நாடு நல்லாயிருக்காதா என்ற மக்களின் ஏக்கம்….
   ரஜினி அதற்கு விடை சொல்லும் காலம் விரைவில் மலரும்.

 3. Woraiyur Pugal சொல்கிறார்:

  நிச்சயம் ரஜினி வரமாட்டார்…பாவம் குருமூர்த்தி ஏமாந்து போகத்தான வாய்ப்பு உண்டு..தனது ஆலோசகராக சோ அவர்கள் இருந்த போதே வராத ரஜினி இந்த முறை வருவார் என்பது அதித கற்பனையே..அதிலும் குருமூர்த்தி பூனை சோ புலி…பாவம் பூனை புலியாக ஆசைபடுகிறது…நிச்சயம் வரமாட்டார ரஜினி

  • ராசவன்னியன் சொல்கிறார்:

   சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் மக்கள் செல்வாக்கு உலகம் அறிந்த ஒன்று. அவரின் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆவதை எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது.

  • Mathivanan சொல்கிறார்:

   உன்னை மாதிரி பொறாமை பிடித்தவர்களை விரட்ட அடிக்க தான் எங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருகிறார். தமிழக மக்கள் வாழ்வு சிறக்க சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழக முதல்வர் ஆனால் தான் உண்டு.

 4. அருணன் சொல்கிறார்:

  ரஜினி தமிழகத்தின் முதல்வர் ஆவது காலத்தின் கட்டாயம். தமிழக மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள். ரஜினி தான் அடுத்த தமிழக முதல்வர் என்று.

 5. Stalin சொல்கிறார்:

  தலைவா வாருங்கள். தமிழக அரசியலை புனிதப்படுத்த வாருங்கள்.
  ஊழல் வியாதிகளை ஓட ஓட விரட்டி அடிக்க அரசியலுக்கு வாருங்கள்.
  ஜாதி வெறி பிடித்தவர்களை ஓட ஓட விரட்டி அடிக்க அரசியலுக்கு வாருங்கள்.
  மத வெறி பிடித்தவர்களை ஓட ஓட விரட்டி அடிக்க அரசியலுக்கு வாருங்கள்.
  தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற அரசியலுக்கு வாருங்கள்.

 6. தமிழ்ப்பிரபாகரன் சொல்கிறார்:

  ரஜினி அரசியலுக்கு வாராரு தமிழக முதல்வர் ஆகறாரு.
  வாழ்க மனித தெய்வம் ரஜினி அவர்கள்.

 7. விஜய் சொல்கிறார்:

  தலைவா வாருங்கள். தமிழக அரசியலை புனிதப்படுத்த வாருங்கள்.

 8. சிவம் சொல்கிறார்:

  திடீரென்று ஒரு படை திரண்டு வந்திருக்கிறது போலிருக்கிறதே.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.