மத்திய அமைச்சர் தவறாகச் சொல்வாரா…?


இன்றைய தினம் தினமலர் நாளிதழில் தமிழகத்தில்
தற்போதைய வாட் வரிக்கும், இனி விதிக்கப்படப் போகும்
ஜிஎஸ்டி வரிக்கும் உள்ள வித்தியாசங்களை விலாவாரியாக
விவரித்து, பெரியதாக, முழுபக்க அளவில் அறிவித்திருக்கிறது.

அதற்குரிய விவரங்கள் கீழே –

புகைப்படங்களில் சரியாக பார்க்க முடியாதவர்கள்
கீழ் காணும் link -க்கு சென்று சரி பார்த்துக் கொள்ளலாம்.
http://epaper.dinamalar.com/index.aspx?eid=342

இந்த விவரங்களை பார்க்கும்போது, பல பொருட்களுக்கு
தற்போதைய வரியை விட ஜிஎஸ்டி-யில் கூடுதல் வரி
விதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.

ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்னர், மத்திய அமைச்சர்
சென்னையில் ஜிஎஸ்டி கருத்தரங்கம் ஒன்றில் பேசும்போது,
ஜிஎஸ்டி யால் எந்த பொருளின் விலையும் உயராது என்று
உறுதியாகச் சொன்னார்.

ஒன்று தற்போதைய வரியை விட ஜிஎஸ்டி வரி குறைவாக
இருக்கும் அல்லது தற்போதைய வரிக்கு சமமாக இருக்கும்.
நிச்சயமாக ஜிஎஸ்டி வரி கூடுதலாக இருக்கவே இருக்காது
என்று சொன்னார்….

அமைச்சரின் உரை கீழே –

( http://www.thehindu.com/news/national/tamil-nadu/prices-will-not-go-up-after-gst-rollout/article19146043.ece )

மத்திய அமைச்சர், எப்போதும் புள்ளி விவரங்களுடன்
தெளிவாகப் பேசுபவர் என்பதால், அவர் கூறியதில் தவறு இருக்க வாய்ப்பு இல்லை.

பாஜக அமைச்சர் எங்காவது தவறாகப் பேசி இருக்க
முடியுமா என்ன…? அப்படி நினைப்பதே தவறு ஆயிற்றே…!

தினமலர் நாளிதழ் எதையோ தவறுதலாக புரிந்து கொண்டு
பதிப்பில் குழப்பம் விளைவித்திருக்கிறது என்று தான்
எடுத்துக்கொள்ள வேண்டும்…..

தினமலரின் செய்தி விவரங்கள் ஜிஎஸ்டி பற்றி மக்களிடையே
பெரிய குழப்பங்களை உண்டு பண்ணக்கூடும் என்பதால்,
அந்த நாளிதழ் – உடனடியாக தவறான செய்திக்கு மன்னிப்பு
கோரிவிட்டு, சரியான, திருத்தப்பட்ட செய்தியை பிரசுரம்
செய்ய வேண்டும்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to மத்திய அமைச்சர் தவறாகச் சொல்வாரா…?

 1. ராஜேந்திரன் சொல்கிறார்:

  வரி உயர்வு இல்லையென்றால்,
  பட்டாசு தொழிலாளர்கள்,
  ஜவுளித்தொழிலாளர்கள் எல்லாரும் ஏன் 30-ந்தேதி முதல்
  வேலைனிறுத்தம் அறிவித்திருக்கிறார்கள் ?

 2. NS RAMAN சொல்கிறார்:

  Under GST if the input raw materials purchased through proper documentation input credit can be obtained and that will off set higher tax rates. Hope this will bring more discipline and discourage cash deals.

  But issue here is most of the small and medium traders difficult to adopt to new systems immediately.

  Initially you can expect confusion even in corporates and hope in a long run it will yield benefits. Considering a big change in taxation since independence government should give more time to tax payers instead of using pressure tactics.

 3. paamaranselvarajan சொல்கிறார்:

  மத்திய அமைச்சர் தவறாக கூற மாட்டார் …. தப்பாக கூறும் உரிமையுண்டல்லவா…? தவறு என்பது தவறிசெய்வது… தப்பு என்பது தெரிந்தேசெய்வது …. அதனால் சப்பைக்கட்டு கட்டும் நிலைமையில் ..அவர் … இதையெல்லாம் விட ஜி.எஸ்.டி. மாேடியால் திணிக்கப்படவில்லை ..என்று அடித்தார் பாருங்க ஒரு பல்டி …செம வினாேதம் …

  மீடியாக்களில்பெரும்பாலும் ” சாெகுசு கார்களின் ” விலை ஜி.எஸ்.டி. யால் எவ்வளவு குறைந்துள்ளது என்று அளக்கிற அளப்பறை தான் மிகவும் நாராசமாக இருக்கிறதா …? அதுதானே முக்கியம் … பாவப்பட்ட மக்களுக்கு…! இனி என்ன லஞ்சம் வாங்குறவன் காெஞ்சம் கூட கேட்பான் …அவ்வளவு தானே … மக்களின் மகிழ்ச்சிக்கு ஒரு குறையும் கிடையாது…. அப்படிததானே….?

 4. புதியவன் சொல்கிறார்:

  சார்.. ஜி.எஸ்.டி எல்லாம், வரிவிதிப்பை ஒரு ஒழுங்குக்குக் கொண்டு, வரி ஏய்ப்பைத் தடுக்கும்விதத்திற்குத்தான். பல மானிலங்கள், ஒன்றிலிருந்து ஒன்றுக்கு பொருட்கள் போகின்றன, மானில வரி, மத்திய வரி போன்றவற்றால் குழப்பம். இதை மட்டும்தான் ஜி.எஸ்.டி தீர்க்கும் என்று நான் நம்புகிறேன். இப்படி வரி ஒருமுகப்படுத்தப்படுவதால், கணக்கைச் சரியாகக் காண்பிப்பவர்கள் பல்முனை வரியைத் தவிர்க்கலாம். மானிலங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை ஓரளவு மத்திய அரசு சரி செய்யும்.

  இதைத் தவிர, ஜி.எஸ்.டியினால் பொருட்கள் விலை குறையும் என்று யாராவது சொன்னால், அவர்கள் மக்களை முழு முட்டாள்களாக நினைப்பவர்கள். ஜி.எஸ்.டி வரியில் கன்சிடரேஷன் செய்து எதற்காவது வரி குறைக்கப்பட்டால், அதற்கு பின்புலத்தில் வேறு லாபம் பாஜக கட்சிக்கு (இப்பொது ஆட்சியில் இருப்பதால்) இருக்கும்.

  சொகுசு கார்களுக்கு வரி குறைவு என்றால், சொகுசு கார்களை மக்களிடம் தள்ளிவிட முதலாளி Backgroundல் எடுத்த முயற்சிதான். இதுதான் பல்வேறு பொருட்களுக்கு வரி விதிப்பின் Strategy (சமீபத்தில் தமிழக அமைச்சர், ஆவின் பாலைத் தவிர மற்ற பால்களில் கெமிக்கல் கலக்கிறார்கள் என்று சொன்னதற்கும், மற்ற பால் பிராண்ட் முதலாளிகள் கமிஷன் கொடுத்திருக்கமாட்டார்கள் என்று பலர் நினைப்பதற்கும், ஜி.எஸ்.டிக்கும் நீங்கள் முடிச்சுப் போடக்கூடாது)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.