திரு.குருமூர்த்தி அவர்கள் இதற்கு விளக்கம் சொல்ல வேண்டும்….!நேற்றைய தினம் ஒரு விழாவின் முடிவில், திரு.எஸ்.
குருமூர்த்தி அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:

—————————————-

நாம் பிரிப்பதில் ருசி கண்டவர்கள்.
நாம் எதையும் ஒன்றாக பார்க்க மாட்டோம்.

குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வில்,
தலித் வேட்பாளர்களை,

இவர் குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த தலித்,
இவர் குறிப்பிட்ட சிந்தனையுள்ள தலித் என

பிரித்துப் பார்க்கப்படுகிறது.

தேர்தல் முடிவுக்குப் பின்,
அது குறித்து கருத்து தெரிவிப்பேன்.

(tamil.thehindu.com – 25/06/2017)

—————————————–

தலித்திற்கு “உள்ளே” பிரிவுகளை பிரித்து பார்ப்பதை பற்றிய
சிந்தனை குறித்த விவாதத்தை குருமூர்த்தி அவர்கள்
விரும்புவது போல், தேர்தலுக்குப் பிறகு வைத்துக்
கொள்ளட்டும்…

ஆனால், திரு.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற
மூத்த தலைவர்களை விட்டு விட்டு, பீஹார் கவர்னரை
ஜனாதிபதி வேட்பாளராக –

பாஜக தேர்வு செய்தது –

“எந்த கண்ணோட்டம்” அல்லது
“எந்த அடிப்படை” அல்லது
“எந்த ருசி”யை

வைத்து என்று திரு.குருமூர்த்தி அவர்கள் இப்போதே
விளக்கினால் தேவலை.

இந்த “தலித் உள் பிரிவுகள்” பற்றிய விவாதங்கள் உருவாக
” அடித்தளம் ” அமைத்துக் கொடுத்திருப்பது யார்…?.. ஏன்…?

என்பதையும் திரு.குருமூர்த்தி அவர்கள் மனசாட்சிக்கு
விரோதம் இல்லாமல் கூற வேண்டும்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

19 Responses to திரு.குருமூர்த்தி அவர்கள் இதற்கு விளக்கம் சொல்ல வேண்டும்….!

 1. Ramesh சொல்கிறார்:

  Yes. A very good question.
  Mr.Gurumurthy should explain as to who is responsible for
  the ignition of this unwanted flare now ?

 2. paamaranselvarajan சொல்கிறார்:

  ப்ரிமேசன் அமைப்பின் ” சகாேதரத்துவ தின ” விழாவில் இவர் உதிர்த்த அற்புதமான ..? கருத்துக்கள் அப்படியே புல்லரிக்க வைத்து விட்டது… சகாேதரத்துவம் என்பது நாம் ஒருவரை ஒருவர் புரிந்துக் காெள்வதில் தான் இருக்கிறது எனறவர் … பிரிப்பதில் நாம் ருசி கணடவர்கள் , நாம் எதையும் ஒன்றாக பார்க்க மாட்டாே ம் என்றும் கூறியது …. அப்பாே பிரிப்பது யார் என்று குறிப்பால் உணர்த்திய திரு குருமூர்த்தி… திறமையானவர் தானே…?

 3. இளங்கோ சொல்கிறார்:

  கட்சியில் அனுபவம் மிக்க தலைவர்களை
  ஒதுக்கி விட்டு, திறமைசாலிகளை புறந்தள்ளி விட்டு,
  புகழ் பெற்றவர்களை அழுத்தி விட்டு,
  ஜாதி ஒன்றை மட்டும் முன்னுரிமை கொடுத்து
  ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த பாஜக தான்
  இந்த பிரச்சினை மூளவே காரணம். பாஜக இந்த
  வேட்பாளரை அறிவிப்பதற்கான அடித்தளம் என்ன
  என்பதை குருமூர்த்தி அவர்கள் சொல்வாரா ?
  பாஜக தலைமையை காட்டிக்கொடுக்க அவருக்கு மனம் வருமா ?

 4. புதியவன் சொல்கிறார்:

  இன்றைக்கு பாஜகவை எல்லோரும் கேள்வி கேட்கிறார்கள். தப்பில்லை.

  எந்தக் காரணத்துக்காக பிரதீபா பாட்டீல் கலாமுக்கு மாற்றாக தேர்ந்தெடுக்கப்பட்டார்? எந்தக் காரணத்துக்காக அடிமை கருணானிதி இதனை ஆதரித்தார் அப்போது முதல் பெண்மணி தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்ற அல்ப காரணம் சொல்லமுடிந்தது. 2 ஜி, தொலைக்காட்சி ஊழல் நீரா ராடியா டேப், வோல்டாஸ் இடம் அபேஸ் போன்ற பலப் பல ஊழல்களால் முழுகும் நிலைக்கு வந்த கருணானிதி, பிரணாப் முகர்ஜியை இல்லை, காங்கிரசின் ஆபீஸ் பாயை ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தியிருந்தாலும் ‘உள்ளேன் ஐயா’ என்று காலில் விழுந்து ஆதரித்திருப்பார்.

  கே ஆர் நாராயணணுக்கு தலித் என்பதால் ஆதரவு என்று சொல்ல முடிந்தது.

  இப்போது பாஜக அவர்களுக்குத் தோதான (பிரதமருக்கு ஏற்ற) வேட்பாளரை அறிவித்துள்ளார்கள். இப்போது, ‘அத்வானி’ வரவில்லையே என்று சிலர் (இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள்) நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர். அந்தத் தலைவர் அத்வானி கோவைக்கு வந்தபோதுதான் அவரைக் கொல்ல பயங்கரவாதிகள் குண்டுவெடித்தனர். அப்படிப்பட்டவர்கள், வாஜ்பாய்க்கு அடுத்த தேர்தலில், அத்வானி, பாஜகவுக்கு ஓட்டுப்போட்டார்களா? இது, ஊர் ரெண்டுபடவேண்டும் என்ற எண்ணத்தினால் சொல்லப்படுவது.

  புகழ் வாய்ந்தவர்களுக்குக் கொடுத்திருக்கவேண்டும் என்று இளங்கோ அவர்கள் எழுதுவது ஆச்சரியமாக இருக்கிறது. அமிதாப் பச்சன், ரஜினி இவர்களுக்கு இணையாக இந்தியாவில் புகழ் பெற்றவர்கள் (எல்லோருக்கும் தெரிந்தவர்கள்) இல்லை. காங்கிரஸ் அரசு, எந்தப் புகழ் வாய்ந்தவரைத் தேர்ந்தெடுத்தது? கடந்த 40 வருடங்களில், அந்தப் பதவிக்குப் புகழ் சேர்த்தவர் அப்துல் கலாம் அவர்கள் ஒருவர்தான். அவரை கம்யூனிஸ்டுகள் ஆதரித்தார்களா?

  அத்வானிக்கு வாய்ப்பு கொடுத்திருக்கவேண்டுமா? வேண்டும்தான். ஆனால் அத்வானி அவர்கள் ஏற்கனவே துணைப் பிரதமர் என்ற இடத்தில் இருந்திருக்கிறார். ஆனால் சமயம் கிடைக்கும்போது மோடி அரசைக் கேள்வியும் கேட்டிருக்கிறார். இப்போது அவரைத் தேர்ந்தெடுத்தால் ஏகப்பட்ட பிரச்சனை வரும். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை அனுப்புவதைச் சிக்கல் இல்லாமல் நிறைவேற்ற ஒத்துழைக்கிறவராக இருக்கவேண்டும். அதனால் பாஜக இப்படி முடிவெடுத்திருக்கலாம்.

  வேட்பாளர் நல்லவர் என்று மாற்றுக்கட்சி முதல்வர் நிதீஷ் சொல்கிறார். பாஜக சொன்னதா அவர் தலித் என்பதால் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று?

  சாதியை வைத்துக்கொண்டு தொங்குகின்ற மற்றவர்கள்தான் (திருமாவளவன் உள்பட) அரசியலைவிட்டு ஒதுங்கி இந்தியா முன்னேற வழிவிடவேண்டும்.

  • இளங்கோ சொல்கிறார்:

   எங்கேயாவது துவங்கிவிட்டு, சுற்றீவளைத்து புதியவன்
   பாஜகவுக்கு வக்காலத் வாங்கும் தந்திரம் புரிகிறது.
   பாஜக இன்றைய ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுத்ததற்கான காரணம், பின்னணி என்ன என்பது தான் கேள்வியே தவிர, என்றைக்கோ காங்கிரஸ் பிரதிபா பாடீலை தேர்ந்தெடுத்தது அல்ல. எதற்கெடுத்தாலும் பழைய
   கதையை காரணம் காட்டாமல் நேரடியாக பதிலுக்கு வாருங்கள் மிஸ்டர் புதியவன்.

   //சிலர் (இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள்) நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர். அந்தத் தலைவர் அத்வானி கோவைக்கு வந்தபோதுதான் அவரைக் கொல்ல பயங்கரவாதிகள் குண்டுவெடித்தனர். அப்படிப்பட்டவர்கள், வாஜ்பாய்க்கு அடுத்த தேர்தலில், அத்வானி, பாஜகவுக்கு ஓட்டுப்போட்டார்களா? இது, ஊர் ரெண்டுபடவேண்டும் என்ற எண்ணத்தினால் சொல்லப்படுவது.//

   முட்டாள்தனமான வாதத்திற்கு இதைவிட வேறு சிறந்த உதாரணம் சொல்ல முடியாது. எவனோ தீவிரவாதி குண்டு வைத்தால், அந்த community பூராவையும் வம்புக்கு இழுப்பது தீவிர பாஜககாரர்கள் கடைபிடிக்கும் தந்திரம்.
   அத்வானிஜியை ஏன் consider பண்ணவில்லை என்று கேட்கிற நான் உங்கள் definition எதற்கு உள்ளும் வரவில்லை. பெரும்பாலானவர்கள் அப்படித்தான். உங்கள் வாதம் என்னை போன்றவர்களுக்கு எப்படி பொருந்தும் ?

   //புகழ் வாய்ந்தவர்களுக்குக் கொடுத்திருக்கவேண்டும் என்று இளங்கோ அவர்கள் எழுதுவது ஆச்சரியமாக இருக்கிறது.//

   இதிலென்ன ஆச்சரியம் ? வாஜ்பாய் காலத்தில் திருமதி ருக்மிணி தேவியை consider பண்ணவில்லையா ? உங்களுக்கு அமிதாப், ரஜினி தவிர வேறு யாரையும் தெரியாதா ?

   // பாஜக சொன்னதா அவர் தலித் என்பதால் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று?//

   அதைத்தான் சொல்லச் சொல்கிறோம். எந்த காரணத்தை வைத்து இந்த வேட்பாளரை தேர்ந்தெடுத்தனர் என்று வெளிப்படையாகச் சொல்ல பாஜக தலைமைக்கே தைரியமில்லையே. “தலித்” ஓட்டுகளை திசை திருப்பத்தான்
   எந்று அவர்கள் எப்படி வெளிப்படையாக சொல்வார்கள் ? அவர்களே கவலைப்படாதபோது புதியவன் ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு வக்காலத் வாங்குகிறார் தெரியவில்லை.
   உங்கள் பாஜக சாயம் வெளுக்கிறது மிஸ்டர் புதியவன்.

   • M.Mani சொல்கிறார்:

    ஐயா சரியான பதிலடி கொடுத்துள்ளீர்கள். மோடியை எதிர்க்கவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக எழுதுகிறார்கள். தலித் என்பதற்காக ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்ததாக பா.ஜ.க கூறவில்லை. இவர்கள் ஏன் தலித் என்று அவரைப் பார்க்கவேண்டும். ஊழல் கட்சிகளான இந்திரா காங்கிரஸ், தி.மு.க., அதிமுக போன்றில்லாமல் மோடி சுமார் 15 ஆண்டுகளாக முதல்வர் மற்றும் பிரதமராக உள்ளார். ஊழல் கறைபடியாத கரங்கள். ஆனால் யாரும் அதனை கண்டுகொள்ளமாட்டார்கள். காமராஜர் தற்போது இருந்திருந்தாலும் அவரை குறை கூறுவார்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   // இப்போது, ‘அத்வானி’ வரவில்லையே என்று சிலர் (இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள்) நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர். //

   நீங்கள் இப்படி ஒட்டுமொத்தமாக வகைப்படுத்துவதை நான் ஏற்க மாட்டேன். பாஜகவிலேயே அத்வானியை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கவில்லையே என்று வருந்துபவர்கள் பலர் இருக்கிறார்கள். அதை வெளிப்படையாகவே சொன்னாரே திரு.சத்ருகன் சின்ஹா….

   பாஜக அல்லாத, பொதுமனிதர்கள் பலரும் கூடத்தான்
   (நானும் இந்த வகை தான் ) இந்த கேள்வியை கேட்கிறார்கள்.
   இதற்கு சரியான பதில் பாஜக தலைமையிடம் இல்லை….
   மோடிஜிக்கு பிடிக்கவில்லை – அவ்வளவு தான். இப்போது பாஜக என்றால் மோடிஜி தானே….?

   நீங்கள் கூட இப்படி ஒருதலைப்பட்சமாக எழுதுவது எனக்கு வியப்பளிக்கிறது.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    கா.மை சார், இளங்கோ அவர்களே,

    ஒருதலைப்பட்சமாக எழுதவில்லை. அத்வானி அவர்கள் ரத யாத்திரைக்குப் பிறகு பெரும்பாலான இஸ்லாமியர்கள் அவரை எதிர்த்தனர். நான் “சிலர்” என்று எழுதியிருக்கிறேன். நான் பாஜக என்று சொல்கிறீர்கள். அப்படி இருந்தால் என்ன தவறு (இல்லை என்ற போதும்). நான் மெஜாரிட்டி இந்தியர்களின் சிந்தனையை பிரதிபலித்திருக்கிறேன் என்பதில் சந்தோஷம்தான்.

    இன்றைக்கு அத்வானி அவர்களத் தேர்ந்தெடுக்கும் சந்தர்ப்பம் கடந்துவிட்டது (கோர்ட் கேஸ்). யாரைத் தேர்ந்தெடுப்பதும் பாஜகவின் உரிமை. நாமே அனுமானத்தில் பேசுகிறோமே தவிர, மோடி அவர்களோ, அமித்ஷாவோ காரணத்தை வெளிப்படையாக்க்கூறவில்லை. யாரை பாஜக தேர்ந்தெடுத்திருந்தாலும் அதற்கு நாம் நம் நிலைக்கேற்ப வண்ணம் கொடுத்து வாதிடமுடியும். இருப்பது ஒரு பதவி. இது ஒரு அரசியல் பதவி. புகழ் என்பது அளவுகோல் அல்ல. கேன்டிடேட் நல்லவர் என்று, நிதிஷ்குமார் அவர்கள் சொல்லியுள்ளார். அப்புறம் அதில் விவாத்த்துக்கு இடம் எங்கு இருக்கிறது? (எனக்கும் அத்வானி அவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்ற எண்ணம். அவருக்கு லக் இல்லை)

    உங்கள் தகவலுக்கு. ருக்மிணிதேவி அருண்டேலை மொரார்ஜி காலத்தில் கன்சிடர் செய்து அவர் மறுத்துவிட்டார்.

    இங்குள்ளவர் அனைவரும் அவர் சரியான கேன்டிடேட் என நினைப்பவரைக் குறிப்பிடச் சொன்னால், ஆளுக்கு ஒரு பெயரைச் சொல்லுவார்கள். அதனால் எனக்கு அத்தகைய விவாதங்கள் அர்த்தமுள்ளவையாகத் தெரியவில்லை.

    ஹைபோதாடிகலாக அத்வானி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார் என வைத்துக்கொள்ளுங்கள் – 1. ரதயாத்திரை நடத்தி மக்களைப் பிரித்தாரே 2. கோர்ட் குற்றவாளி எனத் தோன்றி குற்றச்சாட்டு பதியச் சொல்லியுள்ளதே அவரை விட்டால் வேறு ஆட்கள் இல்லையா? 3. இவ்வளவு வயதானவரா இந்த போஸ்டுக்கு என்று வெவ்வேறுவகையான கமென்டுகள் வரும்.

    தவறு என்னுடைய பின்னூட்டத்திலா அல்லது உங்கள் எதிர்பார்ப்பிலா?

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     புதியவன்,

     //நான் மெஜாரிட்டி இந்தியர்களின் சிந்தனையை பிரதிபலிக்கிறேன் என்பதில் சந்தோஷம்தான்.//

     – ஆக எப்போதும் மெஜாரிடியினர் சொல்வது தான் சரியாக
     இருக்கும் என்பது உங்கள் அபிப்பிராயம் …

     சரி……. இப்போது தான் உங்கள் நிலையை சரியாக
     புரிந்து கொண்டேன்.
     ————-

     //தவறு என்னுடைய பின்னூட்டத்திலா அல்லது உங்கள் எதிர்பார்ப்பிலா?//

     – சந்தேகமே இல்லாமல் –
     தவறு என்னுடைய எதிர்பார்ப்பில் தான்…!

     ——————

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

     • குலாம் ரசூல் சொல்கிறார்:

      நன்றி கா.மை. ஐயா அவர்களுக்கு,

      திருவாளர் புதியவன் அவர்கள், தங்களின் கீழ்கண்ட இடுகையில்,

      //சசி தரூர் – ஒரு வித்தியாசமான பார்வை….!!!
      Posted on ஏப்ரல் 29, 2017 by vimarisanam – kavirimainthan //

      //திரு புதியவன் அவர்களுக்கு,

      நான் தங்களைப் பற்றி கணித்திருந்தது சரிதானென்று மெய்படுத்திவிட்டீர்கள்.//

      என்ற என்னுடைய பின்னூட்டத்திற்கு,

      //ஒருத்தருடைய கருத்தை வைத்து, அவர் இந்த இயக்கத்தினைச் சார்ந்தவர் என்று ASSUME செய்வதே, உங்கள் எண்ணங்களின் சிறுமையைக் காண்பிக்கிறது..//

      என்று புதியவன் அவர்கள் பதிலளித்தார்.

      தற்பொழுது,

      //நான் பாஜக என்று சொல்கிறீர்கள். அப்படி இருந்தால் என்ன தவறு (இல்லை என்ற போதும்)//

      என்கிறார். இப்போது யார் சிறுமைபட்டு நிற்பது. இது தான் பாஜக ஆட்களின் பொய் வேஷம்.

 5. jayakumar சொல்கிறார்:

  சமயம் கிடைக்கும்போது மோடி அரசைக் கேள்வியும் கேட்டிருக்கிறார். இப்போது அவரைத் தேர்ந்தெடுத்தால் ஏகப்பட்ட பிரச்சனை வரும். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை அனுப்புவதைச் சிக்கல் இல்லாமல் நிறைவேற்ற ஒத்துழைக்கிறவராக இருக்கவேண்டும். அதனால் பாஜக இப்படி முடிவெடுத்திருக்கலாம்.

 6. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  கீழே இருப்பது டாக்டர் சு.சுவாமிக்கு மிகவும் நெருக்கமான
  ஒரு ஆங்கில நாளிதழின் கருத்து –

  In choosing Mr Ram Nath Kovind as its nominee, what are the message of the BJP and its constituents in Parliament to the electorate of India and in particular to the Dalit community? Unfortunately, it is certainly not of new and developed India which Prime Minister Mr Modi espouses quite often to the youth of this country. On the other hand, it is one of appeasement politics that he professes to shun and does not mince words in condemning it.

  Prime Minister Modi and BJP’s numero uno strategist Party President Mr Amit Shah realise that Dalit community support is the sine qua non to achieve governing majority in future electoral contests. As a step towards that goal, the strategy of choosing a BJP loyalist who also happens to be a Dalit is no different from that of the Congress party’s appeasement of minority community. In a post-liberalized India, political parties must realise communities are no voting monoliths.

  The BJP bombarded the electorate in 2014 with the message “Appeasement towards none, Justice for all”. In choosing Mr Ram Nath Govind for President, the party has done a volte-face on its own slogan. The choice is indeed old style appeasement politics, not the new age politics that the Prime Minister often promises the youth of India…

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 7. யெஸ்டர்டே அண்டு ஆல் சொல்கிறார்:

  பிஜேபி செய்ததும் வக்கணையாக கேள்வி கேட்கிறீர்கள். .. எம்ஜியார் மறைவுக்கு பிறகு எந்த தகுதி அடிப்படையில் ஜெயலலிதா முதலசைச்சரானார் என எப்போவாவது கேட்டிருக்கின்றீர்களா? அப்போது அதிமுகவில் நெடுஞ்செழியனில் ஆரம்பித்து நெடுஞ்செழியன், ராசாராம், அரங்கநாயகம், பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு என பல திறமைசாலிகள்…மூத்த தலைவர்கள் இருந்தார்களே!

  உடனே ஜெயலிதா கொபசெவாக இருந்தார்… ராஜ்ய சபா மெம்பராக இருந்தார் என்பீர்கள்…அதேபோல பிகார் கவர்னருக்கு பிரமோசன் என்றால் அடுத்தபதவி கவர்னர்-ஜெனரல் பதவிதானே,இதிலென்ன தவறு?

  தனக்கு வந்தால் இரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னியா?

  • இளங்கோ சொல்கிறார்:

   முட்டாள்தனமான விவாதங்களை யார் வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். அவரவர்க்கு தெரிந்த வழி.

  • புதியவன் சொல்கிறார்:

   நான, சொல்கிறேன். ஜெ முதலமைச்சர் ஆனது, தமிழர்கள் பெரும்பான்மையாக ஆதரித்ததால். ஜானகி அவர்கள் முதலமைச்சரானது, இப்போது நடந்துள்ளதுபோல அதிமுக எம் எல், ஏக்களின் ஆதரவால். அப்போது அதிமுகவில் ஏகப்பட்ட தலைவர்கள் இருந்தபோதும் மக்கள் ஆதரவு ஜெ.அவர்களுக்குத்தான்.

   மோடியை முன்நிறுத்தியது பாஜக. ஆனால் அவர் பிரதமர் ஆனது மக்கள் ஆதரவால். ஜனாதிபதிக்கு பிரதமருக்குத் தோதான ஆள்தான் வேண்டும். நம் ஆசை வேறு. அதை பிரதமர் நிறைவேற்றவேண்டும் என்று எண்ணுவது அர்த்தமே இல்லாத்து.

 8. Sundar Raman சொல்கிறார்:

  புதியவன் எழுதியதை திரும்ப ஒரு முறை படிக்கவும் ….சிலர் என்று மிக தெளிவாக இருக்கிறது .

  அத்வானி அவர்கள் சில சமயம் – தேர்தலின் வெற்றி எதனால் என்று அவரின் பார்வையை வெளிப்படுத்தினார் , அதில் கொஞ்சம் வன்மமும் இருந்தது . பின் , எமெர்ஜென்சி வருவதற்கான சாத்தியம் என்றார் , வயதாகி விட்டது , ஏதாவது பிரச்சனை செய்ய வாய்ப்பு அதிகம் என்று மோடி எண்ணலாம் . அதில் கொஞ்சம் உண்மையும் இருக்கு .

  மோடி அவர்களை தாக்கினால் , அவர் கை மேலும் மேலும் வலுவடையும் …இது அவர் வாங்கிவந்த வரம் . அவரை தாக்க தாக்க , அவர் மக்களின் நன்மைக்காக செயல் படும் சக்தி பன் மடங்காகும்

 9. இளங்கோ சொல்கிறார்:

  //மோடி அவர்களை தாக்கினால் , அவர் கை மேலும் மேலும் வலுவடையும் …இது அவர் வாங்கிவந்த வரம் . அவரை தாக்க தாக்க , அவர் மக்களின் நன்மைக்காக செயல் படும் சக்தி பன் மடங்காகும்.//

  அப்படியானால், அவரை யாராவது குறை கூறினால் சந்தோஷப்படுங்கள்.
  வென்னீரை காலில் ஊற்றினாற்போல் ‘தையா-தக்கா’ வென்று குதிக்காதீர்கள்..

 10. சந்திரசேகரன். வெ.க சொல்கிறார்:

  பஜக வின் குடியரசு தலைவர் தேர்தல் வேட்பாளராக கோவிந்த் அவர்கள் அறிவிக்கப்பட்டது தொடர்பாக என்ன விளக்கம் தேவை என்பதை விளக்கினால் தேவலை. முதல் குடியரசு தலைவர் தேர்வில் நேருவின் விருப்பம் ராஜாஜி ஆனால் கட்சியினரின் விருப்பம் டாக்டர் ராதாகிருஷ்ணன். 1962 சீனா போர் தொடர்பான நிகழ்வில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் குடியரசு தலைவரின் அழுத்தத்தின் காரணமாகவே பதவி விலகினார் நேருவின் விருப்பத்திற்கு மாறாக. எமெர்ஜென்சியின் போது பக்ருதீன் அலி இந்திராவின் கையில் ஒரு ரப்பர் ஸ்டாம்பாகவே மாறிவிட்டார்.முதல் தலித் தலைவரோ உபியின் கல்யான் சிங் அரசையும் கலைக்க உத்திரவிடவில்லை பீகாரின் ராப்ரிதேவி அரசையும் கலைக்க உத்தரவிடவில்லை அப்போதைய பிரதமர்களின் விருப்பத்திற்கிணங்க. ராஜீவும் ஜெயில்சிங்கும் தங்களுக்கிடையேயான பினக்கை மணிகணக்காய் அமர்ந்து பேசியும் இணக்கம் ஆகவில்லை. முதல் குடியரசு தலைவரிலிருந்து தற்போது வரை ஆட்சியிலிருக்கும் அரசுகளின் மனப்போக்கிற்கேற்பவே வேட்பாளர்கள் தேர்வு அமைகிறது. இதில் பஜக மட்டும் விதிவிலக்கா என்ன. கோவிந்த் தேர்வு என்பது நிச்சயம் ஒருமித்து நடக்காது என்பதும் ஒருமித்த வேட்பாளர் தேர்வு தொடர்பான ஆலோசனைகள் கண்துடைப்பு என்பதும் அரசியல் பால பாடம் அறிந்தவர்கள் அறிந்த ஒன்று இதில் ஒரு கட்சி மட்டும் தனது வேட்பாளர் தேர்வு தொடர்பாக விளக்க வேண்டும் என்பது கேலிக்கூத்தாக உள்ளது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்களின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மீராகுமாரின் தேர்வு எந்த அடிப்படையில் என்பதற்கு சோனியாவோ இல்லை சீதாராம் யெச்சூரியோ என்ன விளக்கம் தர போகின்றனர். மார்க்சிஸ்டுகளின் தேர்வான கோபலகிருஷ்ண காந்தியைவிட மீராகுமார் எந்த விதத்தில் உயர்ந்தவர் என்பதை யாராவது விளக்கலாமே. சுய சிந்தனையுடைய நேர்மையான முடிவுகளை எடுக்கும் காந்தியைவிட மீராகுமார் அரசியல் ரீதியான முடிவுகளுக்கு உடன்படுவார் என்பதனால் தானே.பிரணாபின் தேர்வும் ராகுலின் நேரடியான பிரதமர் பதவிக்கான தகுதியுள்ள நேரடி போட்டியாளரை விலக்கும் ஒரு நடவடிக்கை தான் என்பது யாரும் அறியாத ஒன்றல்ல. மீராகுமார் மக்களவை உறுப்பினராகவும்,மக்களவை தலைவராகவும் தலித்துகளுக்காகவும் பெண்களுக்காகவும் கண் துஞ்சாமல் பாடுபட்டவர் என்ற தகுதியிலா தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த அணிக்கும் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் தேவை மார்க்சிஸ்டுகளாலோ தங்கள் முடிவை வலியுறுத்தும் அளவுக்கு அரசியல் பெரும்பான்மை இல்லை அதனால் காங்கிரஸ் எவரை வேட்பாளர் ஆக்குகிறதோ அவரை முன்மொழிய வேண்டிய கட்டாயம். இதில் பஜக வை மட்டும் குறி வைப்பானேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.